Advertisment

Tamil News Highlights : சி.பி.எஸ்.இ 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து

Latest Tamilnadu News Live ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 90-க்கும் குறைந்திருந்தால் மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதி

author-image
WebDesk
New Update
Tamil News Highlights : சி.பி.எஸ்.இ 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து

Tamil News Today : ஜூன் மாத ரேஷன் பொருட்களைப் பெற டோக்கன் விநியோகம் - தமிழக அரசு

Advertisment

தமிழக ரேஷன் கடைகளில் பொருட்களைப் பெற மக்களின் வீடுகளுக்குச் சென்று இன்று முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படுகின்றன. நாளை முதல் 4 நாட்களுக்கு வீடுகளுக்குச் சென்று டோக்கன் வழங்கப்படும் என்றும், குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்குச் சென்று  நியாய விலை கடை ஊழியர்கள் டோக்கன் வழங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தோற்று சிகிச்சைக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 94-க்கும் அதிகமாக இருந்தால் மருத்துவமனையில் அனுமதிக்கக் கூடாது என்றும் வீட்டுத் தனிமைப்படுத்துதலில் அனுமதிக்கவேண்டும் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள கொரோனா சிகிச்சைக்கான புதிய வழிகாட்டு நெறிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 90-க்கும் குறைந்திருந்தால் மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதி கிடைக்கும் என்றும், ஆக்சிஜன் படுக்கைகளைப் பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் படுக்கைகள், ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின்

கொரோனா முதல் அலையைக் கட்டுப்படுத்த தவறியதால், 2-வது அலையை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது என்றும் அதனால் தமிழகத்தின் பொருளாதாரத்திற்கும், மருத்துவ கட்டமைப்புக்கும் 2-வது அலை கடும் நெருக்கடியைக் கொடுத்திருக்கிறது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் படுக்கைகள், ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்ற நிலையை மிகவும் குறுகிய காலத்தில் தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது என்றும் காணொளி வாயிலாக மக்களுக்குத் தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 21:01 (IST) 01 Jun 2021
    தமிழகத்தில் இன்று 26,513 பேருக்கு கொரோனா உறுதி

    தமிழகத்தில் இன்று 26,513 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் கொரோனாவால் 490 பேர் உயிரிழந்துள்ளனர்.

    தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 21.23 லட்சமாக உயர்வு - மொத்த உயிரிழப்பு 24,722



  • 20:53 (IST) 01 Jun 2021
    தமிழகத்தில் இன்று 26,513 பேருக்கு கொரோனா உறுதி

    தமிழகத்தில் இன்று 26,513 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் கொரோனாவால் 490 பேர் உயிரிழந்துள்ளனர்.

    தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 21.23 லட்சமாக உயர்வு - மொத்த உயிரிழப்பு 24,722



  • 20:21 (IST) 01 Jun 2021
    சி.பி.எஸ்.இ 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இந்த ஆண்டு சிபிஎஸ்இ வாரிய தேர்வை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.



  • 19:35 (IST) 01 Jun 2021
    தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வமுடன் வருகிறார்கள், அரசு கட்டாயப்படுத்தவில்லை -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வமுடன் வருகிறார்கள், அரசு கட்டாயப்படுத்தவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழக அரசுக்கு 4.95 லட்சம் தடுப்பூசிகள் இன்று வந்துள்ளன. ஆயிரம் கோவாக்சின் டோஸ்களும் வந்துள்ளன. தற்போது, 6.5 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தடுப்பூசிகள் தேவைப்படும் மாவட்டங்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும்.

    மக்கள் தொகைக்கு ஏற்ப மாவட்டங்களுக்கு தடுப்பூசி விநியோகம் செய்யப்படும். மத்திய அரசு தொகுப்பிலிருந்து மேலும் 42 லட்சம் தடுப்பூசிகள் வரவுள்ளன. கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகள் திறக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.



  • 18:29 (IST) 01 Jun 2021
    12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை

    12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். அதில் மாநிலங்கள் எழுத்துப்பூர்வமாக அளித்த கருத்துக்களை கேட்டறிந்தார். ஆலோசனையில் அமித்ஷா, பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.



  • 18:12 (IST) 01 Jun 2021
    இட ஒதுக்கீட்டின் கீழ் பணி பெற மதம் மாறியது கண்டுபிடிக்கப்பட்டால் பணி நீக்கம்

    பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டின் கீழ் பணி பெற மதம் மாறியது கண்டுபிடிக்கப்பட்டால் பணி நீக்கம் செய்யப்படும் என்று பல்கலைக்கழகங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.



  • 17:08 (IST) 01 Jun 2021
    கொரோனா நோயாளிகள் டிஸ்சார்ஜ் தொடர்பாக, சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

    கொரோனா நோயாளிகள் டிஸ்சார்ஜ் தொடர்பாக, சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

    லேசான அறிகுறி, அறிகுறி இல்லாத நோயாளிகள் 3 நாட்களுக்கு பிறகு, 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்த பரிந்துரைக்கலாம்.

    மிதமான அறிகுறிகள் உள்ள நோயாளிகளை 10 நாட்கள் சிகிச்சைக்குப் பின் டிஸ்சார் செய்யலாம்.

    2 வகையான நோயாளிகளுக்கும் உடல்நிலையை பொறுத்து மருத்துவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழிகாட்டு நெரிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.



  • 16:46 (IST) 01 Jun 2021
    4.2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் இன்று மாலை சென்னை வருகிறது - சுகாதாரத்துறை தகவல்

    4.2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் இன்று மாலை சென்னை வருகிறது என்று தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.



  • 16:40 (IST) 01 Jun 2021
    தமிழகத்தில் 518 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிப்பு - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத் துறை அமைச்ச்சர் மா.சுப்பிரமணியன், “கருப்பு பூஞ்சை எதனால் வருகிறது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ராஜீவ் காந்தி மருத்துவனையில் கருப்பு பூஞ்சை பரிசோதனை மையம் திறக்கப்பட்டுள்ளது. அனைத்து பரிசோதனைகளையும் ஒரே இடத்தில் மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கருப்பு பூஞ்சை பற்றி ஆராய 13 மருத்துவ வல்லுநர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 518 பேர் கருப்பு பூஞ்சையால் நோயால் பாதிகப்பட்டுள்ளனர்.” என்று கூறினார்.



  • 16:38 (IST) 01 Jun 2021
    தமிழகத்தில் 518 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிப்பு - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத் துறை அமைச்ச்சர் மா.சுப்பிரமணியன், “கருப்பு பூஞ்சை எதனால் வருகிறது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ராஜீவ் காந்தி மருத்துவனையில் கருப்பு பூஞ்சை பரிசோதனை மையம் திறக்கப்பட்டுள்ளது. அனைத்து பரிசோதனைகளையும் ஒரே இடத்தில் மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கருப்பு பூஞ்சை பற்றி ஆராய 13 மருத்துவ வல்லுநர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 518 பேர் கருப்பு பூஞ்சையால் நோயால் பாதிகப்பட்டுள்ளனர்.” என்று கூறினார்.



  • 15:42 (IST) 01 Jun 2021
    பிளஸ் 2 தேர்வு - பிரதமர் மாலை ஆலோசனை

    சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக துறை அதிகாரிகள் மற்றும் மாநில பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடி இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளார்.



  • 14:33 (IST) 01 Jun 2021
    மத்திய கல்வி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி

    மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில், அவருக்கு கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.



  • 13:51 (IST) 01 Jun 2021
    ”சரக்கு” வாட்ஸ்ஆப் குழு மூலம் மது விற்பனை செய்தவர்கள் கைது

    திருப்பத்தூர் அருகே வாட்ஸ்ஆப்பில் சரக்கு என்று க்ரூப் ஒன்றை ஆரம்பித்து மதுபானம் விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



  • 13:48 (IST) 01 Jun 2021
    மேலும் மூன்று நாட்களுக்கு போலீஸ் காவல்

    பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனுக்கு மூன்று நாள் போலீஸ் காவல் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ராஜகோபாலனை மீண்டும் ஜூன் 3ம் தேதி அன்று ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு.



  • 13:41 (IST) 01 Jun 2021
    வட தமிழக மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை

    வட தமிழக மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழைக்கு இன்று வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.



  • 13:39 (IST) 01 Jun 2021
    கொரோனா நிவாரண நிதி வழங்கும் தமிழிசை சௌந்தரராஜன்

    புதுச்சேரி ராஜ்நிவாஸில் இன்று சுகாதாரத்துறை தொழிலாளர்கள், ஆட்டோ மற்றும் ரிக்ஷா ஓட்டுநர்களுக்கு தேவையான கொரோனா நிவாரணப் பொருட்களை வழங்கினார் அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.

    Glad to distribute Covid Relief Materials to the Sanitary workers, Auto & Rikshaw Owners at RajNivas, puducherry.

    Alongside Secretary- Industry, Health & Team.

    This will be a token of gratitude towards the person who play a huge role in providing their services to the society. pic.twitter.com/IDuzx1Ehgx

    — Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) June 1, 2021


  • 13:30 (IST) 01 Jun 2021
    கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் பணியாற்ற அனுமதி

    இன்று முதல் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் தொலைத்தொடர்பு பணியாளர்கள் வெளியே சென்று பணியாற்றலாம் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்துள்ளார். மக்களுக்கு தங்கு தடையின்றி சேவைகள் கிடைக்க பரீசிலிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதற்கு இணங்க இம்முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் கூறியுள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அடையாள அட்டையை காண்பித்து பணி மேற்கொள்ளலாம் என்றார் அவர்.



  • 13:07 (IST) 01 Jun 2021
    தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஓரிரு நாட்களில் முடிவு

    பள்ளி திறப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்து ஓரிரு நாட்களில் முடிவு அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.



  • 12:42 (IST) 01 Jun 2021
    ரூ.100-ஐ தாண்டிய பெட்ரோல் விலை

    கடந்த மாதத்தில் மட்டும் 16 முறை பெட்ரோல் விலை உயர்ந்துள்ள நிலையில் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 3.33 வரை உயர்ந்துள்ளது. டீசல் விலை ரூ. 4.15 வரை உயர்ந்துள்ளது.



  • 12:40 (IST) 01 Jun 2021
    ஜகமே தந்திரம்

    தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள ஜகமே தந்திரம் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.



  • 12:34 (IST) 01 Jun 2021
    மாணவிகளுக்கு பாலியல் தொல்லை : 3 பள்ளிகளுக்கு நோட்டீஸ்

    சென்னை அடையாறு பகுதியில் அமைந்திருக்கும் மத்திய அரசு பள்ளி, கேளம்பாக்கம் மற்றும் நாமக்கலில் ஒரு பள்ளி என மூன்று பள்ளிகளுக்கு மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாலியல் தொல்லை குறித்து மாணவிகள் அனுப்பிய புகாரை தொடர்ந்து நடவடிக்கை.



  • 11:39 (IST) 01 Jun 2021
    கோபாலபுரம் தனியார் மருத்துவமனைக்கு சம்மன்

    முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது திரைப்பட நடிகை பாலியல் புகார் அளித்த விவகாரத்தில், கருக்கலைப்பு செய்ததாக கூறப்படும் கோபாலபுரம் தனியார் மருத்துவமனைக்கு சம்மன் அனுப்ப காவல்துறையினர் திட்டம் தீட்டியுள்ளனர். மேலும், வழக்கு பதிவான ஆறு பிரிவுகளுக்கும் ஆதாரங்களை திரட்டி வருகின்றனர்.



  • 11:37 (IST) 01 Jun 2021
    தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,27,510 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது . இது கடந்த ஏப்ரல் 9-ம் தேதிக்கு பிறகு குறைந்த எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.



  • 11:35 (IST) 01 Jun 2021
    வைகை அணை விரைவில் திறக்கப்படும்

    வைகை அணையை வரும் 4-ம் தேதி திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். பாசன வசதிக்காக 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்றும் வினாடிக்கு 6,739 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்படும் என்றும் மேலும் கூறினார்.



  • 11:07 (IST) 01 Jun 2021
    தமிழகத்தில் ஊரடங்கு முடிந்த பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பு

    ஊரடங்கு முடிந்த பிறகு தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்படும் என்றும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கும் பணியை செய்யவேண்டும் என்றும் தொடக்க கல்வி இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.



  • 10:47 (IST) 01 Jun 2021
    பாபா ராம்தேவை கண்டித்து இன்று கருப்பு தினம் அனுசரிப்பு

    கடந்த சில நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய யோகா குரு பாபா ராம்தேவ், அலோபதி மருத்துவம் என்பது முட்டாள்தனமான அறிவியல் என்று கருத்து தெரிவித்தார். இதற்கு நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள், மருத்துவ சங்க அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, பாபா ராம்தேவ் மன்னிப்பு கோரினார். எனினும் அவரை கண்டித்து இன்று (ஜூன் 1) கருப்பு தினம் அனுசரிக்க மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு (FORDA INDIA) முடிவு செய்துள்ளது.



  • 10:39 (IST) 01 Jun 2021
    டெல்லியில் மதுபானங்களை வீட்டிற்கே சென்று விற்பனை

    செயலி, ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தால் இந்திய மற்றும் வெளிநாட்டு மதுபானங்கள் வீட்டிற்கே சென்று விநியோகம் செய்வதற்கு செல்லி அரசு அனுமதித்திருக்கிறது.



  • 10:12 (IST) 01 Jun 2021
    தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

    வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சியால், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.



  • 09:35 (IST) 01 Jun 2021
    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகிய நவோமி ஒசாகா

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நடைபெற்று வரும் நிலையில், போட்டி அமைப்பு குழுவின் விதிமுறையை மதிக்காமல் நடந்து கொண்ட நவோமி ஒசாகாவுக்கு ரூ.11 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில், பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து நவோமி ஒசாகா விலகுவதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.



  • 09:31 (IST) 01 Jun 2021
    முன்களப்பணியாளர்களுக்கு வஜ்ரா கவசம்!

    மருத்துவ உபகரணங்களில் இருக்கும் தொற்றுக்களை நீக்குவதற்காக வஜ்ரா கவசம் என்ற இயந்திரத்தை மும்பையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது. இந்த கிருமி நாசினி அமைப்பு முறை, முழு உடல் கவசம், N95 முகக் கவசங்கள், உடைகள், கையுறைகள் போன்றவற்றில் தென்படும் தொற்றின் தடயங்கள் முழுவதையும் நீக்கும்.



Corona Stalin Ration Card
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment