Advertisment

News Highlights: சென்னையை குளிர வைத்த மழை

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சென்னையில் நேற்று முழு நேர பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது . போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
News Highlights: வட தமிழக மாவட்டங்களில் இன்று மழை

Tamil News Highlights : ஆலந்தூர், ஐயப்பந்தாங்கல், போரூர், அம்பத்தூர், மடிப்பாக்கம், வடபழனி, ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், பாரிவாக்கம், பூவிருந்தவல்லி, செம்பரம்பாக்கம் போன்ற சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மழை பெய்தது.

Advertisment

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சென்னையில் நேற்று முழு நேர பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். ஜிப்மர் மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வில் கலந்துகொள்ள உள்ளவர்கள் ஹால் டிக்கெட்டை  காட்டினால் தேர்வுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று கூறினார். மேலும், வேறு ஏதேனும் நுழைவுத் தேர்வு எழுதுபவர்களும் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறினார்.

இந்தியாவில் சூரிய கிரகணம் நிகழ்வு பற்றி நேரலை செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் நேரலை Solar Eclipse 2020 LIVE இணைப்பை கிளிக் செய்து தொடருங்கள்.

நாடு முழுவதும் இன்று ஜூன் 21 சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் காரணமாக யோகா விழிப்புணர்வு பொது நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டுள்ளன. சர்வதேச யோகா தினம் குறித்து நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, சர்வதேச அளவில் ஒற்றுமையை பறைசாற்றுவதற்கான நாளாக யோகா தினம் அமைந்துள்ளது. அனைவரும் குடும்பத்துடன் வீட்டிலிருந்தே யோகா செய்யுங்கள். யோகாவை அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றிக்கொள்ளுங்கள். யோகா நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் குடும்ப வன்முறையை ஒழிக்கும். கொரோனாவை வீழ்த்த யோகா சிறந்த வழிமுறையாக திகழ்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை யோகா கூட்டுகிறது. சுய ஒழுக்கம் மற்றும் தன்னம்பிக்கையை யோகா வளர்க்கும்.” என்று கூறினார்.

அரசின் தனிமைப்படுத்தும் முகாம்களுக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தனிமைப்படுத்தும் கட்டமைப்புகளுக்காக மாநில பேரிட நிவாரன நிதியில் இருந்து உணவு, உடை, இருப்பிடம் ஆகிய கட்டமைப்புகளை வலுப்படுத்த ரூ.16.66 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருப்பூர், மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Live Blog

Tamil News Today: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,413 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 10 ஆயிரத்து 461 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 306 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் இந்தியாவில் கொரொனா தொற்றால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 13,254ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 2 லட்சத்து 27 ஆயிரத்து 255 குணமடைந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.



























Highlights

    22:13 (IST)21 Jun 2020

    சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை

    'சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மழை'

    ஆலந்தூர், ஐயப்பந்தாங்கல், போரூர், அம்பத்தூர், மடிப்பாக்கம், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் மழை

    ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், பாரிவாக்கம், பூவிருந்தவல்லி, செம்பரம்பாக்கம் பகுதிகளில் மழை

    22:12 (IST)21 Jun 2020

    தொழிற்சாலைகள் வழக்கம்போல் செயல்பட அனுமதி

    புதுச்சேரி: தொழிற்சாலைகள் வழக்கம்போல் செயல்பட அனுமதி

    உணவு விடுதிகளில் 2 மணி வரை அமர்ந்து சாப்பிடவும்,இரவு 8 மணி வரை பார்சல் வழங்கவும் அனுமதி

    பால் விற்பனை மையங்கள் மாலை 6 மணி வரை இயங்க அனுமதி

    பெட்ரோல் பங்க்குகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இயங்கும்

    - புதுச்சேரி அரசு

    22:12 (IST)21 Jun 2020

    நாளை முதல் ரூ.200 அபராதம்

    ‘கொரோனா தடுப்பு: புதுச்சேரியில் மீண்டும் கட்டுப்பாடுகள்’

    புதுச்சேரியில் மாஸ்க் அணியாமல் வெளியே சென்றால் நாளை முதல் ரூ.200 அபராதம்

    புதுச்சேரியில் உள்ள கடைகள் மற்றும் மதுக்கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை இயங்கும்

    - புதுச்சேரி அரசு

    21:31 (IST)21 Jun 2020

    கேரளாவில் பகீர்

    கேரளாவைச் சேர்ந்த 28 வயதான கலால் அதிகாரி ஒருவர் இறந்த ஒரு நாள் கழித்து, மருத்துவமனை தன்னை அலட்சியமாக நடத்தியதாகப் பேசியிருந்த ஆடியோவை அவரது உறவினர்கள் வெளியிட்டுள்ளனர்.

    21:11 (IST)21 Jun 2020

    பாதிப்பு எண்ணிக்கை 14,930 ஆக உயர்வு

    ராஜஸ்தானில் மேலும் 393 பேருக்கு கொரோனா தொற்று - பாதிப்பு எண்ணிக்கை 14,930 ஆக உயர்வு

    கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 11,355 பேர் குணமடைந்துள்ளனர் - சுகாதாரத்துறை

    21:03 (IST)21 Jun 2020

    மக்கள் பணியாற்ற விரைவில் வர வேண்டும்

    கொரோனாவால் பாதித்த எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயனிடம் தொடர்ந்து பேசி வருகிறேன்; உற்சாகமாகப் பேசுகிறார்.

    முழு நலம் பெற்று மக்கள் பணியாற்ற விரைவில் வர வேண்டும்!

    - மு.க.ஸ்டாலின்

    20:27 (IST)21 Jun 2020

    அண்ணாமலையார் கோயில் நடை அடைப்பு - பிரம்ம தீர்த்தத்தில் சுவாமிக்கு தீர்த்தவாரி

    சூரிய கிரகணத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நடை அடைக்கப்பட்டது. ஆகம விதிப்படி கோயில் நடை அடைக்கப்பட்டது. பின்னர் அண்ணாமலையாருக்கு கோயிலின் பிரம்ம தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. ஊரடங்கால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் கோயிலின் உள்ளே குருக்கள் பங்கேற்று இந்த நிகழ்வுகளை நடத்தினர்.

    19:52 (IST)21 Jun 2020

    12 பேருக்கு கொரோனா

    ’மும்பை தாராவியில் மேலும் 12 பேருக்கு கொரோனா’

    மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 2,170 பேருக்கு கொரோனா பாதிப்பு; 80 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

    19:51 (IST)21 Jun 2020

    டெல்லியில் மேலும் 3,000 பேருக்கு கொரோனா

    டெல்லியில் இன்று ஒரே நாளில் 3,000 பேருக்கு கொரோனா பாதிப்பு; இன்று மட்டும் 63 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

    - சுகாதாரத்துறை

    டெல்லியில் இதுவரை 59,746 பேருக்கு கொரோனா பாதிப்பு; 2,175 பேர் உயிரிழப்பு

    19:41 (IST)21 Jun 2020

    3,577 வழக்குகள் பதிவு

    ஊரடங்கை மீறியதாக இன்று மட்டும் 3,577 வழக்குகள் பதிவு

    * கடந்த 3 நாட்களில் 10,604 வழக்குகள் பதிவு - சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

    * பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஊரடங்கு முடிந்த பின்னரே வழங்கப்படும் - ஏ.கே.விஸ்வநாதன்

    19:40 (IST)21 Jun 2020

    பாதிப்பு எண்ணிக்கை 9,150

    கர்நாடகாவில் மேலும் 453 பேருக்கு கொரோனா தொற்று - பாதிப்பு எண்ணிக்கை 9,150 ஆக உயர்வு

    * கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3,391 பேர் குணமடைந்துள்ளனர் - சுகாதாரத்துறை

    19:18 (IST)21 Jun 2020

    870 கொபோலீஸாருக்கு கொரோனா

    சென்னையில் காவல்துறையை சேர்ந்த 870 பேருக்கு கொரோனா - மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தகவல்

    19:17 (IST)21 Jun 2020

    கர்நாடகாவில் இன்று 5 பேர் பலி!

    கர்நாடகாவில் இன்று மேலும் 453 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு; சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழப்பு..

    மொத்த பாதிப்பு - 9,150

    குணமடைந்தவர்கள் - 5,618

    சிகிச்சையில் உள்ளனவர்கள் - 3,391

    உயிரிழப்பு - 137

    19:04 (IST)21 Jun 2020

    முதல் 5 மாவட்டங்கள்

    கொரோனா பாதிப்பில் முதல் 5 மாவட்டங்கள்

    சென்னை - 41,172

    செங்கல்பட்டு - 3,745

    திருவள்ளூர் - 2,534

    காஞ்சிபுரம் - 1,159

    திருவண்ணாமலை - 1,060

    திருவண்ணாமலையில் கொரோனா பாதிப்பு இன்று 1,000ஐ கடந்தது..

    19:03 (IST)21 Jun 2020

    சி.வி.சண்முகத்திற்கு கொரோனா பாதிப்பு இல்லை

    'அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொரோனா பாதிப்பு இல்லை'

    சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொரோனா பாதிப்பு இல்லை

    - அப்போலா மருத்துவமனை

    * பி.சி.ஆர் பரிசோதனையில் நெகட்டிவ் என முடிவு வந்துள்ளதாக அப்போலா மருத்துவமனை அறிக்கை

    18:41 (IST)21 Jun 2020

    கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை

    பெரம்பலூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை..

    குறைந்தளவாக புதுக்கோட்டையில் ஒருவரும், ராணிப்பேட்டை, தூத்துக்குடியில் தலா இருவரும், திருப்பூரில் 4 பேரும் தொற்றால் பாதிப்பு.

    18:39 (IST)21 Jun 2020

    அதிக கொரோனா பாதிப்பை சந்தித்த மாவட்டங்கள்

    இன்று அதிக கொரோனா பாதிப்பை சந்தித்த மாவட்டங்கள்

    சென்னை - 1,493, செங்கல்பட்டு - 121, கடலூர் - 102, திருவள்ளூர் - 120, வேலூர் - 87, திருவண்ணாமலை - 77, மதுரை - 69, காஞ்சிபுரம் - 64, தஞ்சை - 49, திருச்சி - 36, திருவாரூர் - 30, விழுப்புரம் - 30, ராமநாதபுரம் - 30, நெல்லை - 28.

    18:23 (IST)21 Jun 2020

    42 பேர் சென்னையை சேர்ந்தவர்கள்

    கொரோனாவால் இன்று பலியான 53 பேரில் 42 பேர் சென்னையை சேர்ந்தவர்கள்.

    சென்னையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600ஐ கடந்தது.

    18:22 (IST)21 Jun 2020

    53 பேர் உயிரிழப்பு

    தமிழகத்தில் மேலும் 53 பேர் கொரோனாவால் உயிரிழப்பு’

    தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு இன்று ஒரே நாளில் 53 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 757 ஆக அதிகரிப்பு

    - சுகாதாரத்துறை

    18:07 (IST)21 Jun 2020

    தமிழகத்தில் மேலும் 2,532 பேருக்கு கொரோனா

    தமிழகத்தில் மேலும் 2,532 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 2,532 பேருக்கு கொரோனா பாதிப்பு

    - சுகாதாரத்துறை

    * சென்னையில் மட்டும் 1,493 பேருக்கு கொரோனா

    18:06 (IST)21 Jun 2020

    133 பேருக்கு கொரோனா

    கேரளாவில் மேலும் 133 பேருக்கு கொரோனா தொற்று - பாதிப்பு எண்ணிக்கை 3,172ஆக உயர்ந்துள்ளது.

    17:50 (IST)21 Jun 2020

    காஷ்மீரில், 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை - பாதுகாப்பு படையினர் அதிரடி

    காஷ்மீரில், பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில், 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சாடிபல் என்ற பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து, பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில், 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள், ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து ஏ.கே. 47 ரக துப்பாக்கி உள்பட 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    17:27 (IST)21 Jun 2020

    முகக் கவசம், சானிடைசருடன் வாக்களித்த மக்கள்

    கொரோனாவுக்கு பின் முதல் நாடாளுமன்ற தேர்தலை செர்பியா நடத்தியுள்ளது. முக கவசம், சானிடைசர் கட்டாயம் என்ற உத்தரவுடன் வாக்காளர்கள் வாக்கு செலுத்தியுள்ளனர். மொத்தம் 60 புள்ளி 6 லட்சம் வாக்காளர்கள் வாக்கு செலுத்தியுள்ளதாகவும், பலர் தொற்று பரவல் அச்சத்தால் தேர்தலை புறக்கணித்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    17:09 (IST)21 Jun 2020

    நகராட்சி ஆணையருக்கு கொரோனா

    திருவள்ளூர் நகராட்சி ஆணையருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிப்பு

    கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அலுவலகம் மூடல்

    16:55 (IST)21 Jun 2020

    வேலூரில் வேகம் எடுக்கும் கொரோனா - 500ஐ தாண்டியது பாதிப்பு

    வேலூரில் கொரோனா தொற்று எண்ணிக்கை 564 ஆக அதிகரித்துள்ளது. ஜூன் மாத தொடக்கம் வரை 48 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை, கடந்த சில நாட்களாக பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் ஊரடங்கை கடுமையாக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இதுவரை 22 ஆயிரத்து 240 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, 564 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். 95 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும், 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 2 ஆயிரத்து 550 பேர் பரிசோதனை முடிவுக்கு காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இன்று காலை நிலவரப்படி, மேலும் 77 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

    16:51 (IST)21 Jun 2020

    பதற்றத்தை தடுக்க என்ன செய்யப் போகிறீர்கள்? - கமல்

    ‘எல்லை பதற்றத்தை தடுக்க என்ன செய்யப் போகிறீர்கள்?-கமல்’

    லடாக் விவகாரத்தில் தேசத்தின் பாதுகாப்பை பாதிக்காத வகையில் உண்மை நிகழ்வுகளை மக்களிடம் பகிருங்கள்

    கேள்வி கேட்பவர்களை தேசத்திற்கே விரோதியைப் போல ஒரு பிம்பத்தை கட்டமைத்திருக்கிறீர்கள்

    - கமல்ஹாசன்

    16:35 (IST)21 Jun 2020

    திமுக எம்.எல்.ஏ-வுக்கு கொரோனா

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

    கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு எம்.எல்.ஏவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி.

    14:57 (IST)21 Jun 2020

    திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 2 குழந்தைகள் உள்பட 77 பேருக்கு கொரோனா தொற்று

    திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 2 குழந்தைகள் உள்பட 77 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,086 ஆக உயர்ந்துள்ளது.

    14:00 (IST)21 Jun 2020

    விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் இன்று 4 பேர் உயிரிழப்பு

    விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக இன்று ஒரு பெண் ஒரு அரசுப் பள்ளி ஆரிசிரியர் உள்பட மட்டும் 4 பேர் உயிரிழந்தனர்.

    13:29 (IST)21 Jun 2020

    கொரோனாவை மறைப்பதால், எண்ணிக்கையை குறைப்பதால் முதல்வருக்கு நல்லபெயர் கிடைக்காது - ஸ்டாலின்

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா மறைந்தது என்ற செய்திதான் முதல்வருக்கு நல்ல பெயர் வாங்கித் தரும். கொரோனாவை மறைப்பதாலோ எண்ணிக்கையை குறைப்பதாலோ முதல்வருக்கு நல்ல பெயர் கிடைக்காது. மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் சொல்லும் ஆலோசனைகளை பரிசீலிக்க வேண்டும். கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்குங்கள்” என்று அறிவுறுத்தியுள்ளார்.

    12:33 (IST)21 Jun 2020

    கொரொனா குவாரண்டைன் முகாமுக்காக விடுதிகளை ஒப்படைக்க அண்ணா பல்கலைக் கழகம் சம்மதம்

    கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மற்றும் தொற்று பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதற்காக அண்ணா பல்கலைக்கழகம் மாணவர் விடுதிகளை அளிக்குமாறு சென்னை மாநகராட்சி கோரியிருந்தது. இதையடுத்து விடுதிகளை கொரோனா தனிமைப்படுத்தும் மையமாக மாற்ற சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்க அண்ணா பல்கலைக்கழகம் சம்மதம் தெரிவித்துள்ளது. மாணவர்கள் பாதுகாப்பாக செல்வதற்கான வசதிகளை செய்யுமாறு மாநகராட்சிக்கு,

    பல்கலைக்கழக துணைவேந்தர் கோரிக்கை வைத்துள்ளார்.

    12:05 (IST)21 Jun 2020

    மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி இடஒதுக்கீடு விவகாரம்; பாமக அன்புமணி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுதாக்கல்

    மருத்துவ படிப்புகளில் அகில இந்திய இடஒதுக்கீட்டில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பாமக அன்புமணி ராமதாஸ் புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.

    11:55 (IST)21 Jun 2020

    சென்னையில் முழு பொதுமுடக்கம்; 12 நாட்கள் மக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் - காவல் ஆணையர்

    சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், “பொதுமுடக்கம் முழுமையாக அமலில் உள்ள நிலையில் மக்கள் ஒத்துழைப்பு அளிக்கின்றனர். மக்கள் நெருக்கடி உள்ள பகுதிகளில் கண்காணிப்பு தீவிரமாகப் பின்பற்றப்படும். 12 நாட்கள் மக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    11:44 (IST)21 Jun 2020

    ஐகோர்ட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு கொரோனா

    சென்னை உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் அரசு சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    11:09 (IST)21 Jun 2020

    சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 6,148 பேர் கொரோனாவால் பாதிப்பு

    சென்னை மாநகராட்சி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மண்டலவாரியாக வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 6,148 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கபட்டுள்ளனர். தண்டையார்பேட்டை மண்டலத்தில் - 4,963 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் - 4,785 பேரும், கோடம்பாக்கம் மண்டலத்தில் - 4,329 பேரும் அண்ணா நகர் மண்டலத்தில் - 4.142 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

    10:15 (IST)21 Jun 2020

    திமுக முன்னாள் வட சென்னை மாவட்ட செயலாளர் பலராமன் மரணம்; கட்சியினர் இரங்கல்

    திமுகவின் முன்னாள் வட சென்னை மாவட்ட செயலாளரும் அக்கட்சியின் தணிக்கை குழு உறுப்பினருமான எல்.பலராமன் உடல் நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுக்கு திமுக எம்.பி. தயாநிதி மாறன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    09:58 (IST)21 Jun 2020

    சர்வதேச யோகா தினம்: துணை குடியரசுத் தலைவர், மக்களவை சபாநாயகர் யோகா பயிற்சி

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, மக்களைவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் தங்கள் இல்லங்களில் யோகாசனம் பயிற்சி செய்தனர்.

    Tamil News Today: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,413 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 10 ஆயிரத்து 461 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 306 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் இந்தியாவில் கொரொனா தொற்றால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 13,254ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 2 லட்சத்து 27 ஆயிரத்து 255 குணமடைந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment