Advertisment

News Highlights: திமுக- பாஜக கூட்டணிக்கு வாய்ப்பு- பொன்னார் கணிப்பு

ஜம்மு-காஷ்மீர், ஷோபியான் அருகே சுகானில் நடந்த என்கவுன்டரில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை.

author-image
WebDesk
New Update
News Highlights: திமுக- பாஜக கூட்டணிக்கு வாய்ப்பு- பொன்னார் கணிப்பு

Tamil News Today Updates: பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், “சட்டப்பேரவை தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணிகள் மாற வாய்ப்புள்ளது. இப்போதுள்ளது நாடாளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி. வரும் காலங்களில் அதிமுக, திமுக என எந்த கட்சியுடனும் பாஜக கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். அதிமுக-வில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த ஆலோசனை இன்று அதிகாலை வரை தொடர்ந்தது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரிடையே மாறி மாறி 9 மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள் நிர்வாகிகள். அதிமுக-வின் முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது.

Advertisment

மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்த சட்டங்களுக்கு எதிராக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என முதல்வருக்கு, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு கூடுதல் சுதந்திரத்தைத் தருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் தெரிவித்தார். இரண்டாம் கட்ட பரிசோதனைக்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த், சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுய பிம்பத்தை கட்டமைப்பதில் மட்டுமே பிரதமர் செயல்படுவதாக, ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog

Tamil News Today

சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    23:46 (IST)07 Oct 2020

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

    ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்கள் குவித்தது. 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சி.எஸ்.கே களம் இறங்கியது. சி.எஸ்.கே அணி கடைசி 1 ஓவரில் வெற்றி பெற 26 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில், கே.கே.ஆர் அணியின் ஆண்ட்ரே ரஸ்ஸல் வீசிய ஓவரில் சி.எஸ்.கே அணியின் கேதார் ஜாதவ் 1 ரன் அடித்தார். ரவீந்திர ஜடேஜா 14 ரன்கள் அடித்தார். இதனால், சி.எஸ்.கே 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது.

    23:20 (IST)07 Oct 2020

    சாம் கர்ரனும் அவுட் வெற்றி பெறுமா சிஎஸ்கே

    11 பந்துகளில் 17 ரன்கள் அடித்த சாம் கர்ரன் அண்ட்ரே ரஸ்ஸல் பந்தில் மார்கனின் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

    23:18 (IST)07 Oct 2020

    தோனி அவுட்

    11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேப்டன் தோனி வருன் சக்ரவர்த்தி பந்தில் அவுட் ஆனார்.

    22:59 (IST)07 Oct 2020

    ஷேன் வாட்சன் அவுட்

    ஷேன் வாட்சன் 40 பந்துகளுக்கு 50 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சுனில் நரைன் பந்தில் எல்.பி.டபில்யூ முறையில் அவுட் ஆனார்.

    22:52 (IST)07 Oct 2020

    சி.எஸ்.கே 10 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழந்து 90 ரன்கள் குவிப்பு

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சி.எஸ்.கே அணி 10 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழந்து 90 ரன்கள் எடுத்துள்ளது.

    22:50 (IST)07 Oct 2020

    சி.எஸ்.கே 5 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழந்து 41 ரன் குவிப்பு

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சி.எஸ்.கே அணி 5 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழந்து 41 ரன்கள் எடுத்துள்ளது.

    21:45 (IST)07 Oct 2020

    சி.எஸ்.கே-வுக்கு 168 ரன்கள் வெற்றி இலக்கு

    ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சி.எஸ்.கே அணி வெற்றி பெற168 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

    21:07 (IST)07 Oct 2020

    மணிப்பூர், நாகலாந்து மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் அஷ்வனி குமார் மரணம்

    மணிப்பூர், நாகலாந்து மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் அஷ்வனி குமார் ஷிம்லாவில் உள்ள தனது இல்லத்தில் இன்று தூக்கிட்ட நிலையில் இறந்துள்ளார். இந்த தகவலை ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் ஷிம்லா எஸ்.பி மோஹித் சாவ்லா தெரிவித்துள்ளார்.

    19:51 (IST)07 Oct 2020

    சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான ரூ. 2,000 கோடி சொத்துக்கள் முடக்கம்

    பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான ரூ. 2,000 கோடி சொத்துக்களை வருமானவரித்துறை முடக்கியுள்ளது. முடக்கப்பட்ட சொத்துக்களில் சிறுதாவூர் பங்களா, கொடநாடு எஸ்டேட் சொத்துக்களும் அடங்கும். வருமானவரித்துறையால் முடக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு சுமார் ரூ. 2,000 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 2017ல் வருமான வரித்துறை அதிகாரிகள் சசிகலாவிற்கு சொந்தமான 200 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    19:37 (IST)07 Oct 2020

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,447 பேருக்கு கொரோனா; 67 பேர் பலி

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,447 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 67 பேர் உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    19:24 (IST)07 Oct 2020

    பொறியியல் சேர்க்கை பொதுப்பிரிவு ஆன்லைன் கலந்தாய்வுக்கு அட்டவணை வெளியீடு

    தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம், பொறியியல் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு ஆன்லைன் கலந்தாய்வுக்கு, 4 சுற்றுகள் கொண்ட அட்டவணையை வெளியிட்டது. தொழில் பிரிவு மாணவர்களின் பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஒரே சுற்றாக நடைபெறுகிறது.

    18:36 (IST)07 Oct 2020

    அதிமுகவிற்கு இது ஆட்சி அல்ல வீழ்ச்சி - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “மக்கள் நலனுக்காக அல்லாமல் தங்களின் நலனுக்காகவே ஓபிஎஸ்., ஈபிஎஸ் ஒன்று சேர்ந்துள்ளனர். அதிமுகவில் ஒருவரையொருவர் வீழ்த்த முயற்சித்து வருகிறார்கள். அதிமுகவிற்கு இது ஆட்சி அல்ல வீழ்ச்சி” என்று சாடியுள்ளார்.

    17:30 (IST)07 Oct 2020

    கூட்டணிகள் மாற வாய்ப்புள்ளது - பொன். ராதாகிருஷ்ணன்

    பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், “சட்டப்பேரவை தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணிகள் மாற வாய்ப்புள்ளது. இப்போதுள்ளது நாடாளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி. வரும் காலங்களில் அதிமுக, திமுக என எந்த கட்சியுடனும் பாஜக கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

    16:47 (IST)07 Oct 2020

    முகக் கவசம், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களை ஏன் கைது செய்யக் கூடாது? ஐகோர்ட் கேள்வி

    முகக் கவசம், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களை ஏன் கைது செய்யக் கூடாது? என்று

    உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கான அபராத தொகையையும் 2 ஆயிரமாக உயர்த்தலாம் என்று பரிந்துரைத்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், பொதுமக்கள் தொற்று ஏற்பட்டால் தங்கள் குடும்பத்தினரும் பாதிக்கப்படுவார்கள் என்பதை பொதுமக்கள் உணர வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

    12:50 (IST)07 Oct 2020

    வானிலை நிலவரம்

    கோவை, நீலகிரி, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக உள்மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    12:16 (IST)07 Oct 2020

    தங்கம் விலை

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ஒரு சவரன் ரூ.38,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

    11:29 (IST)07 Oct 2020

    ரியாவுக்கு ஜாமின்

    சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கில் நடிகை ரியாவுக்கு ஜாமின் வழங்கியது மும்பை உயர்நீதிமன்றம்

    11:14 (IST)07 Oct 2020

    எரிசக்தி அமைச்சகத்துடன் ஒப்பந்தம்

    எரிசக்தி அமைச்சகத்துடன், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. நடப்பு 2020-21 நிதியாண்டுக்கான இந்த ஒப்பந்தத்தில் மத்திய எரிசக்தி துறை செயலாளர் சஞ்சீவ் நந்தன் சகாய் மற்றும் பவர்கிரிட் நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கே.ஸ்ரீகாந்த் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். நிதி மற்றும் திட்ட செயலாக்கம் தொடர்பான பல்வேறு இலக்குகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

    10:22 (IST)07 Oct 2020

    இந்தியாவில் கொரோனா

    இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 67,57,131 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 72,049 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 67,57,132 ஆக உயர்ந்தது. புதிதாக 986 பேர் இறந்துள்ளனர்.

    இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,04,555 ஆக உயர்ந்தது. தொற்றில் இருந்து ஒரே நாளில் 75,787 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 57,44,694 ஆக உயர்ந்துள்ளது.

    10:13 (IST)07 Oct 2020

    பீகார் சட்டப்பேரவை தேர்தல்

    பீகார் சட்டப்பேரவை தேர்தல் தொகுதி பங்கீடு நிறைவு. ஜேடியு 122, பாஜ 121 இடங்களில் போட்டியிடுவதாக முதல்வர் நிதிஷ்குமார் அறிவிப்பு

    10:11 (IST)07 Oct 2020

    செங்கோட்டை - சென்னை சாலையில் விபத்து

    செங்கோட்டை - சென்னைக்கு சென்ற தனியார் பேருந்து மயிலம் அருகே பள்ளத்தில் கவிழ்ந்து 15 பேர் காயம். ஓட்டுநரின் கவனக்குறைவால் சாலையோர பள்ளத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தகவல்

    10:05 (IST)07 Oct 2020

    முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி

    2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு 

    10:02 (IST)07 Oct 2020

    11 பேர் கொண்ட குழு

    திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், காமராஜ், ஜே.சி.டி.பிரபாகரன், மனோஜ்பாண்டியன், பா.மோகன். கோபாலகிருஷ்ணன், சோழவந்தான் மணிக்கம் ஆகிய 11 பேர் அதிமுக வழிகாட்டு குழுவில் இடம் பெற்றுள்ளனர். 

    09:53 (IST)07 Oct 2020

    மக்கள் முதல்வர் ஓபிஎஸ்

    அதிமுக தலைமை அலுவலகம் வந்த ஓ.பி.எஸ். அப்போது மக்கள் முதல்வர் என் ஆதரவாளர்கள் கோஷமிட்டனர். 

    09:37 (IST)07 Oct 2020

    முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி?

    அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சற்று நேரத்தில் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் கூட்டாக செய்தியாளர் சந்திப்பின் போது அறிவிக்கின்றனர். 2021 சட்டமன்ற தேர்தல் அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் குறித்து விரைவில் அறிவிப்பு

    09:26 (IST)07 Oct 2020

    அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்?

    ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை 10 மணிக்கு ஓபிஎஸ்-ஈபிஎஸ் பேட்டியளிக்க உள்ளனர். ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்திக்கின்றனர். அப்போது வழிகாட்டுதல் குழு தொடர்பான அறிவிப்பும் வெளியாகிறது.

    09:03 (IST)07 Oct 2020

    மீண்டும் அதிமுக ஆட்சி வருவதற்கான ஆக்கப்பூர்வ பணி நடக்கிறது - வைத்தியலிங்கம்

    ”காலை 10 மணிக்கு நல்ல செய்தி வரும். மீண்டும் அதிமுக ஆட்சி வருவதற்கான ஆக்கப்பூர்வ பணி நடக்கிறது" என சென்னையில் ஓபிஎஸ் உடன் ஆலோசனை நடத்திய துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் அதிகாலையில் பேட்டியளித்தார். 

    தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர், கடந்த செப்டம்பர் 23ம் தேதி இரவு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டார். இரண்டு நாட்கள் கழித்து அவருடைய மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த்துக்கு ம் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு, இருவரும் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் அதனால், அவர்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினர். இந்த நிலையில், விஜயகாந்த் மீண்டும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    Coronavirus Corona Aiadmk Covid 19
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment