Advertisment

Tamil news today : டெல்லியில் சிறப்பு சட்டமன்ற கூட்டம் இன்று கூடுகிறது

Tamil Nadu News, Tamil News Petrol price Today - 25 august 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil news today : டெல்லியில் சிறப்பு சட்டமன்ற கூட்டம் இன்று கூடுகிறது

பெட்ரோல் – டீசல் விலை

Advertisment

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் லிட்டர் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பில்கிஸ்பானு வழக்கு

பில்கிஸ்பானு வழக்கில் குற்றவாளிகளான 11 பேர் கடந்த ஆகஸ்டு 15ம் தேதி விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த தீர்ப்பு அநீதியின் உச்சம் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக பில்கிஸ் பானுவின் தரப்பில் உச்சநீதிமன்றம் மேல்முறையீடு செய்துள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றம் இன்று விசாரணை செய்ய உள்ளது.

ஸ்ரீமதி மரண பிரேத பரிசோதனை அறிக்கை: வழக்கறிஞர் குற்றச்சாட்டு

ஸ்ரீமதியின் முதல் மற்றும் இரண்டாவது பிரேத பரிசோதனை முடிவுகளில் பல வேறுபாடுகள் உள்ளன கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் வழக்கறிஞர் காசி விசுவநாதன் பரபரப்பு குற்றச்சாட்டு. முதல் பிரேத பரிசோதனை முடிவுகளை விட, 2வது பிரேத பரிசோதனையில் ஸ்ரீமதியின் உடலில் அதிக காயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது எலும்பு முறிவுகள் அதிகமாக இருப்பதாக 2வது பிரேத பரிசோதனை முடிவுகளில் தெரியவந்துள்ளது என்று வழக்கறிஞர் காசி விசுவநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:54 (IST) 25 Aug 2022
    கனல் கண்ணனின் ஜாமின் மனு தள்ளுபடி

    பெரியார் சிலை குறித்து சர்ச்சையாக பேசிய வழக்கில் திரைப்பட சண்டை கலைஞர் கனல் கண்ணனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு



  • 19:01 (IST) 25 Aug 2022
    பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடு இந்தியா - பிரதமர் மோடி

    பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடு இந்தியா. இந்தியா இன்று உலகில் வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக திகழ்கிறது. வளர்ச்சி அடைந்த தேசத்தை கட்டமைக்கும் நமது கனவுகள், எதிர்ப்பார்ப்புகளை நினைவாக்குவதில் தொழிலாளர் சக்தி மிக முக்கிய பங்கு வகிக்கிறது

    நாட்டில் நிலவும் அடிமைத்தனம் மற்றும் அடிமைத்தன மனநிலையை முடிவுக்கு கொண்டு வர பல ஆண்டுகளாக அரசு ஏராளமான முயற்சிகளை எடுத்து வருகிறது என பிரதமர் மோடி குறியுள்ளார்.



  • 18:43 (IST) 25 Aug 2022
    காவலர் சீருடையில் நகரில் வலம் வந்த காங்கிரஸ் தலைவரிடம் விசாரணை

    திண்டுக்கல் மாநகர காங்கிரஸ் தலைவர் மணிகண்டன் காவல்துறை ஆய்வாளர் சீருடை அணிந்து நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்த நிலையில், அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்



  • 18:39 (IST) 25 Aug 2022
    கருணாநிதியின் ரத்தத்தால் திமுக கொடி - ஸ்டாலின்

    கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கருணாநிதியின் ரத்தத்தால் உருவாக்கப்பட்டது தான் திமுக கொடி என்பது வரலாறு என்று கூறியுள்ளார்



  • 18:38 (IST) 25 Aug 2022
    அமைச்சர் கார் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்ட 2 பெண்களுக்கு ஜாமின்

    நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய வழக்கு பாஜகவை சேர்ந்த 3 பெண்கள் கைதான நிலையில் 2 பேருக்கு ஜாமின் வழங்கியது மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 18:37 (IST) 25 Aug 2022
    அமைச்சர் கார் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்ட 2 பெண்களுக்கு ஜாமின்

    நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய வழக்கு பாஜகவை சேர்ந்த 3 பெண்கள் கைதான நிலையில் 2 பேருக்கு ஜாமின் வழங்கியது மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 18:34 (IST) 25 Aug 2022
    பாஜக பிரமுகர் சோனாலி போகட் மரணம் : கொலை வழக்காக பதிவு

    பாஜக பிரமுகர் சோனாலி போகட் மரணம் தொடர்பாக கோவா போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்



  • 18:33 (IST) 25 Aug 2022
    பாஜக பிரமுகர் சோனாலி போகட் மரணம் : கொலை வழக்காக பதிவு

    பாஜக பிரமுகர் சோனாலி போகட் மரணம் தொடர்பாக கோவா போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்



  • 18:24 (IST) 25 Aug 2022
    செப்டம்பர் 1 முதல் சுங்கக்கட்டணம் உயர்வு

    தமிழகத்தில் உள்ள 28 சுங்க சாவடிகளில், செப்டம்பர் 1ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. கார், வேன், ஜீப்களுக்கு 5 ரூபாயும், டிரக், பஸ், பல அச்சுகள் கொண்ட வாகனங்களுக்கு 150 ரூபாய் வரையும் உயர்த்தப்படுகிற்து. திருச்சி சமயபுரம், திருப்பராய்த்துறை, பொன்னம்பலப்பட்டி, கரூர் மணவாசி, வேலஞ்செட்டியூர், தஞ்சை வாழவந்தான் கோட்டை சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 50 சுங்கச்சாவடிகளில் ஏற்கனவே 22-ல் ஏப்ரல் மாதம் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது



  • 18:22 (IST) 25 Aug 2022
    சென்னையில் ஒரே நாளில் 34 கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கம் - போலீஸ் நடவடிக்கை

    சென்னையில் ஒரே நாளில் 34 கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகளை முடக்கி போலீஸ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. ஒரு கிலோ மற்றும் அதற்கு மேற்பட்ட போதைப் பொருட்களுடன் பிடிபட்டவர்களின் வங்கி கணக்குகளை முடக்கும் நடவடிக்கை தொடரும் என காவல் ஆணையர் சங்கர் இவால் எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.



  • 18:06 (IST) 25 Aug 2022
    கல்லூரி பேராசிரியை பணியிடை நீக்கம்

    மாணவர்களிடம் சாதியைப் பற்றி பேசிய பச்சையப்பன் கல்லூரி பேராசிரியை அனுராதா மீது புகார் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், விசாரணையில் சாதியைப்பற்றி பேராசிரியை பேசியது உறுதியானதால் 2 மாதங்கள் பணியிடை நீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.



  • 18:04 (IST) 25 Aug 2022
    கஞ்சா வழக்கில் கைதான 504 குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கம்

    சென்னையில் கடந்த 2021ம் ஆண்டு முதல் கைதான கஞ்சா வழக்கில் கைதாகியுள்ள 908 பேரில் இதுவரை 504 குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.



  • 18:03 (IST) 25 Aug 2022
    கனியாமூர் பள்ளி கலவரம் - மேலும் 2 பேர் கைது

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் பள்ளி சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும், போலீஸ் வாகனத்திற்கு தீ வைத்ததாகவும் கூறி மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டள்ளனர்.

    இதன் மூலம் பள்ளி கலவரத்தில் இதுவரை 357 பேரை கைது செய்து சிறப்பு புலனாய்வு குழு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.



  • 18:01 (IST) 25 Aug 2022
    கனியாமூர் பள்ளி கலவரம் - மேலும் 2 பேர் கைது

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் பள்ளி சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும், போலீஸ் வாகனத்திற்கு தீ வைத்ததாகவும் கூறி மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டள்ளனர்.

    இதன் மூலம் பள்ளி கலவரத்தில் இதுவரை 357 பேரை கைது செய்து சிறப்பு புலனாய்வு குழு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.



  • 17:52 (IST) 25 Aug 2022
    கனியாமூர் பள்ளி கலவரம் - மேலும் 2 பேர் கைது

    கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் பள்ளி கலவர வழக்கில், பள்ளி சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும், போலீஸ் வாகனத்திற்கு தீ வைத்ததாகவும் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளி கலவரத்தில் இதுவரை 357 பேரை கைது செய்து சிறப்பு புலனாய்வு குழு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளது.



  • 17:33 (IST) 25 Aug 2022
    சென்னை பச்சையப்பன் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் பேராசிரியை அனுராதா சஸ்பெண்ட்

    சென்னை பச்சையப்பன் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் பேராசிரியை அனுராதா, அண்மையில் மாணவர்களிடம் சாதியை குறிப்பிட்டு பேசிய உரையாடல் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பேராசிரியை அனுராதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.



  • 17:31 (IST) 25 Aug 2022
    மலேசியா சென்றுகொண்டிருந்த விமானம் அவசரமாக சென்னையில் அவசரமாக தரையிறக்கம்

    துருக்கியில் இருந்து மலேசியாவிற்கு 326 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த விமானம் சென்னையில் அவசர தரையிறக்கப்பட்டது. விமானத்தில், ஒரு பயணிக்கு பிரசவ வலி ஏற்படவே மருத்துவ அவசரத்திற்காக விமானம் தரையிறக்கப்படவே, மருத்துவக்குழு உள்ளே சென்று பரிசோதித்த போது குழந்தை இறந்தே பிறந்துள்ளது.

    அப்பெண் மற்றும் உடன் வந்த ஒருவருக்கு அவசர கால மருத்துவ விசா வழங்கப்பட்டு, அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும், இறந்த சிசுவை விமானத்தில் இருந்து கீழே இறக்க அதிகாரிகள் மறுப்பு; இறந்த சிசு மற்றும் மற்ற பயணிகளுடன் விமானம் மலேசியா செல்ல உள்ளது.



  • 17:27 (IST) 25 Aug 2022
    அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட விவகாரத்தில் ஓபிஎஸ் மீது வழக்குப்பதிவு

    அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆவணங்களை சூறையாடியதாக சி.வி.சண்முகம் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



  • 17:04 (IST) 25 Aug 2022
    அதிமுக பொதுக்குழு வழக்கு - தீர்ப்பு தள்ளிவைத்தது ஐகோர்ட்

    அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல் முறையீடு வழக்கில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், எழுத்துப்பூர்வமான வாதங்களை நாளை தாக்கல் செய்ய ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 16:25 (IST) 25 Aug 2022
    தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை - வானிலை ஆய்வு மையம்

    சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 15:48 (IST) 25 Aug 2022
    அ.தி.மு.க அலுவலக வழக்கு – சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றம்

    அதிமுக அலுவலக கலவரம், ஆவணங்கள் சூறை தொடர்பான வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. ராயபேட்டை காவல் நிலையத்தில் பதிவான 4 வழக்குகளையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    இதனிடையே, ஓபிஎஸ்-க்கு எதிரான புகாரை சிபிஐ அல்லது வேறு அமைப்பிற்கு மாற்றக் கோரிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வழக்கு செப்டம்பர் 19க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கமால் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக காவல்துறை செயல்படுகிறது என சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்



  • 15:39 (IST) 25 Aug 2022
    ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே பொதுக்குழுவை கூட்ட முடியும் - ஓபிஎஸ் தரப்பு

    கட்சி விதிகளின்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே பொதுக்குழுவை கூட்ட முடியும். ஜூலை 11ம் தேதி கூட்டத்துக்கு அனுப்பிய நோட்டீஸ் செல்லாது என ஓபிஎஸ் தரப்பு வாதங்களை முன்வைத்து வருகிறது



  • 15:04 (IST) 25 Aug 2022
    சென்னை தனியார் வங்கிக்கொள்ளை - போலீஸ் காவலுக்கு அனுமதி

    சென்னை, அரும்பாக்கம் தனியார் வங்கிக் கொள்ளையர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 3 பேரையும் ஒருநாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது



  • 14:53 (IST) 25 Aug 2022
    தொண்டர்களை பார்த்ததில் விஜயகாந்துக்கு மகிழ்ச்சி - பிரேமலதா

    தனது 70வது பிறந்தநாளில், தொண்டர்களை பார்த்ததில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு மகிழ்ச்சி எனபிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்



  • 14:37 (IST) 25 Aug 2022
    சேலத்தில் ஒருவருக்கு கருப்பு பூஞ்சை நோய் தொற்று

    சேலம், ஓமலூர் பகுதியில் ஒருவருக்கு கருப்பு பூஞ்சை நோய் தொற்று உறுதி செய்யப்ப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்



  • 14:24 (IST) 25 Aug 2022
    அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு – பிற்பகலுக்கு ஒத்திவைப்பு

    அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட இ.பி.எஸ் மனு மீதான விசாரணையை பிற்பகல் 2.15 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது



  • 14:00 (IST) 25 Aug 2022
    அடிப்படை உறுப்பினர்களே முக்கியம் – ஓ.பி.எஸ் தரப்பு வாதம்

    அடிப்படை உறுப்பினர்களால் பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் ஒரே கட்சி அதிமுக தான். அடிப்படை உறுப்பினர்களை விட பொதுக்குழு உறுப்பினர்களே மேலானவர்கள் என்பதை ஏற்க முடியாது என அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓபிஎஸ் தரப்பு கூறியுள்ளது



  • 13:51 (IST) 25 Aug 2022
    பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு; பா.ம.க கருத்து கேட்பு

    காஞ்சிபுரம், பரந்தூரில் விமான நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், காரணங்கள் குறித்து பொதுமக்களிடம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டறிந்தார்



  • 13:36 (IST) 25 Aug 2022
    தனி நீதிபதியின் உத்தரவு கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு – இ.பி.எஸ் தரப்பு வாதம்

    கூட்டம் நடத்த கூடாது என ஓ.பி.எஸ் வழக்கு தொடர்ந்த நிலையில், இருவரும் இணைந்து கூட்ட வேண்டும் என உத்தரவிட்டது விபரீதமானது, தனி நீதிபதியின் உத்தரவு கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது என இ.பி.எஸ் தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது



  • 13:19 (IST) 25 Aug 2022
    தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 13:15 (IST) 25 Aug 2022
    தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 13:05 (IST) 25 Aug 2022
    ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரனின் முதல்வர் பதவிக்கு சிக்கல்

    சுரங்க முறைகேடு வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் பதவியை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் ஆளுநரிடம் பரிந்துரைத்துள்ளதாக தகவல்

    பரிந்துரையின் மீது ஆளுநர் 48 மணி நேரத்தில் முடிவெடுப்பார் எனவும் எதிர்பார்ப்பு



  • 12:27 (IST) 25 Aug 2022
    அருப்புக்கோட்டை பாலியல் வழக்கு - 2 பேர் சரண்

    அருப்புக்கோட்டையில் பெண்ணை காரில் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம்

    தலைமறைவாக இருந்த விஜய் மற்றும் பிரபாகரன் ஆகியோர் விருதுநகர் நீதிமன்றத்தில் சரண்



  • 12:11 (IST) 25 Aug 2022
    பில்கிஸ் பானு வழக்கு - குஜராத் அரசு பதிலளிக்க உத்தரவு

    கருணை அடிப்படையிலான விடுதலைக்கு 11 குற்றவாளிகளும் தகுதியுடையவர்களா?

    பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் பதிலளிக்க குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

    11 குற்றவாளிகளை கருணை அடிப்படையில் மாநில அரசு விடுதலை செய்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்த வழக்கில் உத்தரவு



  • 12:08 (IST) 25 Aug 2022
    பொதுக்குழு வழக்கு - ஈபிஎஸ் தரப்பு வாதம்

    2,539 பொதுக்குழு உறுப்பினர்களும் ஒற்றை தலைமைக்கு ஆதரவு தெரிவித்து பிரமாண பத்திரம் அளித்துள்ளனர் - ஈபிஎஸ் தரப்பு

    பொதுக்குழு முடிவே இறுதியானது. இதை ஏற்றுக் கொள்பவர்களே அடிப்படை உறுப்பினர்களாக இருக்க முடியும். ஒன்றரை கோடி தொண்டர்களுக்காக அல்லாமல், ஓபிஎஸ் நலனுக்காக தனிநீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

    தனி நீதிபதியின் தீர்ப்பு யூகத்தின் அடிப்படையிலானது என ஈபிஎஸ் தரப்பு வாதம்



  • 11:23 (IST) 25 Aug 2022
    செம்.15 முதல் காலை சிற்றுண்டி திட்டம் தொடக்கம்?

    அரசு பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்



  • 11:21 (IST) 25 Aug 2022
    பெகாசஸ் விவகாரம் - அறிக்கை தாக்கல்

    பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் நிபுணர் குழு அறிக்கை தாக்கல்

    அறிக்கையை பொதுவெளியில் வெளியிடாமல் ரகசியமாக வைக்க வேண்டுமென குழு பரிந்துரை

    சைபர் பாதுகாப்பை மேம்படுத்தும் முன், தனி நபர் பாதுகாப்பில் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளவும் பரிந்துரை



  • 11:20 (IST) 25 Aug 2022
    அதிமுக பொதுக்குழு விவகாரம் - ஈபிஎஸ் மனு மீது விசாரணை தொடக்கம்

    அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடங்கியது.



  • 10:58 (IST) 25 Aug 2022
    திருப்பூரில் தொழில் முனைவோர் மண்டல மாநாடு

    திருப்பூரில் தொழில் முனைவோர் மண்டல மாநாடு - முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொழில்முனைவோருக்கு கடனுதவிகளை வழங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்.



  • 10:08 (IST) 25 Aug 2022
    காலணி வீசிய விவகாரம்;விசாரணை

    மதுரை விமான நிலையத்தில் நிதி அமைச்சர் கார் மீது காலணி வீசிய விவகாரம் .பாஜக முன்னாள் மதுரை மாநகர தலைவர் சரவணனின் உதவியாளர் சுந்தரிடம் போலீசார் விசாரணை



  • 09:28 (IST) 25 Aug 2022
    விஜயகாந்த் பிறந்தநாள் இன்று : ஸ்டாலின் வாழ்த்து

    தேமுதிக தலைவருமான விஜயகாந்த் அவர்களுக்கு எழுபதாவது வயது இன்று. அவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உடல் நலம் பெற்று - துடிப்பான மனிதராக அவர் வலம் வர வேண்டும் என்பதே எனது ஆசை. நலம் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்- ஸ்டாலின் ட்வீட்



  • 08:53 (IST) 25 Aug 2022
    நிதி நிறுவன கொள்ளையர்களிடம் விசாரணை

    சென்னை, வடபழனி நிதி நிறுவனத்தில் ரூ. 30 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் . கைதான 5 பேரையும் காவலில் எடுத்து போலீசார் விசாரணை



  • 08:47 (IST) 25 Aug 2022
    கடத்தப்பட்ட நிதி நிறுவன அதிபர் சடலமாக மீட்பு

    நாமக்கல்லில் கடந்த 22ம் தேதி தனியார் நிதி நிறுவன அதிபர் கடத்தப்பட்ட விவகாரம் , சேலம், வைகுந்தம் ஏரிக்கரையில் கெளதம் சடலமாக மீட்பு - போலீசார் விசாரணை



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment