Advertisment

Tamil News : தமிழ்நாட்டில் ஒரே நாளில் 3,715 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Latest Tamil News மாவட்டங்களுக்கு இடையே மற்றும் மாவட்டத்துக்குள்ளேயும் 50% பயணிகளுடன் பேருந்துகள் ஓடத் தொடங்கின.

author-image
WebDesk
New Update
Tamil News : தமிழ்நாட்டில் ஒரே நாளில் 3,715 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Tamil News Live : தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வருவதால், பல்வேறு நகரங்கள் இயல்பு நிலைக்கு திரும்பின. மாவட்டங்களுக்கு இடையே மற்றும் மாவட்டத்துக்குள்ளேயும் 50% பயணிகளுடன் பேருந்துகள் ஓடத் தொடங்கின. இதனால், இ-பாஸ் சேவை கட்டாயம் இல்லை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. என்றாலும், மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துத் தடை நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

பெட்ரோல் டீசல் விலை

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து ரூ.100.75-க்கும், டீசல் விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.93.91-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

'பசுக்காவலர் என்ற பெயரில் தாக்குவது இந்துத்துவாக்கு எதிரானது'- மோகன் பகவத்

புத்தக வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய மோகன் பகவத், இஸ்லாமியர்களை இந்தியாவை விட்டு வெளியேறுமாறு கூறுபவர்கள் தங்களை இந்துக்கள் எனக் கூறிக்கொள்ளத் தகுதியற்றவர்கள் என்றும் இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பில்லை என்ற அச்சத்தை சிலர் உருவாக்க நினைப்பதாகக் குற்றஞ்சாட்டி அதுபோன்ற தவறான பரப்புரையில் முஸ்லீம்கள் சிக்கிக்கொள்ளக்கூடாது என்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கேட்டுக்கொண்டார். மேலும், பசுக்காவலர்கள் என்ற பெயரில் தாக்குதல் நடத்துவது இந்துத்துவாவுக்கு எதிரானது எனவும் தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:32 (IST) 05 Jul 2021
    சிபிஎஸ்இ கல்வி ஆண்டு இரண்டு பருவங்களாக பிரிப்பு

    சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி ஆண்டு இரண்டு பருவங்களாக பிரிக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்தள்ளது.



  • 22:30 (IST) 05 Jul 2021
    ஸ்டேன் சுவாமி மரணம் : முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

    பழங்குடியின மக்களின் உரிமைப் போராளியும் மனிதவுரிமைச் செயற்பாட்டாளருமான ஸ்டேன் சுவாமி மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன். அடித்தட்டு மக்களுக்காகப் போராடிய அவருக்கு நேர்ந்த துயரம் இனி எவருக்கும் நிகழக் கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.



  • 20:10 (IST) 05 Jul 2021
    தமிழகத்தில் இன்று ஒரே நாளில், 3,715 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில், 3,715 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தொற்று பாதிப்புக்கு 54 பேர் பலியாகியுள்ள நிலையில், 4029 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.



  • 19:08 (IST) 05 Jul 2021
    சுய வேலைவாய்ப்பு திட்டங்கள் விரைவுபடுத்தப்பட வேண்டும் - முதல்வர்

    குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், படித்த இளைஞர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் சுய வேலைவாய்ப்பு திட்டங்கள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என கூறியுள்ளார்.



  • 18:45 (IST) 05 Jul 2021
    பாபா ராம்தேவ்க்கு எதிராக நாடு முழுவதும் வழக்கு

    அலோபதி மருத்துவம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த யோகா குழு பாபா ராம்தேவ்க்கு எதிராக நாடு முழுவதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.



  • 18:24 (IST) 05 Jul 2021
    அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஜூலை 9ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

    அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஜூலை 9ம் தேதி நடைபெற உள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல், சசிகலா ஆடியோ விவகாரம், கட்சியின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



  • 17:22 (IST) 05 Jul 2021
    சிவசங்கர் பாபாவின் பக்தைகள் 5 பேருக்கு நிபந்தனை முன் ஜாமின்- உயர்நீதிமன்றம்

    பள்ளி மாணவிகள் அளித்த பாலியல் புகாரில் பள்ளியின் நிறுவன சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு உடந்தையாக இருந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ள பள்ளி ஆசிரியை தீபா வெங்கட்ராமன், ஜானகி, கருணாம்பிகை, திவ்யா, பாரதி ஆகியோருக்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 17:03 (IST) 05 Jul 2021
    சினிமாவை ஒழிப்பது தான் பாஜக அரசின் நோக்கமா? - தங்கர் பச்சான் கேள்வி

    ஒளிப்பதிவாளர், இயக்குனர் தங்கர்பச்சான், “என் படத்தை டெல்லியில் இருந்து ஒரு குழு நினைத்தால் முடக்கலாம் என நினைப்பது எவ்வளவு பயங்கரமானது? தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தை அழித்தது போதாதா? சினிமாவை ஒழிப்பதுதான் பாஜக அரசின் நோக்கமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.



  • 16:59 (IST) 05 Jul 2021
    தொழிற்படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்கள் 10%-க்கும் குறைவாக உள்ளனர் - ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் பேட்டி

    ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் பேட்டி: “தொழிற்படிப்புகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 10%-க்கும் கீழ் உள்ளது. அவர்கள் தொழிற்படிப்புகளில் சேர முடியாமல் போவதற்கு பல காரணிகள் உள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.



  • 16:59 (IST) 05 Jul 2021
    தொழிற்படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்கள் 10%-க்கும் குறைவாக உள்ளனர் - ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் பேட்டி

    ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் பேட்டி: “தொழிற்படிப்புகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 10%-க்கும் கீழ் உள்ளது. அவர்கள் தொழிற்படிப்புகளில் சேர முடியாமல் போவதற்கு பல காரணிகள் உள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.



  • 16:44 (IST) 05 Jul 2021
    நீட் தேர்வு குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழு தேவையில்லாதது - கரு.நாகராஜன்

    நீட் தேர்வு குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழு தேவையில்லாதது, அதனால் ஒரு உபயோகமும் இல்லை குழுவுக்கு எதிராக பாஜக தொடர்ந்த வழக்கு, கொள்கை ரீதியிலானது அல்ல, சட்டப் பூர்வமான போராட்டம் என - பா.ஜ.க. பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் கூறியுள்ளார்.



  • 16:43 (IST) 05 Jul 2021
    கொரோனாவில் இருந்து மீண்டுவர சிறந்த நம்பிக்கையாக விளங்குவது தடுப்பூசி - மோடி

    'கோவின்' உலகளாவிய கருத்தரங்கில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, உலகில் கடந்த 100 ஆண்டுகளில் கொரோனா பெருந்தொற்றுக்கு இணையான ஒன்று எதுவும் இல்லை * பெருந்தொற்றிலிருந்து வெற்றிகரமாக மீண்டுவர மனித குலத்திற்கு சிறந்த நம்பிக்கையாக விளங்குவது தடுப்பூசியே என கூறியுள்ளார்.



  • 16:21 (IST) 05 Jul 2021
    மகாராஷ்டிரா: 12 பாஜக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்

    மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் கண்ணியக்குறைவாக நடந்துகொண்டாக கூறி 12 பாஜக எம்எல்ஏக்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.



  • 16:20 (IST) 05 Jul 2021
    அரசு பேருந்தை இயக்கிய அமைச்சர் சிவசங்கர்

    அரியலூர் மாவட்டம் ஆனந்தவாடி கிராமத்தில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தி்ற்கு பேருந்தை இயக்கி புதிய நகர அரசு பேருந்து சேவையை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.



  • 16:19 (IST) 05 Jul 2021
    அரசு பேருந்தை இயக்கிய அமைச்சர் சிவசங்கர்

    அரியலூர் மாவட்டம் ஆனந்தவாடி கிராமத்தில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தி்ற்கு பேருந்தை இயக்கி புதிய நகர அரசு பேருந்து சேவையை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.



  • 16:15 (IST) 05 Jul 2021
    புதுக்கோட்டையில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம்

    அதிமுக கட்சியில் மாவட்ட அளவில் சசிகலாவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில், புதுக்கோட்டையில் ச‌சிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.



  • 15:51 (IST) 05 Jul 2021
    மகாராஷ்டிரா: 12 பாஜக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்

    மகாராஷ்டிரா சட்டசபையில் கண்ணிய குறைவாக நடந்துக்கொண்டதாக கூறி, பாஜகவைச் சேர்ந்த 12 எம்.எல்.ஏக்களை சஸ்பெண்ட் செய்து அந்த மாநில சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.



  • 15:30 (IST) 05 Jul 2021
    சமூக ஆர்வலர் ஸ்டான் சுவாமி மரணம்

    சமூக ஆர்வலரும் பழங்குடிகளுக்காக குரல் கொடுத்தவருமான ஸ்டான் சுவாமி உடல்நலக்குறைவால் காலமானார். எல்கர் பரிஷித் வழக்கில் மும்பை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஸ்டான் சுவாமிக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டிருந்த நிலையில், ஸ்டான் சுவாமி மரணம் அடைந்துள்ளார்.



  • 15:27 (IST) 05 Jul 2021
    அரசு கட்டிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை அவசியம்

    மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி அரசு கட்டிடங்கள் கட்டக்கூடாது என்று கூறிய உயர் நீதிமன்றம், மாநிலம் முழுவதும் உள்ள அரசு கட்டிடங்கள் மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் உள்ளதா என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.



  • 14:57 (IST) 05 Jul 2021
    ஏடிஎம் கொள்ளை விவகாரத்தில் 30 வங்கி கணக்குகள் முடக்கம்

    வங்கி ஏடிஎம் கொள்ளை விவகாரத்தில் சென்னை போலீசார் 30 வங்கி கணக்குகளை முடக்கி உள்ளனர். ஒரு கோடி ரூபாய் வரை வங்கி ஏடிஎம்களில் இருந்து பணம் கொள்ளையடித்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 14:09 (IST) 05 Jul 2021
    தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கை நிலை

    தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கை நிலை தொடர்பாக வரும் 18-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தெரிவித்துள்ளார்.



  • 13:58 (IST) 05 Jul 2021
    பாலியல் வன்கொடுமை

    இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியாரில் 6 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த நபர் அக்குழந்தையை கொன்று தூக்கில் தொங்க விட்ட கொடூரம் கேரளாவில் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக 22 வயது அர்ஜூன் கைது செய்யப்பட்டுள்ளார்.



  • 13:56 (IST) 05 Jul 2021
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் 28ம் கட்ட விசாரணை துவக்கம்

    2018ம் ஆண்டு மே 22, மே 23 தேதிகளில் பணிகளில் இருந்த 102 காவலர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 10 நாட்களுக்கு அருணா ஜெகதீசன் விசாரணை மேற்கொள்ள உள்ளார்.



  • 13:36 (IST) 05 Jul 2021
    இ-பட்ஜெட் : சபாநாயகர் அப்பாவு விளக்கம்

    இ-பட்ஜெட் தொடர்பாக விரைவில் நல்ல முடிவு வரும் என்றும், நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ற வகையில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார்.



  • 13:27 (IST) 05 Jul 2021
    9 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு

    சேலம், தருமபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



  • 13:25 (IST) 05 Jul 2021
    தேனியில் உயிரிழந்த குழந்தை - விசாரணைக்கு உத்தரவு

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை இறந்ததாக கூறி பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், உயிருடன் அந்த குழந்தை இருந்ததால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. இருப்பினும் தீவிர சிகிச்சைக்கு பிறகு அக்குழந்தை உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தேனி அரசு மருத்துவமனைக்கு மாவட்ட ஆட்சியர் முரளிதரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.



  • 13:17 (IST) 05 Jul 2021
    ஐ.பி.எல். 2022-ல் மேலும் இரண்டு புதிய அணிகள்

    ஐ.பி.எல். 2022 ஆம் ஆண்டுக்கான சீசனில் மேலும் இரண்டு அணிகள் புதிதாக இணைய உள்ளனர். அதற்கான டெண்டர் கோரும் பணிகள் அடுத்த மாதம் துவங்க உள்ளது. அதான், நடிகர் மோகன்லால் ஆகியோர் புதிய அணிகளை ஏலம் எடுக்க தீவிரம் காட்டி வருவதாக தெரிய வந்துள்ளது.



  • 13:16 (IST) 05 Jul 2021
    விலங்குகளுக்கும் கொரோனா தடுப்பூசி!

    கொரோனா தொற்று விலங்குகளுக்கும் ஏற்படுகின்ற நிலையில் அமெரிக்காவில் கால்நடைத்துறை மருத்துவர்கள் விலங்குகளுக்கும் கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.



  • 12:50 (IST) 05 Jul 2021
    ஏ.கே. ராஜன் குழுவுக்கு எதிரான வழக்கு

    நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து அறிய தமிழக அரசு உருவாக்கிய, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவுக்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.



  • 12:32 (IST) 05 Jul 2021
    100 மீனவ கிராமங்களை இணைக்கும் பேருந்து

    திருவெற்றியூரில் இருந்து கோவளம் வரையில் இருக்கும் 100 மீனவ கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில் புதிய வழித்தடங்களில் அரசு பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 4 முறை இரண்டு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.



  • 12:18 (IST) 05 Jul 2021
    நடிகர் சூர்யாவை மிரட்டுவது கோழைத்தனம் - கே.பாலகிருஷ்ணன்

    நடிகர் சூர்யாவை மிரட்டும் நோக்கில் தீர்மானம் போட்ட பாஜகவின் செயல் கோழைத்தனத்தின் வெளிப்பாடு. ஒளிப்பதிவு சட்ட திருத்தம் (2021) பற்றிய விமர்சனங்களை நியாயமான முறையில் முன்வைக்கிறார் நடிகர் சூர்யா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.



  • 12:10 (IST) 05 Jul 2021
    2021-22 ஆண்டுக்கான நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு

    பாமக சார்பில் 2021-22 நிதி ஆண்டுக்கான பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இந்த அறிக்கையை வெளியிட்டனர்.



  • 12:09 (IST) 05 Jul 2021
    கடலூரில் கொட்டித் தீர்த்த கனமழை

    கடலூரில் நேற்று நள்ளிரவு பெய்த கனமழை காரணமாக தோட்டப்பட்டு பகுதியில் வைக்கப்பட்டிருந்த 1000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் நனைந்து சேதம் அடைந்தது.



  • 11:59 (IST) 05 Jul 2021
    Village Cooking Channel ரூ.10 லட்சம் கொரோனா நிவாரண நிதி

    யூடியூபில் 1 கோடி சப்ஸ்க்ரைபர்ஸ்களை பெற்ற முதல் யூடியூப் சேனல் என்ற பெருமையை பெற்ற Village Cooking Channel, 10 லட்சம் கொரோனா நிவாரண நிதி கொடுத்திருக்கின்றனர்.



  • 11:42 (IST) 05 Jul 2021
    2021-22ம் ஆண்டுக்கான பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு

    பாமக சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 2021-22-ம் ஆண்டுக்கான பொது நிழல் நிதிநிலை அறிக்கையை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வெளியிட்டனர்.



  • 11:31 (IST) 05 Jul 2021
    டாஸ்மாக் கடைகள் திறப்பு

    சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. நீண்ட வரிசையில் காத்திருந்து மது வாங்கி செல்கிறார்கள் மதுப்பிரியர்கள்.



  • 10:55 (IST) 05 Jul 2021
    ரவி சாஸ்திரியை நீக்க வேண்டிய அவசியமில்லை

    "முதலில் இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர் முடியட்டும். அப்போதுதான் நம்முடைய புதிய அணி எப்படி இருக்கிறது என்பது தெரியும். அதற்கு முன் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து ரவி சாஸ்திரியை நீக்க வேண்டிய அவசியமில்லை" என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.



  • 10:01 (IST) 05 Jul 2021
    ராமேஸ்வரம் இடையே ஜூலை 14ம் தேதி வரை ரயில்கள் இயங்காது

    பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணி நடப்பதால் மண்டபம்-ராமேஸ்வரம் இடையே ஜூலை 14ம் தேதி வரை ரயில்கள் இயக்கப்படாது என்றும் திருச்சியிலிருந்து செல்லும் சிறப்பு ரயில் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்திருக்கிறது.



  • 09:41 (IST) 05 Jul 2021
    மியான்மரில் துப்பாக்கி சூடு

    மியான்மரில் போராட்டம் நடத்தியவர்கள் மீது ராணுவம் சரமாரியான துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில், 25 பேர் உயிரிழந்துள்ளனர். 50 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.



  • 09:32 (IST) 05 Jul 2021
    கஜேந்திர செகாவத்தை இன்று சந்திக்கும் துரைமுருகன்

    மேகதாது அணை கட்டுவதை ஏற்க முடியாது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில், மத்திய அமைச்சர் கஜேந்திர செகாவத்தை இன்று சந்திக்கிறார் தமிழக நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன்.



  • 09:06 (IST) 05 Jul 2021
    தமிழகம் முழுவதும் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு

    சுமார் இரண்டு மாதங்களுக்கு பிறகு மதுரை மீனாட்சி, பழனி உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



Stalin Lockdown
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment