Advertisment

Tamil News Highlights: டெல்லியில் ஸ்டாலின்; ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பு

Latest Tamil News : நாளை முதல் காலை 7 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும்.

author-image
WebDesk
New Update
Tamil News Highlights: டெல்லியில் ஸ்டாலின்; ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பு

Tamil News : தமிழ்நாட்டில் கடந்த 2 மாதங்களில் போடப்பட்ட தடுப்பூசிகள் விவரத்தை வெள்ளை அறிக்கையாக வெளியிடுமாறு மாநில அரசை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், மத்திய அரசால் கடந்த 2 மாதத்தில் தமிழ்நாட்டிற்கு எத்தனை தடுப்பூசிகள் வழங்கப்பட்டது, அவை எத்தனை பேருக்கு போடப்பட்டது, யார் யாருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது, மாவட்டங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட தடுப்பூசிகள் எத்தனை என்பது உள்ளிட்ட தகவல்களை வெள்ளை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்.

Advertisment

தமிழ்நாட்டில் டிசம்பருக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்

தமிழ்நாட்டில் டிசம்பர் இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்றும் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும்  நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவை

சென்னையில் நாளை முதல் காலை 7 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது காலை 7 மணியிலிருந்து இரவு 9 மணி வரை இயக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ரயில் சேவை நேரம் இப்போது 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், வார இறுதி நாள்களிலும், பொது விடுமுறை நாள்களிலும் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வறுமை முற்றிலும் ஒழியும் -நாராயண மூர்த்தி நம்பிக்கை

இந்தியாவில் அடுத்து 50 ஆண்டுகளில் வறுமை, ஊட்டச்சத்து பற்றாக்குறை போன்றவை முற்றிலும் அடியோடு ஒழியும் என இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார். கவுகாத்தி ஐஐடி பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய அவர், இந்த இலக்கை எட்டுவது அவ்வளவு சுலபம் இல்லை. பல சவால்களுக்கு இடையில் பொறுப்புடன் இந்த இலக்கை அடைய முயற்சிகளை முன்னெடுத்தால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்று தெரிவித்தார்.

பெட்ரோல் டீசல் விலை

சென்னையில் விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டர் ரூ.102.49-க்கும், டீசல் லிட்டர் ரூ.94.39-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 00:00 (IST) 19 Jul 2021
    பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக சித்து நியமனம் - சோனியா காந்தி உத்தரவு

    பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவை நியமித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார். சங்கத் சிங், சுக்விந்தர் சிஞ், பவன் கோயல், குல்ஜித் சிங் ஆகிய 4 பேர் செயல் தலைவர்களாகவும் நியமனம் செய்துள்ளார்.



  • 22:15 (IST) 18 Jul 2021
    இலங்கையை வீழ்த்திய இந்திய இளம் கிரிக்கெட் அணி

    இந்தியா - இலங்கை அணிகள் இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய இந்திய அணி 36.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது. இஷான் கிஷன், ஷிகர் தவான் ஆகியோர் அரை சதம் அடித்தனர். இந்திய இளம் கிரிக்கெட் வீரர்கள் இலங்கை அணியை மிகவும் எளிதாக வீழ்த்தியுள்ளனர்.



  • 21:34 (IST) 18 Jul 2021
    எதிர்க்கட்சிகளின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் - பிரதமர் மோடி

    நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று உறுதி கூறினார்.



  • 19:26 (IST) 18 Jul 2021
    தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் உயர்வு - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

    தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: “தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் ஆண்டுக்கு சராசரியாக ரூ.2.5 லட்சமாக உயர்ந்துள்ளது. ஆனால், வடமநிலங்களில் இன்னும் ரூ.75 ஆயிரம் என்ற அளவில்டஹன் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.



  • 19:24 (IST) 18 Jul 2021
    தொற்று முடிவுக்கு வரவில்லை -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்: “மக்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டுதான் தளர்வுகள் அளிக்கப்பட்டன; தொற்று முடிவுக்கு வரவில்லை; தொற்று முடிவுக்கு வந்துவிட்டது என்ற எண்ணம் இருக்கக் கூடாது. மாவட்ட அளவில் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது; தினசரி கொரோனா பாதிப்பு நாளை 2000க்கும் கீழ் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2.5 மாதத்தில் 33 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன்; இன்னும் 5 மாவட்டத்திற்கு சென்றால் அனைத்து மாவட்டத்திற்கும் சென்ற அமைச்சராக இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.



  • 19:22 (IST) 18 Jul 2021
    தொற்று முடிவுக்கு வரவில்லை -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்: “மக்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டுதான் தளர்வுகள் அளிக்கப்பட்டன; தொற்று முடிவுக்கு வரவில்லை; தொற்று முடிவுக்கு வந்துவிட்டது என்ற எண்ணம் இருக்கக் கூடாது. மாவட்ட அளவில் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது; தினசரி கொரோனா பாதிப்பு நாளை 2000க்கும் கீழ் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2.5 மாதத்தில் 33 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன்; இன்னும் 5 மாவட்டத்திற்கு சென்றால் அனைத்து மாவட்டத்திற்கும் சென்ற அமைச்சராக இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.



  • 18:12 (IST) 18 Jul 2021
    டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திப்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, மு.க.ஸ்டாலின் நாளை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார்.



  • 17:26 (IST) 18 Jul 2021
    ஸ்டேன் சுவாமியின் அஸ்திக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    சென்னை லயோலா கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள மனித உரிமை செயற்பாட்டாளர் மறைந்த ஸ்டேன் சுவாமியின் அஸ்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.



  • 16:25 (IST) 18 Jul 2021
    கூடுதல் தடுப்பூசிகளை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஒபிஎஸ் வலியுறுத்தல்

    2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை அடிப்படையில் மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசிகளை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.



  • 15:36 (IST) 18 Jul 2021
    நடிகர் தனுஷை டுவிட்டரில் பின் தொடர்வோர் எண்ணிக்கை 1 கோடியை கடந்த‌து

    நடிகர் தனுஷை டுவிட்டர் சமூகவலைதளத்தில் பின் தொடர்வோர் எண்ணிக்கை 1 கோடியை கடந்த‌து. தமிழ் திரையுலகில் 1 கோடிக்கும் அதிகமானோர் பின்தொடரும் முதல் பிரபலமானார் நடிகர் தனுஷ்.



  • 14:18 (IST) 18 Jul 2021
    மேகதாது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்படும் - டி.ஆர்.பாலு பேட்டி

    அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பின் திமுக மக்களவை குழுத்தலைவர் டி.ஆர்.பாலு அளித்த பேட்டியில், தமிழ்நாட்டின் பிரச்னைகளை பேச இருப்பது குறித்து தெரிவித்தோம். டீசல், பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக பேச இருப்பதாக தெரிவித்தோம். மேகதாது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்படும், அக்கூட்டத்தில் மத்திய அரசின் பதிலை தெரியுங்கள் என கூறினோம். மேகதாது அணை கட்ட மாட்டோம் என்று பிரதமர் நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும்; ஆனால், உறுதி அளிப்பாரா என்பது தெரியாது என்று கூறியுள்ளார்.



  • 13:52 (IST) 18 Jul 2021
    சென்னையில் புதிதாக மகளிர்கான 2 கலைக் கல்லூரி - அமைச்சர் சேகர் பாபு

    சென்னையில் புதிதாக மகளிர்கான 2 கலைக் கல்லூரிகள் அமைக்கப்படுமென அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.



  • 13:43 (IST) 18 Jul 2021
    சேலத்தில் பெண்களுக்கான இலவச பயண சீட்டில் முறைகேடு செய்த நடத்துநர்

    சேலத்தில் பெண்களுக்கான இலவச பயண சீட்டில் நடத்துநர் ஒருவர் முறைகேடு செய்துள்ளார். ஆண்களுக்கு பெண்களுக்கான பயணச்சீட்டை அளித்து பணம் வசூலித்துள்ளார்.அந்த நடத்துநர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.



  • 13:41 (IST) 18 Jul 2021
    பேனர் வைக்கும் கலாசாரத்தை அறவே கைவிடுங்கள்: ஆர்.எஸ்.பாரதி

    பேனர் வைக்கும் கலாசாரத்தை அறவே கைவிடுங்கள் என்றும் மீறினால் கட்சி நடவடிக்கை எடுக்கும் என்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி திமுகவினரை எச்சரித்துள்ளார்.



  • 12:19 (IST) 18 Jul 2021
    மழைக்காலக் கூட்டத்தொடர்: அனைத்துக்கட்சி கூட்டம் தொடக்கம்

    நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து டெல்லியின் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.



  • 12:18 (IST) 18 Jul 2021
    தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

    தமிழகத்தில் நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திருப்பூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.



  • 11:53 (IST) 18 Jul 2021
    37 வயது வீரரை வீழ்த்திய தமிழ்நாட்டின் செஸ் சாம்பியன்

    ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலக சதுரங்கப் போட்டியில் 2-வது சுற்றில் 37 வயது வீரரை வீழ்த்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 வயது இளம் வீரர் பிரக்ஞானந்தாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.



  • 11:50 (IST) 18 Jul 2021
    கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை விரட்டி அடித்தார்கள்

    கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். தங்களின் வலைகளை சேதப்படுத்தியதாக அவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.



  • 11:45 (IST) 18 Jul 2021
    தமிழகம் சோதனைக் களமோ சமூக நீதியின் பலி பீடமோ அல்ல : சு.வெங்கடேசன்

    "தேச நலனை, மக்கள் நலனை தாக்குவதற்கு தமிழ் நாடு சோதனைக் களமா? நான்கு அரசு பொது நிறுவனங்களும் அரசின் கைகளிலேயே தொடரட்‌டும்! தமிழ் நாட்டை தலைமையகமாகக் கொண்ட யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் பாதுகாக்கப்பட வேண்டும். இன்று நிதி அமைச்சருக்கு கடிதமும் எழுதியுள்ளேன்" என்று அமைச்சர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.



  • 11:06 (IST) 18 Jul 2021
    41,157 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,157 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 518 பேர் உயிரிழந்துள்ளனர்.



  • 11:02 (IST) 18 Jul 2021
    நீட் தேர்வுக்கு பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்கலாம்

    அரசு பள்ளி மாணவர்கள் அவரவர் பள்ளிகள் வாயிலாக நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் உரிய நடைமுறையை பின்பற்றி ஆகஸ்ட் 6-ம் தேதிக்குள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரையும் கூறியிருக்கிறது பள்ளிக்கல்வித் துறை.



  • 10:16 (IST) 18 Jul 2021
    மேகதாது அணை கட்டுவதற்கு வலுக்கும் எதிர்ப்பு

    மேகதாது அணை கட்டுவதற்கு நாள்தோறும் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சமீபத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.



  • 10:13 (IST) 18 Jul 2021
    ஒரு மணிநேரத்தில் 6 செ.மீ. மழை பதிவு

    தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு மணி நேரத்தில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.



  • 10:11 (IST) 18 Jul 2021
    அதிதீவிர புயல்கள் உருவாவது 150% அதிகரிப்பு

    அரபிக்கடலில் அதிதீவிர புயல்கள் உருவாவது கடந்த 40 ஆண்டுகளில் 150% அதிகரித்திருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும், வங்கக்கடலில் இது மாற்றமின்றி காணப்படுகிறது என்பதையும் கண்டறிந்துள்ளனர்.



  • 10:10 (IST) 18 Jul 2021
    அதிமுக ஆட்சியைவிட அதிகமாக தடுப்பூசி செலுத்துகிறோம்

    அதிமுக ஆட்சிக்காலத்தை விட தற்போது நாள்தோறும் சராசரியாக ஒரு லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருவதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.



  • 09:20 (IST) 18 Jul 2021
    அடுத்த 5 நாட்களுக்கு மழை

    தமிழகத்திற்கு அடுத்த 5 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



Covid 19 Vaccine Eps
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment