Advertisment

News Highlights: 25-ம் தேதி பொறியியல் தரவரிசைப் பட்டியல்- அமைச்சர் கே.பி.அன்பழகன்

Tamil News : மாணவர்கள் tneaonline.in என்ற இணையதள பக்கத்தில் தங்களுடைய அக்கவுண்ட்டில் லாகின் செய்யலாம்.

author-image
WebDesk
New Update
minister kp anbazhagan statement, university college final year semester exam, final year semester will be conduct after september 15th, அமைச்சர் கேபி அன்பழகன், செப்டம்பர் 15க்கு பிறகு பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வு, கல்லூரி இறுதி ஆண்டு தேர்வு, செப்டம்பர் 15க்கு பிறகு தேர்வு, after september 15th final year exam, minister kp anbazhagan statement

Tamil News Today Live

Tamil News Today : பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் செப்.25-ம் தேதி வெளியிடப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்துள்ளார். கொரோனா காரணமாக மாணவர்கள் சான்றிதழ்களைப் பதிவேற்ற அவகாசம் கோரியதால், தரவரிசைப் பட்டியல் செப்.25-ம் தேதி வெளியாகும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில், மாணவர்கள் tneaonline.in என்ற இணையதள பக்கத்தில் தங்களுடைய அக்கவுண்ட்டில் லாகின் செய்து சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு விட்டதா என்று உறுதி செய்யலாம்.

சென்னை கலைவாணர் அரங்கில் செப்டம்பர் 14 ஆம் தேதி கூடிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவுபெறுகிறது.

தமிழகத்தில் காவிரி நீர் வரத்து அதிகரிப்பு. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு காவிரி நீர்வரத்து 12,000 கன அடியிலிருந்து 16,000 கன அடியாக அதிகரிப்பு.

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை கலந்தாய்வை 15 நாட்களுக்கு நீட்டிக்க கோரி தமிழக அரசு மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த மனு மீதான விசாரணையின் போது மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அதில், தற்போது தமிழகத்துக்கு கால நீட்டிப்பு அளித்தால், அதைபோல் பிற மாநிலங்களும் கலந்தாய்வு கடைசி தேதியை நீட்டிக்க கோருவர் என்றும், எனவே கூடுதல் கால அவகாசம் வழங்க முடியாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மருத்துவ மேற்படிப்புகளுக்கான கலந்தாய்வை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல். நீட், ஜேஇஇ தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

 

Live Blog

சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:38 (IST)16 Sep 2020

    ஏற்றுமதியை அதிகரிக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது

    கொரோனா தொற்று காரணமாக, நாட்டின் ஒட்டு மொத்த ஏற்றுமதி கடந்த ஏப்ரல்-ஜூன் மாதத்தில் 25.42% குறைந்துள்ளது. ஆனால் ஆகஸ்ட் மாதத்தில் ஏற்றுமதியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தேசிய அளவிலான முடக்கம் படிப்படியாக நீக்கப்பட்டதால், தொழிற்சாலை நடவடிக்கைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. ஏற்றுமதியை அதிகரிக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று மத்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார் 

    22:36 (IST)16 Sep 2020

    3 மாதத்திற்குள் பொது அறக்கட்டளை சட்டத்திற்குள் பதிவு செய்ய வேண்டும்

    அறக்கட்டளை தொடங்குபவர்கள் 3 மாதத்திற்குள் பொது அறக்கட்டளை சட்டத்திற்குள் பதிவு செய்ய வேண்டும் என்று சட்டத்துறை  அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.  

    21:44 (IST)16 Sep 2020

    தரவரிசை பட்டியல் வரும் 25ஆம் தேதி வெளியிடப்படும்

    இளங்கலை பொறியியல் சேர்க்கைக்காக விண்ணப்பித்துள்ள மாணவர்களின் தரவரிசை பட்டியல் வரும் 25ஆம் தேதி வெளியிடப்படும் என்று மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தெரிவித்தார்.

    21:41 (IST)16 Sep 2020

    முதலமைச்சர் சட்டசபை அறிவிப்பு - (2/2)

    18 வயதிற்கு உட்பட்ட இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவோருக்கு ஆயுள் தண்டனை வழங்கவும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக பெண்களை விற்பது வாங்குவது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கான தண்டனையை 7 ஆண்டுகள் அல்லது ஆயுள் தண்டனையாக அதிகரிக்கவும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார். இதேபோன்று மற்றொரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட முதலமைச்சர் வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைகழகத்தைப் பிரித்து விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய பல்கலைகழகம் உருவாக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

    21:41 (IST)16 Sep 2020

    முதலமைச்சர் சட்டசபை அறிவிப்பு - (1/2)

    தமிழகத்தில் வரதட்சனை கொடுமை குற்றங்களுக்கான சிறைத் தண்டனை 7 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று பேரவை விதி 110-ன் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட முதலமைச்சர் பெண்களை பின்தொடர்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கான தண்டனை 5 ஆண்டுகளிலிருந்து 7 ஆண்டுகளாக அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    21:32 (IST)16 Sep 2020

    இ.வி.கே.எஸ் இளங்கோவன் ட்வீட்

    21:29 (IST)16 Sep 2020

    புதிய கல்விக் கொள்கை முழுமையாக எதிர்க்க வேண்டும் - மு.க ஸ்டாலின்

    புதிய கல்விக் கொள்கை குறித்து வெறும் விளக்கமளிக்கப்பதை விட சட்டமன்றச் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தினோம். ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அதனை ஏற்கவில்லை! சமூகநீதி, சமத்துவம், கூட்டாட்சி, தமிழ்மொழி அனைத்துக்குமே எதிரான புதிய கல்விக் கொள்கை முழுமையாக எதிர்க்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.   

    20:57 (IST)16 Sep 2020

    அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு - சூர்யா வரவேற்பு

    அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்த தமிழக அரசுக்கும், உறுதுணையாய் இருந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் என்று சூர்யா தனது ட்விட்டரில் பதிவிட்டார்.  

    20:55 (IST)16 Sep 2020

    வந்தே பாரத் திட்டத்தின் மூலம் தமிழகத்துக்கு 585 விமானங்கள் இயக்கப்பட்டன

    வந்தே பாரத் திட்டத்தின் மூலம் தமிழகத்துக்கு 585 விமானங்கள் இயக்கப்பட்டன என்று மாநிலங்களவையில் சிவில் விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் ஹர்தீப் சிங் பூரி எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

    20:21 (IST)16 Sep 2020

    தமிழகத்தில் புதிதாக 5,652 பேருக்கு கொரோனா, 57 பேர் பலி

    தமிழகத்தில் இன்று (செப்டம்பர் 16) ஒரே நாளில் புதிதாக 5,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,19,860 ஆக அதிகரித்துள்ளது

    19:04 (IST)16 Sep 2020

    திருப்பதி எம்.பி. துர்கா பிரசாத் ராவ் கொரோனாவால் உயிரிழப்பு

    கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட  திருப்பதி எம்.பி. துர்கா பிரசாத் ராவ்  உயிரிழந்தார்.  சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    nn" id="lbcontentbody">

    18:57 (IST)16 Sep 2020

    எவனென்று நினைத்தாய் - லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசனின் அடுத்த திரைப்படம்

    கமல்ஹாசனின் அடுத்த திரைப்படத்தை  இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். படத்திற்கு  'எவனென்று நினைத்தாய்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

    17:49 (IST)16 Sep 2020

    ஆயுர்வேத கல்வி மற்றும் ஆராய்ச்சி மைய மசோதா நிறைவேறியது

    ஆயுர்வேத கல்வி மற்றும் ஆராய்ச்சி மைய மசோதா 2020, மாநிலங்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மக்களவையில் கடந்த மார்ச் 19ம் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியதன் மூலம், குஜராத் ஜாம் நகரில் நவீன ஆயுர்வேத கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம்(ITRA) அமையவும், அதற்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம்(INI) அந்தஸ்து கிடைக்கவும் வழி ஏற்பட்டுள்ளது.

    17:48 (IST)16 Sep 2020

    தமிழகத்தில் ஐஎஸ் தீவிராத செயல்பாடுகள் அதிகமாக உள்ளது - உள்துறை இணை அமைச்சர்

    ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் செயல்பாடுகள் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் அதிக அளவில் உள்ளதாக தேசிய புலனாய்வு முகமையின் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக உள்துறை இணை அமைச்சர் திரு கிஷன் ரெட்டி மாநிலங்களவையில் இன்று தெரிவித்தார்.

    கர்நாடகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் இருந்து கூடுதல் ரிசர்வ் படைகளுக்கான கோரிக்கைகள் வந்துள்ள நிலையில், அறிக்கையை ஆராய்ந்த பின் இது குறித்து முடிவெடுக்கப்படும்.

    16:42 (IST)16 Sep 2020

    சட்டப்பேரவை ஒத்தி வைப்பு

    மூன்று நாட்கள் தொடர்ந்து நடந்த தமிழக சட்டப்பேரவை, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. 

    16:03 (IST)16 Sep 2020

    ஸ்புட்னிக் தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க ஒப்பந்தம்

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்புக்கான ஸ்புட்னிக்-V தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 

    15:35 (IST)16 Sep 2020

    ஜெயலலிதா இல்ல வழக்கு

    ஜெயலலிதா இல்லத்தை கையகப்படுத்த ஆளுநர் பிறப்பித்த அவசர சட்டம் குறித்து 6 வாரத்தில் பதிலளிக்க ஆளுநரின் செயலர், தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. 

    15:29 (IST)16 Sep 2020

    எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை முன் ஜாமீன்

    தேசிய கொடியை அவமதித்தது தொடர்பான வழக்கில் எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம். தன்னுடைய கருத்துக்கு வருத்தம் தெரிவித்து எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மனுவை காவல்துறை ஏற்றுக்கொண்டிருந்த நிலையில் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. 

    14:45 (IST)16 Sep 2020

    அண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாக பிரிக்க மசோதா தாக்கல்

    அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா தொழில்நுட்பம் - ஆராய்ச்சி நிறுவனம் என இரண்டாக பிரிக்கப்படுகிறது. 

    14:43 (IST)16 Sep 2020

    பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு

    பாபர் மசூதி இடிப்பு வழக்கில் செப்டம்பர் 30-ஆம் தேதி தீர்ப்பு வெளியாவதாக, லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்றம் அறிவித்துள்ளது. பாபர் மசூதி வழக்கில் அத்வானி, முரளி மனோகா் ஜோஷி உள்ளிட்ட 32 போ் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விவாதங்கள் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது. 

    14:22 (IST)16 Sep 2020

    நகராட்சி, மாநகராட்சிகளில் தனி அலுவலர் பதவிக்காலம்!

    நகராட்சி, மாநகராட்சிகளில் தனி அலுவலர் பதவிக்காலத்தை நீட்டிக்க சட்டமுன் வடிவு .  மேலும் 6 மாதங்கள் நீட்டிப்புக்கான சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி . பதவிக்காலம் நீட்டிப்புக்கு திமுக கடும் எதிர்ப்பு

    14:20 (IST)16 Sep 2020

    2 -யாக பிரியும் அண்ணாப்பல்கலைகழகம்!

    அண்ணா பல்கலைக் கழகத்தை 2 ஆக பிரிக்க சட்ட முன்வடிவு.  சட்டப்பேரவையில் அமைச்சர் கே.பி.அன்பழகன் தாக்கல் செய்தார். 

    14:01 (IST)16 Sep 2020

    அனைத்து கட்சிகளும் கவன ஈர்ப்பு!

    பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடு சட்டமன்றத்தில் அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கவன ஈர்ப்பு.  கிசான் திட்டம் முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என திமுக எம்.எல்.ஏ பொன்முடி வலியுறுத்தினார். 

    13:56 (IST)16 Sep 2020

    கிசான் திட்டத்தில் முறைகேடு

    இதுவரை ரூ.52.65 கோடி பறிமுதல் செய்யப்பட்டு, இதுவரை 30.36 லட்சம் பயனாளிகளின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன; சிபிசிஐடி இதுவரை 41 பேரை கைது செய்துள்ளது. இந்நிலையில் கிசான் திட்டத்தில் முறைகேடு செய்த ஒருவர் கூட தப்ப முடியாது என அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்

    13:32 (IST)16 Sep 2020

    சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு!

    புதிய கல்விக்கொள்கை குறித்து அரசு விவாதிக்க மறுப்பதாக கூறி சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு. புதிய கல்விக்கொள்கை மாநில கல்வி உரிமைக்கு எதிரானது புதிய கல்விக்கொள்கை குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் சமூக நீதி, கூட்டாட்சித் தத்துவம், சமத்துவம் மற்றும் தமிழ் மொழிக்கும் எதிரானது தேசிய கல்விக்கொள்கை எனவும் ஸ்டாலின் கருத்து. 

    13:29 (IST)16 Sep 2020

    எம்.எல்.ஏ துரைமுருகன் எதிர்ப்பு. !

    காட்பாடி தொகுதியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை 2 ஆக பிரிப்பதற்கு திமுக எம்.எல்.ஏ துரைமுருகன் எதிர்ப்பு.  கருணாநிதி கொண்டு வந்ததால் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை அரசு பிரிக்கிறதா..? பல்கலை. பிரிக்கப்பட்டால் அதே பெயர் இருக்குமா..? -  என கேள்வி. 

    13:25 (IST)16 Sep 2020

    விழுப்புரத்தில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம்!

    திருவள்ளுவர் பல்கலைக்கழகம் 2 ஆக பிரிக்கப்பட்டு , புதிய பல்கலைக்கழகம் விழுப்புரத்தில் அமைக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவிப்பு. 

    13:24 (IST)16 Sep 2020

    புலம்பெயர்ந்த தொழிலாளர்கல் எண்ணிக்கை!

    இந்தியாவில் ஊரடங்கு காலத்தில் 1.04 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை இழந்து சொந்த மாநிலம் திரும்பினர் தமிழகத்தை சேர்ந்த 72,145 புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை இழந்து சொந்த மாநிலம் திரும்பினர்  என மத்திய அரசு தகவல். 

    13:23 (IST)16 Sep 2020

    சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம்!

    நீட் தேர்வுக்கு எதிராக சென்னை ஆலப்பாக்கம் இல்லம் முன் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம். 

    13:23 (IST)16 Sep 2020

    வைகோ கேள்விக்கு மத்திய அரசு பதில்!

    அலுவல் மொழிகள் திட்டத்தில் திருத்தம் செய்யும் திட்டம் இல்லை என மாநிலங்களவையில் வைகோவின் கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சகம், இந்தி, ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளை அலுவல் மொழிகளாக மாற்றும் திட்டம் இல்லை என பதில். 

    12:42 (IST)16 Sep 2020

    இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பரிசோதனை!

    ஆக்ஸ்போர்டின் கொரோனா தடுப்பூசி மருந்தை இந்தியாவில் மீண்டும் பரிசோதனை செய்யலாம் . சீரம் நிறுவனத்திற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி .  ஏற்கனவே நடத்தப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கு உடல்நலம் பாதித்தது உடல்நலம் பாதித்ததால் கொரோனா தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்பட்டது . தற்போது மீண்டும் இந்தியாவில் பரிசோதிக்க ஒப்புதல். 

    12:41 (IST)16 Sep 2020

    தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்!

    முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை நீட்டிக்கக் கோரிய வழக்கு தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம். கலந்தாய்வை 15 நாட்களுக்கு நீட்டிக்க முடியாது என மத்திய அரசு நேற்று பதில் . மத்திய அரசின் பதிலை தொடர்ந்து தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

    12:38 (IST)16 Sep 2020

    பெண்களுக்கு எதிரான குற்றத்தில் தண்டனைகள் அதிகரிப்பு!

    வரதட்சணை கொடுமை சட்டம் 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்வு . பேரவை விதி 110ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு . பாலியல் தொழிலுக்காக பெண்களை விற்பது, வாங்குவது தொடர்பான குற்றத்திற்கு அதிகபட்ச ஆயுள் தண்டனை. மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு . பெண்களை பின்தொடரும் குற்றத்திற்கு 5 ஆண்டில் இருந்து 7 ஆண்டுகளாக உயர்வு. 

    12:36 (IST)16 Sep 2020

    18 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கு!

    சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம்  உரிமை மீறல் குழு 2வது முறையாக அனுப்பிய நோட்டீஸ் மீது நாளை விசாரணை. ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கை நாளை விசாரிக்கிறது உயர் நீதிமன்றம். திமுக தரப்பு முறையீட்டை ஏற்று நீதிபதி ரவிச்சந்திரபாபு ஒப்புதல்.

    12:35 (IST)16 Sep 2020

    ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம்!

    புதிய கல்வி கொள்கை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் .  குலக்கல்வி திட்டத்தின் மறு உருவம் புதிய கல்விக் கொள்கை . அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க வேண்டும் .  தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டும் . என்று பேரவையில் ஸ்டாலின் தெரிவித்தார். 

    10:54 (IST)16 Sep 2020

    சி.பி.ராதாகிருஷ்ணன்-க்கு கொரோனா!

    பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக ஃபேஸ்புக்கில் தகவல். 

    10:23 (IST)16 Sep 2020

    அமைச்சர் ஜெயக்குமார் சாடல்!

    பிக்பாஸ் போல கொரோனா தொற்றுக்கு பயந்து 100 நாட்கள் உள்ளே இருந்தார் கமல்ஹாசன்  என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அறிக்கை வழியே மட்டுமே பேசும் கமல், அடுத்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தயாராகி விட்டதாகவும் ஜெயக்குமார் சாடியுள்ளார். 

    09:39 (IST)16 Sep 2020

    அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் சட்டமுன்வடிவு!

    நிர்வாக வசதிக்காக அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் சட்டமுன்வடிவு பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. 

    09:38 (IST)16 Sep 2020

    ராமசாமி படையாட்சியாரின் 103-வது பிறந்தநாள்!

    சுதந்திர போராட்ட வீரர் ராமசாமி படையாட்சியாரின் 103-வது பிறந்தநாள் இன்று .  தமிழக அரசு சார்பில் அவரது உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை!

    09:18 (IST)16 Sep 2020

    சட்டப்பேரவையில் இன்று மசோதா தாக்கல்!

    ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை அரசுடைமையாக்கியதற்கான சட்ட மசோதா இன்று தாக்கல் . ஏற்கனவே அவசர சட்டம் மூலம் அரசுடைமையாக்கப்பட்ட நிலையில், சட்டப்பேரவையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. 

    09:18 (IST)16 Sep 2020

    அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு!

    புதிய கல்விக்கொள்கை அடிப்படையில் ஆசிரியர்களின் திறனை மேம்படுத்த புதிய தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு வகுக்கப்படும்  என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல். 

    09:16 (IST)16 Sep 2020

    துணை பட்ஜெட் தாக்கல்!

    மிழக சட்டப்பேரவையில் நடப்பு நிதியாண்டின் கூடுதல் செலவிற்கான துணை பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்கிறார்

    08:35 (IST)16 Sep 2020

    ஆன்லைன் வழியில் தேர்வு!

    பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு அட்டவணை வெளியீடு .செப்.24 முதல் 29ஆம் தேதி வரை ஆன்லைன் வழியில், ஒரு மணி நேரம் தேர்வு நடைபெறுகிறது

    Tamil News : அண்ணா அறிவாலயத்தில் திமுக முப்பெரும் விழா நேற்று நடைப்பெற்றது. புதிய பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் முப்பெரும் விழா நடைபெற்றது.

    ஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளையும் சீரழிக்கிறது. சென்னை உயர் நீதிமன்றம் கருத்து. பெற்றோரை கவனிக்காத பிள்ளைகள் மீது புகார் அளித்தால் 6 வார காலத்திற்குள் புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் வருவாய் கோட்டாட்சியர்களுக்கு சென்னை

    உயர்நீதிமன்றம் உத்தரவு.

    நேற்றைய தமிழக செய்திகளை வாசிக்க

    மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா. சட்ட மசோதாவை பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தாக்கல் செய்தார்.

    Tamil Nadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment