Advertisment

Tamil News Update: முதல்வர் ஸ்டாலின்' சர்வாதிகாரி போல் செயல்படுகிறார்.. அண்ணாமலை குற்றச்சாட்டு

Tamil News, Petrol price Today, AIADMK Case Verdict, OPS EPS, Chinese spy ship: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil News

Tamil News updates

தமிழக முதல்வர் ஸ்டாலின், அடக்குமுறையால் சர்வாதிகாரி போல் செயல்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisment

தர்மபுரி மாவட்டத்தில் பாரத மாதா சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்ற பாஜக துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கதை, போலீசார் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த அண்ணாமலை, முதல்வரின் அடக்குமுறையைக் கண்டு பாஜகவின் அடிமட்ட தொண்டன் கூட அஞ்சமாட்டான். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கே.பி.ராமலிங்கத்தின் உடல் நலத்துக்கும், உயிருக்கும் தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Tamil News Latest Updates

இபிஎஸ் தேர்வு செல்லாது.. நீதிமன்றம் தீர்ப்பு

சென்னையில் ஜூலை 11-ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது, அதிமுகவில் ஜூன் 23-க்கு முன் இருந்த நிலையே நீடிக்கும் என்று சென்னை உயா்நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.  இதன்மூலம் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலராக எடப்படி பழனிசாமி தோ்வு செய்யப்பட்டதும், ஓ.பன்னீா்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியதும் செல்லாததாகியுள்ளது.

இனி தொண்டர்கள் தரப்புதான்.. ஓபிஎஸ்

அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து ஓபிஎஸ் மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், அனைவரையும் ஒருங்கிணைத்து எம்ஜிஆர், ஜெயலலிதாவைப் போல அதிமுகவை வலிமைப்படுத்துவோம். இனி, தொண்டர்கள் தரப்புதான். எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொண்டர்களின் விருப்பப்படியும், தமிழக மக்களின் நலன் கருதியும்தான் இருக்கும் என்றார்.

மோடி, ஸ்டாலின் சந்திப்பு

டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் மோடி உள்ளிட்டோரை நேரில் சந்தித்த நிலையில், புதன் கிழமை இரவு சென்னை திரும்பினார்.

முன்னதாக புதன்கிழமை மாலை 4 மணியளவில் பிரதமர் மோடியை, ஸ்டாலின் நேரில் சந்தித்தார். இதில் நீட் விலக்கு, புதிய கல்வி கொள்கை, காவிரி விவகாரம், மேகதாது அணை விவகாரம், முல்லைப் பெரியாறு, நதிநீர் இணைப்பு, கட்சத்தீவு மீட்பு, மீனவர்களுக்கான தேசிய ஆணையம், மின்சாரத் திருத்தச்சட்டத்தை திரும்பப் பெறுதல் போன்ற தேவைகள் குறித்து கோரிக்கை வைக்கப்பட்டது. சுமார் 20 நிமிடங்களுக்கு இந்த சந்திப்பு நீடித்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 21:56 (IST) 18 Aug 2022
    பெண்கள், ஆண்களை விட திறமையானவர்கள் - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்

    ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேச்சு: “பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது வீட்டிலிருந்து தொடங்கப்பட்டு, சமூகத்திலும் அவர்களுக்கு உரிய இடத்தை வழங்க வேண்டும்; ஆண்கள் பெண்களை மேம்படுத்த முயற்சிக்க வேண்டிய அவசியமில்லை; பெண்கள் ஆண்களைவிட திறமையானவர்கள்.



  • 21:36 (IST) 18 Aug 2022
    மருத்துவர்களுக்கு ரூ.1000 கோடி பரிசு.. சர்ச்சையில் டோலோ 650 நிறுவனம்

    மக்களுக்கு தங்களது மாத்திரையை பரிந்துரைக்க டோலோ 650 நிறுவனம் மருத்துவர்களுக்கு ரூ.1000 கோடி அளவுக்கு பொருட்களை கொடுத்துள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் குற்றம்சாட்டியுள்ளது. ஒன்றிய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு.



  • 19:49 (IST) 18 Aug 2022
    ஐகோர்ட் தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து இ.பி.எஸ் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு

    ஜுலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்துள்ளார்.

    தங்களது வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என ஓ.பி.எஸ். தரப்பு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.



  • 19:46 (IST) 18 Aug 2022
    கனல் கண்ணன் ஜாமின் மனு தள்ளுபடி - நீதிமன்றம் உத்தரவு

    பெரியார் சிலையை அகற்றும் நாளே இந்துக்களின் எழுச்சி நாள் என்று பேசிய சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவர் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.



  • 19:42 (IST) 18 Aug 2022
    நரிக்குறவர் பெண் புகாருக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் விளக்கம்

    நரிக்குறவ பெண் புகாரை தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் கூறுகையில், செங்கல்பட்டு, பூஞ்சேரியில் நரிக்குறவர் மற்றும் இருளர் குடும்பங்களுக்கு இதுவரை ரூ.1.5 கோடி நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. 54 இலவச வீட்டுமனை பட்டாக்கள், 35 சாதி சான்றிதழ்கள், 6 முதியோர் உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளன என்று விளக்கம் அளித்தார்.



  • 19:20 (IST) 18 Aug 2022
    நெல்லையில் ஒருசில இடங்களில் மழை

    நெல்லையில் இன்று ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது.



  • 19:16 (IST) 18 Aug 2022
    பூமர் அங்கிள் போஸ்டர் வெளியீடு

    யோகி பாபு மற்றும் ரோபோ சங்கர் இணைந்து நடித்துள்ள பூமர் அங்கிள் படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.



  • 19:02 (IST) 18 Aug 2022
    இந்திய அணி வெற்றி

    ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



  • 18:34 (IST) 18 Aug 2022
    உளுந்தூர்பேட்டை அருகே பெட்ரோல் பங்கில் தீ

    உளுந்தூர்பேட்டை அருகே பெட்ரோல் பங்க் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் பல கிலோ மீட்டர் கரும்புகை வெளியேறியது.

    இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடிவருகின்றனர்.



  • 18:26 (IST) 18 Aug 2022
    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: 17 போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் அப்போதைய தென்மண்டல ஐஜி சைலேஷ் குமார் யாதவ், நெல்லை சரக டிஐஜி, தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆகியோர் உள்பட 17 போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.



  • 17:55 (IST) 18 Aug 2022
    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு அறிக்கை

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கை அளித்துள்ளது.

    அந்த அறிக்கையில் மக்கள் குருவிகளைப் போல் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் மாவட்ட ஆட்சியர் மிகவும் அலட்சியமாக நடந்துள்ளார் என்றும் ஒரே போலீஸ்காரரை வைத்து 17 ரவுண்டுகள் சுட்டுள்ளனர் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • 17:31 (IST) 18 Aug 2022
    பொன்னியின் செல்வன் 2ஆவது பாடல்

    பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாகிறது.



  • 16:59 (IST) 18 Aug 2022
    அமெரிக்காவில் ஆவின் நெய்

    அமெரிக்க நாட்டில் ஆவின் நிறுவனம் தனது நெய் விற்பனையை தொடங்கவுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.



  • 16:44 (IST) 18 Aug 2022
    தேனியில் ஓ.பி.எஸ்-க்கு உற்சாக வரவேற்பு

    நீதிமன்ற தீர்ப்புக்கு பின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்திற்குச் சென்ற ஓ.பன்னீர்செல்வத்துக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்



  • 16:21 (IST) 18 Aug 2022
    சென்னை தனியார் வங்கி கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது

    சென்னை, அரும்பாக்கம் தனியார் வங்கி கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளையடிக்கப்பட்ட தங்கத்தை விற்க உதவியதாக செந்தில் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்



  • 15:54 (IST) 18 Aug 2022
    கள்ளக்குறிச்சி பள்ளி தாளாளர் உட்பட 5 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி

    கள்ளக்குறிச்சி, கனியாமூர் பள்ளி தாளாளர் உட்பட 5 பேரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து விழுப்புரம் மகளிர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி சாந்தி உத்தரவிட்டுள்ளார்



  • 15:42 (IST) 18 Aug 2022
    நெல்லை கண்ணன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

    இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முதுபெரும் தலைவர்களுடன் நெருங்கி பழகிய நெல்லை கண்ணன் மறைவை அறிந்து வருத்தமுற்றேன் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



  • 15:05 (IST) 18 Aug 2022
    அம்பத்தூர் காவல் நிலையம் எதிரே இளைஞர் வெட்டிக்கொலை - 4 பேர் கைது

    சென்னை, அம்பத்தூரில் காவல் நிலையம் எதிரே கார்த்திக் என்ற இளைஞர் வெட்டிக்கொலை. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



  • 14:37 (IST) 18 Aug 2022
    டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.

    டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், அரியலூர், திருச்சி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்



  • 14:26 (IST) 18 Aug 2022
    முன் ஜாமின் மனு - அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு

    அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வாகனம் மீது காலணி வீசிய வழக்கில் 3 பேரின் முன் ஜாமின் மனுவுக்கு அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு.

    தேசியக்கொடி பறந்த வாகனத்தின் மீது காலணி வீசியது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல் எனவும் வாதம்.



  • 14:00 (IST) 18 Aug 2022
    பீகாரில் பள்ளி மாணவி மீது துப்பாக்கிச் சூடு

    பீகார் தலைநகர் பாட்னாவில் பட்டப் பகலில் பள்ளி மாணவி மீது துப்பாக்கிச் சூடு. நிலைகுலைந்து கீழே விழுந்த பள்ளி மாணவி மருத்துவமனையில் அனுமதி



  • 13:44 (IST) 18 Aug 2022
    ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவரும் ஓபிஎஸ் கருத்தை வரவேற்கவே செய்வார்கள்- டிடிவி தினகரன்

    சுயநலமற்ற, ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவரும் ஓபிஎஸ் கருத்தை வரவேற்கவே செய்வார்கள்,. திமுகவை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய, ஓபிஎஸ் விடுத்த அழைப்புக்கு டிடிவி தினகரன் வரவேற்பு . பதவி வெறிப்பிடித்தாடும், துரோக சிந்தனை உடைய சுயநல கும்பல் நல்லதை எப்போதும் ஏற்காது-டிடிவி தினகரன்



  • 12:15 (IST) 18 Aug 2022
    எப்பொழுதும் எந்த பதவிக்கும் ஆசைப்பட்டதில்லை

    நான் எப்பொழுதும் சொந்தக்காலில் நிற்க விரும்புபவன். கட்சிக்கு சோதனையான காலங்களிலும் உண்மையாக செயல்பட்டேன். எப்பொழுதும் எந்த பதவிக்கும் ஆசைப்பட்டதில்லை - இபிஎஸ்



  • 11:56 (IST) 18 Aug 2022
    அதிமுகவை சிலர் தன்வசப்படுத்த முயற்சிக்கிறார்கள்- இபிஎஸ்

    அதிமுகவை சிலர் தன்வசப்படுத்த முயற்சிக்கிறார்கள். அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவிக்கு இணையாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது - அதிமுகவில் பொதுக்குழுவுக்கு மட்டுமே முழு அதிகாரம்: செயற்குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை . இபிஎஸ் பேட்டி



  • 11:47 (IST) 18 Aug 2022
    அதிமுக அலுவலக சாவி தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

    அதிமுக அலுவலக சாவி தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு . வழக்கு தொடர்பாக வருவாய் துறை மற்றும் இபிஎஸ் பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் . வழக்கை விரிவாக விசாரிக்காமல் எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது - தலைமை நீதிபதி என்.வி.ரமணா . அதிமுக அலுவலக சாவியை இபிஎஸ் தரப்பிடம் ஒப்படைக்க உத்தரவிட்டதற்கு எதிராக ஓபிஎஸ் முறையீடு



  • 11:31 (IST) 18 Aug 2022
    கனியாமூர் தனியார் பள்ளி தாளாளர் உட்பட 5 பேரின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

    கனியாமூர் தனியார் பள்ளி தாளாளர் உட்பட 5 பேரின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு . விசாரணை நிறைவடைந்த நிலையில் உத்தரவை ஒத்திவைத்தது விழுப்புரம் மகளிர் நீதிமன்றம்., மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் 5 பேரும் ஜாமின் கோரிக்கை.



  • 11:27 (IST) 18 Aug 2022
    ஆன்லைன் ரம்மி- முதல்வர் ஆலோசனை

    போதைப்பொருள் ஒழிப்பு, ஆன்லைன் ரம்மி தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை *சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்டோர் பங்கேற்பு



  • 11:07 (IST) 18 Aug 2022
    கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்புகள் அனைத்தையும் தூக்கி எறிய வேண்டும்

    கருத்து வேறுபாடுகளை மனங்களில் இருந்து நீக்கிவிட்டு ஒன்றுபட வேண்டும். கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்புகள் அனைத்தையும் தூக்கி எறிய வேண்டும் - ஓபிஎஸ்



  • 11:00 (IST) 18 Aug 2022
    ஓபிஎஸ் அழைப்பு

    எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா, டிடிவி தினகரன் அதிமுகவில் இணைந்து பணியாற்ற வேண்டும் என ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார்.



  • 10:54 (IST) 18 Aug 2022
    பொதுக்குழு வழக்கு தீர்ப்பு.. இபிஎஸ் தரப்பு மேல்முறையீடு

    அதிமுக பொதுக்குழு வழக்கில் தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கு வரும் திங்கட்கிழமையன்று விசாரணைக்கு பட்டியலிடப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர்.



  • 10:46 (IST) 18 Aug 2022
    ஓபிஎஸ் பேட்டி

    கருத்து வேறுபாடுகள் நீக்கி விட்டு அதிமுகவினர் ஒன்று பட வேண்டும். இன்றைய சூழலில் அதிமுக ஒன்றுபட்டு தேர்தலை சந்தித்தால் யாராலும் வெல்ல முடியாது. கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்புகளை அனைத்தையும் மனங்களில் இருந்து தூக்கி எரிய வேண்டும் என ஓபிஎஸ் பேட்டி



  • 10:09 (IST) 18 Aug 2022
    ஓபிஎஸ் மனு மீது விசாரணை

    அதிமுக தலைமை அலுவலக சாவியை இபிஎஸ். தரப்பிடம் கொடுத்ததற்கு எதிரான ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.



  • 09:09 (IST) 18 Aug 2022
    ஆன்லைன் ரம்மிக்கு தடை

    ஆன்லைன் ரம்மியை தடை செய்ய புதிய சட்டம் இயற்றுவது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடத்தப்பட உள்ளது.



  • 09:09 (IST) 18 Aug 2022
    கேரளா சவாரி

    கேரளாவில் அரசு சார்பில் இயக்கப்படும் 'கேரளா சவாரி' ஆன்லைன் டாக்சி சேவை புதன்கிழமை பயன்பாட்டிற்கு வந்தது. மாநில அரசே ஆன்லைன் டாக்சி சேவையை தொடங்குவது இதுவே முதல்முறை ஆகும்.



  • 09:03 (IST) 18 Aug 2022
    டிஜிபி அலுவலகம் அறிவுறுத்தல்

    தமிழக டிஜிபி பெயரில் பரவும் போலி குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம் என பொதுமக்களை டிஜிபி அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.



  • 08:11 (IST) 18 Aug 2022
    கருமுட்டை விற்பனை.. 4 பேர் மீது குண்டர் சட்டம்

    ஈரோடு சிறுமி கருமுட்டை விற்பனை வழக்கில், கைதான சிறுமியின் தாய் சுமையா, இடைத்தரகர் மாலதி உள்ளிட்ட 4 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment