பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் 469-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியா- பாகிஸ்தான் மோதல்
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. பல்லெகலே மைதானத்தில் மதியம் 3 மணிக்குப் போட்டி தொடங்க உள்ளது. 4 ஆண்டுகளுக்குப் பின் இரு அணிகளும் முதல் முறையாக ஒருநாள் போட்டியில் மோதுவதால் கிரிக்கெட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரிப்பு.
ஏரிகளின் நீர் நிலவரம்
சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம். 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 1879 மில்லியன் கன அடியாக உள்ளது. 159 கன அடி நீர் வெளியேற்றம். 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 126 மில்லியன் கன அடியாக உள்ளது. 20 கன அடி நீர் வெளியேற்றம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
- 22:59 (IST) 02 Sep 2023நிலவில் வெற்றிகரமாக ஆய்வு பணிகளை முடித்தது ரோவர்
பிரக்யான் ரோவர் நிலவின் தென்துருவத்தில் ஆய்வு பணிகளை வெற்றிகரமாக முடித்தது. அடுத்த சூரிய உதயத்தில் ரோவர் மீண்டும் பணியை துவங்கும் எனவும் இஸ்ரோ நம்பிக்கை தெரிவித்துள்ளது. செப்.22ம் தேதிக்கு பின்னர் பிரக்யான் ரோவர் மீண்டும் உயிர் பெற்று பணியை தொடர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
- 22:04 (IST) 02 Sep 2023ஜி20 மாநாடு - டெல்லியில் ரயில்கள் ரத்து
டெல்லியில் ஜி-20 மாநாட்டை முன்னிட்டு வரும் 9,10,11ம் தேதிகளில் 207 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், 36 ரயில் சேவைகள் குறுகிய காலத்திற்கு நிறுத்தப்படும்
- 21:21 (IST) 02 Sep 2023விஜயலட்சுமி புகார் ஊட்டி விரைந்த தனிப்படை போலீசார்
நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக சீமானிடம் விசாரிக்க தனிப்படை போலீசார் ஊட்டி விரைந்தனர். திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விஜயலட்சுமி அளித்த வாக்குமூலத்தின் நிலையில் 5 பேர் கொண்ட தனிப்படை போலீசார் ஊட்டி விரைந்தனர்
- 20:11 (IST) 02 Sep 2023அ.தி.மு.க ஆலோசனைக் கூட்டம் தேதி மாற்றம்
செப்டம்பர் 4ம் தேதி நடைபெறவிருந்த அ.தி.மு.க ஆலோசனைக் கூட்டம் வரும் 10-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது
- 19:31 (IST) 02 Sep 2023நடிகர் ஆர்.எஸ். சிவாஜி மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்
சிறிய கதாபாத்திரம் என்றாலும் ரசிகர்கள் மனதில் காலம் கடந்தும் நீடிக்கும்படியான உயிரோட்டத்தை அளிக்கக்கூடிய ஆற்றல் கொண்டவர் என நடிகர் ஆர்.எஸ். சிவாஜி மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்
- 18:56 (IST) 02 Sep 2023சென்னை புறநகரில் கனமழை
சென்னை, புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, வண்டலூர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலையில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது
- 18:41 (IST) 02 Sep 2023காரைக்காலில் உள்ள குடிசை மாற்று வாரிய வீடுகளில் பெயர்ந்து விழும் மேற்பூச்சுகள்
காரைக்காலில் உள்ள குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகளில் விரிசல் ஏற்பட்டு, மேற்பூச்சுகள் பெயர்ந்து விழுகின்றன. புதுச்சேரி குடிசை மாற்று வாரிய 8 பேர் கொண்ட அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்தனர். அதிகாரிகள் ஆய்வு செய்தது குடியிருப்பு வாசிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
- 18:16 (IST) 02 Sep 2023ஒடிசா ரயில் விபத்து; குற்றப்பத்திரிகை தாக்கல்
ஒடிசா ரயில் விபத்து வழக்கில் கைது செய்யப்பட்ட 3 ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில் விபத்து குறித்து புவனேஸ்வரில் உள்ள சி.பி.ஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது
- 17:57 (IST) 02 Sep 2023மைனர் குழந்தைகள் விவகாரம்; ஐகோர்ட் கருத்து
மைனர் குழந்தைகளை தந்தை கட்டுப்பாட்டில் அனுப்பினால், அவர்கள் வாழ்வில் சமநிலை இருக்காது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது
- 17:35 (IST) 02 Sep 2023கோடக் மஹிந்திரா வங்கி சி.இ.ஓ ராஜினாமா
கோடக் மஹிந்திரா வங்கியின் நிர்வாக மேலாளர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து உதய் கோடக் ராஜினாமா செய்துள்ளார்
- 17:21 (IST) 02 Sep 2023அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு - மேலும் ஒரு பிறழ் சாட்சி
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் ஓய்வு பெற்ற கனிமவளத்துறை துணை இயக்குனர் சுந்தரம் பிறழ் சாட்சியம் அளித்துள்ளார். ஏற்கனவே 67 சாட்சிகள் சேர்க்கப்பட்ட நிலையில், கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியதாக சுந்தரம் சாட்சியம் அளித்துள்ளார்
- 16:59 (IST) 02 Sep 2023காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேட்டி
"அதானி குழும முதலீடுகள் மற்றும் அதில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்" - காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி
- 16:32 (IST) 02 Sep 2023தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மருத்துவ கட்டமைப்புகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு சுகாதாரத்துறை உத்தரவு! ‣ குடிநீர் விநியோகத்தின் தரத்தை உறுதி செய்தல், ‣ கொசுக்கள் உற்பத்தியை ஒழிப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், ‣ மருத்துவக் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளையும் கண்காணித்து உறுதி செய்தல், ‣ பருவ கால தொற்றுகளை உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத் துறை ஆகியவை இணைந்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தல், உள்ளிட்டவை தொடர்பாக அதிகாரிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது!
- 15:25 (IST) 02 Sep 2023"ஒரே நாடு ஒரே தேர்தல் - வீண் செலவு" - சீமான்
ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது வீண் செலவு நிதியை மிச்சம் செய்ய முடியாது. ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தினால் என்ன மாற்றம் வரும், இப்போது இருக்கும் தேர்தல் முறையில் என்ன சிக்கல். சிலிண்டர் விலை தற்போது குறைத்திருப்பதற்கு நாடாளுமன்ற தேர்தல் வருவது தான் காரணம் - சீமான்
- 14:53 (IST) 02 Sep 2023நடிகை விஜயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க கோரி நாம் தமிழர் கட்சி புகார்
சிவகங்கை எஸ்பி அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க கோரி நாம் தமிழர் கட்சி மகளிரணி புகார் நாம் தமிழர் கட்சி ஒருங்கினைப்பாளர் சீமான் மீது அவதூறு பரப்பிவருவதாக மனுவில் குற்றச்சாட்டு
- 14:53 (IST) 02 Sep 2023ஆதித்யா L.1 விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது மகிழ்ச்சி : ஈபிஎஸ்
சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா L.1 விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது என்ற செய்தி அறிந்து மகிழ்ச்சியடைந்தேன்" மகிழ்ச்சியை இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் பகிர்ந்து கொள்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ட்வீட் தமிழகத்தைச் சேர்ந்த திட்ட இயக்குநர் நிகர்ஷாஜி மற்றும் குழுவினருக்கு அதிமுக சார்பாக வாழ்த்துக்கள் - ஈபிஎஸ்
- 14:22 (IST) 02 Sep 2023விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
ஆதித்யா எல்1 விண்கலத்தை வெற்றிகரமாக ஏவிய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து சந்திரயான் வெற்றியை தொடர்ந்து இந்தியா தனது விண்வெளி பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது ஒட்டுமொத்த மனித குலத்தின் நன்மைக்காக பிரபஞ்சத்தை பற்றிய சரியான புரிதலுக்காக, விஞ்ஞான முயற்சிகள் தொடரும் - பிரதமர்
- 14:22 (IST) 02 Sep 2023பயணத்தை தொடர்கிறது ரோவர் - இஸ்ரோ தகவல்
நிலவின் மேல்பரப்பில் 100 மீட்டர் தூரம் பயணித்த பிரக்யான் ரோவர் 100 மீட்டருக்கு மேல் சென்றும், பயணத்தை தொடர்கிறது ரோவர் - இஸ்ரோ தகவல்
- 13:44 (IST) 02 Sep 2023தித்யா எல் 1 விண்கலம் நீண்ட நெடிய பயணம் : இஸ்ரோ தலைவர் சோம்நாத்
ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ராக்கெட்டில் இருந்து பிரிந்த ஆதித்யா எல் 1 விண்கலம் நீண்ட நெடிய பயணத்தை மேற்கொண்டுள்ளது - இஸ்ரோ தலைவர் சோம்நாத்
- 13:42 (IST) 02 Sep 2023இஸ்ரோ தகவல்
ஈடு இணையற்ற பங்களிப்பை இந்த திட்டத்திற்காக அளித்த அனைவருக்கும் நன்றி 2024, ஜனவரி 6-ஆம் தேதி லெக்ராஞ்சி புள்ளி 1-ஐ ஆதித்யா எல் 1 விண்கலம் சென்றடையும்
- 13:42 (IST) 02 Sep 2023இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்
நிலவுக்கு அனுப்பிய சந்திரயான் 3 திட்டத்தின் லேண்டரும், ரோவரும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இன்னும் ஒரு சில தினங்களில் நிலவில் இருக்கும் லேண்டர், ரோவரை உறங்க வைக்கும் பணிகள் தொடங்கும் - இஸ்ரோ தலைவர் சோம்நாத்
- 13:41 (IST) 02 Sep 2023தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தி.மலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சியில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்
- 12:50 (IST) 02 Sep 2023சவாலுக்கு தயார்- அண்ணாமலை
நாம் தமிழர் கட்சியை விட 30% அதிகமாக ஓட்டு வாங்குவோம், சவாலுக்கு தயார்- நாம் தமிழர் கட்சிக்கு சவால் விட்ட அண்ணாமலை
- 12:43 (IST) 02 Sep 2023அண்ணாமலை பேட்டி
நிறைய கட்சிகள் ஒரே நாடு ஒரே தேர்தலை வரவேற்கிறார்கள். சுயநலவாதிகள் அல்லது குடும்ப ஆட்சி செய்பவர்கள் அல்லது ஊழல் செய்பவர்கள் தான் ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்க்கிறார்கள்.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நிச்சயமாக செலவினங்களை குறைப்பது மட்டுமல்ல. பத்திரிக்கையாளர்களின் சுமையைக் குறைப்பதற்காகவும் தான்- அண்ணாமலை பேட்டி
- 12:40 (IST) 02 Sep 2023இஸ்ரோ அப்டேட்
ஆதித்யா - எல்1 விண்கலம் சூரியனை நோக்கிய கோணத்தில் நிலைநிறுத்தப்படும். ஆதித்யா - எல்1 கருவிகள் வெப்பம், காந்த துகள்கள், காலநிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளும்- இஸ்ரோ
- 12:40 (IST) 02 Sep 2023அண்ணாமலை பேட்டி
சோனியா காந்தியின் மகன் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு கூட்டணி. ஊழல் குற்றச்சாட்டுகளில் இருப்பவர்கள் தான் இந்தியா கூட்டணியில் முன்னிலையில் நிற்கிறார்கள்- கோவை விமான நிலையத்தில் அண்ணாமலை பேட்டி
- 11:57 (IST) 02 Sep 2023நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி மரணம்
அபூர்வ சகோதரர்கள், கோலமாவு கோகிலா, கார்கி உள்ளிட்ட படங்களில் நடித்த ஆர்.எஸ்.சிவாஜி இயற்கை எய்தினார்.
- 11:52 (IST) 02 Sep 2023விண்ணில் ஏவப்பட்டது ஆதித்யா - எல்1 விண்கலம்
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஆதித்யா - எல்1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
சூரியன் - பூமி அமைப்பில் சுமார் 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள லாக்ரேஞ்ச் புள்ளி 1 (L1) சுற்றி வட்டப் பாதையில் விண்கலம் வைக்கப்படும், இன்று தொடங்கி 127 நாட்களுக்கு இந்த விண்கலம் பயணம் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 11:47 (IST) 02 Sep 2023ஓ.பி.எஸ் வரவேற்பு
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற மத்திய அரசின் கொள்கை முடிவுக்கு ஓ.பன்னீர்செல்வம் வரவேற்றுள்ளார்.
- 11:46 (IST) 02 Sep 2023சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வென்ற தமிழருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
இந்தியா சிங்கப்பூர் இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்த ஆர்வமாக உள்ளேன். சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற தர்மன் சண்முகரத்தினத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Hearty congratulations @Tharman_s on your election as the President of Singapore. I look forward to working closely with you to further strengthen the India-Singapore Strategic Partnership.
— Narendra Modi (@narendramodi) September 2, 2023 - 11:45 (IST) 02 Sep 2023ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்
4 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுவதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
- 11:44 (IST) 02 Sep 2023முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 3 கன அடியிலிருந்து 650 கன அடியாக அதிகரித்துள்ளது.
ஆக.30-ல் அணையின் நீர் இருப்பு 2,285 மில்லியன் கன அடியாக இருந்த நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக 2,312 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது.
- 11:44 (IST) 02 Sep 2023தயார் நிலையில் ஆதித்யா-எல் 1 விண்கலம்
சூரியனை ஆய்வு செய்யும் இந்தியாவின் முதல் விண்வெளி விண்கலம் ஆதித்யா-எல் 1 உடன் தயாராக உள்ள பி.எஸ்.எல்.வி C57 இன்னும் சற்று நேரத்தில், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய உள்ளது.
சூரியன் - பூமி அமைப்பில் சுமார் 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள லாக்ரேஞ்ச் புள்ளி 1 (L1) சுற்றி வட்டப் பாதையில் விண்கலம் வைக்கப்படும், இன்று தொடங்கி 127 நாட்களுக்கு இந்த விண்கலம் பயணம் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 10:48 (IST) 02 Sep 2023ஆதித்யா எல்.1 ஏவுதல் லைவ் ஸ்ட்ரீமிங்
சூரியனை ஆய்வு செய்யும் இஸ்ரோவின் ஆதித்யா எல்.1 விண்கலம் இன்று காலை 11.50 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து விண்ணில் பாய்கிறது.
ஆதித்யா எல்.1 ஏவுதல் லைவ் ஸ்ட்ரீமிங் இணையதளம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
- 10:20 (IST) 02 Sep 2023தர்மன் சண்முகரத்தினத்திற்கு ஸ்டாலின் வாழ்த்து
சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழர் தர்மன் சண்முகரத்தினத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
தர்மன் சண்முகரத்தினத்தின் தமிழ் பாரம்பரியம், ஈர்க்கக்கூடிய தகுதிகள் எங்களை பெருமைப்படுத்துகிறது.
தர்மன் சண்முகரத்தினத்தின் வெற்றி சிங்கப்பூர் மக்களின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கிறது - முதல்வர்
- 10:08 (IST) 02 Sep 2023வீட்டின் முதல் தளம் விழுந்ததில் தாய், மகன் உயிரிழப்பு
ஈரோடு தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டின் முதல் தளம் விழுந்ததில் தாய், மகன் உயிரிழப்பு. உயிரிழந்த தாய் சராமா, மகன் அஸ்தக் (12) ஆகியோரின் உடல்களை மீட்டு காவல்துறை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு
- 09:29 (IST) 02 Sep 2023சிறந்த மத்திய வங்கித் தலைவர்: சக்திகாந்த தாஸ் முதலிடம்
உலக அளவில் சிறந்த மத்திய வங்கித் தலைவர்களின் பட்டியலில் இந்திய ரிசா்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் முதலிடம்!
உலக அளவில் சிறந்த மத்திய வங்கித் தலைவர்களின் பட்டியலில் இந்திய ரிசா்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் முதலிடம்.
அமெரிக்காவைச் சேர்ந்த 'குளோபல் ஃபைனான்ஸ்' என்ற நிதி விவகாரங்கள் சார்ந்த இதழ் வெளியிட்டுள்ள பட்டியலில் மிகச் சிறந்த செயல்பாட்டுக்கான 'ஏ பிளஸ்' என்ற முதன்மையான பிரிவில் சக்திகாந்த தாஸ் இடம்பெற்றுள்ளதாக பிரதமர் மோடி வாழ்த்து.
- 09:04 (IST) 02 Sep 2023லூனா 25 விழுந்து நொறுங்கியதால் ஏற்பட்ட பள்ளம்?
நிலவின் மேற்பரப்பில் புதிய பள்ளம் - ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் விழுந்து நொறுங்கிய இடமாக இருக்கலாம் என நாசா தகவல்.
நிலவின் மேற்பரப்பில் புதிதாக 10 மீட்டர் விட்டத்துக்கு பள்ளம் ஒன்று இருப்பதை நாசாவின் எல்.ஆர்.ஓ ஆர்பிட்டர் கண்டறிந்துள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் விழுந்து நொறுங்கியதால் இந்த பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என நாசா தகவல்.
- 08:29 (IST) 02 Sep 2023ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் கைது
கனரா வங்கியில் இருந்து ரூ. 538 கோடி கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் அமலாக்கத் துறையினரால் கைது.
கடன் பெற்று ஜெட் ஏர்வேஸ் அல்லாத வேறு நிறுவனங்களுக்கு பயன்படுத்தி மோசடி செய்த வழக்கில், ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் நிறுவனர் நரேஷ் கோயல் கைது.
பண மோசடி தொடர்பான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அவரை இன்று ஆஜர்படுத்தி விசாரணையில் எடுக்க இ.டி முடிவு
- 08:23 (IST) 02 Sep 2023பழவேற்காடு மீனவர்கள் மீன்பிடிக்கத் தடை
திருவள்ளூர் பழவேற்காடு மீனவர்கள் 2 நாட்களுக்கு கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து இன்று ஆதித்யா எல்.1 விண்கலம் ஏவப்பட உள்ள நிலையில் மீன்பிடிக்கச் செல்லத் தடை
- 08:15 (IST) 02 Sep 2023ஆதித்யா எல்.1 இன்று ஏவுதல்
சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்.1 விண்கலம், இன்று காலை விண்ணில் பாய்கிறது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் காலை 11.50 மணிக்கு ஏவப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.