Advertisment

News Highlights: 18+ அனைவருக்கும் தடுப்பூசி; ஏப்-28 முதல் முன்பதிவு

News In Tamil Live இளைஞர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் தடுப்பூசி இலவசமாக கிடைப்பதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும் என்று பினராய் உறுதியளித்தார்.

author-image
WebDesk
New Update
News Highlights: 18+ அனைவருக்கும் தடுப்பூசி; ஏப்-28 முதல் முன்பதிவு

Latest Tamil News Live : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆசிஷ் கொரோனாவினால் மரணமடைந்துள்ளார். குர்கானில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்திருக்கிறார். இதனை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார் யெச்சூரி.

Advertisment

கொரோனா தடுப்பூசி இலவசம் என நான்கு மாநிலங்கள் அறிவிப்பு!

வரும் 1-ம் தேதி முதல் 18 வயதைக் கடந்த அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாகப் போடப்படும் என கேரளா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்கள் அறிவித்துள்ளன.

கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்துவதில் மாற்றமில்லை

கேரள மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 22 ஆயிரத்து 414 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில், திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன்,  கொரோனாவை சமாளிக்க அரசு வலுவான நெறிமுறையைப் பின்பற்றுகிறது என்றும் ஊரடங்கு விதிப்பது குறித்துப் பரிசீலிக்கவில்லை என்றும் ஆனால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் எனவும் கூறினார். மேலும், மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி இலவசம் என்ற நிலைப்பாட்டை மாற்ற முடியாது என்று தெரிவித்ததோடு, இளைஞர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் தடுப்பூசி இலவசமாக கிடைப்பதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும் என்றும் உறுதியளித்தார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 20:38 (IST) 22 Apr 2021
    ரூ.400 கோடி மதிப்பில், ஒரு கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளை வாங்க கர்நாடக அரசு ஒப்புதல்

    ரூ.400 கோடி மதிப்பில், ஒரு கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளை வாங்க கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 18 - 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசிகளை பயன்படுத்த திட்டம். கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 25,795 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.



  • 19:48 (IST) 22 Apr 2021
    தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி இலவசம் - தமிழக அரசு

    தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் மே 1ஆம் தேதி முதல் இலவச தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் எனவும் அதிகம் பாதித்த மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.



  • 19:46 (IST) 22 Apr 2021
    தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி இலவசம் - தமிழக அரசு

    தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் மே 1ஆம் தேதி முதல் இலவச தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் எனவும் அதிகம் பாதித்த மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.



  • 19:21 (IST) 22 Apr 2021
    தமிழகத்தில் இன்று புதிதாக 12,652 பேருக்கு கொரோனா பாதிப்பு

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 12,652 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,37,711 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 59 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.



  • 19:19 (IST) 22 Apr 2021
    புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் நாளை முதல் வரும் 27ஆம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிப்பு

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் நாளை முதல் வரும் 27ஆம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 25ஆம் தேதிக்குள் விடுதியை காலி செய்ய மாணவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.



  • 18:57 (IST) 22 Apr 2021
    மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் நாளை பிரதமர் மோடி ஆலோசனை

    நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.



  • 18:40 (IST) 22 Apr 2021
    பருவநிலை உச்சி மாநாட்டில் காணொலி மூலம் பங்கேற்கிறார் பிரதமர் மோடி

    பருவநிலை உச்சி மாநாட்டில் காணொலி மூலம் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி மாநாட்டில் பங்கேற்க உள்ளார். சீனா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கின்றனர். காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராட உறுதியான நடவடிக்கை தேவை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.



  • 18:25 (IST) 22 Apr 2021
    புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அனைத்து நிவாரண உதவிகளும் வழங்கப்படும் - தமிழக அரசு

    புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து நிவாரண உதவிகளும் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் வெளிமாநில தொழிலாளர்கள் அச்சம் அடைய வேண்டாம் எனவும், தற்போது தங்கியிருக்கும் இடங்களை விட்டு யாரும் வெளியேற வேண்டாம் எனவும் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது



  • 18:05 (IST) 22 Apr 2021
    ஏப்.28 முதல் கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு

    18 வயதிற்கு மேற்ப்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான முன்பதிவு ஏப்ரல் 28ஆம் தேதி முதல் தொடங்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் தெரிவித்துள்ளார்.



  • 17:55 (IST) 22 Apr 2021
    மோடி பிரச்சாரம் ரத்து

    இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பை கட்டப்படுத்தும் நோக்கில் புதிய கட்டப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மேற்கு வங்க தேர்தல் பிரசார பயணத்தை செய்தார் பிரதமர் மோடி ரத்து செய்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, உயர்மட்ட குழுவுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.



  • 17:53 (IST) 22 Apr 2021
    மதுரை அழகர் கோவில் தேரோட்டத்திற்கு தடை

    தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பை கட்டப்படுத்தும் நோக்கில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மதுரை அழகர் கோவிலில் பவுர்ணமி அன்று ஆடி தேரோட்டம் நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.ஃ



  • 17:51 (IST) 22 Apr 2021
    அமைச்சர் ஜெயக்குமார் மனு

    தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் மே 2ந் தேதி தொடங்கவுள்ள நிலையில், தபால் வாக்குகள் எண்ணுவதற்கான நடைமுறையை மே 2 ஆம் தேதிதான் தொடங்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்துள்ளார்.



  • 16:15 (IST) 22 Apr 2021
    ரெம்டெசிவர், ஆக்சிஜன், கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இல்லை; தமிழக அரசு திட்டவட்டம்!

    தமிழகத்தில் ரெம்டெசிவர், ஆக்சிஜன், கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இல்லை என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், 1167 டன் ஆக்சிஜன் இருப்பு உள்ளது. இதனால், ஆந்திரா, தெலுங்கானாவுக்கு 45 டன் ஆக்சிஜன் அனுப்பியதால் எந்த பாதிப்பும் இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.



  • 16:12 (IST) 22 Apr 2021
    மாநிலங்களுக்கிடையே ஆக்சிஜன் கொண்டு செல்ல தடை இருக்கக் கூடாது; உள்துறை அமைச்சகம்

    டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவி வரும் சூழலில், மருத்துவ ஆக்சிஜனை ஒரு மாநிலத்தில் இருந்து, மற்றொரு மாநிலத்திற்கு கொண்டு செல்ல தடை இருக்கக்கூடாது, என மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனாவின் 2வது அலையை கருத்தில் கொண்டு தடையில்லா ஆக்சிஜன் கிடைக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.



  • 15:15 (IST) 22 Apr 2021
    அந்தமான் நிக்கோபாரில் நில நடுக்கம்!

    அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.



  • 14:47 (IST) 22 Apr 2021
    அமர்நாத் புனித யாத்திரைக்கு தடை!

    இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்துள்ள நிலையில், நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலைமை சீராகும் வரை, அமர்நாத்துக்கு புனித யாத்திரை செல்ல பக்தர்களுக்கு தடை விதித்து, அமர்நாத் கோயில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.



  • 14:39 (IST) 22 Apr 2021
    பேருந்துகளில் மாஸ்க் அணியாவிட்டால் வழக்குப்பதிவு; சென்னை காவல் ஆணையர்!

    சென்னையில் மாநகரப் பேருந்துகளில் பயணிப்போர் மாஸ்க் அணியாவிட்டால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் எச்சரித்துள்ளார்.



  • 14:39 (IST) 22 Apr 2021
    பேருந்துகளில் மாஸ்க் அணியாவிட்டால் வழக்குப்பதிவு; சென்னை காவல் ஆணையர்!

    சென்னையில் மாநகரப் பேருந்துகளில் பயணிப்போர் மாஸ்க் அணியாவிட்டால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் எச்சரித்துள்ளார்.



  • 14:25 (IST) 22 Apr 2021
    செவிலியர் பற்றாக்குறையால் திணறும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை!

    சென்னைக்கு அடுத்தப் படியாக, அதிகம் கொரோனா பாதித்த மாவட்டங்களில் செங்கல்பட்டு முதலிடம் பிடித்துள்ளது. அங்குள்ள அரசு மருத்துவமனையில், 152 நிரந்திர செவிலியர்கள் மட்டுமே பணியில் இருப்பதாகவும், 800-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததால், செவிலியர் பற்றாக்குறையால் மருத்துவமனை நிர்வாகம் திணறி வருவதாக புகார் எழுந்துள்ளது.



  • 14:15 (IST) 22 Apr 2021
    அடுத்த 4 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

    தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலையை ஓட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 13:30 (IST) 22 Apr 2021
    ஸ்டெர்லைட் ஆலை -நாளை விசாரணை

    ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி கோரிய இடைக்கால மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரிக்கப்படவுள்ளது. ஆலை நிர்வாகத்தின் இடைக்கால மனு தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசு அவகாசம் கோரிய நிலையில் நாளை விசாரணை .



  • 12:41 (IST) 22 Apr 2021
    ஆக்சிஜன் சப்ளை கிடைக்க நடவடிக்கை

    டெல்லியில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சப்ளை கிடைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், ஆக்சிஜன் இல்லாமல் ஒருவர் உயிரிழப்பதைக் கூட ஏற்க முடியாது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.



  • 12:03 (IST) 22 Apr 2021
    இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் ஸ்டாலின்

    முதல் கட்ட தடுப்பூசி எடுத்துக்கொண்ட ஸ்டாலின் இன்று இரண்டாவது டோஸ் எடுத்துக்கொண்டார். மேலும், தடுப்பூசி போடாதவர்களை உடனடியாக போட்டுக்கொள்ளும்படியும் வலியுறுத்தினார்.



  • 11:35 (IST) 22 Apr 2021
    புதுச்சேரியில் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்தை நெருங்கியது

    புதுச்சேரியில் ஒரே நாளில் 987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நாளை முதல் 3 நாட்களுக்கு புதுச்சேரியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. தற்போது 5,923 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



  • 11:31 (IST) 22 Apr 2021
    கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து 2-ம் இடம்

    உலகளவில் மொத்த கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து 2-ம் இடத்தில் உள்ளது. 3.26 கோடி பேர் பாதிப்படைந்து முதலிடத்தில் அமெரிக்காவும் 1.59 கோடி பேர் பாதிக்கப்பட்டு 2-ம் இடத்தில் இந்தியாவும் 1.41 கோடி பேர் பாதிக்கப்பட்டு 3-ம் இடத்தில் பிரேசிலும் இருக்கின்றன.



  • 11:27 (IST) 22 Apr 2021
    தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

    ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • 10:56 (IST) 22 Apr 2021
    சீதாராம் யெச்சூரி குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் - ஸ்டாலின்

    சீதாராம் யெச்சூரியின் மகன் ஆசிஷ் யெச்சூரி உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது. மகனை இழந்துவாடும் சீதாராம் யெச்சூரி குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.



  • 10:06 (IST) 22 Apr 2021
    பிச்சை எடுங்கள், திருடுங்கள் - உயர்நீதிமன்றம் காட்டம்

    பிச்சை எடுத்தோ, திருடியோ, கடனுக்கோ ஆக்சிஜன் வாங்குங்கள். உயிருக்கு போராடும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்யுங்கள் என மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.



  • 10:01 (IST) 22 Apr 2021
    கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது

    இந்தியாவில் ஒரே நாளில் 3,14,835 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,104 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். தற்போது கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 22,91,428.



Covid 19 Vaccine Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment