Advertisment

Tamil News Today: உடுமலை சங்கர் கொலை மேல்முறையீடு வழக்கு: திங்கள்கிழமை தீர்ப்பு

Today Live news : ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரைகள் மற்றும் அது தொடர்பான மருந்து பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான தடை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chennai Highcourt

Tamil News Today Live : சென்னையில் கொரோனா உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். காலை நிலவரப்படி கொரோனாவுக்கு சென்னையில் மேலும் 22 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Advertisment

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 பேர் மற்றும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 5 பேர் ரயில்வே மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை என மொத்தம் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையிலிருந்து வெளியேறிய மக்கள்: மற்ற மாவட்டங்களில் தொற்று அதிகரிக்கும் அபாயம்

மலேரியா எதிர்ப்பு மருந்தான, ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரைகள் மற்றும் அது தொடர்பான மருந்து பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Tamil News Today Live : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    21:46 (IST)20 Jun 2020

    உடுமலை சங்கர் கொலை தொடர்பான மேல்முறையீடு வழக்கு: நாளை மறுநாள் தீர்ப்பு

    உடுமலை சங்கர் கொலை தொடர்பான மேல்முறையீடு வழக்கில் நாளை மறுநாள்  சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என்று அறிவிப்பு 

    20:57 (IST)20 Jun 2020

    சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவசகாம் நீட்டிப்பு

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவசகாம் ஜூலை 15-ஆம் தேதிவரை நீட்டிப்பு அறிவிக்கப்பட்டது  

    20:52 (IST)20 Jun 2020

    கரூர் நகராட்சியில் வணிக நிறுவனங்கள் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதி- கரூர் ஆட்சியர்

    கரூர் நகராட்சியில் நாளை முதல் ஜூன் 31ம் தேதி வரை கடைகளும், வணிக நிறுவனங்களும் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்படும். உத்தரவை மீறும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று கரூர் ஆட்சியர் அன்பழகன் உத்தரவிட்டார்.  

    20:37 (IST)20 Jun 2020

    45 நிமிட நேரம் பொதுவான யோகாசனப் பயிற்சிகளைச் செய்ய வேண்டும் - பிரதமர்

    2015ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஜூன் 21ஆம் தேதியும் ஐக்கிய நாடுகள் சபையின் சார்பாக உலகெங்கும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜூன் 21 காலை 7 மணிக்கு தொடங்கி, தங்கள் வீடுகளில் இருந்து 45 நிமிட நேரம் பொதுவான யோகாசனப் பயிற்சிகளைச் செய்ய வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்

    20:33 (IST)20 Jun 2020

    ஜூன் 24, 2020ஆம் தேதி பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்யா பயணம்

    இரண்டாம் உலகப்போர் வெற்றியின் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக ஜூன் 24, 2020ஆம் தேதி நடைபெறவிருக்கும் வெற்றி அணிவகுப்பில் கலந்துகொள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாஸ்கோவிற்கு செல்லவிருக்கிறார். ரஷ்யா மற்றும் பல நேசக்கரங்கள் செய்த வீரச் செயல்களையும், அவர்களது தியாகங்களையும் கௌரவிக்கும் வகையில் அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரஷ்யக் கூட்டமைப்பின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோயுக், இந்தியப் பாதுகாப்பு அமைச்சரை வெற்றி அணிவகுப்புக்கு அழைத்துள்ளார். இது முதலில் மே 9, 2020 அன்று திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால், கொரோனா பெருந்தொற்று காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.

    20:31 (IST)20 Jun 2020

    அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் உரைக்கு மத்திய அரசு விளக்கம்

    நமது படை வீரர்களது தீரத்தின் விளைவாக லடாக் எல்லைப்பகுதி நிலவரம் பற்றி குறிப்பிடுகையில் சீன துருப்புகள் நமது எல்லைக்குள் இல்லை என்று பிரதமர் தெரிவித்தார். அன்று 16ம் எண் பிஹார் படைப்பிரிவின் தியாகமே எல்லைப்பகுதியில் கட்டமைப்பை உருவாக்கும் சீன ராணுவத்தின் முயற்சியும் அத்துமீறலும் நிறைவேறாமல் போக காரணமாக அமைந்தது என்று மத்திய அரசு விளக்கம் கொடுத்தது.   

    அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர்  தெரிவித்த கருத்துக்களுக்கு குறும்புத்தனமான விளக்கம் அளிக்கும் முயற்சிகளில் சிலர் ஈடுபட்டுள்ளனர். உண்மையில் எல்லை கட்டுப்பாட்டை மீறும் எந்த முயற்சிகளுக்கும் இந்தியா சரியான பதிலடி கொடுக்கும் என்பதில் பிரதமர் தெளிவாக உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது.    

    20:26 (IST)20 Jun 2020

    கல்வான் பள்ளத்தாக்கு தொடர்பான சீனாவின் கருத்துக்களை ஏற்க முடியாது- இந்தியா திட்டவட்டம்

    லடாக் கல்வான் பள்ளத்தாக்கு பகுதிகளை சீனா இறையாண்மையைக் கோரியதை  இந்தியா வெளிவிவகார அமைச்சகம்  நிராகரித்தது.   பெய்ஜிங்கின் "இந்தியா- சீனா எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு தொடர்பாக மிகைப்படுத்தப்பட்ட மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத கூற்றுக்களை முன்னெடுப்பதற்கான முயற்சிகள் ஏற்கத்தக்கவை அல்ல" என்று வலுவான கண்டனத்தை பதிவு செய்தது.  

    20:00 (IST)20 Jun 2020

    நாளை விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு நேரங்கள்

    சென்னை விமான நிலையத்தில் நாளை விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு நேரங்கள்.  

    18:50 (IST)20 Jun 2020

    சென்னயில் நாளை முழு நேர பொதுமுடக்கம் - காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவிப்பு

    சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாளை முழு நேர பொது முடக்கம் நடைமுறையில் இருக்கும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நினைவூட்டினார். மேலும், இன்று நள்ளிரவு 12.00 மணி முதல் முதல் திங்கள் கிழமை காலை 6 மணி வரை சென்னையில் முழு நேர பொதுமுடக்கம் அமலில் இருக்கும் என்று காவல் ஆணையர் கூறினார். ஜிப்மர் மருத்துவமனையில் நுழைவுத் தேர்வு இருப்பதால் தேர்வு எழுத உள்ளவர்கள் ஹால் டிக்கெட் உடன் வந்தால் அனுமதிகப்படுவார்கள். வேறு ஏதேனும் நுழைவுத் தேர்வு எழுத உள்ளவர்களும் அனுமதிக்கப்படுவார்கள். பொதுமக்கள் இந்த நோயின் தீவிரத்தை அறிந்து ஒத்துழைப்பு தருவதாக காவல் ஆணையர் கூறினார்.

    18:16 (IST)20 Jun 2020

    தமிழகத்தில் புதிய உச்சம்; இன்று ஒரே நாளில் 2,396 பேருக்கு கொரோனா தொற்று

    தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 2,396 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 56,845 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    17:46 (IST)20 Jun 2020

    சூரியகிரகணம் - திருப்பதி கோயிலில் நாளை பக்தர்களுக்கு அனுமதி இல்லை

    சூரியகிரகணம் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை ஒரு நாள் முழுவதும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. திருப்பதியில் இன்று இரவு 8.30 மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்டு நாளை மதியம் 2.30 மணிக்கு திறக்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    16:50 (IST)20 Jun 2020

    மதுரையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த 10 பறக்கும் படைகள் அமைப்பு - மாவட்ட ஆட்சியர்

    மதுரையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வருவாய்த்துறை, காவல்துறை, மாநகாட்சி அலுவலர்கள் கொண்ட 10 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி, வணிக நிறுவனங்களைக் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் வினய் தெரிவித்துள்ளார்.

    15:59 (IST)20 Jun 2020

    ஊரடங்கு காரணமாக ஜூலை 15 வரை மின் கட்டணம் செலுத்தலாம் - மின்சார வாரியம் அறிவிப்பு

    ஊரடங்கு காரணமாக ஜூலை 15வரை மின் கட்டணம் செலுத்தலாம் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 4 மாவட்டத்தில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஜூலை 15-ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தலாம். விடுமுறை காரணமாக மின் நுகர்வோர்கள் ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை இணையத்தில் மின் கட்டணம் செலுத்தலாம் என்ரு அறிவித்துள்ளது. மேலும், ஜூலை 15-ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டாம் என்று அலுவலர்களுக்கு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

    15:31 (IST)20 Jun 2020

    விமான சேவை எப்போது தொடங்கும்? அமைச்சர் பதில்

    டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, “உலக நாடுகள் சர்வதேச விமான சேவையை தொடங்கினால் இந்தியாவும் தொடங்கும். வந்தே பாரத் திட்டம் 3வது மற்றும் 4வது கட்ட திட்டத்தின் மூலம் 300 விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வந்தே பாரத் திட்டம் மூலம் 1,09,203 விமானப் பயணிகள் நாடு திரும்பியுள்ளனர். உதான் திட்டத்தின் மூலம் 588 விமானங்கள் மூலம் 1928 டன் மருத்துவப் பொருட்கள் வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளனர்.

    15:18 (IST)20 Jun 2020

    புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரிப்பு; கடும் கட்டுப்பாடுகள் நாளை அறிவிப்பு -முதல்வர் நாராயணசாமி

    புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாளை இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

    14:42 (IST)20 Jun 2020

    விழுப்புரத்தில் இன்று மேலும் 30 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

    விழுப்புரத்தில் இன்று மேலும் 30 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் விழுப்புரத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 558ஆக உயர்ந்துள்ளது.

    13:43 (IST)20 Jun 2020

    கோவையில் பிரபல நகைக் கடைக்கு சீல்!

    கோவையில் பிரபல நகைக் கடைக்கு மாநகராட்சி தரப்பில் சீல் வைக்கப்பட்டுள்ள சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து இ-பாஸ் இல்லாமல் 39 பெண் ஊழியர்களை அழைத்து வந்ததால் மாநகராட்சி கடைக்கு சீல் வைத்து  நடவடிக்கை எடுத்துள்ளது. 

    13:05 (IST)20 Jun 2020

    ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்!

    தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில்  செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தமிழக உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் காமராஜ், அக்டோபர் 1-ம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அரசிடம் தெரிவித்துள்ளோம். என்றார். 

    12:38 (IST)20 Jun 2020

    3 ஐஏஎஸ் அதிகாரிகள் விடுவிப்பு!

    சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த மேலும் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளான காமராஜ், ஞானசேகரன், மணிகண்டன் ஆகிய 3 பேருக்கு பதிலாக புதியதாக 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

    12:04 (IST)20 Jun 2020

    சென்னை மாநகராட்சிக்கு அண்ணா பல்கலைக் கழகம் பதில்!

    கொரோனா சிகிச்சைக்காக மாணவர் விடுதிகளை தர முடியாது என்று  சென்னை மாநகராட்சிக்கு அண்ணா பல்கலைக் கழகம் பதில் அளித்துள்ளது. கொரோனா சிகிச்சைக்காக அண்ணா பல்கலைக்கழகத்தில் இருக்கும் 5 மாணவர்கள் விடுதியை சென்னை மாநகராட்சி கைப்பற்ற அனுமதி கோரி இருந்த நிலையில், அண்ணாபல்கலைக்கழகம் தரப்பில் இந்த பதில் தரப்பட்டுள்ளது. பல்கலைக் கழகத்தின் வேறு கட்டடங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் கூறியுள்ளது. 

    11:46 (IST)20 Jun 2020

    மத்திய அரசுக்கு அதிமுக துணை நிற்கும்!

    தமிழக மக்களும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகமும் மத்திய அரசுக்கு எப்போதும் துணை நிற்கும் என, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.இந்தியா - சீனா இடையே அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில், அஇஅதிமுக சார்பில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய அவர்,நமது நாட்டின் எல்லையை பாதுகாக்கும் நடவடிக்கையில் பிரதமர், மத்திய அரசு மற்றும் பாதுகாப்பு படைக்கு பின்னால் தமிழகமும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகமும் உறுதியாக நிற்கும்” என்றார். 

    11:21 (IST)20 Jun 2020

    முதல்வர் பழனிசாமி சந்திப்பு:

    சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் முதல்வர் பழனிசாமி இன்று ஆய்வு செய்தார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, “ வெளிநாடு, வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்களாலேயே கொரோனா பரவல் ஏற்பட்டது. கொரோனாவை தடுக்கவே முழு பொதுமுடக்கம் . பொதுமக்களை சிரமத்திற்கு உள்ளாக்குவது அரசின் நோக்கம் அல்ல. கொரோனாவை தடுக்கவே முழு பொதுமுடக்கம் செயல்படுத்தப்பட்டுள்ளது.கொரோனா பரவலை தடுக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா பாதித்த 54% பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த சமூக இடைவெளி, முக கவசம் தான் ஒரே வழி ” என்றார். 

    Tamil News Today Live chennai lockdown : கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் 42 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. அதில், ஜோதிராதித்ய சிந்தியா, மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை, கேசி வேணுகோபால் உள்ளிட்டோர் முதன்முறையாக மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

    நேற்றைய தமிழக செய்திகளை வாசிக்க

    வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து நெல்லை திரும்புபவர்களுக்கு, 14 நாள் தனிமைக்கு பிறகு கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும் என தி.மு.க எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணா கோரிக்கை விடுத்துள்ளார்.

    இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,95,048ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2,13,831 பேர் குணமடைந்துள்ளனர்.

    உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12,948ஆக உயர்ந்துள்ளது.

    Dmk Admk Corona Coronavirus
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment