Advertisment

Tamil News: மேட்டூர் அணையை இன்று திறக்கிறார் முதல்வர்

Tamil Nadu News, Tamil News LIVE Updates, IPL 2022 Latest News May 23 2022 தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
New Update
Tamil News: மேட்டூர் அணையை இன்று திறக்கிறார் முதல்வர்

Tamil Nadu News Updates: சென்னையில் இன்று முதல் இருசக்கர வாகனங்களில் பின்னிருக்கையில் அமர்வோரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம். விபத்தில்லா நகரை உருவாக்க முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மக்களுக்கு காவல் துறை வேண்டுகோள்

Advertisment

இன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம்

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. நேற்றை விலையிலேயே விற்பனை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ102.63க்கும், டீசல் ரூ94.24க்கும் விற்பனையாகிறது.

தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம் நிறைவு

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப்பிரவேசம் நிறைவு பெற்றது. மே 12 ல் கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், நேற்று தருமபுர ஆதீனம் நாற்காலி பல்லக்கில் உலா வந்தார். பட்டணப் பிரவேச பல்லக்கு வீதியுலா நான்கு மாட வீதிகளையும் சுற்றி வந்து முடிவடைந்தது.

ஆஸி. புதிய பிரதமராக அந்தோணி ஆல்பனீஸ் பதவியேற்பு

ஆஸ்திரேலிய நாட்டின் புதிய பிரதமராக அந்தோனி ஆல்பனீஸ் முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். ஆஸ்திரேலியாவின் 31 ஆவது பிரதமராக கேன்பரா நகரில் உள்ள அரசு இல்லத்தில் பதவியேற்றுக்கொண்டார்.

ஐபிஎல்: பஞ்சாப் அணி வெற்றி

நடப்பு ஐபிஎல் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. ஹைதராபாத் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:28 (IST) 23 May 2022
    பத்திரிக்கைகள் மீதான அடக்குமுறையை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் – அண்ணாமலை

    ஜி ஸ்கொயர் நிறுவனம் குறித்து பல்வேறு முறை நான் குறிப்பிட்டுள்ளேன். ஆளும் கட்சிக்கும் ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஜி ஸ்கொயர் அளித்த புகாரின் உண்மைத் தன்மையை ஆராயாமல், ஜூனியர் விகடன், சவுக்கு சங்கர் மாரிதாஸ் மீது வழக்கு பதிவு செய்துள்ளது ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. பத்திரிக்கைகள் மீதான அடக்குமுறையை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்



  • 21:59 (IST) 23 May 2022
    டெல்லி துணைநிலை ஆளுநராக வினய்குமார் சக்சேனா நியமனம்

    டெல்லி துணைநிலை ஆளுநராக வினய்குமார் சக்சேனா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அனில் பைஜால் ராஜினாமாவைத் தொடர்ந்து புதிய ஆளுநராக வினை குமார் சக்சேனா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 'காதி இந்தியா' வின் தலைவராக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது



  • 21:34 (IST) 23 May 2022
    ஜூன் 7, 8, 9ல் ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு

    வருகின்ற ஜூன் 7, 8, 9 தேதிகளில் ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர்



  • 20:55 (IST) 23 May 2022
    வேடந்தாங்கல் சரணாலயம் விரிவாக்க பணிக்கு இடைக்கால தடை

    செங்கல்பட்டு, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அருகே உள்ள தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் விரிவாக்க பணிக்கு இடைக்கால தடை விதித்து, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது



  • 20:44 (IST) 23 May 2022
    நடிகர் டி.ராஜேந்தர் மருத்துவமனையில் அனுமதி

    இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்



  • 20:09 (IST) 23 May 2022
    சென்னையில் இன்று ஒரே நாளில் 3926 ஹெல்மெட் வழக்குகள் பதிவு

    சென்னையில் இன்று ஒரே நாளில் 3926 ஹெல்மெட் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹெல்மேட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக மாலை 6 மணி நேர நிலவரப்படி 1903 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் ஹெல்மெட் அணியாமல் பின் இருக்கையில் அமர்ந்து இருந்ததாக 2023 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது



  • 19:47 (IST) 23 May 2022
    3 டன் கெட்டு போன இறைச்சி பறிமுதல்

    கர்நாடகாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 3 டன் கெட்டு போன இறைச்சியை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்



  • 19:32 (IST) 23 May 2022
    ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி டிரா

    ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி டிராவில் முடிந்தது. இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன. இதில் தமிழக வீரர் செல்வம் கார்த்தி ஒரு கோல் அடித்து அசத்தியுள்ளார்



  • 19:14 (IST) 23 May 2022
    மதுரை - தேனி ரயில் சேவை வரும் 27ஆம் தேதி முதல் தொடக்கம்

    மதுரை - தேனி இடையேயான முன்பதிவில்லா தினசரி பயணிகள் ரயில் சேவை வரும் 27ஆம் தேதி முதல் தொடங்குகிறது. வட பழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி வழியாக மதுரை - தேனிக்கு இருமார்க்கங்களிலும் ரயில் சேவை இயக்கப்படும் என மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது



  • 19:00 (IST) 23 May 2022
    உணவு நெருக்கடியை சமாளிக்க சர்வதேச உதவியை நாட உள்ளோம் - இலங்கை பிரதமர்

    இலங்கை மக்களுக்கு 3 வேளையும் உணவு கிடைப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. உணவு நெருக்கடியை சமாளிக்க சர்வதேச உதவியை நாட உள்ளோம் என இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார்



  • 18:46 (IST) 23 May 2022
    உயர்தர மதுபான விடுதி; வணிக வரித்துறை வரி வசூலிக்க ஐகோர்ட் தடை

    உயர்தர மதுபான விடுதிகளுக்கு வணிக வரித்துறை விதிக்கும் வரியை ரத்து செய்யக்கோரிய வழக்கில், வணிக வரித்துறையின் வரியை வசூலிப்பதற்கு தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது



  • 18:16 (IST) 23 May 2022
    புத்தர் காட்டிய பாதையை உலகம் பின்பற்ற வேண்டும் - பிரதமர் மோடி

    எண்ணற்ற சவால்களில் இருந்து மனிதகுலத்தை காக்க புத்தர் காட்டிய பாதையை உலகம் பின்பற்ற வேண்டும் என ஜப்பான் வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி கூறியுள்ளார்



  • 18:07 (IST) 23 May 2022
    ஆசிய கோப்பை ஹாக்கி; பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தமிழக வீரர் அசத்தல்

    ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. தமிழக வீரர் கார்த்தி முதல் கோலை அடித்து அசத்தியுள்ளார்



  • 17:39 (IST) 23 May 2022
    போலீசார் ஹெல்மெட் அணியாமல் சென்றாலும் நடவடிக்கை – போக்குவரத்து காவல் ஆணையர்

    போலீசார் ஹெல்மெட் அணியாமல் சென்றாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணித்த வகையில் 2,200 வழக்குகளும், பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாமல் சென்றது தொடர்பாக 1000 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் ஆணையர் தெரிவித்துள்ளார்.



  • 16:45 (IST) 23 May 2022
    விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல்

    விருதுநகரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 680 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை நீதிமன்றத்திலும், விருதுநகர் இளஞ்சிறார் குழுமத்திலும் சிபிசிஐடி போலீஸ் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.



  • 16:11 (IST) 23 May 2022
    திருமாவளவனுடன் பேரறிவாளன், அற்புதம்மாள் சந்திப்பு; விடுதலையில் உதவி செய்ததற்கு நன்றி

    விசிக தலைவர் திருமாவளவனுடன் பேரறிவாளன், அற்புதம்மாள் சந்தித்து பேரறிவாளனின் விடுதலையில் உதவியதற்கு நன்றி தெரிவித்தனர். திருமாவளவன் டெல்லி அழைத்துச் சென்று உள்துறை அமைச்சரை சந்திக்க வைத்தார் என்று அற்புதம்மாள் நன்றி.



  • 15:50 (IST) 23 May 2022
    மே 28-இல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - துரைமுருகன் அறிவிப்பு

    திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கூட்டம் வருகிற 28.05.2022 சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெறும். அப்போது மாவட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று அறிவித்துள்ளார்.

    மாவட்ட செயலாளர்கள் கூட்டம், ஜூன் 3 ஆம் தேதி முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் 99வது பிறந்தநாள் விழா தொடர்பாக நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 15:36 (IST) 23 May 2022
    ஞானவாபி மசூதி விவகாரம்: விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைப்பு

    ஞானவாபி மசூதி விவகாரத்தில் விசாரணை முடிவடைந்த நிலையில், வாரணாசி நீதிமன்றம் தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைத்தது.



  • 15:02 (IST) 23 May 2022
    ஹெல்மெட் அபராதம் என்பது மக்களை பாதுகாக்க எடுக்கப்படும் முடிவு - சென்னை கூடுதல் ஆணையர்

    சென்னை மாநகர காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் சரட்கர்: “ஹெல்மெட் அபராதம் என்பது மக்களை பாதுகாக்க எடுக்கப்படும் முடிவு; ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.



  • 14:01 (IST) 23 May 2022
    அன்பில் மகேஷ் பேட்டி!

    தமிழக அரசின் அழுத்தத்தின் காரணமாகவே ஆளுநர் நீட் ரத்து மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார். தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. இலங்கை மறுவாழ்வு மையத்தில் உள்ள மாணவர்கள் உயர்கல்வி படிக்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்



  • 13:59 (IST) 23 May 2022
    மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம், வரும் 28ம் தேதி நடைபெறும் என துரைமுருகன் அறிவித்துள்ளார்.



  • 13:18 (IST) 23 May 2022
    உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

    விருதுநகரில் ஊராட்சிமன்ற செயலாளர் நியமன உத்தரவுக்கு தடை விதிக்க கோரிய வழக்கில், மாவட்ட ஆட்சியரின் நியமன உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. செயலாளர்கள் நியமனம் ஊராட்சிமன்ற தலைவரின் அதிகாரத்திற்கு உட்பட்டது - நீதிமன்றம்



  • 13:18 (IST) 23 May 2022
    தீ விபத்து!

    தலைநகர் மணிலாவில் இருந்து கியூசான் சென்ற படகில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். 23 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.



  • 13:18 (IST) 23 May 2022
    விமானங்கள் ரத்து

    டெல்லியில் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, சென்னையில் இருந்து டெல்லி செல்லக்கூடிய 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.



  • 13:17 (IST) 23 May 2022
    10 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடல்!

    தமிழகத்தில் போதிய மாணவர் சேர்க்கை இல்லாததால் 10 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடப்பட உள்ளன. வரும் கல்வியாண்டில் அங்கீகாரம் பெறுவதற்கு 10 பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பிக்கவில்லை என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.



  • 12:36 (IST) 23 May 2022
    ஜப்பானில் பிரதமர்!

    இந்தியாவின் ஸ்மார்ட் சிட்டி திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து, ஜப்பானில் தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தக நிறுவன பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.



  • 12:36 (IST) 23 May 2022
    6 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்.. சீமான்!

    பேரறிவாளன் விடுதலை தீர்ப்பு மற்ற 6 பேருக்கும் பொருந்தும்: 6 பேரையும் விடுதலை செய்ய வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்ட அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்- சீமான்!



  • 12:35 (IST) 23 May 2022
    மிதமான மழைக்கு வாய்ப்பு!

    தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.



  • 12:00 (IST) 23 May 2022
    இலங்கையில் 8 அமைச்சர்கள் பதவியேற்பு!

    இலங்கையில் டக்ளஸ் தேவானந்தா, ரொஷான் ரணசிங்க உள்ளிட்ட 8 அமைச்சர்கள், அதிபர் கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டனர்.



  • 11:27 (IST) 23 May 2022
    டெல்லியில் விமான சேவை பாதிப்பு!

    டெல்லியில் பலத்த காற்றுடன் பெய்த மழை, மோசமான வானிலையால் தரையிறங்க இருந்த சுமார் 19 விமானங்கள் லக்னோ, இந்தூர், அமிர்தசரஸ், மும்பை ஆகிய நகரங்களுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • 11:16 (IST) 23 May 2022
    வளர்ச்சி திட்டம். ஸ்டாலின் துவங்கி வைப்பு!

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை, சென்னை, தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் 1,997 கிராமப் பஞ்சாயத்துகளில் 9 லட்சம் விவசாய குடும்பங்கள் பயன்பெறும்.



  • 10:52 (IST) 23 May 2022
    14% அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும்: ஓபிஎஸ்

    குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியாளர்களுக்கு 14% அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும். பிற வாரியங்கள், கூட்டுறவு நிறுவனங்களிலும் அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க ஓபிஎஸ் வலியுறுத்தல்



  • 10:28 (IST) 23 May 2022
    மே 31ல் நெல்லை, தென்காசி செல்கிறார் முதல்வர்

    மே 31ல் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் முதல்வர் மு.க ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.



  • 10:05 (IST) 23 May 2022
    விலையை உயர்த்துவது மத்திய அரசு; குறைப்பது மாநில அரசா?

    பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது மத்திய அரசு. குறைப்பது மாநில அரசா? சுகாதாரத் துறையில் உள்ள 4 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.



  • 09:57 (IST) 23 May 2022
    திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு

    தடையை மீறி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்தை நடத்த முயன்ற திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு. தடையை மீறி கூட்டம் நடத்த முயன்றதாக சாஸ்திரி நகர் போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



  • 09:43 (IST) 23 May 2022
    ஜூன் 2 மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தம்

    தமிழகத்தில் வரும் ஜூன் 2ம் தேதி மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு.ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் அறிவிப்பு



  • 09:42 (IST) 23 May 2022
    தங்கம் விலை இன்று மே 23

    சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ112 உயர்ந்து, ரூ38,648-க்கு விற்பனை. ஒரு கிராம் தங்கம் ரூ4,831-க்கு விற்பனையாகிறது.



  • 09:32 (IST) 23 May 2022
    பழவேற்காடு மீனவர்கள் போராட்டம்

    திருவள்ளூர் பழவேற்காடு மீனவர்கள் போராட்டத்துக்கு தயாரான நிலையில் போலீசார் குவிப்பு. 250 தொழிலாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பழவேற்காடு மீனவர்கள் கூட்டமைப்பினர் போராட்டம்



  • 09:12 (IST) 23 May 2022
    கடந்த 24 மணி நேரத்தில் 2022 பேருக்கு கொரோனா

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2022 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. 2099 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். 46 பேர் உயிரிழப்பு. தற்போது 14,832 பேர் தொற்று பாதிப்புக்கு சிகிச்சையில் உள்ளனர்



  • 08:36 (IST) 23 May 2022
    அதிபருக்கு அதிகளவு அதிகாரங்களை வழங்கும் மசோதாவுக்கு இன்று ஒப்புதல்

    இலங்கையில் அதிபருக்கு அதிகளவு அதிகாரங்களை வழங்கும் சட்டப்பிரிவை செல்லாதது ஆக்கும் வகையிலான அரசியல் சாசன திருத்த மசோதாவுக்கு இன்று அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளிக்க உள்ளது



  • 07:58 (IST) 23 May 2022
    தலைநகர் டெல்லியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை

    டெல்லியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளதால், விமான சேவை பாதிப்பு



  • 07:57 (IST) 23 May 2022
    டோக்கியோவுக்கு சென்றடைந்தார் பிரதமர் மோடி

    குவாட் உச்ச மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பானின் டோக்கியோ நகருக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகள் குவாட் அமைப்பில் இணைந்து செயல்படுகின்றன.



Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment