Tamil Nadu News Updates: இன்று தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம். தடுப்பூசி செலுத்தாதோர் எண்ணிக்கை 2 கோடியை நெருங்கியுள்ளது
இன்று உருவாகிறது அசானி புயல்
அந்தமானை ஒட்டிய வங்கக்கடலில் இன்று உருவாகிறது அசானி புயல். தமிழ்நாட்டின் 17 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
6 போலீசாருக்கு நீதிமன்றக் காவல்
விசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 6 போலீசாருக்கு 20 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல். 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டம்
பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் தொடர்ந்து 32வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.85-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.100.94-க்கும் விற்பனை
நடாலைத் தொடர்ந்து ஜோகோவிச்சை வீழ்த்திய 9 வயது அஸ்காரஸ்
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் ஜோகோவிச் அதிர்ச்சித் தோல்வி. நடாலைத் தொடர்ந்து ஜோகோவிச்சை வீழ்த்தினார் 19 வயது அஸ்காரஸ்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: மேகதாது அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தமிழக பாஜக கட்டுப்படும் என்று தெரிவித்துள்ளார்.
பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சிக்கான தடையை நீக்கி மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவிட்டதையடுத்து, தருமபுரம் ஆதீனம் பேட்டி: “தருமபுரம் ஆதீனம் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்ததன் மூலம் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆன்மீக அரசு என்பதை மெய்ப்பித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 3 நாள் பயணமாக சென்னை வந்தார். சென்னையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் ரூ. 10 லட்சத்திற்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி வழங்கினார்.
தென் இந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் விஷால் பேச்ச: “தேர்தலுக்கு பின் வழக்கு செலவுகளை தவிர்த்திருந்தால் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டிருக்கும். துணை நடிகர்களின் சம்பளத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று கூறினார்.
நடிகர் சங்க அறங்காவலர்கள் நியமனத்திற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, நாசர், விஷால், கார்த்தி, கமல்ஹாசன், பூச்சிமுருகன் உள்ளிட்டோர் அறங்காவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தென் இந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் கார்த்தி பேச்சு: “நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிக்க இன்னும் ₨30 கோடி தேவை. தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் கலை நிகழ்ச்சிகள் நடத்த முடியாது; வங்கி கடன் ஒன்றே வழி” என்று தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாள்ர் கே. பாலகிருஷ்ணன்: “அரசின் திட்டங்களை அமல்படுத்த பல்லாண்டு காலம் உழைத்த தனது ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதை அரசு சுமை என கருதக் கூடாது, அதை தன் கடமையாக கருத வேண்டும்; ஓய்வூதிய திட்டத்தில் நிதிச்சுமையை காரணம் காட்டுவது சரியல்ல” என்று தெரிவித்துள்ளார்.
கேரளாவில் புதிதாக தக்காளி வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. அங்கு கொல்லம் மாவட்டத்தில் மட்டும் 85 குழந்தைகள் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
தருமபுர ஆதீனகர்த்தரை பல்லக்கில் வைத்து தூக்கிச் செல்லும் பட்டினப் பிரதேசத்திற்கான தடை நீக்கப்படுவதாக மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்
சென்னை, மயிலாப்பூர் இரட்டை கொலை வழக்கில், திருப்போரூர் அருகே நெமிலிச்சேரி பண்ணை வீட்டில் புதைக்கப்பட்ட இரு உடல்களும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன
இனி வரும் காலங்களில் பட்டின பிரவேசத்திற்கு மாற்றாக வேறு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய அனைத்து ஆதீனங்களுக்கும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வேண்டுகோள் விடுத்துள்ளார்
2 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடிகர் சங்கத்தின் 66வது பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.
சென்னை, கோவிந்தசாமி நகரில் வீடுகள் இடிக்கப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், தீக்குளித்த கண்ணையாவுக்கு உலகத்தர மருத்துவம் அளித்து காப்பாற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்
சென்னை, கடலூர், நாகப்பட்டினம் உட்பட 9 துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் 'அசானி' புயல் உருவானதை குறிக்கும் விதமாக இந்த 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் அக்டோபர் 2026க்குள் முடிக்கப்படும் என மதுரை எம்.பி., சு.வெங்கடேசனின் கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பதிலளித்துள்ளார்
2014ம் ஆண்டில் 2 சிலிண்டர் வாங்கும் தொகை இப்போது 1 சிலிண்டர் வாங்குவதற்கு மட்டுமே போதுமானதாக உள்ளது என மத்திய அரசை கண்டித்து ராகுல்காந்தி ட்வீட் செய்துள்ளார்
சென்னையில் தம்பதி கொலை வழக்கில் கைதான 2 பேரிடமிருந்து 8 கிலோ தங்க நகைகள், 60 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
வங்கக்கடலில் உருவாகியுள்ள அசானி புயலால் ஒடிசா மற்றும் ஆந்திர கடல் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. புயலின் நகர்வுக்கு ஏற்ப தமிழ்நாட்டில் தரைக்காற்று வீசும் திசையில் மாறுதல் ஏற்படும். தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்
ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி மொழியை கட்டாயமாக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவால் சர்ச்சை. அலுவலக பயன்பாடுகளில் இனி இந்தி மொழி மட்டுமே பயன்படுத்தப்படும் என ஜிப்மர் இயக்குநர் உத்தரவு
சென்னை மயிலாப்பூர் கோவிந்தசாமி நகரில் குடியிருப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கண்ணையா(55) என்பவர் தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அண்ணா பல்கலைக்கழக சான்றிதழ் கட்டண உயர்வை திமுக அரசு திரும்பப்பெற வேண்டும். முதல்வர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். கல்விக் கட்டணத்தை செலுத்தவே சிரமப்படும் ஏழை மக்கள் மீது இது போன்ற சுமையை விதிப்பது ஏற்கத்தக்கதல்ல என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
கேரளா கொல்லம் பகுதியில் பரவி வரும் தக்காளி வைரஸ் தொடர்பாக தமிழக மக்கள் அச்சம் அடைய வேண்டாம். சிவப்பு நிற புள்ளிகள் தோன்றுவதால் தக்காளி வைரஸ் என்று பெயரிடப்பட்டது; தக்காளிக்கும் தக்காளி வைரஸுக்கும் தொடர்பு இல்லை. இருந்தாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பயமின்றி தேர்வு எழுத வர வேண்டும். மதிப்பெண் மட்டுமே தங்களின் திறமையை தீர்மானிக்காது என அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி
பட்டினப்பிரவேசம் நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாய்மொழி அனுமதி வழங்கியதாக தருமபுரம் ஆதீனம் பேட்டி. நேற்று பல்வேறு ஆதீனங்கள் முதல்வரை சந்தித்த நிலையில் தருமபுரம் ஆதீனம் தகவல்
இந்தியாவில் மேலும் 3,451 பேருக்கு கொரோனா தொற்று. 40 பேர் உயிரிழப்பு. கொரோனாவில் இருந்து மேலும் 3,079 பேர் குணமடைந்தனர். தற்போது,நாடு முழுவதும் 20,635 பேர் சிகிச்சையில் உள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவானது 'அசானி' புயல். அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறக்கூடும். வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா இடையே மே 10ல் ’அசானி’ புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஆடிட்டர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவியை படுகொலை செய்து மூட்டை மூட்டையாக நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு ஆந்திரா நோக்கி சென்றுகொண்டிருந்த கார் டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்
சென்னை, கடலூர், நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு. ஆந்திரா மற்றும் ஓடிசா நோக்கி புயல் நகரும் என தகவல்
உள்ளாட்சி வரி விதிப்பிற்கும் மத்திய அரசுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நிலக்கரி தட்டுப்பாடு என்பதே கிடையாது. மாநில அரசுக்கு தேவையான நிலக்கரியை மத்திய அரசு வழங்கி வருகிறது என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் இன்று முதல் மே 22 வரை நடைபெறவுள்ளது. 234 தொகுதியிலும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் அரசின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டங்களில் பங்கேற்கின்றனர்.
கேரளாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பரவும் புதிய வகை வைரசால் பொதுமக்கள் பீதி; தக்காளி காய்ச்சல் என பெயரிடப்பட்டுள்ள நோயால் இதுவரை 85 குழந்தைகள் பாதிப்பு
மாமல்லபுரத்தில் இன்று முதல் 15ம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் பயிற்சி முகாம். 44வது செஸ் ஒலிம்பியாட் ஜூலை 28 முதல் ஆக.10ம் தேதி வரை நடைபெறும். இஸ்ரேல் செஸ் கிராண்ட் மாஸ்டர் போரிஸ் ஜெல்ஃபாண்ட் இந்தியா சார்பில் பங்கேற்கும் அணிக்கு பயிற்சி அளிக்கிறார்