Advertisment

Breaking Now: மதியம் 12.15 மணிக்கு பாஜக.வில் இணைகிறார் குஷ்பு

ஜேபி நட்டாவை சந்தித்து, இன்று பாஜகவில் குஷ்பு தன்னை இணைத்துக்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

author-image
WebDesk
New Update
Kushboo joins BJP Tamil News

Kushboo joins BJP Tamil News

Tamil News Today Live Updates: நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜக-வில் இணைவதாக செய்திகள் வெளியானதிலிருந்து அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது, "கட்சியின் உயர் பதவியில் இருப்பவர்கள், கள நிலவரம் அறியாதவர்கள் என்னை அடக்கி வைத்தனர். மக்களால் அங்கீகரிக்கப்படாத தலைவர்கள் சிலர், என்னைப் போன்றவர்களை அடக்கி, ஒடுக்குகிறார்கள். அதனால் மிகவும் ஆழ்ந்து யோசித்து, காங்கிரஸ் உடனான எனது இணைப்பை முடித்துக் கொள்ள முடிவெடுத்திருக்கிறேன். இதனை எனது பணி விடுப்பு கடிதமாக ஏற்றுக் கொள்ளவும்” என்று குறிப்பிட்டு ராஜினாமா கடிதம் ஒன்றை சோனியா காந்திக்கு எழுதியிருக்கிறார் குஷ்பூ.

Advertisment

மேலும், காங்கிரஸ் கட்சியிலிருந்து குஷ்பு நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனை அடுத்து டெல்லி பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை இன்று சந்தித்து அக்கட்சியில் குஷ்பூ இணைய இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. குஷ்பூவோடு கணவர் சுந்தர் சி-யும் டெல்லி சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் அடுத்து 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்க அமைக்கப்பட்ட குழுவை ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளார்.

இந்த குழுவில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, திமுக துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், துணை பொதுச் செயலார் ஆர்.ராசா, துணை பொதுச் செயலார் அந்தியூர் ப.செல்வராஜ், கனிமொழி எம்.பி, திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி, திமுக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், பேராசிரியர் அ.ராமசாமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66,732-ஆகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71,20,538-ஆக உயர்ந்திருக்கிறது. அவர்களில் 61,49,535 பேர் வீடு திரும்பியிருக்கின்றனர். பலியானோர் எண்ணிக்கை 1,09,150-ஆக உயர்ந்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Live Blog

Tamil News Today : அரசியல், சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல், விளையாட்டு உள்ளிட்ட அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    11:38 (IST)12 Oct 2020

    மதியம் 12.15 மணிக்கு பாஜக.வில் இணைகிறார் குஷ்பு

    குஷ்பு சுந்தர் உள்ளிட்ட சில முக்கிய தலைவர்கள் இன்று பகல் 12 மணியளவில் டெல்லியில் உள்ள பாஜக தேசிய தலைமை அலுவலகம் வருகின்றனர். அங்கு சுமார் 12.15 மணி அளவில் பாஜக தேசிய தலைவர் திரு ஜேபி நட்டாவை அனைவரும் சந்திக்கின்றனர். இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

    10:24 (IST)12 Oct 2020

    இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71.20 லட்சத்தை தாண்டியது

    கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66,732-ஆகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71,20,538-ஆக உயர்ந்திருக்கிறது. அவர்களில் 61,49,535 பேர் வீடு திரும்பியிருக்கின்றனர். பலியானோர் எண்ணிக்கை 1,09,150-ஆக உயர்ந்துள்ளது.

    09:58 (IST)12 Oct 2020

    மாற்றம் தவிர்க்க முடியாதது - குஷ்பு

    குஷ்பு பாஜகவில் இணையவுள்ளார் என்ற செய்தி வெளியாகியிருக்கும் நிலையில், தற்போது காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பதவியிலிருந்து விலகியுள்ளார். மேலும், 'பார்வைகள், புரிதல்கள், விருப்பு, வெறுப்புகள் காலத்திற்கேற்ப மாறும். மாற்றம் தவிர்க்க முடியாதது' என்று தன் சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டிருக்கிறார் குஷ்பு.

    09:42 (IST)12 Oct 2020

    திருவனந்தபுரம் சிறைக்கு ஸ்வப்னா சுரேஷ் மாற்றம்

    தங்கள் கடத்தல் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் மீது அந்நிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்பு 'காபிபோசா' சட்டத்தின் கீழ் வழக்கு தொடர உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் விரைவில் அவர் திருவனந்தபுரம் சிறைக்கு மாற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    21:44 (IST)11 Oct 2020

    வாழ்த்துக்களைத் தெரிவித்த தே.மு.தி.கழகத்தின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு நன்றி - எடப்பாடி பழனிசாமி

    2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அஇஅதிமுக-வின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டமைக்காக வாழ்த்துக்களைத் தெரிவித்த தே.மு.தி.கழகத்தின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.  

    21:40 (IST)11 Oct 2020

    குஷ்பு, நாளை பாஜகவில் இணைகிறார்

    காங்கிரஸ் செய்திதொடர்பாளர் குஷ்பு, நாளை டெல்லியில் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைகிறார்.    

    21:38 (IST)11 Oct 2020

    மன வேதனை அடைந்தேன் - ராமதாஸ்

    கடலூர் மாவட்டம்  குமராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் ஜெகன் பன்னீர்செல்வம் காலமானார் என்ற செய்தியறிந்து வேதனை அடைந்தேன். பாட்டாளி  மக்கள் கட்சியின் அர்ப்பணிப்புள்ள நிர்வாகிகளில் முக்கியமானவர். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.    

    20:49 (IST)11 Oct 2020

    தமிழ்நாட்டை கடன்கார மாநிலமாக ஆக்கியது மட்டுமே பத்தாண்டு கால அதிமுக ஆட்சியின் சாதனை - மு. க ஸ்டாலின்

    "தமிழ்நாட்டை கடன்கார மாநிலமாக ஆக்கியது மட்டுமே பத்தாண்டு கால அதிமுக ஆட்சியின் சாதனை" என்று மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.

    மேலும், விவரங்களுக்கு

    19:29 (IST)11 Oct 2020

    அதிமுக முதல்வர் வேட்பாளரை பாஜக ஏற்கிறது- வி.பி.துரைசாமி

    அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை பாஜக ஏற்றுக் கொண்டுள்ளது என்று தமிழக பாஜக மாநிலத் துணை தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்தார்.

    19:18 (IST)11 Oct 2020

    ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது

    ஐ பி எல் கிரிக்கெட் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது

    18:32 (IST)11 Oct 2020

    விவசாய வேளாண் சட்டங்களை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் விவசாயிகள் சங்கமம்

    மத்திய அரசு கொண்டு வந்த விவசாய வேளாண் சட்டங்களை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் விவசாயிகள் சங்கமம் என்ற மாநில மாநாடு இன்று திருவண்ணாமலையில் நடைபெற்றது.

    18:25 (IST)11 Oct 2020

    கொரோனா நோய்த் தொற்று பரவல் குளிர் காலத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளது

    வரவிருக்கும் திருவிழாக் காலங்களில், மக்கள் வெளியே செல்லாமல், வீட்டிலேயே கொண்டாடும்படியும், கூட்டத்தை தவிர்த்து, மத்திய அரசின் முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என ஹர்ஷ் வரதன் கேட்டுக் கொண்டார். கொவிட்-19க்கு எதிராக போராடுவதுதான் முக்கியமான நடவடிக்கை என மக்களுக்கு நினைவூட்டிய மத்திய அமைச்சர், தொற்று பரவலைக் குறைப்பதும், உயிரிழப்பைத் தடுப்பதும் தான் தனது முக்கியமான பணி என்று கூறினார். கொரோனா நோய்த் தொற்று பரவல் குளிர் காலத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளது  என்று இந்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.   

    18:23 (IST)11 Oct 2020

    பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினரின் அதிகாரப் பங்கேற்பில் திமுக உறுதி கொண்டுள்ளது - ஸ்டாலின்

    "பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி உள்ளிட்ட நான்கு ஊராட்சிகளுக்குத் தேர்தல் நடத்திய திமுக - பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினரின் அதிகாரப் பங்கேற்பில் என்றைக்கும் உறுதி கொண்டுள்ளது" என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், விவரங்களுக்கு  

    17:18 (IST)11 Oct 2020

    தூத்துக்குடி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

    தூத்துக்குடி துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை 1 -ஆம் என் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்ய கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது.  

     
     

    17:08 (IST)11 Oct 2020

    ஹர்திக் பாண்டியாவுக்கு சச்சின் டெண்டுல்கர் பிறந்தநாள் வாழ்த்து

    17:01 (IST)11 Oct 2020

    மு. க ஸ்டாலின் ட்வீட்

    16:56 (IST)11 Oct 2020

    டொனால்டு ட்ரம்ப் ரசிகர் காலமானார்

    Telangana: Bussa Krishna, who had installed a 6-feet statue of US President Donald Trump last year and worshipped him, passes away due to cardiac arrest, in Medak. (In file pics - Bussa Krishna) pic.twitter.com/ucNm4pTHfj— ANI (@ANI) October 11, 2020கடந்த ஆண்டு, 6 அடி உயர அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சிலையை நிறுவி, தினமும் பூஜை செய்து வந்த புஸ்ஸா கிருஷ்ணா,  மாரடைப்பு  காரணமாக காலமானார்.  

    16:52 (IST)11 Oct 2020

    கோவிட் 19 தொடர்பான மக்கள் விழிப்புணர்வு இயக்கம் - நாளை மறுநாள் தூத்துக்குடியில் தொடங்கி வைப்பு

    கோவிட் 19 தொடர்பான மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தை முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் தூத்துக்குடியில் தொடங்கி வைக்கவுள்ளார் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.  

    16:50 (IST)11 Oct 2020

    உளுந்து மற்றும் துவரம் பருப்பின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை - மத்திய அரசு

    உளுந்து மற்றும் துவரம் பருப்பின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

    இதற்காக மத்திய அரசின் சேமிப்பிலிருந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சலுகை விலையில் உளுந்து மற்றும் துவரம்பருப்பு வழங்கப்படுவதாக உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

    16:49 (IST)11 Oct 2020

    வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது

    வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக கிருஷ்ணகிரி,தர்மபுரி,நீலகிரி,வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்ய கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.  

    16:48 (IST)11 Oct 2020

    காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள வெண்ணாறு உப வடிநிலத்தை சேர்ந்த ஆறுகள் சீரமைக்கப்பட்டு வருகிறது

    காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள வெண்ணாறு உப வடிநிலத்தை சேர்ந்த ஆறுகள், ஆசிய வங்கி நிதியுதவியுடன் 1600 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டு வருகிறது என்று உணவு துறை அமைச்சர்  காமராஜ் தெரிவித்தார்.  

    15:57 (IST)11 Oct 2020

    திமுக கூட்டணி பலமான கூட்டணி அல்ல, பலவீனமான கூட்டணி -அதிமுக எம்.எல்.ஏ விமர்சனம்

    அதிமுக எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா: “திமுக கூட்டணி கட்சிகளிடையே தற்போது சிக்கலான நிலை ஏற்பட்டுள்ளது. தனித்தனி சின்னத்தில் போட்டியிடுவோம் என திமுக கூட்டணி கட்சிகள் கூறுகின்றன. அதனால், திமுக கூட்டணி பலமான கூட்டணி அல்ல, பலவீனமான கூட்டணி” என்று விமர்சித்துள்ளார்.

    14:30 (IST)11 Oct 2020

    திமுக 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அறிவிப்பு

    திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், திமுக 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை

    தயாரிப்புக் குழுவை அறிவித்துள்ளார். அதில், டி.ஆர்.பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்டோர் குழுவில் உள்ளனர்.

    14:28 (IST)11 Oct 2020

    ரஜினியின் ஆன்மீக அரசியல் ஜனவரியில் தொடங்கும் - அர்ஜூன் சம்பத் தகவல்

    கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், “நடிகர் ரஜினிகாந்த் தலைமையிலான ஆன்மீக அரசியல் ஜனவரியில் தொடங்கப்போகிறது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்துவிட்டார். வரும் சட்டமன்ற தேர்தலில், எல்லா தொகுதிகளிலும் ரஜினிகாந்த் வேட்பாளர்களை நிறுத்தப் போகிறார். கிராம சபைக் கூட்டம், தீண்டாமை ஒழிப்பு எல்லாமே ஆன்மீக அரசியல் கொள்கைகள். ரஜினிகாந்த் தலைமையில் ஆன்மீக அரசியல் மிகப் பெரிய அளவில் வலிமை பெறப் போகிறது. வருகிற ஜனவரிக்குப் பிறகு, திராவிட அரசியலா, ஆன்மீக அரசியலா? என்ற நிலைதான் ஏற்படப்போகிறது. திராவிட இயக்கங்கள் நடத்தக்கூடிய சாதி, மத அரசியலுக்கு முடிவு கட்டி, ஆன்மீக அரசியல் தமிழகத்தில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.” என்று கூறினார்.

    13:46 (IST)11 Oct 2020

    கல்லூரி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற அக். 30க்குள் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம் - ஐகோர்ட்

    கல்லூரி மாணவர்கள் உதவித்தொகை தொடர்பான் வழக்கில், “தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் இளங்கலை, இளநிலை, டிப்ளமோ பயிலும் மாணவர்கள் www.districts.ecourts.gov.in/chennai என்ற இணையதளத்தின் மூலம் கல்வி உதவித்தொகை பெற அக்டோபர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    11:58 (IST)11 Oct 2020

    பெண்களுக்கு எதிரான வன்கொடுமையில் குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் - ஜி.கே.வாசன்

    சோளிங்கரில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி: பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவத்தில், குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும். கூட்டணி தர்மத்தை கடைபிடித்தால் அதிமுக கூட்டணியில் தமாகா தொடரும் என்ரு கூறினார்.

    11:42 (IST)11 Oct 2020

    வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வலுப்பெறும் - இந்திய வானிலை மையம்

    மத்திய வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி நிலைகொண்டுள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். ஆந்திரா தெலங்கானா ஒரிசாவில் பரவலாக கனமழை இருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    11:37 (IST)11 Oct 2020

    விழுப்புரத்தில் கோ-ஆப் டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை இன்று முதல் தொடக்கம்

    விழுப்புரத்தில் கோ-ஆப் டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரை கோ-ஆப் டெக்ஸ் கைத்தறி சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு

    ‘ஆயிரம் பூட்டாஸ்’ என்ற புதிதான ஆர்கானிக் சேலைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கோ-ஆப் டெக்ஸ் சிறப்பு விற்பனை மூலம் கைத்தறி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் காக்கப்படும். கைத்தறி ஆடைகளை அணிய பொதுமக்கள் முன்வர வேண்டும் என்று ஆட்சியர் அண்ணாதுரை கூறினார்.

    11:37 (IST)11 Oct 2020

    விழுப்புரத்தில் கோ-ஆப் டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை இன்று முதல் தொடக்கம்

    விழுப்புரத்தில் கோ-ஆப் டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரை கோ-ஆப் டெக்ஸ் கைத்தறி சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு

    ‘ஆயிரம் பூட்டாஸ்’ என்ற புதிதான ஆர்கானிக் சேலைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கோ-ஆப் டெக்ஸ் சிறப்பு விற்பனை மூலம் கைத்தறி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் காக்கப்படும். கைத்தறி ஆடைகளை அணிய பொதுமக்கள் முன்வர வேண்டும் என்று ஆட்சியர் அண்ணாதுரை கூறினார்.

    10:48 (IST)11 Oct 2020

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 918 பேர் உயிரிழப்பு

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 74,383 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 918 பேர் உயிரிழந்தனர்; 89154 பேர் குணமடைந்தனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில், இதுவரை மொத்தம் கொரோனாவால் 70,53,806 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 60,77,976 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து மீண்டுள்ளனர். இது வரை கொரோனா பாதிப்பால் மொத்தம் 1,08,334 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    09:43 (IST)11 Oct 2020

    ஹத்ராஸ்: வெட்கப்பட வேண்டிய உண்மை - ராகுல் காந்தி ட்வீட்

    ஹத்ராஸ் சம்பவம் குறித்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தலித்துகள், இஸ்லாமியர்கள் மற்றும் பழங்குடியினரை பெரும்பாலான இந்தியர்கள் மனிதர்களாக கருதுவதில்லை என்பதே வெட்கப்பட வேண்டிய உண்மை என்று தெரிவித்துள்ளார்.

    ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “தலித்துகள், இஸ்லாமியர்கள் மற்றும் பழங்குடியினரை பெரும்பாலான இந்தியர்கள் மனிதர்களாக கருதுவதில்லை என்பதே வெட்கப்பட வேண்டிய உண்மை. ஹத்ராஸ் பெண்ணை அவரகள் ஒரு மனிதராக கருதாததால்தான் யாருமே பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என முதலமைச்சரும் காவல்துறையினரும் கூறுகின்றனர்” என்று ட்வீட் செய்துள்ளார்.

    09:26 (IST)11 Oct 2020

    அமைச்சர் தங்கமணி தலைமையில் ஜவ்வரசி ஆலை உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

    நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில், ஜவ்வரசி ஆலை உரிமையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு- ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி தலைமையில் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில நடைபெற்றது.

    Tamil News Today :  ஆசிரியர்களின் நேரடி வேலை வாய்ப்பின் அதிகபட்ச வயது வரம்பைப் பள்ளிக் கல்வித்துறை குறைத்திருக்கிறது. ஆசிரியர்களை நேரடியாக ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகபட்ச வயது வரம்பு பொதுப் பிரிவில் 57 வயதிலிருந்து 40 வயதாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. ஒதுக்கப்பட்ட பிரிவுகளுக்கு 57 வயதிலிருந்து 45 வயதாகக் குறைத்துள்ளது. அப்போதைய பள்ளிக் கல்விச் செயலாளர் பிரதீப் யாதவின் ஜனவரி மாத அறிவிப்பின்படி, இரண்டாம் நிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு இதுபோன்ற மாற்றங்கள் பொருந்தும். ஆனால், இந்த முடிவு பல ஆசிரியர்களுக்கு திருப்தியளிக்கவில்லை. இதனால் TET-க்கு (ஆசிரியர் தகுதித் தேர்வு) தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் உட்பட லட்சக்கணக்கான ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தமிழக ஆசிரியர் சங்கத் தலைவர் பி.கே.இளமரன் தெரிவித்தார். “ஒவ்வொரு ஆண்டும் 40,000 மாணவர்கள் பி.எட் கல்லூரிகளிலிருந்து வெளியே வருகிறார்கள். அதே நேரத்தில் அரசாங்கம் 1,000-2,000 பேரை மட்டுமே சேர்த்துக் கொள்கிறது. அதுவும் நிரந்தரமாக இல்லை. இந்த நடவடிக்கையை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்”என்றார்.
    Tamil Nadu Bjp Aiadmk
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment