Advertisment

Tamil News Highlights : கேரளாவில் இன்று 11,755 பேருக்கு கொரோனா, 23 பேர் உயிரிழப்பு

Tamil News Today : முக கவசம் அணியாமல் அலட்சியம் காட்டும் மக்கள் . நவம்பரில் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்பு

author-image
WebDesk
New Update
Tamil News Highlights : கேரளாவில் இன்று 11,755 பேருக்கு கொரோனா, 23 பேர் உயிரிழப்பு

Tamil News Today Live admk cm candidate: தனியார் மருத்துவக் கல்லூரிகளில் வெளிநாடுவாழ் இந்திய மாணவர்களுக்கு 15 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டியது கட்டாயமில்லை என உத்தரவிட்டது. மேலும், தொழில்நுட்ப கல்வியை அளிக்கும் தனியார் கல்லூரிகள், வெளிநாடுவாழ் இந்திய மாணவர்களுக்கு அளிக்கும் இடஒதுக்கீட்டின் அளவை, அந்த கல்லூரிகளே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

Advertisment

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்திற்கு, புதிய துணைவேந்தரை நியமிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதன்படி, 3 பேர் கொண்ட துணைவேந்தர் தேர்வுக் குழுவிற்கு ஆட்சிமன்றக்குழு பிரதிநிதியாக அழகப்பா பல்கலைக்கழக கல்வி தொழில்நுட்பத்துறை முன்னாள் தலைவர் மோகன் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட நிலையில், செனட் பிரதிநிதியாக காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் அழகப்பன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வரும் 17 முதல் தேஜாஸ் ரயில் சேவை தொடங்க உள்ளதாக, ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல-மகர விளக்கு பூஜையின்போது நாளொன்றுக்கு 250 பக்தர்களை அனுமதிக்க கேரள அரசு முடிவெடுத்து உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Tamil News Today: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:18 (IST)10 Oct 2020

    சென்னை அணி வெற்றி பெற 170 ரன் இலக்கு

    ஐ பி எல் கிரிக்கெட் போட்டி: சென்னை அணி வெற்றி பெற 170 ரன் என்ற இலக்கை பெங்களூரு அணி நிர்ணயித்துள்ளது.

    20:43 (IST)10 Oct 2020

    வேலைகளுக்கான நேர்முகத் தேர்வுகள் அகற்றப்பட்டுள்ளன

    இது வரை 23 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் வேலைகளுக்கான நேர்முகத் தேர்வுகள் அகற்றப்பட்டுள்ளன என்று பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதிய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று தெரிவித்தார்.

    மத்திய அரசின் B பிரிவு (அரசிதழ் சாராத) மற்றும் C பிரிவு பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு முறை 2016 முதல் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து இது நடந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

    19:38 (IST)10 Oct 2020

    தமிழகத்தில் இன்று மட்டும் 5,242 பேருக்கு கொரோனா தொற்று

    தமிழகத்தில் இன்று மட்டும் 5,242 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம், தமிழகத்தில்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,51,370 ஆக அதிகரித்துள்ளது

    19:18 (IST)10 Oct 2020

    டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது

    ஐ பி எல் கிரிக்கெட் போட்டியில் துபாயில் நடைபெறும்   ஆட்டத்தில் சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    19:18 (IST)10 Oct 2020

    இரண்டாம் குத்து பட சர்ச்சை : வருத்தம் தெரவித்தார் சந்தோஷ் ஜெயக்குமார்

    17:47 (IST)10 Oct 2020

    பஞ்சாப் அணி வெற்றி பெற 165 ரன்கள் இலக்கு

    ஐ பி எல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற கொல்கத்தா அணி 165 ரன் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது.

    17:43 (IST)10 Oct 2020

    ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு

    கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள தெற்கு திட்டை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவரை தரையில் உட்கார வைத்த விவகாரத்தில் ஊராட்சி செயலாளர், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மீது போலீஸார் எஸ்சி,எஸ்டி வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    17:35 (IST)10 Oct 2020

    கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை காற்றில் பறக்க விடுவது அதிமுக அமைச்சர்கள் - மு. க ஸ்டாலின்

    “முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு என கூட்டம் கூட்டி - தெருத்தெருவாகப் பட்டாசு வெடித்து - கொண்டாட்டம் போடுகிறார்கள் . கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை காற்றில் பறக்க விடுவது அதிமுக அமைச்சர்களும் - முதலமைச்சரும்தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை” என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார். 

     

    16:53 (IST)10 Oct 2020

    புல்வாமாவில் துப்பாக்கிச் சூடு

    காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். வெடிபொருட்கள் மற்றும் 2 ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    16:18 (IST)10 Oct 2020

    கீழடியில் கண்டறியப்பட்ட உறைகிணறு

    கீழடியில் தற்போது நடைபெற்ற அகழ்வாய்வின் போது கண்டறியப்பட்ட உறைகிணறு மொத்தமாக 38 அடுக்குகளை கொண்டது. தமிழகத்தில் கண்டறியப்பட்ட உறைகிணறுகளில் இதுவே மிகப்பெரியது என்று தொல்லியல் துறை அறிவிப்பு.

    16:17 (IST)10 Oct 2020

    கோவையில் மழை

    கோவை மற்றும் கொடைக்கானலின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    15:58 (IST)10 Oct 2020

    கால்நடை மருத்துவம் பயில மாணவர்கள் ஆர்வம்

    தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 3 கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் சேர மாணவர்கள் பெரிய அளவில் ஆர்வம். இதுவரை 15 ஆயிரம் நபர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஓரிரு நாட்களில் கவுன்சிலிங் துவங்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அறிவிப்பு.

    15:10 (IST)10 Oct 2020

    லெஹ்ஹில் தரையிரங்க்கும் சி 17

    லடாக் எல்லைப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள படை வீரர்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு லெஹ் விமான நிலையத்தில் தரையிறுங்கும், இந்திய விமானப்படையின் க்ளோப்மாஸ்டர் ட்ரான்ஸ்போர்ட் விமானம் சி-17.

    14:56 (IST)10 Oct 2020

    தெற்கு திட்டை ஊராட்சி துணை தலைவர் தலைமறைவு

    சிதம்பரம் அருகே உள்ள தெற்கு திட்டை ஊராட்சிமன்ற தலைவரை தரையில் அமர வைத்தது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில்

    தெற்கு திட்டை ஊராட்சி துணை தலைவர் தலைமறைவு ஆகியுள்ளார்.

    14:53 (IST)10 Oct 2020

    மீனவர்களுக்கு எச்சரிக்கை

    குமரிக்கடல், மன்னார் வளைகுடா, அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    14:44 (IST)10 Oct 2020

    கனமழைக்கு வாய்ப்பு!

    கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு.வானிலை ஆய்வு மையம் தகவல்.  ராணிப்பேட்டை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

    14:42 (IST)10 Oct 2020

    அதிமுக முதல்வர் வேட்பாளர்!

    தேசிய கட்சியோ, மாநில கட்சியோ பழனிசாமியை அதிமுக முதல்வர் வேட்பாளராக ஏற்போரே கூட்டணியில் இருக்க முடியும் என்று கே.பி முனுசாமி தெரிவித்துள்ளார். 

    13:04 (IST)10 Oct 2020

    நீதிபதி கிருபாகரன் ஆய்வு!

    கீழடியில் இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தலைமை நீதிபதி கிருபாகரன் ஆய்வு செய்தார் . ீழடி, மணலூர், அகரம், கொந்தகை உள்ளிட்ட இடங்களில் எவ்வாறு பணி முடிந்தது என்றும் இதுவரை கண்டுபிடித்த பொருட்கள் குறித்தும் ஆய்வு செய்தார். 

    13:02 (IST)10 Oct 2020

    முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

    வடகிழக்கு பருவமழை அடுத்த வாரம் தொடங்கவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக வரும் 12ஆம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை . ரிகள், குளங்கள் தூர் வாருதல், மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார். 

    12:59 (IST)10 Oct 2020

    தமிழகத்தில் கொரோனா!

    ஊரடங்கு தளர்வுகள் காரணமாக, கொரோனா சிறப்பு சிகிச்சை முகாம்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இத்தகைய சூழலில், அனுதினமும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பால், மருத்துவமனை செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மக்கள் முகக்கவசம் அணியாமல், சமூக விலகலை பின்பற்றாமல் அலட்சியத்துடன் இருப்பதே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. இந்த மாதம், நவம்பர் டிசம்பர் ஆகிய மூன்று மாதங்கள் வைரஸின் பாதிப்பு தீவிரத்தைக் காட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

    11:57 (IST)10 Oct 2020

    மத்திய அரசு அதிரடி!

    பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் . ாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல். கிரிமினல் சட்ட நடைமுறையில் குறைபாடு கண்டறியப்பட்டால் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு. 

    11:56 (IST)10 Oct 2020

    லாலு விடுதலைக்கு வாய்ப்பில்லை!

    கால்நடை தீவன ஊழல் வழக்கில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத்திற்கு, ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம்  ஜாமின் வழங்கி உள்ளது. எனினும்,  தும்கா கருவூலத்தில் இருந்து 3.5 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமின் கிடைக்காத தால், தற்போது அவர் விடுதலையாக வாய்ப்பில்லை.

    11:42 (IST)10 Oct 2020

    ஓபிஎஸ் திருப்பதி தரிசனம்!

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் சாமி தரிசனம் செய்தனர். புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை யொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை நடைபெற்ற வி.ஐ.பி.  தரிசனத்தில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.சி.சம்பத், சரோஜா ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள், அவர்களுக்கு தீர்த்தப் பிரசாதங்களை வழங்கினர். 

    11:42 (IST)10 Oct 2020

    முதுநிலை பட்டப்படிப்பு விண்ணப்பம்!

    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்  2020-21 ஆம் நடப்பு கல்வியாண்டில் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு ஆன்-லைன் மூலம் இன்று முதல் 20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கான இணையதள முகவரியை வெளியிட்டார். 

    11:20 (IST)10 Oct 2020

    வைகோ திட்டவட்டம்!

    சட்டப்பேரவை தேர்தலில் மதிமுக தனிச் சின்னத்தில்தான் போட்டியிடும் வைகோ திட்டவட்டம். உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிட ஒத்துக்கொண்டதாக வெளியான தகவல் உண்மையில்லை . 

    10:26 (IST)10 Oct 2020

    பெண் ஊராட்சி மன்றத் தலைவர் அவமதிப்பு!

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்குதிட்டை பெண் ஊராட்சி மன்றத் தலைவர் அவமதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு.  துணைத்தலைவர் மீது வழக்குப்பதிவு

    Tamil News : திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று மாலை, சென்னையில் இருந்து திருப்பதிக்கு வந்தார். திருப்பதியில் இருந்து, அலமேலு மங்காபுரம் சென்ற அவர், அங்கு சாமி தரிசனம் செய்தார். இரவு திருமலையில் உள்ள விடுதியில் தங்கிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்,இன்று காலை அமைச்சர்களுடன் சேர்ந்து ஏழுமலையானை தரிசித்தார்.

    நேற்றைய தமிழக செய்திகளை வாசிக்க

    ஊராட்சி மன்றங்களின் அனுமதி இன்றி கிராம சாலை மேம்பாட்டுப் பணிகளுக்காக விடப்பட்டுள்ள 2 ஆயிரத்து 650 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர்களை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

    ஜம்மு - காஷ்மீர் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 தீவிரவாதிகள் உயிரிழப்பு. காமத் குழுவின் பரிந்துரைகள் அடங்கிய தொகுக்கப்பட்ட பிரமாண பத்திரத்தை ரிசர்வ் வங்கி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது . ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன.

    தமிழகத்தில் மதுரை, தேனி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது- 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    Tamilnadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment