Advertisment

Tamil News: சென்னையில் 15 நாளில் ரூ.40 கோடி சொத்து வரி வசூல்

Tamil Nadu News, Tamil News LIVE Updates, IPL 2022 Latest News May 28 2022 தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
New Update

Tamil Nadu News Updates: சென்னை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறும் விழாவில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு. ஓமந்தூரார் தோட்டத்தில் ரூ1.17 கோடி செலவில் சுமார் 16 அடி உயரத்தில் கருணாநிதியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

Advertisment

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் 6வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை . பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ102.63க்கும்; டீசல் ஒரு லிட்டர் ரூ94.24க்கும் விற்பனையாகிறது.

ஐபிஎல் பிளே ஆப் : ராஜஸ்தான் அணி வெற்றி

ஐபிஎல் பிளே ஆப் : 2வது தகுதிச்சுற்று போட்டியில் பெங்களூரு அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் அணி. இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் உடன் மோதுகிறது ராஜஸ்தான் ராயல்ஸ்! 1

5 நாள்களுக்கு இடி மின்னலுடன் மிதமான மழை

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாள்களுக்கு இடி மின்னலுடன் மிதமான மழை நீடிக்கும். சென்னையில் 2 நாள்களுக்கு மேகமூட்டமாக காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:24 (IST) 28 May 2022
    கலைஞர் வழியில் ஸ்டாலின்- சென்னை விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு

    கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பேசிய துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு நான் எந்த மொழிக்கும் எதிரானவன் அல்ல. எனது மொழிக்கு ஆதரவானவன். தாய் மொழியே உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தும். எந்த மொழியையும் திணிக்க கூடாது; மற்ற மொழிகளை எதிர்க்கக் கூடாது தேவை என்றால் எவ்வளவு மொழியை வேண்டுமானாலும் கற்று கொள்ளலாம்.

    சென்னை எனது இதயத்தோடு நெருக்கமான மாநகரம் என்றும் கருணாநிதியின் வழி நின்று தமிழகத்தை முதல்வர் ஸ்டாலின் மேம்படுத்தி வருகிறார் என்றும் கூறியுள்ளார்.



  • 19:32 (IST) 28 May 2022
    எளிய மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபட்டவர் கருணாநிதி - வெங்கையா நாயுடு

    முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, ஏழை, எளிய மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபட்டவர் கருணாநிதி. சமூக நீதிக்காக பாடுபட்டவர் கருணாநிதி கொள்கை, செயல்படும் விதம், சுறுசுறுப்பு என அனைத்து விதத்திலும் சிறப்பானவர்.

    மாற்றுக்கருத்துகள் இருந்தாலும், கருணாநிதியின் செயல்பாடுகளை வியப்போடு பார்த்துள்ளேன் சிறந்த தொலைநோக்கு பார்வை கொண்டவர் மு.கருணாநிதி என்று கூறியுள்ளார்.



  • 19:11 (IST) 28 May 2022
    எந்த மொழியையும் திணிக்க கூடாது - குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு

    கலைஞர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு. எந்த மொழியையும் திணிக்க கூடாது; மற்ற மொழிகளை எதிர்க்கக் கூடாது தேவை என்றால் எவ்வளவு மொழியை வேண்டுமானாலும் கற்று கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.



  • 18:55 (IST) 28 May 2022
    நண்பராக வந்து கருணாநிதி சிலையை திறந்து வைத்துள்ளார் குடியரசு துணை தலைவர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் வாழ்வின் ஒரு பொன் நாளாக, எந்நாளும் மகிழ்ந்து போற்றும் நாளாக இந்நாள் அமைந்துள்ளது கருணாநிதியின் கனவு கோட்டையாக உள்ள இடத்தில் கருணாநிதி சிலை திறக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

    மேலும் பெரியார் மற்றும் அண்ணாவின் சிலைக்கு இடையில் கருணாநிதியின் சிலை இருப்பது சிறப்பு வாய்ந்தது நண்பராக வந்து கருணாநிதி சிலையை திறந்து வைத்துள்ளார் குடியரசு துணை தலைவர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்



  • 17:58 (IST) 28 May 2022
    கலைவாணர் அரங்கில் நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து பங்கேற்பு

    சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் சிலையை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார் ₨1.7 கோடி மதிப்பில் 12 அடி பீடத்தில், 16 அடிக்கு மு.கருணாநிதியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து பங்கேற்றுள்ளனர்



  • 16:53 (IST) 28 May 2022
    சான்றுபெறாத 124 மெட்ரிக் டன் நெல் விதை விற்பனைக்கு தடை – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

    டெல்டாவில் விதை விற்பனை நிலையங்களை நிபுணர்கள் ஆய்வு செய்ததில் விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 240 விதை மாதிரிகள் பரிசோதனை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த சான்றுபெறாத 124 மெட்ரிக் டன் நெல் விதைகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்



  • 16:18 (IST) 28 May 2022
    12ஆம் வகுப்பு தேர்வில் வினாத்தாள் மாறியதால் 2 மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு

    புதுக்கோட்டையில் 12ஆம் வகுப்பு தேர்வில் வினாத்தாள் மாறியதால் 2 மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடைபெற்றது. மின்னணுவியல் வினாத்தாளுக்கு பதில் மின்னணு பொறியியல் வினாத்தாள் கொடுக்கப்பட்டதால் மறு தேர்வு நடந்தது. இச்சம்பவத்தில், தேர்வு மைய ஆசிரியர், தேர்வு அறை கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.



  • 16:02 (IST) 28 May 2022
    தமிழகத்தில் 2026ல் பாமக ஆட்சி அமைக்கும் – அன்புமணி ராமதாஸ்

    தமிழகத்தில் 2026ல் பாமக ஆட்சி அமைக்கும். சமூக நீதி, சமத்துவம், நீடித்த வளர்ச்சி, சுற்றுச்சூழல், வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பாமக செயல்படும். 2026ல் மக்கள் பாமகவை வரவேற்கும் விதமாக செயல் திட்டங்கள் இருக்கும் என பாமக தலைவராக பொறுப்பேற்ற அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்



  • 15:44 (IST) 28 May 2022
    தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது



  • 15:19 (IST) 28 May 2022
    மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு அனுமதி மறுப்பு; இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம்

    மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து விமான போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது



  • 15:04 (IST) 28 May 2022
    கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு

    வாணியம்பாடி அருகே ஜாப்ராபாத் பகுதியில் வீட்டு கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கி சிறுவன் சுஹேப்(11) உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்



  • 13:16 (IST) 28 May 2022
    கருணாநிதி சிலை சிறப்பு!

    சென்னை, ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் இன்று மாலை கருணாநிதி சிலையை குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார்.



  • 13:15 (IST) 28 May 2022
    கல்வித் தொலைக்காட்சியில் சிஇஓ பதவி!

    கல்வி தொலைக்காட்சியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சிஇஓ பதவிக்கு, தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 12:19 (IST) 28 May 2022
    கருணாநிதி சிலை சிறப்பு!

    சென்னை, ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் இன்று மாலை கருணாநிதி சிலையை குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார்.



  • 11:53 (IST) 28 May 2022
    பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ்!

    திருவேற்காட்டில் நடைபெற்று வரும் பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் அறிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



  • 11:29 (IST) 28 May 2022
    முன் ஜாமின் கோரியவர்களை கைது செய்ய உத்தரவு!

    அடிதடி வழக்கு, சீட்டு மோசடி , குட்கா விற்பனை, மணல் திருட்டில் முன் ஜாமின் கோரியவர்களை கைது செய்ய மாவட்ட எஸ்.பி.க்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.



  • 11:27 (IST) 28 May 2022
    பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம்!

    சென்னை திருவேற்காட்டில் பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் 10 பேருக்கு சிறந்த செயல்வீரர் விருதுகளை கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வழங்குகிறார்.



  • 11:18 (IST) 28 May 2022
    கலைஞரின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட தீர்மானம்!

    சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமயில் நடந்த திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், கலைஞரின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும். முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடுகளை இன்றைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்திட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



  • 10:51 (IST) 28 May 2022
    கார்த்தி சிதம்பரத்திடம் 3வது நாளாக விசாரணை

    டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரத்திடம் 3 ஆவது நாளாக சிபிஐ விசாரணை. சீனர்கள் முறைகேடாக விசா பெற லஞ்சம் பெற்ற புகார் தொடர்பாக கார்த்தி சிதம்பரத்திடம் தீவிர விசாரணை



  • 10:28 (IST) 28 May 2022
    கேரளாவில் 3 நாளில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் - வானிலை மையம்

    கேரளாவில் 2 அல்லது 3 நாளில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக இந்திய வானிமை மையம் தெரிவித்துள்ளது.



  • 09:53 (IST) 28 May 2022
    கோவை ஆனந்தாஸ் உணவகங்களில் ஐ.டி.ரெய்டு

    கோவை ஆனந்தாஸ் உணவக குழுமத்திற்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை. வடவள்ளி, காந்திபுரம், லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உணவகங்களில் வருமான வரித்துறை சோதனை



  • 09:52 (IST) 28 May 2022
    மனைவி, 2 பிள்ளைகளை கொன்று ஐ.டி.ஊழியர் தற்கொலை

    சென்னை பல்லாவரம் அருகே பொழிச்சலூரில் மரம் அறுக்கும் ரம்பத்தால் மனைவி, 2 பிள்ளைகளை கொன்று தந்தை பிரகாஷ் தற்கொலை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • 09:51 (IST) 28 May 2022
    மனைவி, 2 பிள்ளைகளை கொன்று ஐ.டி.ஊழியர் தற்கொலை

    சென்னை பல்லாவரம் அருகே பொழிச்சலூரில் மரம் அறுக்கும் ரம்பத்தால் மனைவி, 2 பிள்ளைகளை கொன்று தந்தை பிரகாஷ் தற்கொலை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • 09:36 (IST) 28 May 2022
    இந்தியாவில் மேலும் 2,685 பேருக்கு கொரோனா

    இந்தியாவில் மேலும் 2,685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2,158 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரே நாளில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது, கொரோனாவுக்கு 16 ஆயிரத்து 308 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



  • 08:32 (IST) 28 May 2022
    45 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துகள் அழிப்பு

    உக்ரைன் மீதான படையெடுப்பில் ரஷ்ய படைகள் அழித்துள்ள சொத்துகளின் மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் ரூ45 லட்சம் கோடி என கீவ் பொருளாதார கல்லூரி கணிப்பு. மரியுபோலில் தரைமட்டமான தொழிற்சாலையில் 70 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்



  • 08:12 (IST) 28 May 2022
    அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு

    தமிழகத்தில் மே 4ம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு. இந்தாண்டு அக்னி நட்சத்திரத்தில் கடந்த 6ம் தேதி வேலூரில் அதிகபட்சமாக 105.98 டிகிரி வெப்பம் பதிவு



  • 08:06 (IST) 28 May 2022
    எஸ்.ஜே.சூர்யா வருமான வரி வழக்கை எதிர்கொள்ள அறிவுறுத்தல்

    நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு எதிரான வருமானவரி வழக்குகளை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு. வழக்குகளை எதிர்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தல்



Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment