Advertisment

Tamil News: சென்னையில் பெட்ரோல் ரூ8.22, டீசல் ரூ6.70 குறைந்தது!

Tamil Nadu News, Tamil News LIVE, Petrol price Today, IPL 2022, MS Dhoni, TNPSC Group 2 Exam - 21 May 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil News: சென்னையில் பெட்ரோல் ரூ8.22, டீசல் ரூ6.70 குறைந்தது!

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.110.85 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 100.94 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு!

5,529 காலி பணியிடங்களுக்கான குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு, தமிழகம் முழுவதும் 4012 மையங்களில் இன்று (மே 21) நடக்கிறது. மொத்தம் 11.78 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். தேர்வு எழுதுபவர்கள், ஹால் டிக்கெட் உடன் ஆதார் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை என ஏதாவது ஒன்றின் பிரதி மற்றும் அசல் எடுத்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. குரூப் -2 தேர்வு முடிவுகள் ஜூன் மாத இறுதியில் வெளியிடப்படும்.

IPL 2022: ராஜஸ்தான் அணி வெற்றி!

ஐபிஎல் போட்டியில் நேற்று சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த சென்னை அணி, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, சிஎஸ்கே அணியில் மொயீன் அலி 57 பந்துகளில் 93 ரன்கள் குவித்தார். தொடர்ந்து 151 ரன்கள் இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் அணி 19.4 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

&t=40s

Tamil News Latest Updates

குறைந்த விலையில் தக்காளி விற்பனை!

மழைப்பொழிவு, வரத்து குறைவு போன்ற காரணங்களால் தக்காளியின் விலை கிலோவிற்கு 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்நிலையில் பண்ணை பசுமை கூட்டுறவு அங்காடி மூலம், மாவட்டங்களில் குறைந்த விலையில் தக்காளி விநியோகம் செய்ய கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி நாள் ஒன்றுக்கு 4 மெட்ரிக் டன் தக்காளிகள் கொள்முதல் செய்யப்பட்டு, 80 முதல் 85 ரூபாய்க்கு விற்கப்படும்.

சென்னை, கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று 1 கிலோ தக்காளி விலை ரூ.90 ஆகவும், சில்லறை விற்பனை நிலையங்களில் 1 கிலோ தக்காளி விலை ரூ.110க்கும் விற்பனையாகிறது.

ரூ. 1,500 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்!

கேரள மாநிலம் அகத்தியர் தீவு அருகே ரூ. 1,500 கோடி மதிப்புள்ள, 218 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. லட்சத்தீவு அருகே வெளிநாட்டிலிருந்து கடத்தப்பட்டு கைமாற்றப்பட்டபோது, இந்த போதைப்பொருள் பிடிபட்டதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த 20 பேரை, கொச்சி கடலோர காவல்படையினர் கைது செய்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 21:37 (IST) 21 May 2022
    கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு, சாமானியர்களின் பட்ஜெட்டை எளிதாக்கும்- பிரதமர் மோடி

    கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு முடிவானது சாமானியர்களின் பட்ஜெட்டை எளிதாக்கும். ட்வீட் இன்றைய எரிபொருள் விலை குறைப்பு முடிவானது பல்வேறு துறைகளில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் மக்களின் வாழ்வை மேலும் எளிதாக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்



  • 20:47 (IST) 21 May 2022
    பெட்ரோல், டீசல் விலையை திமுக அரசு குறைக்குமா? – அண்ணாமலை

    மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை குறைத்த பிரதமருக்கு நன்றி. பெட்ரோல், டீசல் விலையை திமுக அரசு குறைக்குமா? என மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்! என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்



  • 20:21 (IST) 21 May 2022
    திருவள்ளூரில் மின் கசிவு காரணமாக 3 கடைகளில் தீ விபத்து

    திருவள்ளூர் மாவட்டம் வெள்ளானூர் பகுதியில் ஒன்றாக நடத்தப்பட்ட வந்த துரித உணவகம், பங்க் கடை, பழரச கடைகளில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளன



  • 19:39 (IST) 21 May 2022
    டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு

    ஐபிஎல் போட்டிகளில், டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது



  • 18:53 (IST) 21 May 2022
    ஒரு காஸ் சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்கப்படும் - நிர்மலா சீதாராமன்

    இந்த ஆண்டு, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம் 9 கோடி பயனாளிகளுக்கு ஒரு காஸ் சிலிண்டருக்கு (12 சிலிண்டர்கள் வரை) 200 ரூபாய் மானியம் வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்



  • 18:51 (IST) 21 May 2022
    மத்திய கலால் வரி ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.8, டீசலுக்கு ரூ.6 குறைப்பு - நிர்மலா சீதாராமன்

    பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான வரியை லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கிறோம். இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.5ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7ம் குறையும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்



  • 18:42 (IST) 21 May 2022
    திருப்பதியில் பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்திற்காக 30 மணி நேரம் பக்தர்கள் காத்திருக்கின்றனர். கோடை விடுமுறை, வார விடுமுறையால் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகின்ற நிலையில், நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது



  • 18:24 (IST) 21 May 2022
    சட்டவிரோத செயல் அலுவலர்கள் பணி; தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

    நியமன உத்தரவுகள் இல்லாமல் தமிழக கோவில்களில் சட்டவிரோதமாக செயல் அலுவலர்களாக பணியில் உள்ளவர்களை நீக்க கோரி வழக்கில், 8 வாரங்களில் தமிழக அரசு, அறநிலையத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது



  • 17:52 (IST) 21 May 2022
    ராஜீவ் காந்தி கொலை வழக்கு; 6 பேர் விடுதலை தொடர்பாக மு.க.ஸ்டாலின் ஆலோசனை

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 6 பேர் விடுதலை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். உதகையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக சட்ட வல்லுநர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்



  • 17:32 (IST) 21 May 2022
    4 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி – பள்ளிக்கல்வித்துறை

    4 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது



  • 17:00 (IST) 21 May 2022
    மே 23,24இல் மோடி ஜப்பான் பயணம்

    பிரதமர் மோடி வரும் 23, 24 ஆகிய தேதிகளில் ஜப்பானுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க மோடிக்கு ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அழைப்பு



  • 16:50 (IST) 21 May 2022
    2 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம் - சக்கரபாணி

    தமிழகத்தில் 2 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம். உயிரிழந்த பிறகும் குடும்ப அட்டைகளில் இருந்த 12 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன என உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.



  • 16:30 (IST) 21 May 2022
    கட்சி தொடங்கி 35 ஆண்டுகள் ஆகியும் முதல்வர் ஆகவில்லை - அன்புமணி ராமதாஸ் பேச்சு

    நாம் கட்சி தொடங்கி 35 வருடங்கள் ஆகிறது. ஆனால், இதுவரை நாம் முதல்வர் ஆகவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. 2026ல் நாம் தான் முதல்வர், இதை மக்கள் நினைத்து விட்டார்கள். நீங்கள் அதனை உறுதி செய்ய வேண்டும் என கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் பேச்சு



  • 16:06 (IST) 21 May 2022
    பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி

    4 முதல் 9ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்க எஸ்சிஇஆர்டி உத்தரவு. தகுதி வாய்ந்த ஆசிரியர்களை கண்டறியவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



  • 16:05 (IST) 21 May 2022
    குரூப் 2, 2ஏ தேர்வில் 1.83 லட்சம் பேர் ஆப்சென்ட்

    இன்று நடைபெற்ற குரூப் 2, 2ஏ தேர்வில் 1.83 லட்சம் பேர் ஆப்சென்ட். 11.78 லட்சம் பேர் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்திருந்த நிலையில், 9.94 லட்சம் பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றுள்ளனர் என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.



  • 15:54 (IST) 21 May 2022
    உண்ணாவிரதத்தை கைவிட்டார் முருகன்

    வேலூர் சிறையில் இருக்கும் முருகன் உண்ணாவிரதத்தை கைவிட்டார் என வழக்கறிஞர் புகழேந்தி தகவல். 6 நாள் அவசர பரோல் வழங்க கோரி கடந்த 19 நாட்களாக முருகன் உண்ணாவிரதம்



  • 15:34 (IST) 21 May 2022
    குரூப் 2, 2ஏ தேர்வில் 1.83 லட்சம் பேர் ஆப்சென்ட்

    இன்று நடைபெற்ற குரூப் 2, 2ஏ தேர்வில் 1.83 லட்சம் பேர் ஆப்சென்ட். 11.78 லட்சம் பேர் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்திருந்த நிலையில், 9.94 லட்சம் பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றுள்ளனர் என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.



  • 15:31 (IST) 21 May 2022
    TNPSC தேர்வறையில் செல்போனுடன் சிக்கிய நபர்

    பரமக்குடியில் டிஎன்பிஎஸ்சி தேர்வறையில் செல்போன் வைத்திருந்த சங்கர் என்பவரை சிக்கியுள்ளார். அவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • 15:10 (IST) 21 May 2022
    தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் - அரையிறுதியில் வெளியேறிய பிவி சிந்து

    தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறது போட்டியிலிருந்து வெளியேறினார் பிவி சிந்து. சீன வீராங்கனையான சென் யூஃபெ-யிடம் 2.0 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தார்.



  • 15:10 (IST) 21 May 2022
    தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் - அரையிறுதியில் வெளியேறிய பிவி சிந்து

    தாய்லாந்து ஒபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறது போட்டியிலிருந்து வெளியேறினார் பிவி சிந்து. சீன வீராங்கனையான சென் யூஃபெ-யிடம் 2.0 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தார்.



  • 15:07 (IST) 21 May 2022
    தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் - அரையிறுதியில் வெளியேறிய பிவி சிந்து

    தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறது போட்டியிலிருந்து வெளியேறினார் பிவி சிந்து. சீன வீராங்கனையான சென் யூஃபெ-யிடம் 2.0 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தார்.



  • 14:56 (IST) 21 May 2022
    3 கண்டெய்னர் லாரிகள் மோதிய விபத்தில் 2 பேர் பலி

    குஜராத்தின் ஆரவல்லி மாவட்டத்தில் 3 கண்டெய்னர் லாரிகள் மோதி பயங்கர விபத்தில் 2 பேர் உயிரிழப்பு!



  • 14:26 (IST) 21 May 2022
    கூட்டணி நிலைப்பாடு - கே எஸ் அழகிரி கருத்து

    பேரறிவாளன் விவகாரத்தில் திமுக கூட்டணி நிலைப்பாடு குறித்து தேசிய தலைமைதான் முடிவெடுக்கும் என தமிழ்நாடு காங். தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.



  • 14:17 (IST) 21 May 2022
    அசாம் வெள்ளம் - 9 பேர் பலி

    அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல். நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் மாயமானதாக தகவல்



  • 14:05 (IST) 21 May 2022
    தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 13:45 (IST) 21 May 2022
    சிபிஐ அதிகாரிகள் சோதனை!

    பங்குச்சந்தை முறைகேடு வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் சோதனை ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி, மும்பை, கொல்கத்தா, காந்திநகர், நொய்டா மற்றும் குருகிராம் ஆகிய பகுதிகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 13:44 (IST) 21 May 2022
    லியோனி மீது புகார்!

    பாஜக சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் லியோனி மீது புகார் வழங்கப்பட்டுள்ளது. அதில் அவர் திருவள்ளூர் பொதுகூட்டத்தில் பட்டியலின சமுதாயத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.



  • 13:33 (IST) 21 May 2022
    பெண் டாக்டர் தற்கொலை!

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பெண் மருத்துவர் ராசி என்பவர், முதுகலை மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்விற்காக தயாராகி வந்த நிலையில் திடீரென தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



  • 13:18 (IST) 21 May 2022
    இலங்கை மக்களுக்கு 3ம் வகுப்பு மாணவி நிவாரணம்!

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த 3ம் வகுப்பு மாணவி கோபிகா ரூ.2,022-ஐ இலங்கை மக்களுக்கு நிவாரணமாக வழங்கினார். அவர் சைக்கிள் வாங்குவதற்காக சேமித்து வைத்திருந்த உண்டியல் பணத்தை பரமக்குடி வருவாய் கோட்டாட்சியரிடம் நிவாரணமாக வழங்கினார்.



  • 13:14 (IST) 21 May 2022
    மேட்டூர் அணை மே.24ம் தேதி திறக்கப்படும் - ஸ்டாலின் அறிவிப்பு!

    மேட்டூர் அணை மே.24ம் தேதி திறக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று அவர் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.



  • 13:03 (IST) 21 May 2022
    நீலகிரி நிலம் மற்றும் மக்களை அரசு காக்கும் - ஸ்டாலின் பேச்சு!

    உதகை நகரின் 200-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், "இயற்கை எழில் கொஞ்சும் உதகை பல்வேறு சிறப்புகளை கொண்டது. பழங்குடியின மக்களின் வரவேற்பு என்னை மேலும் ஊக்கப்படுத்துகிறது. தெப்பக்காடு யானைகள் முகாமில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்படும். நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை ஏற்றுமதி செய்ய பிரத்யேக மையம் அமைக்கப்படும். சுற்றுலா சார்ந்த தொழிலாளர்களை கணக்கெடுத்து அடையாள அட்டை வழங்கப்படும்.

    வனப்பரப்பை 20 விழுக்காட்டில் இருந்து 30 விழுக்காடாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்நிய களை தாவரங்களை அகற்றும் பணிக்கு ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வன விலங்குகளை பாதுகாக்க புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். நீலகிரி நிலம் மற்றும் மக்களை தமிழக அரசு காக்கும்." என்று தெரிவித்துள்ளார்.



  • 12:29 (IST) 21 May 2022
    மக்களுக்காக ஆ.ராசா குரல் கொடுக்கிறார் - ஸ்டாலின் பேச்சு!

    உதகை நகரின் 200-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், மக்களின் பிரச்சினைகளுக்காக நாடாளுமன்றத்தில் ஆ.ராசா குரல் கொடுக்கிறார். நீலகிரி மாவட்டத்திற்கே ராஜாவாக மக்களின் தேவைகளை அறிந்து ஆ.ராசா செயல்படுகிறார். நீலகிரி மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை திமுக அரசு கொடுத்துள்ளது" என்று தெரிவித்தார்.



  • 12:28 (IST) 21 May 2022
    உதகையில் 20 புதிய பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

    உதகை நகரின் 200-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ. 118.79 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும், ரூ.34.30 கோடி மதிப்பில் 20 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.

    இவற்றுடன், ரூ.56.36 கோடி மதிப்பில் நிறைவடைந்த 28 திட்டப் பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார். மேலும், 9,500 பயனாளிகளுக்கு ₨28.13 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அவர் இன்று வழங்குகிறார்.



  • 12:17 (IST) 21 May 2022
    மாநில பொது குழு உறுப்பினர் ராஜினாமா!

    கும்பகோணம் மாநில பொது குழு உறுப்பினர் பதவியில் இருந்து தமிழக காங்கிரஸ் கமிட்டி கட்சியை சேர்ந்த தியாகராஜன் ராஜினாமா செய்துள்ளார். பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 12:13 (IST) 21 May 2022
    வில் வித்தை; இந்தியாவுக்கு தங்கம்!

    தென்கொரியாவில் நடைபெற்று வரும் உலக வில்வித்தை போட்டியில் இந்திய அணி பிரான்ஸை வீழ்த்தி தங்கம் வென்று அசத்தியுள்ளது. இப்போட்டியில் இந்திய விரர்கள் அபிஷேக் வர்மா, அமன் சைனி, ரஜாட் சவுஹான் ஆகியோர் கலந்து கொண்டு தங்கத்தை முத்தமிட்டனர்.



  • 12:03 (IST) 21 May 2022
    டிஎன்பிஎஸ்சி தேர்வு; தலைவர் பாலசந்திரன் பார்வை!

    இன்று தமிழகம் முழுதும் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், சென்னை, வேப்பேரியில் உள்ள தேர்வு மையங்களில் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் பார்வையிட்டார். டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்களும் பல்வேறு இடங்களில் தேர்வு மையங்களை பார்வையிட்டனர்.



  • 11:05 (IST) 21 May 2022
    மேலும் 2,323 பேருக்கு கொரோனா தொற்று!

    இந்தியாவில் மேலும் 2,323 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்தனர். 2,346 பேர் குணமடைந்த நிலையில், 14,996 பேருக்கு சிகிச்சை பெறுவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.



  • 11:05 (IST) 21 May 2022
    முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு!

    2022 - 23ம் ஆண்டிற்கான முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் உள்ள 256 மையங்களில் 2 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.



  • 10:45 (IST) 21 May 2022
    26 பட்டதாரிகள் குரூப்-2 தேர்வு எழுத அனுமதி மறுப்பு!

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில், ஹால் டிக்கெட்டில் தேர்வு மையத்தின் பெயர் தவறாக இடம்பெற்றதால் 26 பட்டதாரிகள் குரூப்-2 தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது.



  • 10:44 (IST) 21 May 2022
    தங்கம் விலை உயர்வு!

    சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ. 192 உயர்ந்து ரூ. 38,536-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 4,817-ஆக உள்ளது.



  • 10:21 (IST) 21 May 2022
    குழந்தைகளுக்கான பிரத்யேக முகாம்!

    ஊட்டி அருகே முத்தொரையில் குழந்தைகளுக்கான பிரத்யேக முகாமை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.



  • 10:18 (IST) 21 May 2022
    மிகச்சிறந்த தந்தையாக விளங்கினார்.. ராகுல்!

    எனது தந்தையின் கொள்கைகள் நவீன இந்தியாவை வடிவமைக்க உதவியது . எனக்கும், பிரியங்காவுக்கும் மிகச்சிறந்த தந்தையாக விளங்கினார். மன்னிப்பு மற்றும் இரக்க குணத்தை கற்று கொடுத்துள்ளார். தந்தை ராஜீவ் காந்தி குறித்து ராகுல் நெகிழ்ச்சி பதிவு!



  • 09:39 (IST) 21 May 2022
    பண்ணை பசுமை அங்காடியில் தக்காளி விற்பனை!

    தக்காளி விலை ஏற்றத்தை குறைக்கும் வகையில் பண்ணை பசுமை அங்காடிகளில் தக்காளி விற்பனை தொடங்கியது. கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 90க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், பண்ணை பசுமை அங்காடியில் ஒரு கிலோ தக்காளி ரூ.79க்கு விற்பனையாகிறது.



  • 09:08 (IST) 21 May 2022
    ரூ. 3,006 கோடி நிதி ஒதுக்கீடு!

    மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள ஊரகப்பகுதிகளின் தரத்தை மேம்படுத்த, ரூ. 3,006 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.



  • 08:37 (IST) 21 May 2022
    ராஜீவ் காந்தியின் 31வது நினைவு தினம்!

    ராஜீவ் காந்தியின் 31வது நினைவு தினத்தையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி மரியாதை செலுத்தினர்!



  • 08:36 (IST) 21 May 2022
    1,500 பேர் மீது வழக்குப்பதிவு!

    கடலூர் பேருந்து நிலையம் வேறு இடத்திற்கு மாற்றம் செய்வதை கண்டித்து நேற்று அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து, அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கூறி, அதிமுக முன்னாள் அமைச்சர் சம்பத் உள்ளிட்ட 1,500 பேர் மீது புதுநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment