Advertisment

Tamil news today: தமிழகத்தில் 2.45 கோடி பேரின் ஆதார் எண்கள் வாக்காளர் அட்டையுடன் இணைப்பு

Tamil Nadu News, Tamil News LIVE, Petrol price Today - 16 Sep 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil news today: தமிழகத்தில் 2.45 கோடி பேரின் ஆதார் எண்கள் வாக்காளர் அட்டையுடன் இணைப்பு

பெட்ரோல்டீசல் விலை

Advertisment

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. 118-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 102.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒடிசா மாணவர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை ஐஐடியில் ஒடிசா மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தேர்வில் தேர்ச்சி பெறாத வருத்தத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த தற்கொலை தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கல்வி நிலைய வளாகங்களில் நடைபெறும் தற்கொலைகளை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  

பொது நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு

மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் சேர்வதற்கான பொது நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு. தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மதிப்பெண்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 21:52 (IST) 16 Sep 2022
    தரமான கல்வி மாணவர்களுக்கு கிடைத்திட புதிதாக 151 பணியிடங்கள் உருவாக்கம் - பள்ளிக்கல்வித்துறை

    மாவட்ட அளவில் தொடக்கப் பள்ளிகளுக்கென தனியாக கல்வி அலுவலர் பணியிடம், தனியார் பள்ளிகளை கண்காணிக்க துணை இயக்குநர் பதவி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மற்றும் கல்வியியல் ஆராய்ச்சி இயக்ககத்திற்கு தனித்தனியாக 2 இணை இயக்குனர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.



  • 20:59 (IST) 16 Sep 2022
    ‘இது போருக்கான சகாப்தம் அல்ல’ ரஷ்ய அதிபர் புதினிடம் கூறிய மோடி

    “இன்றைய யுகம் போருக்கான சகாபதம் க்காலம் அல்ல என்பதை நான் அறிவேன். இதைப் பற்றி நான் உங்களுடன் தொலைபேசியில் பேசினேன்” என்று உஸ்பெகிஸ்தானில் நடந்த பிராந்திய பாதுகாப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினிடம் கூறினார்.



  • 20:56 (IST) 16 Sep 2022
    டெல்லியில் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ அமனத்துல்லா கான் கைது

    ஆம் ஆத்மி எம்.எல்.ஏ அமனத்துல்லா கான் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். டெல்லி ஊழல் தடுப்பு பிரிவு (ஏசிபி), துணை நிலை ஆளுநர் புகார் அளித்தது. அவர் தொடர்பான பல இடங்களில் சோதனை நடத்தி, உரிமம் இல்லாத துப்பாக்கி மற்றும் ரூ.12 லட்சம் ரொக்கத்தை மீட்டதாகக் கூறப்படுகிறது.



  • 20:22 (IST) 16 Sep 2022
    குழந்தைகள் மத்தியில் காய்ச்சல்: புதுச்சேரியில் செப். 25 வரை 1 முதல் 8ஆம் வகுப்பு வரை விடுமுறை

    புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை முதல் 25ம் தேதி வரை 1 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மத்தியில் காய்ச்சல் அதிகம் பரவுவதால் கல்வித்துறை விடுமுறை அறிவித்துள்ளது.



  • 19:42 (IST) 16 Sep 2022
    ராகுலின் பயணத்தால் எந்தப் பயனும் இல்லை- ஜி.கே. வாசன்

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் நடை பயணத்தால் எந்தப் பயனும் இல்லை என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.



  • 19:41 (IST) 16 Sep 2022
    உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் இந்தியாவில் படிப்பைத் தொடர வேண்டும்; ஸ்டாலின் மோடிக்கு கடிதம்

    உக்ரைனில் நிலவும் போர் காரணமாக மருத்துவ படிப்பை தொடர முடியாமல் இந்தியா திரும்பிய மாணவர்கள் உள்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படிப்பை தொடர ஏற்பாடு செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.



  • 18:50 (IST) 16 Sep 2022
    மனுதர்ம எரிப்பு போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

    பெரியார் பிறந்த நாளில் மனுதர்ம இதிகாசத்தை எரித்து போராட்டம் நடத்த மக்கள் அதிகாரம் அமைப்பினர் அனுமதி கோரியிருந்தனர்.

    இதற்கு எதிராக ரங்கராஜ் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

    இந்தப் போராட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துவிட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது, அவரவர் விரும்பிய மதத்தை வழிபாடு செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு. அதை யாரும் தடுக்க முடியாது” என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.



  • 18:38 (IST) 16 Sep 2022
    யானை வழிதடத்தில் செங்கல் சூளைகளை மூட உத்தரவு

    கோவை மாவட்டத்தில் யானை வழிதடத்தில் உள்ள செங்கல் சூளைகளை மூட திட்டவட்டமாக அறிவிப்பு வெளியிடப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.



  • 18:36 (IST) 16 Sep 2022
    மணல் குவாரிகள் அமைக்கும் முடிவை கைவிடக் கோரிக்கை

    திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், கடலூர், திருச்சி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் புதிய மணல் குவாரி அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.



  • 18:24 (IST) 16 Sep 2022
    வாலை சுருட்டுங்கள்.. இது பெரியார் மண்.. திருமாவளவன் எச்சரிக்கை!

    விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ட்விட்டரில், “கோவை மேட்டுப்பாளையம் அருகேயுள்ள காரமடையில் 'தந்தை பெரியார் உணவகம்' திறக்கவிருந்த நிலையி்ல் அதனைச் சூறையாடியுள்ளது ஒரு கும்பல். சனாதன அரசியலே அவர்களை இத்தகு வெறுப்பு உளவியலுக்கு ஆளாக்கியுள்ளது. இதுதான் சனாதன சங்கத்துவ வெறுப்பியலாகும்.

    தமிழகத்தில் தந்தை பெரியாருக்கு எதிரான

    வெறுப்பையே உத்தியாகக் கையாளுகின்றனர். சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பில் அவர்களுக்கு அரசியல் ஆதாயமில்லை.

    எனவேதான், பெரியாரைக் குறி வைக்கின்றனர். இங்கே அவர்களின் வால் ஒட்ட நறுக்கப்படும் என்பதை இப்போது உணர்ந்திருப்பர். வாலைச் சுருட்டுங்கள். இது பெரியார் மண். எச்சரிக்கை” எனத் தெரிவித்துள்ளார்.



  • 18:03 (IST) 16 Sep 2022
    விரைவில் விஜய் 67, லோகேஷ் தகவல்

    தளபதி 67 படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேட்டி!

    சென்னை வளசரவாக்கம் பகுதியில் உதவி இயக்குனர்களுக்கான 5 ரூபாய் டீ கடையை திறந்துவைத்து செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.



  • 17:46 (IST) 16 Sep 2022
    ஜூனியர் கேப்டன் அதர்வா!

    ட்ரிக்கர் படக்குழு செய்தியாளர் சந்திப்பில் சின்னி ஜெயந்த், "அதர்வாவை ஜூனியர் கேப்டன் என்றுதான் இனி கூப்பிட வேண்டும்" என்றார்.



  • 17:34 (IST) 16 Sep 2022
    நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட ரூ.1.5 கோடி அபராதம் நிறுத்திவைப்பு!

    புலி படத்திற்கு பெற்ற ₹15 கோடி சம்பளத்தை மறைத்த விவகாரத்தில் நடிகர் விஜய்க்கு ₹1.50 கோடி அபராதம் விதித்த வருமான வரித்துறை உத்தரவுக்கு விதிக்கபட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 17:26 (IST) 16 Sep 2022
    சீனாவின் 42 மாடி கட்டடத்தில் பயங்கர தீ

    சீனாவின் சாங்சா நகரிலுள்ள 715 அடி உயரமான 42 மாடிக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, சுமார் 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளன. கட்டடம் தீப் பற்றி எரியும் காணொலிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவிவருகின்றன.



  • 17:01 (IST) 16 Sep 2022
    இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி

    இந்திய பங்குச் சந்தைகள் இன்று கடுமையான வீழ்ச்சியுற்றன. மும்பை பங்குச் சந்தை 1100 புள்ளிகள் வரை சரிந்தது.



  • 16:39 (IST) 16 Sep 2022
    டெல்லியில் இரண்டு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து

    டெல்லி, ஜோஹ்ரிபூரில் இரண்டு மாடி கட்டிட வீடு இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கிய 7 பேர் மீட்கப்பட்ட நிலையில் மேலும் 2 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது



  • 16:11 (IST) 16 Sep 2022
    உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 2-ம் இடத்தில் கௌதம் அதானி

    உலகப் பணக்காரர்கள் பட்டியலில் கௌதம் அதானி 2ம் இடத்தில் உள்ளார். 'அமேசான்' நிறுவனர் ஜெப் பெசோஸை பின்னுக்கு தள்ளி, உலக பணக்காரர் பட்டியலில் 2 ஆம் இடத்திற்கு முன்னேறினார் கவுதம் அதானி. அதேநேரம் பில்கேட்ஸ் 5வது இடத்திலும், முகேஷ் அம்பானி 8ம் இடத்திலும் உள்ளதாக போர்ப்ஸ் ரியல் டைம் அறிக்கை வெளியிட்டுள்ளது



  • 15:59 (IST) 16 Sep 2022
    பொதுமக்களின் வரிப்பணம் ஒரு ரூபாய் கூட வீணாவதை ஏற்றுக்கொள்ள முடியாது – உயர் நீதிமன்றம் காட்டம்

    விருதுநகர், ஆலங்குளம் கண்மாயில் உள்ள அம்மா தேசிய விளையாட்டு அரங்கத்தை அகற்றக் கோரிய வழக்கில், நீர்நிலை ஆக்கிரமிப்பில் விளையாட்டு அரங்கம் எவ்வாறு கட்டப்பட்டது இதற்காக செலவிடப்பட்ட தொகை எவ்வளவு? உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    மேலும், பொதுமக்களின் வரிப்பணம் ஒரு ரூபாய் கூட வீணாவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய நீதிபதிகள், அரசு தரப்பில் தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டனர்



  • 15:37 (IST) 16 Sep 2022
    திருச்சி விமான நிலையத்தில் முத்துக்குமரன் உடல்

    குவைத் நாட்டில் உயிரிழந்த திருவாரூரை சேர்ந்த முத்துக்குமரனின் உடல் திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்பட்டது. முத்துக்குமரன் உடலுக்கு அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    பின்னர், செய்தியாளர்களிடம் பேசுகையில், வெளிநாட்டில் வேலைக்கு சென்று உயிரிழப்பவர்கள் தொடர்பாக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், துறை அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்கு செல்ல வேண்டும் என்றும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்



  • 15:22 (IST) 16 Sep 2022
    அடுத்த வாரம் பா.ஜ.க.,வில் இணைகிறார் பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங்

    பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் அடுத்த வாரம் பாஜகவில் இணையவுள்ளார். உட்கட்சி மோதலால் காங்கிரஸில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கிய நிலையில் பாஜகவில் இணையவுள்ளார்



  • 14:59 (IST) 16 Sep 2022
    நர்சிங், பி.பார்ம் படிப்பு கலந்தாய்வு

    பாராமெடிக்கல், நர்சிங், பி.பார்ம் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு செப். 21ஆம் தேதி, தொடங்குகிறது. 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில், பாராமெடிக்கல் கலந்தாய்வு நடைபெறும் என மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.



  • 14:33 (IST) 16 Sep 2022
    12 நாகை மீனவா்கள் சென்னை வந்தடைந்தனர்

    ஆகஸ்ட் 9ல் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு 2 தினங்களுக்கு முன் விடுதலையான 12 நாகை மீனவா்கள் சென்னை வந்தடைந்தனர்.



  • 14:29 (IST) 16 Sep 2022
    போலி பத்திரப்பதிவு சட்டம்

    ஒரு வாரத்திற்குள் போலி பத்திரங்களை சார்பதிவாளர் ரத்து செய்யும் சட்டம் அமுலுக்கு வர உள்ளது. போலி பத்திரப்பதிவு எப்போது பதிவு செய்யப்பட்டிருந்தாலும் ரத்து செய்யப்படும் என அமைச்சர் பி.மூர்த்தி கூறியுள்ளார்.



  • 14:02 (IST) 16 Sep 2022
    எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

    அதிமுக நிர்வாகிகள் மீது எப்படி வழக்குபதிவு செய்யலாம் என ஒரு ஆலோசனை கூட்டமே தினமும் நடத்துகிறார்கள்; முன்னாள் அமைச்சர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் தான் ஸ்டாலின் செயல்படுகிறார். அமைச்சர்கள் கொள்ளையடிக்கும் அனைத்து பணத்தையும் திமுக குடும்பம் வாங்கிக்கொள்கிறது. இதற்கும் உதயசந்திரன் தான் உறுதுணையாக இருக்கிறார்; கோடநாடு வழக்கு விசாரணையிலும் கூட உதயசந்திரன் தூண்டுதலில் தான் நடக்கிறது என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விமர்சித்துள்ளார்.



  • 13:35 (IST) 16 Sep 2022
    ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு

    உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு தொடங்கியது. இதில், பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.



  • 13:09 (IST) 16 Sep 2022
    மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளர்

    மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணியின் தலைமை பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் மார்க் பவுச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.



  • 13:07 (IST) 16 Sep 2022
    மிதமான மழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.



  • 13:02 (IST) 16 Sep 2022
    தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 12:53 (IST) 16 Sep 2022
    திருச்சி விமான நிலையத்தில் 3 பேர் கைது

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ரூ. 1.9 கோடி மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல் - 3 பேர் கைது



  • 12:52 (IST) 16 Sep 2022
    'அம்பேத்கரும் - மோடியும்' நூல் வெளியீட்டு விழா

    டெல்லி நேரு அருங்காட்சியகத்தில் 'அம்பேத்கரும் - மோடியும்' நூல் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு நூலை வெளியிட்டார்.



  • 12:22 (IST) 16 Sep 2022
    தமிழகத்தில் லஞ்சம் இல்லாத துறையே இல்லை - ஈபிஎஸ்

    ஆட்சிக்கு வந்து 15 மாத காலத்தில் மக்களுக்கு திமுக அரசு எந்த நன்மையும் செய்யவில்லை. வீட்டு வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை திமுக அரசு உயர்த்தியுள்ளது.

    தமிழகத்தில் லஞ்சம் இல்லாத துறையே இல்லை - ஈபிஎஸ்



  • 12:21 (IST) 16 Sep 2022
    ஆ.ராசா மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக புகார்

    சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திமுக எம்பி ஆ.ராசா மீது பாஜக மகளிர் அணி பொதுச் செயலாளர் நதியா சீனிவாசன் புகார். இந்து மதத்தை பற்றி அவதூறாக பேசியதாக புகார் மனு



  • 12:20 (IST) 16 Sep 2022
    இந்தியாவில் மேலும் 6,298 பேருக்கு கொரோனா

    இந்தியாவில் மேலும் 6,298 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. கொரோனாவில் இருந்து மேலும் 5,916 பேர் குணமடைந்துள்ளனர். 46,748 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.



  • 11:55 (IST) 16 Sep 2022
    ஆவின் இனிப்பு வகைகள் விலை உயர்வு இன்று முதல் அமல்

    ஆவின் இனிப்பு வகைகள் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. குலாப் ஜாமுன், ரசகுல்லா, பால்கோவா உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் ரூ. 20 முதல் ரூ. 80 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது - ஆவின்



  • 11:16 (IST) 16 Sep 2022
    மதுரையில் புதிய டைடல் பார்க் அமைக்கப்பட உள்ளது - முதல்வர் ஸ்டாலின்

    மதுரையில் டைடல் மற்றும் மாநகராட்சி இணைந்து புதிய டைடல் பார்க் அமைக்கப்பட உள்ளது.

    மாட்டுத்தாவணி பகுதியில் 2 கட்டமாக நடக்கும் இந்த திட்டத்திற்கு முதற்கட்டமாக ரூ. 600 கோடி ஒதுக்கீடு

    இதன்மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்



  • 11:02 (IST) 16 Sep 2022
    விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர் மரணம்: பிரேத பரிசோதனை

    னநல காப்பகத்தில் இருந்து காவல்துறை விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட தங்கபாண்டி உயிரிழந்த விவகாரம் . இன்று காலை 11 மணியளவில் குற்றவியல் நடுவர் நீதிபதி முன்பு உறவினர்களிடம் விசாரணை நடத்திய பின் பிரேத பரிசோதனை செய்ய முடிவு.



  • 11:02 (IST) 16 Sep 2022
    டாஸ்மார்க் ஊழியர்களை தற்காலிக பணியிடை நீக்கம்

    விக்கிரபாண்டியம் பகுதியில் அரசு மதுபான கடையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை என தகவல். டாஸ்மார்க் ஊழியர்களை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து டாஸ்மார்க் மாவட்ட மேலாளர் அதிரடி உத்தரவு.



  • 10:42 (IST) 16 Sep 2022
    போதை மாத்திரைகள் விற்பனை செய்த 3 பேரை கைது

    சென்னை, சூளைமேட்டில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 3 பேரை கைது செய்து 1100 போதைமாத்திரைகள் பறிமுதல்.



  • 10:41 (IST) 16 Sep 2022
    பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம்

    மாணவர்களிடையே புத்தாக்க சிந்தனையை வளர்க்க பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.



  • 10:31 (IST) 16 Sep 2022
    தென்மண்டல அளவிலான மாநாடு

    தமிழக அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் 'தோள் கொடுப்போம் தொழில்களுக்கு' என்ற தென்மண்டல அளவிலான மாநாடு . மாநாட்டில் பங்கேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களைத் தொடக்கி வைக்கிறார்



  • 09:12 (IST) 16 Sep 2022
    காலை உணவு திட்டம் இன்று முதல் துவக்கம்

    தமிழகம் முழுவதும் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்த நிலையில், இன்று முதல் வழங்கப்படுகிறது.



  • 08:35 (IST) 16 Sep 2022
    கடலூர் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார் சவுக்கு சங்கர்

    மதுரை சிறையில் இருந்து நள்ளிரவில் கடலூர் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார் சவுக்கு சங்கர். நிர்வாக காரணங்களுக்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மத்திய சிறைத்துறை தகவல்.



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment