Advertisment

Tamil News Highlights: தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகமாக இருக்கும் - வானிலை ஆய்வு மையம்

Tamil Nadu News, Tamil News LIVE Updates, IPL 2022 Latest News 30 April 2022 தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil News Highlights: தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகமாக இருக்கும் -  வானிலை ஆய்வு மையம்

Tamil Nadu News Updates: நாகப்பட்டினத்தில் திருச்செங்காட்டங்குடி தேர் திருவிழாவில் சக்கரத்தில் சிக்கி தீபராஜன் என்ற தொழிலாளி உடல் நசுங்கி உயிரிழப்பு

Advertisment

இலங்கைக்கு ரூ123 கோடி மதிப்பிலான பொருள்களை அனுப்பும் ஸ்டாலின்

இலங்கை மக்களுக்கு உதவிகளை அனுப்ப சட்டப்பேரவையில் முதல்வர் கொண்டுவந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றம். ரூ123 கோடி மதிப்பிலான பொருள்களை அனுப்ப தயார் என அறிவிப்பு

இன்றைய விலை நிலவரம்

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் லிட்டர் 110.85 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 100.94 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

மே முதல் வாரத்தில் வெப்ப நிலை எச்சரிக்கை

டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் வாட்டி வதைக்கும் வெயி், மே முதல் வாரத்திலேயே நாடு முழுவதும் வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

ஐபிஎல்: லக்னோ அணி வெற்றி

ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 20 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி. புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேற்றம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:34 (IST) 30 Apr 2022
    சென்னை குப்பைக்கிடங்கு தீ விபத்தை அணைக்க பாடுபட்ட அதிகாரிகள், தீயணைப்பு வீரர்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து

    சென்னை, பெருங்குடி குப்பைக்கிடங்கு தீ விபத்தை அணைக்க பாடுபட்ட அதிகாரிகள், தீயணைப்பு வீரர்களுக்கு எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும் என முதல்வர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். மேலும், இனி இத்தகைய நிகழ்வு நேராமல் தடுக்கும் வழிகளைக் காண அறிவுறுத்துகிறேன்; வருமுன் காப்பதே சிறப்பு என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்



  • 21:38 (IST) 30 Apr 2022
    திருவண்ணாமலை விசாரணை கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

    திருவண்ணாமலை அருகே விசாரணைக் கைதி தங்கமணி உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின்பேரில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது



  • 20:08 (IST) 30 Apr 2022
    நடப்பாண்டின் அதிகபட்ச வெப்பநிலையாக வேலூரில் 42.2 டிகிரி செல்சியஸ் இன்று பதிவு

    தமிழகத்திலேயே வேலூரில் நடப்பாண்டின் அதிகபட்ச வெப்பநிலையாக 42.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இன்று பதிவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • 19:47 (IST) 30 Apr 2022
    சி.எஸ்.கே கேப்டன் பதவியை தோனியிடம் ஒப்படைத்த ஜடேஜா!

    சிஎஸ்கே கேப்டன் பதவியை ஜடேஜா மீண்டும் எம்எஸ் தோனியிடம் ஒப்படைத்துள்ளார். ரவீந்திர ஜடேஜா தனது ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்தவும், சிஎஸ்கேயை வழிநடத்தவும் எம்எஸ் தோனியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஜடேஜா தனது விளையாட்டில் கவனம் செலுத்த அனுமதிக்கும் வகையில் CSK-ஐ வழிநடத்த எம்எஸ் தோனி ஒப்புக்கொண்டுள்ளார் என சிஎஸ்கே அணி தெரிவித்துள்ளது.



  • 19:21 (IST) 30 Apr 2022
    பள்ளி மாணவர்கள் செய்யும் விரும்பத்தகாத செயல்கள் வருத்தம் அளிக்கிறது - தமிழிசை சௌந்தரராஜன்

    தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவியர்கள் செய்யும் விரும்பத்தகாத செயல்கள் வருத்தம் அளிக்கிறது. பெற்றோர்கள் பெண் குழந்தைகளைப் போல ஆண் குழந்தைகளுக்கும் அறிவுரைகள் கூறி வளர்க்க வேண்டும் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.



  • 18:31 (IST) 30 Apr 2022
    கும்பகோணத்தில் கட்டுமான பணியின்போது சுவர் இடிந்து விழுந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு

    கும்பகோணத்தில் கட்டுமான பணியின்போது வெயில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த இடிபாடுகளில் சிக்கி கார்த்திக் என்பவர் உயிரிழந்துள்ள நிலையில், ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்



  • 18:01 (IST) 30 Apr 2022
    தூத்துக்குடியில் திடீர் கடல் சீற்றம்; ஊருக்குள் உட்புகுந்த கடல்நீரால் பரபரப்பு

    தூத்துக்குடி அருகே தாளமுத்து நகர் கடற்பகுதியில் திடீர் கடல் சீற்றம் காரணமாக சுமார் 100 அடி தூரத்திற்கு கடல் நீர் உட்புகுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



  • 17:30 (IST) 30 Apr 2022
    திண்டுக்கல் மாவட்டத்திற்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மேம்படுத்தப்படும் - மு.க.ஸ்டாலின்

    திண்டுக்கல் மாவட்டத்திற்கு கூடுதல் குடிநீர் கிடைக்க காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மேம்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்



  • 16:33 (IST) 30 Apr 2022
    12ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 11-ம் வகுப்பு மாணவர்கள் கைது

    நெல்லை, அம்பை அருகே மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில் 12ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 11ம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.



  • 16:27 (IST) 30 Apr 2022
    அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

    திண்டுக்கலில் நடைபெறும் அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ள நிலையில்,திண்டுக்கலில் ₨40.45 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகளை திறந்து வைக்க உள்ளார்



  • 15:33 (IST) 30 Apr 2022
    தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துகள் - முதல்வர் ஸ்டாலின்

    மே 1ஆம் தினத்தை முன்னிட்டு தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துகள். தொழிலாளர்களின் உற்ற தோழனாகவும், அவர்களது உரிமைக்குரலை காதுகொடுத்து கேட்டு நிறைவேற்றும் அரசுதான் திமுக அரசு என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.



  • 15:32 (IST) 30 Apr 2022
    ஸியோமி இந்தியா நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கம்

    பிரபல செல்போன் நிறுவனமான ஸியோமி இந்தியா நிறுவனத்தின் ₨5,551.27 கோடி மதிப்பிலான சொத்துக்கள் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை முடக்கம் செய்துள்ள நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஸியோமி மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.



  • 14:51 (IST) 30 Apr 2022
    என் வீட்டிலேயே கரண்ட் இல்லை.. ஈபிஎஸ் குற்றச்சாட்டு!

    தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் சமீப காலமாக அறிவிக்கப்பட்டாத மின்வெட்டு அதிகமாகி வரும் நிலையில், என் வீட்டிலேயே கரண்ட் இல்லை என ஈபிஎஸ் தமிழக அரசின் மீது குற்றம்சாட்டியுள்ளார்.



  • 14:14 (IST) 30 Apr 2022
    மழைக்கு வாய்ப்பு!

    தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.



  • 14:14 (IST) 30 Apr 2022
    ஜாக்குலின் பெர்னான்டஸ் சொத்துக்கள் முடக்கம்!

    இரட்டை இலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர், ஜாக்குலினுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கிய வழக்கில், பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸின் ரூ. 7 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.



  • 13:49 (IST) 30 Apr 2022
    இந்திய ராணுவத்தின் 29வது தலைமை தளபதி!

    இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி நரவனே ஓய்வு பெறுவதையொட்டி, 29வது தலைமை தளபதியாக மனோஜ் பாண்டே பொறுப்பேற்றுக் கொண்டார்.



  • 13:09 (IST) 30 Apr 2022
    நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவு!

    நெல்லை மாவட்டம் அம்பை அருகே பள்ளி மாணவன் உயிரிழந்த நிலையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பள்ளி நிர்வாகக் குழு ஆய்வு செய்ய வேண்டும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.



  • 13:09 (IST) 30 Apr 2022
    விசாரணை கைதி, மரணம்.. ஆட்டோ டிரைவருக்கு சம்மன்!

    சென்னையில் விசாரணை கைதி, மரணமடைந்த விவகாரத்தில் காவலர்கள் தாக்கியதை நேரில் பார்த்த ஆட்டோ ஓட்டுநர் பிரபு விசாரணைக்கு ஆஜராக சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.



  • 12:56 (IST) 30 Apr 2022
    வரலாற்றில் இதுவரை இல்லாத ஒன்று

    “இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், நேற்று அதிகபட்சமாக மின் நுகர்வு 2,07,111 மெகா வாட்டாக இருந்தது" என்று மத்திய மின்துறை தெரிவித்தது.



  • 12:43 (IST) 30 Apr 2022
    மசாஜ் சென்டரின் வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

    மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக பதிவுசெய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. மசாஜ் சென்டரின் வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். மசாஜ் சென்டர்களில் சோதனை நடத்த போலீசாருக்கு அதிகாரம் உள்ளது எனவும் அறிவித்தது.



  • 12:20 (IST) 30 Apr 2022
    சென்னை, ஐஐடியில் மேலும் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

    தற்போது கொரோனாவுக்கு 141 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 196 ஆக உயர்ந்துள்ளது. 7,300 மாதிரிகளில் 196 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி அளித்தார்.



  • 12:15 (IST) 30 Apr 2022
    அரசு பள்ளி மாணவர்களிடையே தகராறு-போலீஸார் வழக்கு பதிவு

    அம்பை அருகே உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில் காயமடைந்த 12ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தனர். 11ம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.



  • 11:57 (IST) 30 Apr 2022
    உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்க வேண்டும்-பிரதமர் மோடி

    நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.



  • 11:42 (IST) 30 Apr 2022
    நீதித்துறையை வலுப்படுத்த அதிக முன்னுரிமை - பிரதமர் மோடி

    சட்ட மன்றங்கள் மற்றும் நீதித்துறைக்கு இடையிலான ஒத்துழைப்பு சிறப்பான நீதித்துறை அமைப்புக்கு வழிவகுக்கும். நீதித்துறையை வலுப்படுத்த அதிக முன்னுரிமை அளித்து வருகிறோம் என்று முதல்வர்கள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் கூட்டு மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்தார்.



  • 11:24 (IST) 30 Apr 2022
    நிசான் மோட்டார் தொழிற்சாலை மூடுவதை நிறுத்த வேண்டும்-ஓபிஎஸ்

    சென்னையில் இயங்கும் நிசான் மோட்டார் தொழிற்சாலை மூடப்படுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்; நிறுவனம் மூடப்படுவதால் மறைமுகமாகவும், நேரடியாகவும் பணியாற்றும் தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்று ஓபிஎஸ் தெரிவித்தார்.



  • 10:15 (IST) 30 Apr 2022
    தேனி ரேஷன் கடையில் முதல்வர் ஆய்வு

    தேனி ரேஷன் கடையில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீரென ஆய்வு மேற்கொண்டார். கடைகளில் பொருட்களை வாங்க வந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.



  • 09:32 (IST) 30 Apr 2022
    கடந்த 24 மணி நேரத்தில் 3,688 பேருக்கு கொரோனா

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆக்டிவ் கேஸ்கள் 18 ஆயிரத்து 684 ஆக அதிகரித்துள்ளது.



  • 09:28 (IST) 30 Apr 2022
    சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு ரூ5 லட்சம் நிதி!

    நாகை திருமருகல் அருகே கோயில் திருவிழாவில் தேர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞர் தீபராஜன் குடும்பத்துக்கு ரூ5 லட்சம் நிதியுதவி முதல்வர் அறிவித்தார்



  • 09:17 (IST) 30 Apr 2022
    சென்னையில் ஆன்லைன் ரம்மியால் இளைஞர் தற்கொலை

    சென்னை போரூரில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ15 லட்சம் பணம் இழந்த தனியார் நிறுவன முன்னாள் ஊழியர் பிரபு, வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை.



  • 09:02 (IST) 30 Apr 2022
    600க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்கள் ரத்து செய்ய திட்டம்!

    அனல்மின் நிலையங்களுக்கு கூடுதல் சரக்கு ரயில்களில் நிலக்கரியை விரைந்து அனுப்ப, நாடு முழுவதும் சுமார் 600க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்களை ரத்து செய்ய ரயில்வே நிர்வாகம் திட்டம். முதற்கட்டமாக 43 பயணிகளை ரயில் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து மக்கள் போராட்டம்



  • 08:51 (IST) 30 Apr 2022
    தஞ்சை தேர் விபத்து - ஒரு நபர் விசாரணை குழு இன்று ஆய்வு

    தஞ்சை தேர் விபத்து தொடர்பாக ஒரு நபர் விசாரணை குழு இன்று நேரில் ஆய்வு. களிமேடு பகுதியில் வருவாய் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் இன்றும், நாளையும் ஆய்வு. கடந்த புதன்கிழமை களிமேடு பகுதியில் தேரில் மின்சாரம் தாக்கியதில் 11 பேர் உயிரிழப்பு



  • 08:45 (IST) 30 Apr 2022
    வல்லூர் அனல்மின் நிலையங்களில் மின் உற்பத்தி தொடக்கம்

    வட சென்னை, வல்லூர் அனல்மின் நிலையங்களில் பழுது சரி செய்யப்பட்டு 710 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடக்கம். ஏப்ரல் 26ம் தேதி வல்லூர் அனல்மின் நிலைய 1வது அலகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.



  • 08:29 (IST) 30 Apr 2022
    டெல்லியில் இன்று முதல்வர்கள், தலைமை நீதிபதிகள் மாநாடு

    டெல்லியில் இன்று முதல்வர்கள், தலைமை நீதிபதிகளின் ஒருங்கிணைந்த மாநாட்டை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி. உயர் நீதிமன்ற நீதிபதிகள் மாநாட்டில் தமிழ்நாடு சார்பில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பங்கேற்கவுள்ளார்.



  • 08:07 (IST) 30 Apr 2022
    இந்திய மாணவர்களுக்கு சீனா அனுமதி

    கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு முன், இந்தியா வந்த மாணவர்கள் தங்கள் படிப்பைத் தொடர மீண்டும் சீனா வரலாம் என்று சீன அரசு அறிவிப்பு



Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment