Advertisment

Tamil News Today : 7 பேர் விடுதலை குறித்து பேச திமுகவிற்கு தார்மீக உரிமை இல்லை - முதல்வர் பழனிசாமி

Tamil News Today : ''திட்டமிட்டபடி வேல்யாத்திரை நடைபெறும்'' - வி.பி.துரைசாமி பேட்டி.

author-image
WebDesk
New Update
Tamil News Today : 7 பேர் விடுதலை குறித்து பேச திமுகவிற்கு தார்மீக உரிமை இல்லை - முதல்வர் பழனிசாமி

Tamil News Today bjp vel yatra murugan : அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விடுவதாக மிரட்டல் கடிதம்.அண்ணா பல்கலை.க்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தை திரும்பப் பெற கோரி மிரட்டல்.வீரப்பன் என்ற பெயரில் சூரப்பாவுக்கு வந்த கடிதத்தை கைப்பற்றி கோட்டூர்புரம் போலீசார் விசாரணை.

Advertisment

தங்களுடைய கடவுளை வழிபடுவது அடிப்படை உரிமை; அதன் அடிப்படையில் திருத்தணிக்கு செல்கிறேன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேட்டி.

அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆளும் குடியரசுக் கட்சியை சேர்ந்த அதிபர் டிரம்புக்கும், ஜனநாயக கட்சியின் ஜோ பைடனுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. வெற்றி பெற 270 இடங்கள் தேவைப்படும் நிலையில், ஜோ பைடன் 264 இடங்களில் முன்னிலையில் உள்ளார். இந்நிலையில், தேர்தலில் சட்டப்பூர்வமாக பதிவான வாக்குகளை எண்ணினால், தான் எளிதில் வெற்றி பெற்றுவிடுவேன் என்று டிரம்ப் தெரிவித்து உள்ளார்.

கோவை சென்ற முதலமைச்சர் பழனிசாமிக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog

Tamil News Today: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:52 (IST)06 Nov 2020

    நவ. 7 என் பிறந்த நாள் மட்டுமல்ல; என் தந்தையின் நினைவு நாளும் கூட - கமல்ஹாசன்

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “நவம்பர் 7 என் பிறந்த நாள் மட்டுமல்ல; என்னுள் நேர்மையையும் துனிச்சலையும் ஊட்டி வளர்த்த என் தந்தையின் நினைவு நாளும் கூட, ஊரே என்னைக் கொண்டாடிக் கொண்டிருக்க நானோ உள்ளூர தந்தையின் நினைவுகளில் ஆழ்ந்திருப்பேன்.” என்று தெரிவித்துள்ளார்.

    22:06 (IST)06 Nov 2020

    7 பேர் விடுதலை குறித்து பேச திமுகவிற்கு தார்மீக உரிமை இல்லை - முதல்வர் பழனிசாமி

    7 பேர் விடுதலை குறித்து பேச திமுகவிற்கு தார்மீக உரிமை இல்லை. பேரறிவாளனுக்கு பரோல் எங்கள் ஆட்சியில் வழங்கப்பட்டது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    21:24 (IST)06 Nov 2020

    தடையை மீறி பாஜக வேல் யாத்திரை; எல்.முருகன் உள்பட 507 பேர் மீது வழக்குப்பதிவு

    காவல்துறை தடையை மீறி வேல் யாத்திரை சென்றதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்பட 507 பேர் மீது திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    20:47 (IST)06 Nov 2020

    கமல்ஹாசன், சரத்குமார் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    சென்னையில் நடிகர்கள் கமல்ஹாசன், சரத்குமார் ஆகியோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துப் பேசிய நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    20:23 (IST)06 Nov 2020

    அமெரிக்க அதிபர் தேர்தல்: பென்சில்வேனியாவில் ஜோ பிடென் முன்னிலை

    பென்சில்வேனியா மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஜோ பிடென் முன்னிலை பெற்று வருகிறார். அமெரிக்க அதிபர் தேர்தலில் இழுபறி நீடிக்கும் 4 மாகாணங்களில் 3-ல் ஜோ பிடென்ன் முன்னிலை பெற்று வருகிறார்.

    19:04 (IST)06 Nov 2020

    கட்சியில் இருந்து விலகிவிட்டேன் - நடிகர் விஜயின் தாய் ஷோபா பேட்டி

    நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் கட்சியாக பதிவு செய்ய விண்ணப்பித்ததைத் தொடர்ந்து, அதற்கு நடிகர் விஜய் எதிர்ப்பு தெரிவித்தார். கட்சிக்கும் எனக்கும் தொடர்பு இல்லை. எனது பெயரையும் படத்தையும் பயன்படுத்தினால், நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கை வெளியிட்டார். இந்நிலையில், விஜய் பெயரில் பதிவு செய்யப்பட்ட கட்சியில் விஜயின் தாய் ஷோபா சந்திரசேகர் கட்சியில் இருந்து விலகிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

    18:32 (IST)06 Nov 2020

    கமல்ஹாசன் கூறும் மூன்றாவது அணி பற்றி தற்போது ஏதும் கூற முடியாது - பிரேமலதா

    செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், “கமல்ஹாசன் கூறும் மூன்றாவது அணி குறித்து தற்போது ஏதும் கூற முடியாது; தேர்தல் நேரத்தில்தான் அது குறித்து கருத்து தெரிவிக்க முடியும்.” என்று தெரிவித்துள்ளார்.

    17:45 (IST)06 Nov 2020

    ரூ.948 கோடியில் திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி உருவாக்கப்பட்டு வருகிறது - முதல்வர் பழனிசாமி

    திருப்பூரில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை ஆய்வு செய்த முதல்வர் பழனிசாமி, “அரசின் நடவடிக்கையால் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்துள்ளது. கனவுத் திட்டமான அத்திக்கடவு - அவினாசி திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ.948 கோடியில் திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி உருவாக்கப்பட்டு வருகிறது.” என்று கூறினார்.

    17:10 (IST)06 Nov 2020

    100 நாள் வேலை திட்டத்தில், அதிகாரிகள் பயனாளிகள் முறைகேட்டில் ஈடுபடுகின்றனர் - ஐகோர்ட்

    “100 நாள் வேலை திட்டத்தில், அதிகாரிகள் நிதி முறைகேட்டிலும், பயனாளிகள் வேலை செய்யாமல் முறைகேட்டிலும் ஈடுபடுகின்றனர்” என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இய்ந்ந்திரங்களை பயன்படுத்தி சில நிமிடங்களில் முடிக்க வேண்டிய வேலைகளை ஏன் மனிதர்கள் மூலம் செய்யப்படுகிறது. 100 நாள் வேலை திட்டத்தில், அதிகாரிகள் நிதி முறைகேட்டிலும், பயனாளிகள் வேலை செய்யாமல் முறைகேட்டிலும் ஈடுபடுகின்றனர்” என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    16:24 (IST)06 Nov 2020

    நடிகர் விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி!

    விஜய் மக்கள் இயக்கத்திற்கு அங்கீகாரம் கிடைக்கும் என்ற நோக்கில்தான் கட்சி ஆரம்பித்துள்ளதாகவும் விஜய் பெயரில் கட்சி தொடங்கவில்லை என்றும் நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டியளித்துள்ளார்.

    15:24 (IST)06 Nov 2020

    அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு சட்டம் அரசிதழில் வெளியீடு

    மருத்துவ படிப்பில் 7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதை அரசிதழில் வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு.

    15:10 (IST)06 Nov 2020

    கர்நாடகாவில் பட்டாசு வெடிக்கத் தடை

    பெருகி வரும் கொரோனா காரணமாகக் கர்நாடகாவில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

    14:36 (IST)06 Nov 2020

    வேல் யாத்திரை : தடையை மீறியதால் எல்.முருகன் கைது

    தடையை மீறி திருத்தணியில் வேல் யாத்திரை நடத்த முயன்ற எல்.முருகன் உள்ளிட்ட பாஜக-வினர் கைது செய்யப்பட்டனர்.

    14:19 (IST)06 Nov 2020

    நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த இபிஎஸ்

    ரூ.520 கோடி மதிப்பிலான நலத் திட்டப் பணிகளை நீலகிரி மாவட்டம் உதகையில் தொடங்கி வைத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டார் இபிஎஸ். இதனைத் தொடர்ந்து, மற்ற மாநிலங்களை விடத் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    13:26 (IST)06 Nov 2020

    பாஜக தலைவர் எல்.முருகன்!

    திருத்தணி கோயிலுக்கு சென்றடைந்தார் பாஜக தலைவர் எல்.முருகன். திருத்தணி கோயிலுக்கு வேலுடன் சென்று சாமி தரிசனம் செய்தார் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன். 

    13:25 (IST)06 Nov 2020

    7.5% இடஒதுக்கீடு.!

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே 7.5% இடஒதுக்கீடு. அரசு உதவி பெறும் பள்ளிகள் என்றாலும் அவை தனியார் பள்ளிகளே அவை இதில் பொருந்தாது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

    13:24 (IST)06 Nov 2020

    வேல் யாத்திரை போராட்டம்!

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்கக்கோரிய பாஜக-வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பதற்றம் நிலவி வருகிறது. 

    13:23 (IST)06 Nov 2020

    வானிலை மையம் அப்டேட்!

    குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இடி மின்னலுடன் கன மழைக்கு வாய்ப்பு .திண்டுக்கல், தென்காசி, ராமநாதபுரம், திருப்பூர், விருதுநகர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

    12:32 (IST)06 Nov 2020

    குற்றால அருவி!

    குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரிப்பு. 

    12:31 (IST)06 Nov 2020

    சேலம் மாநகராட்சி எச்சரிக்கை!!

    கொரோனா விதிகளை மீறிய கடைகளுக்கு அபராதம். சேலத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத 20 ஜவுளி கடைகளுக்கு தலா ரூ.5,000 அபராதம் விதிப்பு; விதிகளை மீறினால் கடைகளுக்கு சீல்! 

    12:28 (IST)06 Nov 2020

    ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்திப்பு!

    டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்திப்பு நடைப்பெற்று வருகிறது. இடஒதுக்கீடு மற்றும் ராஜீவ் காந்த் கொலை வழக்கு குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல். 

    12:27 (IST)06 Nov 2020

    விஜயகாந்த் அறிவிப்பு!

    தேமுதிகவின் நிலைப்பாட்டை ஜனவரி முதல் வாரத்தில், தேமுதிக செயற்குழு கூட்டத்தில் விஜயகாந்த் அறிவிப்பார் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். பிரச்சாரத்தில்,விஜயகாந்தை பார்க்கலாம் என்று அவர் கூறியுள்ளார். 

    12:25 (IST)06 Nov 2020

    பேரறிவாளனுக்கு பரோல்!

    ராஜீவ் கொலை வழக்கில் கைதான பேரறிவாளனுக்கு வரும் நவம்பர் 23 ஆம் தேதி வரை  பரோல் நீட்டிப்பு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. 

    11:53 (IST)06 Nov 2020

    முருகனுக்கு அனுமதி!

    நசரத்பேட்டையை சென்றடைந்தது பாஜகவின் வேல் யாத்திரை. திருத்தணி நோக்க செல்ல முருகனுக்கு காவல் துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். அதே நேரம், அவருடன் மற்ற பாஜக வாகங்கள் மற்றும் தொண்டர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

    11:51 (IST)06 Nov 2020

    பட்டாசு வெடிக்க தடை!

    டெல்லியில் அனைத்து வகையான பட்டாசுகளுக்கும் நாளை முதல் நவம்பர் 30 வரை தடை விதிப்பு. ஏற்கனமே, மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    11:30 (IST)06 Nov 2020

    உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

    கிராம, ஊரக பகுதிகளுக்கு மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் சென்று வர போக்குவரத்து வசதி உள்ளதா? தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

    11:02 (IST)06 Nov 2020

    முருகன் தடுத்து நிறுத்தம்!

    பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், எல். முருகன் காலை, தடையை மீறி வேல் யாத்திரைக்காக  திருத்தணி புறப்பட்டு சென்றார். இந்நிலையில், அவர், போலீசாரால் பாதி வழியில் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. 

    11:00 (IST)06 Nov 2020

    முதலமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம்!

    நீலகிரி மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டுள்ளார். 123 புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டிய பின்பு, மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகளை வழங்குகிறார்.

    10:08 (IST)06 Nov 2020

    எல்.முருகன், திருத்தணி புறப்பட்டார்!

    தடையை மீறி வேல் யாத்திரை வேல் யாத்திரைக்காக, பாஜக தமிழக தலைவர் எல்.முருகன், திருத்தணி புறப்பட்டார். 

    10:06 (IST)06 Nov 2020

    முதல்வர் பழனிசாமி அடிக்கல்!

    நீலகிரி மாவட்டத்தில் ரூ.131.57 கோடி மதிப்பிலான 123 புதிய திட்ட பணிகளுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். 

    09:19 (IST)06 Nov 2020

    பாஜக வேல் யாத்திரை!

    கடவுள் முருகனின் துணைக்கொண்டு திருத்தணியில் வேல் யாத்திரையை தொடங்குவதாக தமிழக பாஜக தலைவர் எல். முருகன் அறிவிப்பு. தடையை மீறி பாஜக வேல் யாத்திரையை நடத்துவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    08:58 (IST)06 Nov 2020

    வேல் யாத்திரை -பாஜக நிர்வாகிகள் கைது!

    தடையை மீறி வேல் யாத்திரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால, விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், பாஜக நிர்வாகிகள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

    08:57 (IST)06 Nov 2020

    திருத்தணி முருகன் கோவில்!

    திருத்தணி முருகன் கோவில் வளாகத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் காவலர்கள் தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். தடையை மீறி வேல் யாத்திரை நடைபெறும் என தமிழக பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளதால் போலீசாட் நடவடிக்கையை துரிதப்படுத்தி உள்ளனர். 

    Tamil News Today bjp vel yatra murugan : டாஸ்மாக் பணியாளர்களுக்கு 10 % போனஸ் என் தமிழக அரசு அறிவிப்பு .தமிழக அரசு தொடர்ந்த மூன்று அவதூறு வழக்குகளில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சம்மன்.டிசம்பர் 3-ம் தேதி ஆஜராக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

    நேற்றைய முக்கிய செய்திகள்

    ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி : டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி. முதல் தகுதிச் சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மும்பை அணி.

    நடிகர் விஜய் பெயரில் புதிய அரசியல் கட்சியை தேர்தல் ஆணையத்தில் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பதிவு செய்த நிலையில், அந்தக் கட்சிக்கும், தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என, நடிகர் விஜய் அதிரடியாக அறிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் தொடர்பாக எதிர்காலத்தில் தனது தந்தை மேற்கொள்ளும் நடவடிக்கைகள், தன்னை கட்டுப்படுத்தாது என்று கூறியுள்ளார்.

    Tamil Nadu Bjp
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment