Advertisment

அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திற்கு திமுக முழு ஆதரவு என அறிவிப்பு

Tamil Nadu News, Tamil News LIVE Updates, Ukraine Russia Conflict Latest News 17 March 2022 தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
New Update
அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திற்கு திமுக முழு ஆதரவு என அறிவிப்பு

Tamil Nadu News Updates: உக்ரைனில் ராணுவ நடவடிக்கைகளை உடனே நிறுத்த ரஷ்ய அதிபர் புதினுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரஷ்யா இனப்படுகொலை நடத்தி வருவதாக குற்றச்சாட்டி உக்ரைன் வழக்கு தொடர்ந்துள்ளது.

Advertisment

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை

ஜப்பானின் ஃபுகுஷிமா கடற்கரை அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 90 பேர் காயமடைந்துள்ளனர். சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 20 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிப்பால் மக்கள் அவதி

உக்ரைனுக்கு கூடுதலாக 800 டாலர் தளவாட உதவி - ஜோ பைடன்

உக்ரைன் அமெரிக்காவிடம் உதவிகேட்ட சில மணி நேரங்களில் கூடுதலாக 800 மில்லியன் டாலர் அளவுக்கு போர் தளவாட உதவிகளை வழங்குவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

இந்தியாவிலேயே இதைச் செய்கிற ஒரே கட்சி பா.ம.க: டாக்டர் ராமதாஸ் பெருமிதம்

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் 133வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் லிட்டர் ரூ101.40-க்கும், டீசல் ரூ91.43-க்கும் விற்பனையாகிறது.

உத்தேச அமைதி ஒப்பந்தம் தயார்

ரஷ்ய துருப்புக்களை திரும்பப் பெறுதல் உள்ளிட்டவை குறித்த அமைதி ஒப்பந்தம் தயார் என தகவல் தெரிவிக்கின்றன. அமைதி உடன்பாடு ஒப்பந்தம் மூலம் உக்ரைனில் பதட்டம் தணியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:01 (IST) 17 Mar 2022
    கோகுல்ராஜ் கொலை வழக்கில் மேல்முறையீடு

    கோகுல்ராஜ் கொலை வழக்கில் கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்யக் கோரி யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.



  • 20:34 (IST) 17 Mar 2022
    சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

    சென்னையில் கால்நடைகளை பொதுவெளியில் உலவ விடும் உரிமையாளர்கள் மீது பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.



  • 20:33 (IST) 17 Mar 2022
    சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

    சென்னையில் கால்நடைகளை பொதுவெளியில் உலவ விடும் உரிமையாளர்கள் மீது பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.



  • 20:32 (IST) 17 Mar 2022
    சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

    சென்னையில் கால்நடைகளை பொதுவெளியில் உலவ விடும் உரிமையாளர்கள் மீது பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.



  • 20:31 (IST) 17 Mar 2022
    அமெரிக்க வெள்ளை மாளிகை கொரோனா தடுப்புக்குழு ஒருங்கிணைப்பாளராக இந்தியர் நியமனம்

    இந்திய வம்சாவளி மருத்துவர் ஆஷிஷ் ஜா என்பவர் அமெரிக்க வெள்ளை மாளிகை கொரோனா தடுப்புக்குழு ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கொரோனா தடுப்பில் தற்போதைய அபாயங்களை தடுக்கும் திறன் கொண்ட மிகச்சரியான நபர் ஆஷிஷ் ஜா என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாராட்டு தெரிவித்துள்ளார்.



  • 20:31 (IST) 17 Mar 2022
    அமெரிக்க வெள்ளை மாளிகை கொரோனா தடுப்புக்குழு ஒருங்கிணைப்பாளராக இந்தியர் நியமனம்

    இந்திய வம்சாவளி மருத்துவர் ஆஷிஷ் ஜா என்பவர் அமெரிக்க வெள்ளை மாளிகை கொரோனா தடுப்புக்குழு ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கொரோனா தடுப்பில் தற்போதைய அபாயங்களை தடுக்கும் திறன் கொண்ட மிகச்சரியான நபர் ஆஷிஷ் ஜா என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாராட்டு தெரிவித்துள்ளார்.



  • 19:37 (IST) 17 Mar 2022
    12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய பொது வேலைநிறுத்தத்திற்கு திமுக ஆதரவு - துரைமுருகன்

    பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குதலை கைவிடுதல் உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் அகில இந்திய பொது வேலைநிறுத்தத்திற்கு திமுக முழு ஆதரவு அளிப்பதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.



  • 19:37 (IST) 17 Mar 2022
    அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திற்கு திமுக முழு ஆதரவு

    12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திற்கு திமுக முழு ஆதரவு அளிக்கும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.



  • 18:38 (IST) 17 Mar 2022
    அந்நிய நாட்டு மரங்களை அகற்றுவதில் அரசும், வனத்துறையும் சாதகமான பாதையில் செல்லவில்லை - ஐகோர்ட்

    அந்நிய நாட்டு மரங்களை அகற்றுவதில் தமிழக அரசும், வனத்துறையும் சாதகமான பாதையில் செல்லவில்லை என்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள அயல்நாட்டு மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து கருத்து தெரிவித்துள்ளது.



  • 18:36 (IST) 17 Mar 2022
    ஹோலிப் பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து

    ஹோலிப் பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



  • 18:35 (IST) 17 Mar 2022
    16 சார்பதிவாளர் அலுவலகங்களில் உடனடியாக லிப்ட் வசதியை ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவு

    தமிழ்நாட்டில் உள்ள 16 சார்பதிவாளர் அலுவலகங்களில் உடனடியாக லிப்ட் வசதியை ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சார்பதிவாளர் அலுவலகங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு வசதியான வகையில் செயல்பட வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.



  • 18:00 (IST) 17 Mar 2022
    குரங்கனி மலைக்கு டிரெக்கிங் அழைத்து சென்ற வழக்கு நிலவரம்

    குரங்கனி மலைக்கு டிரெக்கிங் அழைத்து சென்ற பீட்டர் வான் கெய்ட் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கை மார்ச் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.



  • 17:58 (IST) 17 Mar 2022
    ஹஜ் பயணம் குறித்து முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம்

    ஹஜ் பயணத்தை சென்னையிலிருந்து தொடங்கிட மீண்டும் அனுமதி வழங்கிட வேண்டும் என்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.



  • 17:57 (IST) 17 Mar 2022
    இந்தியா - ஜப்பான் இடையேயான உச்சி மாநாடு நாளை தொடக்கம்

    இந்தியா - ஜப்பான் இடையேயான உச்சி மாநாடு நாளை மறுநாள் நடைபெறவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.இருதரப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.



  • 17:17 (IST) 17 Mar 2022
    அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீட்டை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு

    மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 7.5% இடஒதுக்கீட்டை எதிர்த்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பை தள்ளிவைத்துள்ளது



  • 17:00 (IST) 17 Mar 2022
    இலங்கைக்கு 1 பில்லியன் டாலர் கடனுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது

    இலங்கைக்கு ஒரு பில்லியன் டாலர் கடன் வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. உணவு, மருந்து மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வழங்க எஸ்.பி.ஐ. வங்கி மூலம் இந்தியா ஒரு பில்லியன் டாலர் கடன் உதவி வழங்குகிறது



  • 16:39 (IST) 17 Mar 2022
    காரைக்குடி - சென்னை எழும்பூர் வழித்தட பல்லவன் ரயில் நேரம் மாற்றம்

    காரைக்குடி - சென்னை எழும்பூர் வழித்தட பல்லவன் ரயில்(12606) நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, ஏப்ரல் 1 முதல் காரைக்குடியில் இருந்து காலை 5.30 மணிக்கு புறப்படும். மறுமார்க்கமாக சென்னையில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்படும்.



  • 16:24 (IST) 17 Mar 2022
    சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை நிராகரித்தது ரஷ்யா

    சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை நிராகரித்து, உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த ரஷ்யா மறுத்துள்ளது



  • 15:31 (IST) 17 Mar 2022
    சாத்தான்குளம் காவல்நிலைய உயிரிழப்பு வழக்கு முடித்துவைப்பு

    சாத்தான்குளம் காவல்நிலையத்தில் உயிரிழந்த மகேந்திரனின் மரண வழக்கை முறையாக விசாரிக்கக் கோரிய வழக்கு முடித்துவைக்கப்பட்டுள்ளது. விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்ற சிபிசிஐடி தரப்பு வாதத்தை ஏற்று வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது



  • 15:12 (IST) 17 Mar 2022
    புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஹோலி வாழ்த்து

    அன்பு, மகிழ்ச்சி, சகோதரத்துவம் தழைத்து வாழ்வில் வசந்தங்கள் சிறக்க எனது இனிய ஹோலி நல்வாழ்த்துகள் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்



  • 14:41 (IST) 17 Mar 2022
    அடுக்குமாடி கட்டிடங்களுக்கு உள்கட்டமைப்பு கட்டண உயர்வு!

    சென்னையில் அடுக்குமாடி கட்டிடங்களுக்கு உள்கட்டமைப்பு கட்டண உயர்வு ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வருவதாக சி.எம்.டி.ஏ. தெரிவித்துள்ளது.



  • 14:40 (IST) 17 Mar 2022
    தென்கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

    தென்கிழக்கு வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 21ஆம் தேதி புயலாக வலுப்பெறும். இது வடகிழக்கு திசையில் நகர்ந்து வடக்கு மியான்மர் கடலோர பகுதியில் வரும் 22ஆம் தேதி நிலைபெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 14:09 (IST) 17 Mar 2022
    கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் குறைப்பு!

    கொரோனா ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.



  • 14:08 (IST) 17 Mar 2022
    மருத்துவமனைகளில் பரிசோதனை கட்டணம் குறைப்பு!

    முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் ஆய்வகங்கள், மருத்துவமனைகளில் பரிசோதனை கட்டணம் ரூ. 400-லிருந்து ரூ. 250 ஆகவும், முதல்வரின் மருத்துவ காப்பீடு பெறாதவர்களுக்கான பரிசோதனை கட்டணம் ரூ. 700-லிருந்து ரூ. 400ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.



  • 14:08 (IST) 17 Mar 2022
    மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை உயர்வு!

    5 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை ரூ.1,500லிருந்து ரூ. 2,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 2,15,505 பயனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை உயர்த்த ரூ. 31.07 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.



  • 14:08 (IST) 17 Mar 2022
    மழைக்கு வாய்ப்புள்ள இடங்கள்.. வானிலை மையம்!

    மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், திருநெல்வேலி, குமரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 14:07 (IST) 17 Mar 2022
    பட்டாசு ஆலை உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!

    சுற்றுச்சூழல் விதியிலிருந்து பட்டாசு தொழிலுக்கு விலக்கு அளிக்கவும் மற்றும் சரவெடி, பேரியம் நைட்ரேட் தடையை நீக்கவும் கோரி’ விருதுநகர்’ வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பட்டாசு ஆலை உரிமையாளர்கள் வரும் 21ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர்.



  • 13:11 (IST) 17 Mar 2022
    காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்!

    17 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 7 ஐபிஎஸ் அதிகாரிகள் ஐ.ஜி. பதவியிலிருந்து ஏ.டி.ஜி.பி.யாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர். தென்மண்டல ஐ.ஜி.யாக அஸ்ரா கார்க், வடக்கு மண்டல ஐ.ஜியாக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளனர்.



  • 13:11 (IST) 17 Mar 2022
    மலையாள நடிகை பாலியல் தொல்லை வழக்கு!

    மலையாள நடிகை மீதான பாலியல் தொல்லை வழக்கை விசாரிக்கும் புலனாய்வு அதிகாரிகளை மிரட்டியதாகக் கூறப்படும் வழக்கில், விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த கேரள உயர் நீதிமன்றம், இறுதி விசாரணைக்கான மனுவை மார்ச் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.



  • 13:11 (IST) 17 Mar 2022
    உலகின் பார்வை இந்தியா மீது உள்ளது.. பிரதமர் மோடி!

    21ஆம் நூற்றாண்டில்’ ஒட்டுமொத்த உலகின் பார்வையும் இந்தியா மீதுதான் உள்ளது. இந்தியா துரிதமாக தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்-பிரதமர் மோடி!



  • 12:41 (IST) 17 Mar 2022
    திரையங்கின் மீது தாக்குதல் நடத்திய ரஷ்யா - 1000 பேரின் நிலைமை என்ன?

    மூன்றாவது வாரமாக தொடர்ந்து நடைபெற்று வரும் ரஷ்யா படையெடுப்பில் இருந்து தப்பித்துக் கொள்ள மரியுபோல் பகுதியில் அமைந்திருக்கும் திரையரங்கு ஒன்றில் 1000 கணக்கான மக்கள் தஞ்சம் அடைந்தனர். இந்நிலையில் அந்த திரையரங்கு மீது தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டது ரஷ்யா. இங்கே தஞ்சம் அடைந்த மக்களின் நிலை என்ன என்பது தொடர்பாக பதட்டம் நிலவி வருகிறது.



  • 12:19 (IST) 17 Mar 2022
    உலக அழகியாக முடிசூடினார் போலந்தின் கரோலினா பைலாவ்ஸ்கா

    கரீபிய தீவுகளில் ஒன்றான போர்ட்டோ ரிகோவில் 70வது உலக அழகிப் போட்டிகள் நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் 2021ம் ஆண்டுக்கான உலக அழகியாக போலாந்து நாட்டின் கரோலினா பைலாவ்ஸ்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.



  • 12:15 (IST) 17 Mar 2022
    மூத்த குடிமக்களுக்கு சலுகை வழங்கும் திட்டம் தற்போது இல்லை - மத்திய அரசு

    மூத்த குடிமக்களுக்கு ரயில்வே டிக்கெட் விலைக் குறைப்பு சலுகையை மீண்டும் துவங்கும் திட்டம் தற்போது இல்லை என்று நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சர் அஸ்வனி வைஷ்ணவ் கூறியுள்ளார்.



  • 12:10 (IST) 17 Mar 2022
    சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்த முதல்வர்

    சென்னை, புளியந்தோப்பு பகுதியில் மாநில மூலதன மானிய நிதியின் கீழ் ரூ. 3.20 கோடி மதிப்பில் நடைபெற்றுவரும் சீரமைப்பு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்



  • 11:23 (IST) 17 Mar 2022
    தங்கம் விலை உயர்வு

    சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ. 216 அதிகரித்து ரூ.38,512க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 4814.



  • 11:21 (IST) 17 Mar 2022
    நாங்குநேரி மஜிஸ்திரேட் விசாரணை

    நெல்லையில் நடைபெற்ற என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நீராவி முருகன் உடலை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார் நாங்குநேரி மாஜிஸ்திரேட்



  • 10:59 (IST) 17 Mar 2022
    ஓபிஎஸ்க்கு எதிரான தேர்தல் வழக்கு நிராகரிப்பு

    அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துக்கு எதிரான தேர்தல் வழக்கை உயர் நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை ஏற்று உத்தரவிடப்பட்டுள்ளது.



  • 10:52 (IST) 17 Mar 2022
    முதுநிலை படிக்காமல் Ph.Dயில் சேரலாம்

    முதுநிலை பட்டம் பயிலாமல் நேரடியாக Ph.D., படிப்பில் சேரும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது யுஜிசி . 4 ஆண்டுகால யூ.ஜி. படிப்பை படித்தால் பி.ஜி. பயிலாமல் நேரடியாக Ph.Dல் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 09:59 (IST) 17 Mar 2022
    5 சுங்கச்சாவடிகளை அகற்ற மத்திய அரசிடம் வலியுறுத்தல்

    பரனூர், சென்ன சமுத்திரம், வானகரம், சூரப்பட்டு, நெமிலி ஆகிய 5 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். தமிழ்நாட்டில் 8 சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற வேண்டும் என மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்த பின்பு அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.



  • 09:51 (IST) 17 Mar 2022
    5 சுங்கச்சாவடிகளை அகற்ற மத்திய அரசிடம் வலியுறுத்தல்

    பரனூர், சென்ன சமுத்திரம், வானகரம், சூரப்பட்டு, நெமிலி ஆகிய 5 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். தமிழ்நாட்டில் 8 சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற வேண்டும் என மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்த பின்பு அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.



  • 09:45 (IST) 17 Mar 2022
    மேலும் 2,539 பேருக்கு கொரோனா பாதிப்பு

    இந்தியாவில் மேலும் 2,539 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்றுக்கு 30,799 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4.24 கோடியாக உயர்ந்துள்ளது.



  • 09:14 (IST) 17 Mar 2022
    உலகளவில் 46.31 கோடி பேருக்கு கொரோனா

    உலகளவில் இதுவரை 46.31 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கொரோனாவில் இருந்து 39.60 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 60.79 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.



  • 08:49 (IST) 17 Mar 2022
    இ-சுற்றுலா விசா தடை நீக்கம்

    இந்தியா சார்பில் 156 நாடுகளுக்கு வழங்கப்படும் 5 ஆண்டு இ-சுற்றுலா விசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஜப்பான் நாடுகளுக்கு வழங்கப்படும் 10 ஆண்டு கால சுற்றுலா விசாவுக்கான தடையும் நீக்கி உத்தரவு



  • 08:26 (IST) 17 Mar 2022
    குமரியில் இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது

    கன்னியாகுமரி கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேரை இந்திய கடலோர காவல்டையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.



Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment