Advertisment

News Highlights: அரசியலை விட்டு விலகத் தயார்... வேலுமணிக்கு ஸ்டாலின் பதில்

Tamil News : ராமேஸ்வரம் மீனவர்கள் 17-வது நாளாக வேலை நிறுத்தம்

author-image
WebDesk
New Update
News Highlights: அரசியலை விட்டு விலகத் தயார்... வேலுமணிக்கு ஸ்டாலின் பதில்

tamil news today : ஒடிசா சம்பல்பூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தின் நிரந்தர வளாகத்திற்கு இன்று காணொலி மூலம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

Advertisment

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா தடுப்பூசி சோதனை இன்று நடைபெறுகிறது. தடுப்பூசி செலுத்துதல் குறித்து திட்டமிடல், மதிப்பிடுதல், சவால்களை அடையாளம் காணுதலுக்காக இந்த சோதனை நடைபெறுகிறது.

ராமேஸ்வரம் மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் - அவசர கூட்டத்தில் முடிவு . தமிழக மீனவர்களின் கைதை கண்டித்து 17 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று கடலுக்கு சென்றனர்

Live Blog

Tamil News Today : அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த நேரலையில் எங்களுடன் இணைந்திருங்கள்.



























Highlights

    22:42 (IST)02 Jan 2021

    ஊழலை நிரூபிக்காவிட்டால் அரசியலை விட்டு விலகுவேன் - ஸ்டாலின்

    முக தலைவர் மு. க ஸ்டாலின் தலைமயில் தொண்டாமுத்தூர் தொகுதி-தேவராயபுரம் ஊராட்சியில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற பெயரில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.பின்னர் ஸ்டாலின் வெளியிட்ட செய்திக் குறிப்பில், " ஊழல் புகார்களை எல்லாம் நிரூபிக்க முடியவில்லை என்றால் ஸ்டாலின் அரசியலிலிருந்து ஒதுங்கிவிடுவாரா என்று அமைச்சர் வேலுமணி கேட்டிருக்கிறார். அமைச்சர் வேலுமணி அவர்களே அதை நிரூபிக்க நான் ரெடி நீங்க ரெடியா. நீங்கள் முதலில் சொல்லுங்கள். நான் நிரூபிக்கவில்லை என்றால் நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக் கொள்கிறேன். நான் நிரூபித்துவிட்டால் நீங்கள் அரசியலைவிட்டு ஒதுங்குங்கள். அது ஒரு பக்கம். அரசியலிலிருந்து ஒதுங்கிவிட்டு இதிலிருந்து தப்பித்துவிடலாம் என்று நினைக்காதீர்கள். சட்டத்தின் முன்னால் நிற்க வைத்து அதற்குரிய தண்டனை வாங்கித் தரும் பொறுப்பைத்தான் இந்த ஸ்டாலின் செய்யப்போகிறான். இது அரசுப் பணம்; மக்கள் தருகிற வரிப்பணம்" என்று தெரிவித்தார்.  

    21:05 (IST)02 Jan 2021

    திமுகவால் எதிர்கட்சி அந்தஸ்து கூட பெற முடியாத - முதல்வர் உரை

    வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவால் எதிர்கட்சி அந்தஸ்து கூட பெற முடியாத நிலை நிச்சயம் ஏற்படும் என்று முதல்வர் தெரிவித்தார். இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அடுத்த நரிப்பையூர் தரவை பகுதி பிரசாரப் பொதுக்கூட்டத்தில் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    21:00 (IST)02 Jan 2021

    தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் - சென்னை வானிலை மையம்

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலோர மற்றும் உள்மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம்.

    20:58 (IST)02 Jan 2021

    திருமணங்கள் பதிவுச் சட்டம் சட்டத் திருத்தம்

    தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச்சட்டத்தின்படி, அனைத்து தரப்பினருக்கான திருமணங்களும் கட்டாய பதிவு செய்யப்படுவதற்கான திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக பத்திரப்பதிவுத்துறை தெரிவித்தது. 

     

    20:05 (IST)02 Jan 2021

    மாதிரி நிலை ஆணை வெளியீடு

    உற்பத்தி, சுரங்கம், சேவை துறைகளுக்கான வரைவு மாதிரி நிலை ஆணை ( Draft Model Standing Orders for the Manufacturing Sector, Mining Sector and Service Sector ) வெளியிடப்பட்டுள்ளது. பங்குதாரர்கள் தங்கள் கருத்துக்கள்/ ஆட்சேபனைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்குமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டது.

    19:54 (IST)02 Jan 2021

    சவ்ரவ் கங்குலியின் உடல் நிலை சீராக உள்ளது - மருத்துவமனை

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சவ்ரவ் கங்குலியின் உடல் நிலை சீராக உள்ளது என்று  மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, கங்குலி நலமுடன் இருப்பதாகவும், அவரை நேரில் சந்தித்து பேசியதாகவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி தெரிவித்தார்.    

    19:50 (IST)02 Jan 2021

    பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமாக தமிழகம் மாறிக்கொண்டிருக்கிறது - கே. டி ராகவன்

    தற்போதைய பாஜக கூட்டங்களை அரங்கத்தில் நடத்த முடிவதில்லை, காரணம் அந்தளவுக்கு மக்கள் எழுச்சி இருக்கிறது! அரசியல் சந்தர்ப்பம், பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமாக தமிழகம் மாறிக்கொண்டிருக்கிறது! என்று தமிழ்நாடு பாஜக மாநில பொது செயலாளர் K.T.ராகவன் தெரிவித்தார்.  

    18:59 (IST)02 Jan 2021

    நிலையான செயல்பாட்டு நடைமுறை

    கொரோனா வைரசின் உருமாற்றத்தினால் ஜனவரி 8ஆம் தேதி முதல் இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு வரும் குறைந்த அளவிலான விமான சேவைகளில் கடைப்பிடிக்க வேண்டிய தொற்று நோயியல் கண்காணிப்பு மற்றும் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

    18:53 (IST)02 Jan 2021

    அதிமுக பெண் நிர்வாகி மீது புகார்

    கோவை திமுக கூட்டத்தில் திட்டமிட்டு பிரச்சனை ஏற்படுத்திய அதிமுக பெண் நிர்வாகி மீது திமுக எம்.பி ஆர்.எஸ் பாரதி சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளித்தார். 

    18:48 (IST)02 Jan 2021

    உடல் ஊனம் ஏற்பட்டு தொடர்ந்து பணியில் இருப்போருக்கும் இழப்பீடு வழங்கப்படும் - மத்திய அரசு

    பணியின்போது உடல் ஊனம் ஏற்பட்டு தொடர்ந்து பணியில் இருப்போருக்கும் இழப்பீடு வழங்கப்படும் என்று மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். இந்த நடவடிக்கை மூலம் மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லைப்பாதுகாப்புப்படை, மத்திய தொழில் பாதுகாப்புப்படை, போன்றவற்றில் பணியாற்றும் மத்திய ஆயுத காவல்படை போன்றவற்றில் பணியாற்றும் இளம் வீரர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்றும் அமைச்சர் கூறினார். 

    ஓய்வூதியம் பெறுவதற்கு குறைந்தபட்சம் பத்தாண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச தகுதி நீக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.  

    18:41 (IST)02 Jan 2021

    தேர்தல் தேதி அட்டவணை வெளியிட்டப்பிறகு தான் பொதுத்தேர்வு

    தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதி அட்டவணை வெளியிட்டப்பிறகு தான் பொதுத்தேர்வு தேதி குறித்து அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.  

    17:45 (IST)02 Jan 2021

    கொரோனா தடுப்பூசி ஒத்திகை நிறைவு

    தமிழகத்தில் 5 மாவட்டங்களில் 17 இடங்களில் நடந்த கொரோனா தடுப்பூசி ஒத்திகை வெற்றிகரமாக நிறைவு பெற்றது.  

    17:39 (IST)02 Jan 2021

    கடந்த 24 மணி நேரத்தில் 19,079 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்

    இந்தியாவில் கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2.50 இலட்சமாகக் குறைந்துள்ளது (2,50,183).கடந்த 24 மணி நேரத்தில் 19,079 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 22,926 பேர் புதிதாக குணமடைந்தனர். இ

    17:24 (IST)02 Jan 2021

    5 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.600 கோடி இடுபொருள் நிவாரணம் - தமிழக அரசு

    நிவர், புரெவி புயலால் பாதிக்கப்பட்ட 5 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.600 கோடி இடுபொருள் நிவாரணம் வழங்கப்படும்; விவசாயிகளின் வங்கிக்கணக்கில் ஜன. 7 முதல் நேரடியாக நிவாரணம் வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது.  

    17:17 (IST)02 Jan 2021

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பூட்டா சிங் மரணம்

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பூட்டா சிங் இன்று காலமானார்

    17:16 (IST)02 Jan 2021

    கோவிட்-19 தடுப்பு மருந்தை செலுத்துவதற்கான ஒத்திகை

    நாடு முழுவதும் 116 மாவட்டங்களுக்கு உட்பட்ட 259 இடங்களில் கோவிட்-19 தடுப்பு மருந்தை செலுத்துவதற்கான ஒத்திகை நடைபெற்று வருகிறது.  

    16:52 (IST)02 Jan 2021

    தேவேந்திர குல வேளாளர் பரிந்துரை - தமிழக முதல்வர் முக்கிய அறிவிப்பு

    7 உட்பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திர குல வேளாளர் என்ற ஒரே பொதுப்பெயரில் அறிவிக்க கோரிய பரிந்துரை மத்திய அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 30 நாட்களுக்குள் இதற்கான தீர்வு கிடைக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.  

    16:34 (IST)02 Jan 2021

    பெரிய கமிட்டியால் எந்த பயனுமில்லை - கார்த்தி சிதம்பரம்

    காங்கிரஸ் நிர்வாகிகள் மாற்றம் குறித்து கார்த்திக் சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். 

    இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் குறிப்பில், "இவ்வளவு பெரிய கமிட்டியால் எந்த பயனுமில்லை. 32 துணை தலைவர்கள், 57 பொது செயலாளர்கள், 104 செயலாளர்கள் என நியமிக்கப்பட்ட யாருக்கும் எந்த அதிகாரமும் இருக்காது, அதிகாரம் இல்லாததால் யாருக்கும் பொறுப்பு என்பது இருக்காது" என்று தெரிவித்தார்.   

    15:22 (IST)02 Jan 2021

    தடையை மீறி டெல்லியில் நுழைவோம் - விவசாயிகள் எச்சரிக்கை

    வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் தடையை மீறி குடியரசு தினத்தன்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வரும் ஜன.6 முதல் ஜன.20 வரை நாட்டின் பல பகுதிகளில் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்

    15:09 (IST)02 Jan 2021

    6-ந்தேதி முதல் பிரிட்டனுக்கு விமான சேவை - மத்திய அரசு

    பிரிட்டனில் பரவும் புதுவகை கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக இந்தியாவில் இருந்து விமான போக்குவரத்தை ரத்து செய்த மத்திய அரசு வரும் 6-ந் தேதி முதல் பிரிட்டனுக்கு விமான போக்குவரத்து தொடங்கும் என அறிவித்துள்ளது. மேலும் வரும் 8-ந் தேதி முதல் பிரிட்டனில் இருந்து இந்தியாவிற்கு விமான சேவை தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    13:55 (IST)02 Jan 2021

    பொங்கல் முடிந்தும் பொங்கல் பரிசு பெறலாம் - அமைச்சர் செல்லூர் ராஜூ

    தற்போது பொங்கல் பரிசு பெறமுடியாதவர்கள் பொங்கல் பண்டியை முடிந்தும் பொங்கல் பரிசு பெறலாம் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

    13:53 (IST)02 Jan 2021

    தமிழக காங்கிரஸில் பொதுசெயலாளராக விஜய் வசந்த்

    காங்கிரஸ் கட்சியில் எம்.பியாக இருந்த வசந்த்குமார் கடந்த ஆண்டு திடீரென உயிரிழந்த நிலையில், தற்போது அவருடைய மகன் விஜய்வசந்த் தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளராக நியமிக்கப்பட்டுள்ளர். 

    13:46 (IST)02 Jan 2021

    என்னை எதிர்த்து போட்டியிட உதயநிதி தயாரா? குஷ்பு கேள்வி

    சமீபத்தில் பா.ஜ.க.வில் இணைந்த நடிகை குஷ்பு கட்சி தலைமை வாய்பளித்தால் எந்த தொகுதியிலும் போட்டியிட தயார் என்றும், என்னை எதிர்த்து போட்டியிட உதயநிதி ஸ்டாலின் தயாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.

    13:32 (IST)02 Jan 2021

    தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் பதில்

    தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அமைச்சர் செங்கோட்டையன், சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பின்னரே பள்ளிகள் திறப்புக்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார். மேலும்  ஆசிரியர்கள் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

    13:27 (IST)02 Jan 2021

    தமிழகத்தில் புத்தாண்டுக்கு 137 கோடிக்கு மது விற்பனை

    புத்தாண்டு தினமாக நேற்று தமிழகத்தில் 137 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் 34.55 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    13:24 (IST)02 Jan 2021

    காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தேர்தல் அறிக்கை குழு அறிவிப்பு

    தமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் இப்போதே சூடுபிடித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் இந்த குழுவில், அமெரிக்கை நாராயணன், மணி சங்கர் ஐயர், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம் ஆகியோர் உள்ளனர்.

    13:20 (IST)02 Jan 2021

    சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பிறகே, பொதுத்தேர்வு!

    சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பிறகே, பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் அமைச்சர் செங்கோட்டையன்  தகவல். ஆசிரியர்கள் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும்  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

    13:17 (IST)02 Jan 2021

    கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வு!

    தமிழகத்தில் இன்று நடைபெற்ற 742 கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வில் 718 பேர் தேர்வு . 24 பேரின் நியமனம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு. 

    13:11 (IST)02 Jan 2021

    கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமிக்கு முழு ஆதரவு!

    வரும் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி - தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவிப்பு.  கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமிக்கு முழு ஆதரவு எனவும்  ஜி.கே.வாசன் தகவல்.

    13:09 (IST)02 Jan 2021

    ரூ.137 கோடிக்கு மது விற்பனை!

    தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.137 கோடிக்கு மது விற்பனை .  அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூ.34.55 கோடிக்கு மது விற்பனை

    12:42 (IST)02 Jan 2021

    கொரோனா தடுப்பூசி இலவசம் !

    நாடு முழுவதும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்  மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிவிப்பு. 

    12:41 (IST)02 Jan 2021

    'மய்யம் ஐசிஎப் தொழிற்சங்கம்'!

    மக்கள் நீதி மய்யத்தின் முதல் தொழிற்சங்கம் ரயில்வே துறையின் ஐசிஎப் தொழிற்சாலையில் 'மய்யம் ஐசிஎப் தொழிற்சங்கம்' என்ற பெயரில் பதிவு

    11:45 (IST)02 Jan 2021

    சென்னையில் மழை!

    சென்னையில் கிண்டி, ஈக்காட்டுதாங்கல், மாம்பலம், சென்ட்ரல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது . செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர், ரத்தினமங்கலம், மேலகோட்டையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. 

    11:45 (IST)02 Jan 2021

    சென்னையில் மழை!

    சென்னையில் கிண்டி, ஈக்காட்டுதாங்கல், மாம்பலம், சென்ட்ரல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது . செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர், ரத்தினமங்கலம், மேலகோட்டையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. 

    11:31 (IST)02 Jan 2021

    விடுதலை சிறுத்தைகள் கட்சி, வரும் தேர்தலில் தனி சின்னத்தில் போட்டி!

    திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, வரும் தேர்தலில் தனி சின்னத்தில் தான் போட்டியிடும் என அக்கட்சி தலைவர் திருமாவளவன் அறிவிப்பு. 

    11:29 (IST)02 Jan 2021

    கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்பு!

    தேவராயபுரம் ஊராட்சியில் நடைபெறும் மக்கள் கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்பு.  தமிழகத்திலேயே கோவையில்தான் அதிக முறைகேடுகள் நடைபெறுவதாக ஸ்டாலின் குற்றச்சாட்டு.

    11:29 (IST)02 Jan 2021

    ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல்!

    புதுச்சேரியில் 1.75 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக தலா ரூ.200 வழங்க, நிதி ஒதுக்கீடு செய்து துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார். 

    11:28 (IST)02 Jan 2021

    டி.டி.வி.தினகரன் பாராட்டு!

    தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வாகியுள்ள நடிகர்கள் அஜித், பார்த்திபன், தனுஷ், ஜோதிகா மற்றும் இசையமைப்பாளர் அனிருத்துக்கு டி.டி.வி.தினகரன் பாராட்டு . திரைத்துறையில் தமிழகம் பெருமைபடத்தக்க சாதனைகளை புரிந்திட வாழ்த்துகிறேன் என ட்வீட். 

    11:28 (IST)02 Jan 2021

    இந்திய மேலாண்மை நிறுவனம்!

    ஒடிசா சம்பல்பூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தின் நிரந்தர வளாகத்திற்கு காணொலி மூலம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

    10:30 (IST)02 Jan 2021

    எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

    மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை ரத்துசெய்யும் தீர்மானத்தை நிறைவேற்ற சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டக்கோரி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    10:26 (IST)02 Jan 2021

    திமுக சிறுபான்மை நல பிரிவு சார்பில் மாநாடு!

    சென்னையில் வரும் 6ஆம் தேதி திமுக சிறுபான்மை நல பிரிவு சார்பில் மாநாடு நடைபெற உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் இந்த மாநாட்டிற்கு, "இதயங்களை இணைப்போம்" என பெயரிடப்பட்டுள்ளது.

    10:25 (IST)02 Jan 2021

    பிரிட்டனுக்கு விமான சேவை!

    ஜன. 23 ஆம் தேதி வரை வாரத்திற்கு 15 விமானங்கள் மட்டுமே இயக்கப்படும்  மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவிப்பு. அதே போல், இந்தியாவில் வரும் 8 ஆம் தேதி முதல் பிரிட்டனுக்கு விமான சேவை. டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்படும் என தகவல். 

    10:18 (IST)02 Jan 2021

    கே.பி.ஃபிலிம்ஸ் பாலு மறைவு!

    'படத்தயாரிப்பாளர் கே.பி.ஃபிலிம்ஸ் பாலு காலமானார்' சின்னத்தம்பி உள்பட 15க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் கே.பி.ஃபிலிம்ஸ் பாலு காலமானார். 

    Tamil News Today :  தமிழ்செல்வனின் முடிவால் கடமலை-மயிலை ஒன்றிய சேர்மன் பதவி அ.தி.மு.க வசமானது

    நேற்றைய செய்திகள்

    ஜன.6ல் திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவு நடத்தும் பொதுக்கூட்டத்தில் ஒவைசி பங்கேற்கவில்லை . மு.க.ஸ்டாலின் தலைமையினான கூட்டம் தொடர்பாக திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவு செயலாளர் மஸ்தான் விளக்கம்.

    கேரளாவில் ஜனவரி 5 முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு.

    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment