Advertisment

News Highlights: தூத்துக்குடி, நெல்லையில் இன்று ராகுல்காந்தி சுற்றுப்பயணம்

Tamil News : இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி இந்தியா அபார வெற்றி.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
News Highlights: தூத்துக்குடி, நெல்லையில் இன்று ராகுல்காந்தி சுற்றுப்பயணம்

Tamil News Today : தமிழகத்தில் 2-வது கட்டமாக அவர் இன்று (பிப்.27) தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் ராகுல் காந்தி.

Advertisment

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் காலை 11 மணிக்கு தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்துக்கு வருகிறார்.

தொடர்ந்து காலை 11.30 மணிக்கு தூத்துக்குடி வஉசி கல்லூரி கூட்ட அரங்கில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர்களுடன் கலந்துரையாடுகிறார். இந்நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் சந்திரமோகன், இணைத் தலைவர் மகேந்திரன் ஆகியோர் தலைமை வகிக்கின்றனர்.

தொடர்ந்து மதியம் 1 மணி அளவில் தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலை அருகே பொதுமக்களிடையே ராகுல் காந்தி பேசுகிறார். அதன்பிறகு கடற்கரை சாலை வழியாக முத்தையாபுரத்தை அடுத்த கோவங்காடு விலக்கு பகுதியில் உப்பள தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகிறார்.

பின்னர் அங்கிருந்து முக்கானி, ஆத்தூர், சாகுபுரம், குரும்பூர் வழியாக ஆழ்வார்திருநகரிக்கு வருகிறார். அங்கு காமராஜர் சிலை அருகே பொதுமக்களிடம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கேட்டு பேசுகிறார். பின்னர் நாசரேத் வழியாக சாத்தான்குளத்துக்குச் செல்கிறார். அங்கு காமராஜர் சிலை அருகே பொதுமக்களிடம் உரையாற்றுகிறார்.

அதன்பிறகு திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சென்று அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மார்ச் 7ம் தேதி திமுக பொதுக்குழு நடைப்பெறவுள்ளது.

கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் ,பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னையில் விலை மாற்றம் இன்றி பெட்ரோல் லிட்டர் ரூ.92.90-க்கும், டீசல் ரூ.86.31-க்கும் இன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் 2ம் நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனால மிகக்குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளன்.

புதுச்சேரியில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமலுக்கு வருவதாக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். புதுச்சேரியில் அரசு கலைக்கப்படுவதாகவும் ,குடியரசுத்தலைவர் ஆட்சி அமல் என அரசிதழில் வெளியீடப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் ஆலோசனை நடத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சட்டபேரவை தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட வரும் 3-ம் தேதி முதல் விருப்ப மனு பெறப்படும் என்று அக்கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Live Blog

Latest Tamil News : அரசியல்- வானிலை- சமூகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த செய்திகளின் தொகுப்பாக இந்தத் தளம் அமையும்.



























Highlights

    20:14 (IST)26 Feb 2021

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமிழக பயணம்

    தமிழகத்தில் நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் பயணவிபரம் : 

    காலை 10.45 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் வரவேற்பு

    காலை 11.15 மணிக்கு தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் வழக்கறிஞர்களுடன் சந்திப்பு

    மதியம் 12.45 மணிக்கு குரூஸ் பெர்னாண்டஸ் சிலை சந்திப்பில் வரவேற்பு

    மதியம் 1.20 மணிக்கு ரோச் பூங்காவிற்கு அருகில் உள்ள கடற்கரையில்  உப்பள தொழிலாளர்களுடன் சந்திப்பு

    மதியம் 2.30 மணிக்கு தூத்துக்குடியில் உள்ள முக்கானியில் வரவேற்பு

    மதியம் 2.45 மணிக்கு தூத்துக்குடி குருன்பூரில் வரவேற்பு

    மாலை 3.20 மணிக்கு தூத்துக்குடியில் ஆழ்வார் திருநகரில் வரவேற்பு

    மாலை 4.00 மணிக்கு செயின்ட்ஜான்ஸ் கதீட்ரல் நாசரேத் 

    மாலை 5.00 மணிக்கு தூத்துக்குடி சாத்தான்குளத்தில் வரவேற்பு

    மாலை 6.15 மணிக்கு திருநெல்வேலி நாங்குநேரி டோல் பிளாசா அருகே பொதுக்கூட்டம்

    20:02 (IST)26 Feb 2021

    அதிமுக கூட்டணியில் இருந்து சமக விலகல்

    அதிமுக கூட்டணியில் இருந்து விலகி விட்டதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.

    18:57 (IST)26 Feb 2021

    10.5% உள்ஒதுக்கீடு ராமதாஸுக்கு கிடைத்த இடைக்கால வெற்றி - ஜி.கே.மணி

    10.5% உள்ஒதுக்கீடு ராமதாஸுக்கு கிடைத்த இடைக்கால வெற்றி முதலமைச்சர் பழனிசாமிக்கு மனமார்ந்த நன்றி என தெரிவித்துள்ள பாமக தலைவர் ஜி.கே.மணி கூட்டணி குறித்து நாளை ராமதாஸ் அறிவிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

    18:54 (IST)26 Feb 2021

    கிரிக்கெட் வீரர் யூசப் பதான் ஓய்வு

    இந்திய கிரிக்கெட் வீரர் யூசப் பதான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய அணிக்காக 57 ஒருநாள் போட்டிகளிலும், 22 டி20 போட்டிகளிலும், 174 ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

    18:51 (IST)26 Feb 2021

    சினிமாவில் 11 ஆண்டுகள் நிறைவு செய்த சமந்தா

    சினிமாவில் 11 ஆண்டுகள் நிறைவு செய்த சமந்தா இயக்குநர் கெளதம் மேனனுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான விண்னைத்தாண்டி வருவாயா தமிழ் படத்தில் 2-வது நாயகியாக நடித்த சமந்தா, தெலுங்கில் நாயகியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

    18:02 (IST)26 Feb 2021

    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், கருத்து

    கா.பெ ரணசிங்கம் படத்திற்காக விருது பெற்ற நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இந்த படம் குறித்து கூறுகையில், இந்த "பாதிக்கப்பட்டவர்களின் உணர்ச்சிகளை உள்வாங்கி நடித்தேன் என தெரிவித்துள்ளார். 

    17:26 (IST)26 Feb 2021

    தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு

    17:14 (IST)26 Feb 2021

    கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5% உள் ஒதுக்கீடு

    கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5% உள் ஒதுக்கீடு 6 மாதங்களில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்படும் என்றும் அப்போது இட ஒதுக்கீடு மாற்றி அமைக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

    16:06 (IST)26 Feb 2021

    எம்.பி.சி பிரிவில் வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுகீடு; சீர்மரபினருக்கு 7% மசோதா நிறைவேற்றம்

    மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20% இடஒதுக்கீடு 3 ஆக பிரித்து உள் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. 

    மிகவும் பிற்படுத்தப்பட்ட தொகுப்பில் உள்ள வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்க இந்த சட்டம் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. சீர்மரபினருக்கு 7 சதவீதம் உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய பிரிவினருக்கு 2.5% ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    15:59 (IST)26 Feb 2021

    வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம் 

    வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு மசோதா இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. கல்வி வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்க இந்த சட்டம் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

    15:52 (IST)26 Feb 2021

    வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு: சட்டமசோதா சட்டப்பேரவையில் தாக்கல்

    மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தொகுப்பில் உள்ள வன்னியர்களூக்கு உள் இடஒதுக்கீடு தொடர்பான மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது.

    15:36 (IST)26 Feb 2021

    உலக வங்கியின் விதிகளுக்கு உட்பட்டே இ-டெண்டர் முறை அமல்படுத்தப்படுகிறது - முதல்வர் பழனிசாமி

    தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் பழனிசாமி, “உலக வங்கியின் விதிகளுக்கு உட்பட்டே இ-டெண்டர் முறாஇ அமல்படுத்தப்படுகிறது. இ-டெண்டர் முறையில் ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று கூறினார். 

    15:33 (IST)26 Feb 2021

    ஆட்சியைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் சதி செய்தனர் - முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு

    தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் பழனிசாமி, “ஆட்சியைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் சதி செய்தனர். இடைத்தேர்தலில் கணிசமான தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்தோம். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டோம்.” என்று கூறினார்.

    15:23 (IST)26 Feb 2021

    மக்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது - முதல்வர்

    புயல், மழை, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கையை ஏற்று பயிர்க்கடனும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், மக்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    15:21 (IST)26 Feb 2021

    அனைத்து மாநிலங்களும் கடன் வாங்கிதான் நிர்வாகத்தை நடத்துகிறது - முதல்வர் பழனிசாமி பேட்டி

    தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் பழனிசாமி, “அனைத்து மாநிலங்களும் கடன் வாங்கிதான் நிர்வாகத்தை நடத்துகின்றன. எந்த மாநிலமும் கையில் பணத்தை வைத்துக்கொண்டு திட்டங்களை அறிவிப்பதில்லை. வளர்ச்சித் திட்டங்களுக்கு கடன் வாங்க வேண்டிய அவசியம் இருப்பதால் கடன் வாங்கப்படுகிறது. எந்த திட்டத்தை அறிவித்தாலும் அதை அரசே நிறைவேற்றும் என்பதை உறுதி செய்துள்ளோம்” என்று கூறினார்.

    15:11 (IST)26 Feb 2021

    தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு முறைக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

    தமிழகத்தில் பின்பற்றப்படும் 69% இடஒதுக்கீடு முறைக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பின்தங்கிய பிரிவினரை முன்னேற்றவே 69% இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதாக ஏற்கனவே தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

    15:05 (IST)26 Feb 2021

    தமிழகத்தில் பின்பற்றப்படும் 69% இடஒதுக்கீடு முறைக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

    தமிழகத்தில் ஏற்கனவே பின்தங்கிய பிரிவினரை முன்னேற்றவே 69% இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதாக  தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், தமிழகத்தில் பின்பற்றப்படும் 69% இடஒதுக்கீடு முறைக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

    15:05 (IST)26 Feb 2021

    சிபிஐ மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

    முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சகோதரர் தா.பாண்டியன் காலமான செய்தியறிந்து அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவரது குடும்பத்தாருக்கும், கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

    14:37 (IST)26 Feb 2021

    சட்டப்பேரவை கூட்டத்தொடரை இன்றே முடிக்க திட்டம் என தகவல்

    தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளதால், சட்டப்பேரவை கூட்டத்தொடரை இன்றே முடிக்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

    14:34 (IST)26 Feb 2021

    தா.பாண்டியன் மறைவுக்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் இரங்கல்

    அற்புதம்மாள் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “அய்யா த.பா அவர்களின் மறைவு பெரும் வேதனைதருகிறது. ராஜீவ் காந்தீன் அன்றைய பொதுக்கூட்டத்தில் மொழிபெயர்ப்பாளராக உடனிருந்தவர். கடுங்காயமுற்றவர். அரசுதரப்பு சாட்சியாளர். உலகமே கேட்குமாறு 'அறிவு நிரபராதி' என ஆணித்தரமாக அவர் கூறியது உள்ளபடியே எங்களுக்கு பெரும் ஆறுதலை தந்தது.” என்று அற்புதம்மாள் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    14:23 (IST)26 Feb 2021

    தா.பாண்டியன் மறைவுக்கு வைகோ இரங்கல்

    தா.பாண்டியன் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

    வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தம் வாழ்நாள் முழுவதும் பொதுவுடைமைக்  கொள்கைக்காகப் பாடுபட்டு வந்த தா.பாண்டியன் தம் முச்சை நிறுத்திக்கொண்டார். தா.பாண்டியன் தமிழ்நாட்டு அரசியல் மேடைகளில் தன்னிகரற்ற சொற்பொழிவாளர். ஆற்றொழுக்குபோல தங்கு தடையின்றி தமது கருத்துகளை எடுத்து உரைப்பவர். மிகச் சிறந்த எழுத்தாளர், இலக்கியவாதி எண்ணற்ற கட்டுரைகள், நூல்களை எழுதியவர். நாடாளுமன்றத்தில் தமது வாதங்களைத் திறம்பட எடுத்து உரைப்பவர். தா.பா-வின் மறைவு பொதுவுடைமை இயக்கத்திற்கும் தமிழ்நட்டின் பொது வாழ்விற்கும் ஈடு செய்யமுடியாத இழப்பு. தா.பா மறைவால் வேதனையில் தவிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும்  ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    14:22 (IST)26 Feb 2021

    தா.பாண்டியனின் மறைவு  ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்திற்கு பேரிழப்பு - திருமாவளவன் இரங்கல்

    விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் தா.பா அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். மேலும்,  “அவரது மறைவு  ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்திற்கும் நேர்ந்த பேரிழப்பாகும். ஈழத் தமிழர்களின் நலன்களில் அக்கறையோடு பணியாற்றியவர். முற்போக்கு சிந்தாந்த தளத்தில் அவரது பங்களிப்பு மகத்தானது. அவருக்கு எமது வீரவணக்கம்.” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    14:04 (IST)26 Feb 2021

    பொதுவுடைமைப் போராளி தா.பாண்டியன் மறைவு பேரிழப்பு - மு.க.ஸ்டாலின் இரங்கல்

    தா.பாண்டியன் மறைவு பொதுவுடைமைக் கொள்கையில் நம்பிக்கையுள்ள அனைவருக்கும் பேரிழப்பு என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் தா.பாண்டியன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினார்.

    இது குறித்து மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “பொதுவுடைமைப் போராளி - ஒடுக்கப்பட்டோரின் போர்க்குரல் - பண்பாளர் - தமிழ் மண்ணை அடிமையாக விடமாட்டோம் என சிம்மக்குரல் எழுப்பிய தா.பாண்டியன் மறைவு பொதுவுடைமைக் கொள்கையில் நம்பிக்கையுள்ள அனைவருக்கும் பேரிழப்பு” என்று தெரிவித்துள்ளார். மேலும், உங்கள்தொகுதியில் ஸ்டாலின் நிகழ்வில் அஞ்சலி செலுத்தினோம். ஆழ்ந்த இரங்கல்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

    14:02 (IST)26 Feb 2021

    தா.பாண்டியனின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல்

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    தா.பாண்டியனின் மறைவு தமிழகம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

    13:56 (IST)26 Feb 2021

    புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி 2% குறைப்பு - ஆளுநர் தமிழிசை உத்தரவு

    புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை 2% குறைத்து  துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். வாட் வரி குறைப்பால் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ1.40 குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    13:30 (IST)26 Feb 2021

    திருக்குறளை வாசிக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திருக்குறளை வாசித்து வருவதாக ட்வீட் செய்துள்ளார். திருக்குறளின் கருத்தாழம் என்னை வியப்பில் ஆழ்த்தியது என்று தெரிவித்துள்ளார்.

    13:27 (IST)26 Feb 2021

    தலைமைச் செயலகத்தில் மதியம் 2.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி

    தலைமைச் செயலகத்தில், இன்று மதியம் 2:30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

    12:28 (IST)26 Feb 2021

    மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி!

    மகளிர் சுய உதவிக் குழுவினர், கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனும் தள்ளுபடி செய்யப்படும் என என 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில்  முதல்வர் அறிவித்துள்ளார். 

    11:54 (IST)26 Feb 2021

    5 மாநிலங்களின் தேர்தல் தேதி அறிவிப்பு!

    தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் தேர்தல் தேதி குறித்து அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று மாலை 4.30 மணிக்கு செய்தியாளர் சந்திக்கின்றனர். 

    11:52 (IST)26 Feb 2021

    நகைக் கடன்கள் தள்ளுபடி  !

    கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய 6 சவரன் வரையிலான நகைக் கடன்கள் தள்ளுபடி  செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

    10:40 (IST)26 Feb 2021

    தா.பாண்டியன்  காலமானார்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தா.பாண்டியன்  காலமானார். அவருக்கு வயது 88. சிறுநீரக தொற்று, குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானர். 

    10:16 (IST)26 Feb 2021

    அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்வீட்!

    ”பாலகோட் தாக்குதலை முறியடித்த இந்திய விமானப்படை வீர‌ர்களின் செயல் போற்றத்தக்கது .பாலகோட் தாக்குதலின் வெற்றி, பயங்கரவாத‌த்திற்கு எதிரான இந்தியாவின் பலத்தை நிரூபித்துள்ளது ” என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்வீட் செய்துள்ளார். இன்றுடன், பாலகோட் தாக்குதல் நடைபெற்று ஒரு ஆண்டு நிறைவடைந்த நிலையில் ராஜ்நாத் சிங் அதனை நினைவு கூர்ந்துள்ளார். 

    09:23 (IST)26 Feb 2021

    ஸ்டாலின் மீது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார்!

    பிரசாரத்தின் போது அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த அந்தியூர் செல்வராஜ் எம்.பியை தனியாக உட்கார வைத்ததாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

    09:00 (IST)26 Feb 2021

    சிவகாசி பட்டாசு ஆலை விபத்து!

    சிவகாசி, காளையார் குறிச்சியில் பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் சிக்கி, பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. மேலும் காயமடைந்த 19 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

    08:49 (IST)26 Feb 2021

    முதலமைச்சர் இல்லம் முற்றுகை!

    சென்னை மின்வாரிய கேங்மேன் பணி நியமன முறைக்கேட்டை கண்டித்து முதலமைச்சர்  எடப்பாடி இல்லம் முன்பு 50-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். 

    08:22 (IST)26 Feb 2021

    தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்!

    +2 பொதுத் தேர்வை எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் நாளை முதல் மார்ச் 6-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு தேர்வாணையம் அறிவித்துள்ளது. 

    08:20 (IST)26 Feb 2021

    உபரி நீரை நிரப்பும் திட்டம்!

    சேலம் மாவட்டத்தில் ரூ.565 கோடி செலவில், மேட்டூர் அணை உபரி நீரை 100 வறண்ட ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். 

    Tamil News: 9 முதல் 11ம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் பள்ளிகளுக்கு வர வேண்டாம் என ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    தமிழகத்தில் 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் என அறிவிப்பு வெளியான நிலையில் மாணவர்கள் நாளை முதல் பள்ளிகளுக்கு வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நேற்றைய செய்திகள்

    ஏப்ரல் 1 முதல் 24 மணி நேரமும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

    Tamil Nadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment