Advertisment

Tamil News Today : வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர் தாக்குதல்

Tamil Nadu News, Tamil News LIVE, Petrol price Today - 21-08- 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil News Today : வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்  தாக்குதல்

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

டி20 கிரிக்கெட் தொடர் - இந்தியா வெற்றி

அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது, இந்திய அணி. 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை, 2 - 0 என கைப்பற்றி அசத்தல். முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவிப்பு. தொடர்ந்து ஆடிய அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்களில் தோல்வியடைந்தது.

நீர் நிலவரம்

3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில், நீர்இருப்பு 1,943 மில்லியன் கனஅடியாக உள்ளது.  1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில், நீர்இருப்பு 110 மில்லியன் கனஅடியாக உள்ளது.  500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில், நீர்இருப்பு 348 மில்லியன் கனஅடியாக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 21:52 (IST) 21 Aug 2023
    3 நாட்களாக ரயில்வே கழிவறைக்குள் பயணித்த நபரால் பரபரப்பு

    எர்ணாகுளம் எக்ஸ்பிரஸில் கழிவறைக்குள் 3 நாட்களாக பயணித்த நபரால் பரபரப்பு கதவை உடைத்து டிக்கெட் எடுக்காமல் பயணித்த மனநிலை பாதிக்கப்பட்ட ஜார்கண்ட் இளைஞரை மீட்ட அரக்கோணம் ரயில்வே போலீசார்


  • 21:50 (IST) 21 Aug 2023
    சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த பேட்டி

    "ஜெயிலர் படத்தை வெற்றி படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி" "சன்யாசிகள் இளையவர்களாக இருந்தாலும் அவர்கள் காலில் விழுவது என்னுடைய இயல்பு" சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த பேட்டி


  • 21:48 (IST) 21 Aug 2023
    உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டிக்கு தமிழக வீரர் பிரக்ஞானந்தா முன்னேற்றம்

    உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டிக்கு தமிழக வீரர் பிரக்ஞானந்தா முன்னேற்றம் அரையிறுதியில் உலகின் 3ம் நிலை வீரரான ஃபேபியானோவை வீழ்த்தி பிரக்ஞானந்தா அசத்தல் இறுதிப் போட்டியில் நம்பர் ஒன் வீரர் கார்ல்சனை எதிர்கொள்கிறார்


  • 20:48 (IST) 21 Aug 2023
    மெரினா கடற்கரையில் 4 கற்சிலைகள் கண்டெடுப்பு

    சென்னை மெரினா கலங்கரை விளக்கம் அருகே உள்ள கடற்கரையில் 4 கற்சிலைகள் கண்டெடுப்பு; ரோந்து பணியில் இருந்த போலீஸார் சிலைகளை மீட்டு காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்! கோயில்களில் இருக்கும் பழைய கற்சிலைகளை அகற்றி புதிய சிலைகளை அமைக்கும் போது ஆகம விதிப்படி பழைய கற்சிலைகளை நீர்நிலைகளில் வீசுவது வழக்கம். அதுபோல் யாரும் செய்தார்களா? அல்லது வேறு யார் வீசினார்கள்? என போலீஸார் விசாரணை!


  • 20:43 (IST) 21 Aug 2023
    விஜயகாந்த் உடல்நிலை குறித்து மகன் விஜய பிரபாகர் உருக்கம்

    கேப்டன் உடல்நிலை சற்று பின்னடைவுதான்; ஆனா 100 வருசம் நல்லா இருப்பார்..” -விஜயகாந்த் உடல்நிலை குறித்த கேள்விக்கு, அவரது மகன் விஜய பிரபாகர் உருக்கம்!


  • 20:35 (IST) 21 Aug 2023
    வேறு எதுவும் தேவை இல்லை நீ மட்டும் போதும்'

    9 ஆவது திருமண நாளை முன்னிட்டு நடிகர் ஃபகத் ஃபாசில் தனது மனைவி நஸ்ரியாவிற்காக ஃபேஸ்புக்கில் '9 ஆண்டு கால காதலுக்கும் வாழ்க்கைக்கும் நன்றி' என பதிவு


  • 19:55 (IST) 21 Aug 2023
    சேலம்: நோயாளிக்கு மருந்துப் போட்ட பெண் தூய்மைப் பணியாளர்

    சேலம் மாவட்டம் கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் நோயளிக்கு பெண் தூய்மைப் பணியாளர் தையல் போடும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி உள்ளது.

    இந்த நிலையில், மருத்துவர் பரிந்துரை இல்லாமல் நோயாளிகளுக்கு மாத்திரைகள் மாற்றி வழங்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.


  • 19:41 (IST) 21 Aug 2023
    நமது புரட்சித் தொண்டன் நாளிதழ் வெளியீடு

    சென்னை எழும்பூரில் உள்ள அசோகா ஹோட்டலில் நமது புரட்சித் தொண்டன் நாளிதழ் வெளியீட்டு விழா பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமயில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைத்தியலிங்கம் , பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் ”நமது புரட்சித் தொண்டன்” நாளிதழை ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார்.


  • 19:21 (IST) 21 Aug 2023
    டாஸ்மாக்கில் விலைப் பட்டியல்: ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவு

    அரசு மதுபான கடைகளில் முறைப்படி விலை பட்டியல் வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு நடத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணையிட்டுள்ளது.

    தொடர்ந்து, மத்திய அரசின் வழக்கறிஞர்கள் குழு நாளை ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

    விலைப்பட்டியல் வெளியே தெரியும்படி வைக்காத கடை ஊழியர்கள் மீது போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


  • 18:35 (IST) 21 Aug 2023
    காவிரியில் நீர் திறக்கக் கோரிய தமிழ்நாடு அரசின் வழக்கு; சுப்ரீம் கோர்ட்டில் 25-ம் தேதி விசாரணை

    காவிரியில் இருந்து நீர் திறக்கக் கோரிய தமிழ்நாடு அரசின் வழக்கு 25ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடத்த நீதிபதிகள் அமர்வு அறிவிக்கப்படாத நிலையில், வழக்கு விசாரணை 25ம் தேதிக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.


  • 18:33 (IST) 21 Aug 2023
    தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் தலைதூக்கக் கூடாது - அண்ணாமலை

    தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை: “தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் தலைதூக்கவிடாமல் தடுத்து நிறுத்த வேண்டும்; சென்னையில் கல்லூரி மாணவர்கள் பிரச்னையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது; சம்பவத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.


  • 18:21 (IST) 21 Aug 2023
    மருத்துவ பணிகள் இயக்குனருக்கு அறிவுறுத்த தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

    அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என மருத்துவ பணிகள் இயக்குனருக்கு

    அறிவுறுத்தும்படி, தமிழக அரசுக்கு மாநில

    மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


  • 17:36 (IST) 21 Aug 2023
    முக அடையாள தொழில்நுட்பம் பயன்படுத்த தடைகோரி மனு; சென்னை போலீஸ் கமிஷனருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

    தமிழகத்தில் முக அடையாள தொழில்நுட்பத்தை பயன்படுத்த தடை விதிக்க கோரிய மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், உள்துறைச் செயலாளர், சென்னை காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

    குற்றவழக்குகளில் சந்தேகிக்கப்படும் நபர்களை அடையாளம் காண்பதற்காக அமல்படுத்தப்படும் தொழில்நுட்பத்துக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. பொது இடங்களில் தங்களை கேட்காமல் புகைப்படம் எடுத்தது தனிப்பட்ட உரிமையில் தலையிடும் வகையில் உள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எந்த சட்டமும் நிறைவேற்றாமல் பின்பற்றப்படும் நடைமுறையை சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும் கோரப்பட்டுள்ளது.


  • 17:31 (IST) 21 Aug 2023
    மீன் சாப்பிட்டால் ஐஸ்வர்யா ராய் போன்ற கண்களை பெறுவீர்கள்; மகாராஷ்டிரா பா.ஜ.க அமைச்சர் பேச்சு

    மகாராஷ்டிரா பா.ஜ.க அமைச்சர் விஜய்குமார் காவித் பேச்சு: “தினமும் மீன் சாப்பிடுபவர்களின் தோல் மென்மையாக இருக்கும் கண்களும் மின்னும்; அவர்கள் பார்த்தால் உங்களை ஈர்ப்பது போல இருக்கும்; நடிகை ஐஸ்வர்யா ராய் மங்களூரு கடலோரம் வசித்தார், தினமும் மீன் சாப்பிட்டால் நீங்களும் அவரைப் போன்ற கண்களைப் பெறுவீர்கள்” என்று கூறியுள்ளார்.


  • 17:28 (IST) 21 Aug 2023
    தடை செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்டங்களை கண்காணிக்க குழு நியமனம்

    தடை செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை கண்காணிக்க தமிழக அரசு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி நசிமுதீன் தலைமையில் குழு அமைத்தது.


  • 17:25 (IST) 21 Aug 2023
    விஜயகாந்த் உடல்நிலை பின்னடைவுதான்; மகன் விஜயபிரபாகரன் பரபரப்பு பேட்டி

    தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவுதான், ஆனால், அவர் பழையபடி பேசுவாரா, நடப்பாரா என்றால், அதற்கான எல்லா முயற்சிகளையும் நாங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறோம். உங்கள் அனைவரையும் போல நிச்சயம் நாங்களும் நம்புகிறோம். இப்போதைக்கு கேப்டன் நல்லா இருக்கிறார். இந்த உடல்நிலையிலேயே அவர் 100 வயது வரை நன்றாக இருப்பார் என்று விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். இது தே.மு.தி.க தொண்டர்கள் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.


  • 17:20 (IST) 21 Aug 2023
    விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு. மகன் விஜயபிரபாகரன் பரபரப்பு பேட்டி

    தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அவருடைய மகன் விஜயபிரபாகரன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். இது தே.மு.தி.க தொண்டர்கள் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.


  • 16:59 (IST) 21 Aug 2023
    தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளை கண்காணிக்க குழு

    தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளை கண்காணிக்க ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி நசிமுதீன் தலைமையில் தமிழக அரசு குழு அமைத்துள்ளது


  • 16:44 (IST) 21 Aug 2023
    வேளச்சேரி கல்லூரி வளாகத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதாக எழுந்த புகார்; போலீசார் முக்கிய தகவல்

    வேளச்சேரி கல்லூரி வளாகத்தில் மாணவர்களிடையே எழுந்த தகறாரில் வெடிகுண்டு வீசப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வீசப்பட்டது வெங்காய வெடி என போலீசார் தெரிவித்துள்ளனர்


  • 16:21 (IST) 21 Aug 2023
    தமிழக கிரிக்கெட் வீரர் பாபா அபராஜித் திருமணம்

    தமிழக கிரிக்கெட் வீரரும் சேப்பாக் சூப்பர் கில்லீஸின் கேப்டனுமான பாபா அபராஜித் நடிகர் தலைவாசல் விஜயின் மகள் ஜெயவீணாவை மணந்தார்


  • 16:11 (IST) 21 Aug 2023
    அ.தி.மு.க பொன்விழா எழுச்சி மாநாடு சிறப்பாக நடைபெற்றது – இ.பி.எஸ்

    அ.தி.மு.க பொன்விழா எழுச்சி மாநாடு சிறப்பாக நடைபெற்றது. இந்திய அரசியல் வரலாற்றில் இப்படியொரு மாபெரும் மாநாடா? என பெருமிதம் அடைகிறேன். வரலாறு படைக்கக் காரணமாக இருந்த நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நன்றி என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்


  • 15:58 (IST) 21 Aug 2023
    மதுரை அ.தி.மு.க மாநாட்டுக்கு சென்று வீடு திரும்பும் போது உயிரிழந்தவர்களுக்கு இ.பி.எஸ் நிதியுதவி அறிவிப்பு

    மதுரை அதிமுக மாநாட்டுக்கு சென்று வீடு திரும்பும் போது சாலை விபத்து மற்றும் உடல் நலக்குறைவால் உயிரிழந்த 8 பேருக்கு தலா ரூ.8 லட்சம் கட்சியின் சார்பில் வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்


  • 15:44 (IST) 21 Aug 2023
    கருணாநிதி நூற்றாண்டு விழா; ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை

    கருணாநிதி நூற்றாண்டு விழா தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. கோவையில் கலைஞர் செம்மொழி பூங்காவிற்கு அடிக்கல் நாட்ட உரிய நடவடிக்கை எடுக்கவும் முதல்வர் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்


  • 15:41 (IST) 21 Aug 2023
    4 ஆண்டுகளாக நிலவை சுற்றி வந்த சந்திரயான்-2 ஆர்பிட்டரை தொடர்பு கொண்ட சந்திரயான் 3

    4 ஆண்டுகளாக நிலவை சுற்றி வந்த சந்திரயான்-2 ஆர்பிட்டரை சந்திரயான் 3 தொடர்பு கொண்டது. விக்ரம் லேண்டர் அனுப்பிய தகவலுக்கு ’welcome buddy’ என சந்திரயான்-2 பதில் அனுப்பியது


  • 15:15 (IST) 21 Aug 2023
    தமிழ்நாட்டில் 27-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்

    தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 27-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது


  • 15:12 (IST) 21 Aug 2023
    சென்னை தனியார் கல்லூரி வளாகத்தில் குண்டு வீச்சால் பரபரப்பு

    சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் குண்டு வீச்சால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உயிரியல் மற்றும் பொருளாதாரம் படிக்கும் மாணவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் குண்டு வீச்சு நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது


  • 15:02 (IST) 21 Aug 2023
    இ.பி.எஸ்-க்கு ‘புரட்சித் தமிழர்’ பட்டம்: டிடிவி தினகரன் விமர்சனம்

    "துரோகத் தமிழர்-ன்னு வேணா அவருக்கு பட்டம் கொடுக்கலாம்” என்று இ.பி.எஸ்-க்கு ‘புரட்சித் தமிழர்’ பட்டம் வழங்கப்பட்டது குறித்து டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.


  • 14:49 (IST) 21 Aug 2023
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

    ரோகித் சர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட அணியை அறிவித்தது பிசிசிஐ.

    ஆசிய கோப்பைக்கான இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்) விராட் கோலி, சுப்மான் கில்,ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி, இஷான் கிஷன், ஷர்துல் தாகூர், அக்சர் பட்டேல், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, பிரசித் கிருஷ்ணா,


  • 14:24 (IST) 21 Aug 2023
    புதிய தினசரி நாளிதழ் தொடக்க விழா: ஓ.பி.எஸ் ஆவேசம்!

    "தொண்டருக்கு எம்.ஜி.ஆர். வழங்கிய உரிமையில் ஏதாவது மாசு ஏற்பட்டால் அதை முளையிலேயே கிள்ளி எறிவோம்" என ‘புரட்சித் தொண்டன்’ என்ற புதிய தினசரி நாளிதழ் தொடக்க விழாவில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆவேசமாக பேசினார்.


  • 14:16 (IST) 21 Aug 2023
    மாண்டியாவில் பாஜக எம்.பி.க்கள் போராட்டம்!

    காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடும் கர்நாடக அரசைக் கண்டித்து மாண்டியாவில் பாஜக எம்.பி.க்கள் அம்பரீஷ், பி.சி. மோகன் தலைமையில் அக்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


  • 14:15 (IST) 21 Aug 2023
    வி.சி. க போராட்டம்!

    நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. தென் மாவட்டங்களில் நிகழும் சாதி ரீதியான பிரச்சினைகளை தடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.


  • 12:52 (IST) 21 Aug 2023
    நாகை மீனவர்கள் 10 பேர் விடுதலை

    இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாகை மீனவர்கள் 10 பேர் விடுதலை

    இலங்கை திரிகோணமலை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

    கடந்த 7ஆம் தேதி திரிகோணமலை கடல் எல்லையில் கைதான நாகை மீனவர்கள் தற்போது விடுதலை


  • 12:51 (IST) 21 Aug 2023
    குஜராத் உயர்நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது? உச்சநீதிமன்றம் கேள்வி

    குஜராத் உயர்நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது? உச்சநீதிமன்றம் கேள்வி

    உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக குஜராத் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு அதன் மதிப்பை உயர்த்தும்படி இல்லை- நீதிபதிகள்

    பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் 28 வார கரு தொடர்பான மனு மீது குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவு

    கருவை கலைப்பதற்கான நேரம் வீணடிக்கப்பட்டதாகவும் இது குறித்து விளக்கம் தர உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அளித்தது

    இதனிடையே, குஜராத் உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் தாமாக முன்வந்து ஒரு உத்தரவை ப


  • 12:13 (IST) 21 Aug 2023
    மணிப்பூர் வன்முறை: உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

    மணிப்பூர் கலவரம் தொடர்பாக ஓய்வு பெற்ற 3 பெண் நீதிபதிகள் அடங்கிய குழு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

    கலவரத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை விசாரித்து நிவாரணம், மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டது


  • 11:32 (IST) 21 Aug 2023
    தமிழக அரசு பரிந்துரை- ஆளுநர் நிறுத்திவைப்பு?

    டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு சைலேந்திரபாபு பெயர் பரிந்துரை

    10 உறுப்பினர் பதவிகளுக்கும் பரிந்துரை பட்டியலை அனுப்பியது தமிழக அரசு

    தமிழக அரசின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்காமல் ஒரு மாதமாக ஆளுநர் நிறுத்திவைப்பு

    ஆளுநர் கேட்ட விளக்கங்களுக்கு பதில் அளித்த பிறகும் ஒப்புதல் அளிக்கவில்லை என தகவல்

    பணி நியமனங்களை விரைந்து மேற்கொள்ள டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் உறுப்பினர் பணியிடங்களை நிரப்ப வேண்டியது அவசியம்


  • 11:21 (IST) 21 Aug 2023
    காவிரி நீர் விவகாரம்: இன்றே புதிய அமர்வு

    காவிரி நீர் விவகாரத்தில் விசாரணை நடத்த இன்றே புதிய அமர்வு அமைக்கப்படும் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவிப்பு

    காவிரியில் கூடுதல் நீரை திறந்துவிட உத்தரவிட கோரிய தமிழக அரசின் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்


  • 10:54 (IST) 21 Aug 2023
    ரூ.4276.44 கோடி மதிப்பீட்டில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்திற்கு மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்

    செங்கல்பட்டு மாவட்டம் பேரூரில் ரூ.4276.44 கோடி மதிப்பீட்டில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்திற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்; ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுடன் அமைக்கப்படும் இந்த நிலையமானது நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்டது


  • 10:53 (IST) 21 Aug 2023
    ஸ்டெர்லைட் ஆலையை தமிழ்நாட்டில் அனுமதிக்க முடியாது

    சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்டது என்பதால் ஸ்டெர்லைட் ஆலையை தமிழ்நாட்டில் அனுமதிக்க முடியாது; ஆலையை திறக்க கோரும் வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் - ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தமிழ்நாடு அரசின் எழுத்துப்பூர்வ வாதம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்


  • 10:30 (IST) 21 Aug 2023
    கிரகலட்சுமி திட்டத்தை வரும் ஆகஸ்ட் 30ம் தேதி தொடங்கி வைக்கிறார் ராகுல்காந்தி

    கர்நாடகா: காங்கிரஸ் கட்சியின் முக்கிய தேர்தல் வாக்குறுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கும், கிரகலட்சுமி திட்டத்தை வரும் ஆகஸ்ட் 30ம் தேதி மைசூருவில் தொடங்கி வைக்கிறார் வயநாடு எம்.பி. ராகுல்காந்தி, இத்திட்டத்தின் மூலம் 1.30 கோடி பெண்கள் பயன் பெறவுள்ளனர்.


  • 10:13 (IST) 21 Aug 2023
    சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர்

    சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர்: சாம்பியன் பட்டம் வென்றார் செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச் இறுதி போட்டியில் ஸ்பெயின் வீரர் அல்கராஸை 5-7, 7-6, 7-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் ஜோகோவிச்


  • 09:26 (IST) 21 Aug 2023
    விக்ரம் லேண்டர் எடுத்த புதிய புகைப்படங்களை வெளியிட்டது இஸ்ரோ

    சந்திரயான் 3: விக்ரம் லேண்டர் எடுத்த புதிய புகைப்படங்களை வெளியிட்டது இஸ்ரோ தரையிறங்குவதற்கு பாதுகாப்பான இடங்களை படம்பிடித்து அனுப்பியுள்ளது விக்ரம் லேண்டர் வரும் 23ம் தேதி மாலை 6.04க்கு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ கூறியுள்ளது.


  • 09:03 (IST) 21 Aug 2023
    அஜித் பவார் அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளனர்

    அமலாக்கத்துறை விசாரணைக்கு அஞ்சியே, அஜித் பவார் அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளனர் - சரத்பவார் பகிரங்க குற்றச்சாட்டு


  • 08:04 (IST) 21 Aug 2023
    இன்று விசாரணைக்கு வருகிறது

    காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.


Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment