Advertisment

News Highlight: நடிகர் விவேக் மரணம்; அதிகாலையில் உயிர் பிரிந்தது

Tamil Nadu news today live copy : நகைச்சுவை நடிகர் விவேக் மாரடைப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

author-image
WebDesk
New Update
actor vivek hospitalized, actor vivek, comedy actor vivek, actor vivek affected by heart attack, நடிகர் விவேக், நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி, vivek, tamil cinema news, விவேக் மருத்துவமனையில் அனுமதி, சென்னை ,actor vivek news, vivek admitted in hospital, chennai

Latest Tamil News Live : நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.

Advertisment

தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு தொடங்கியது

கொரோனா கட்டுப்பாடுகளுடன் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு தமிழகத்தில் தொடங்கியது. 23-ம் தேதி வரை நடக்கும் இந்த செய்முறைத் தேர்வை 1.5 லட்சம் பிளஸ் 2 மாணவர்கள் எழுதுகின்றனர். இயற்பியல், வேதியியல், விலங்கியல், உயிரியல், உயிரி தாவரவியல், கணினி அறிவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்குசெய்முறைத் தேர்வு நடக்கிறது.

தஞ்சை பெரியகோயில் மூடல்

கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள தஞ்சை பெரியகோயில் மூடப்பட்டது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.42 கோடியாக உயர்ந்திருக்கிறது. நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் 2,17,353 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. மேலும், 1,185 பேர் உயிரிழந்துள்ளனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 23:02 (IST) 16 Apr 2021
    விவேக் நலம் பெற நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து

    திடீர் மராடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் விவேக் நலம்பெற வேண்டி பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், நண்பர் விவேக் அவர்கள் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என நடிகர் ரஜினி ட்விட் செய்துள்ளார்.



  • 22:07 (IST) 16 Apr 2021
    விவேக் விரைவில் நலம்பெற வேண்டும் - கமல்ஹாசன்

    நனைச்சுவை நடிகர் விவேக் திடீர் மராடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், ”மக்களின் அச்சம் தீரவே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர் விவேக்”என புகழாரம் சூட்டியுள்ளார்.



  • 20:11 (IST) 16 Apr 2021
    விவேக் நலம்பெற ஸ்டாலின் வாழ்த்து

    பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் திடீர் மாரடைப்பால் மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரை விரைவில் பூரண குணடைய வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



  • 20:03 (IST) 16 Apr 2021
    திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்

    மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக்கிங் செய்ய முயற்சிகள் நடைபெறுவது ஜனநாயக படுகொலை என தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ராங் ரூம்களை ஊடுருவ நடக்கும் முயற்சிகளை நிறுத்த கோரி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்



  • 19:58 (IST) 16 Apr 2021
    நீரவ் மோடியை இந்தியாவிற்கு நாடு கடத்த இங்கிலாந்து உள்துறை அமைச்சர் ஒப்புதல்

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 ஆயிரம் கோடி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நீரவ் மோடி தற்போது இங்கிலாந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த இங்கிலாந்து உள்துறை அமைச்சர் ஒப்புதல் வழங்கியுள்ளதாக சிபிஐ தகவல் மீது வழக்கு தெரிவித்துள்ளது.



  • 18:38 (IST) 16 Apr 2021
    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8,449பேருக்கு கொரோனா; 33 பேர் பலி

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8,449பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று 33 பேர் உயிரிழந்ததாக பதிவாகியிருகிறது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.



  • 17:41 (IST) 16 Apr 2021
    விவேக்கிற்கு தீவிர நெஞ்சு வலி... எக்மோ கருவியுடன் தொடர் சிகிச்சை - மருத்துவமனை அறிக்கை

    நடிகர் விவேக்கிற்கு தீவிர நெஞ்சுவலி ஏற்பட்டிருந்தது. அவருக்கு எக்மோ கருவியுடன் தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    சுயநினைவு இல்லாத நிலையில் நடிகர் விவேக் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்; தற்போது கவலைக்கிடமான நிலையில் உள்ள நடிகர் விவேக் உடல்நிலையின் முன்னேற்றம் குறித்து 24 மணி நேரத்துக்கு பிறகே தெரியவரும். எக்மோ கருவி உதவியுடன் நடிகர் விவேக்குக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.



  • 17:37 (IST) 16 Apr 2021
    சின்னக் கலைவாணர் அண்ணன் விவேக் நலம் பெற விரும்புகிறேன் - உதயநிதி

    திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “உடல்நலம் குன்றி சிகிச்சையில் இருக்கும் சின்னக் கலைவாணர் அண்ணன் விவேக் நலம்பெற்று விரைவில் வீடு திரும்ப விரும்புகிறேன். அன்போடு பழகுவதிலும் சமூக சிந்தனையுடன் செயல்படுவதிலும் அண்ணனுக்கு நிகர் அவரே. அண்ணன் மீண்டும் வந்து தமிழக மக்களை சிரிக்க-சிந்திக்க வைக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.



  • 17:30 (IST) 16 Apr 2021
    புதுச்சேரி பல்கலைக்கழக கல்லூரிகளில் தேர்வுகள் ஒத்திவைப்பு

    புதுச்சேரி பல்கலைக்கழக கல்லூரிகளில் வரும் 19ஆம் தேதி தொடங்க இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கபடுகிறது என புதுச்சேரி பல்கலைக்கழக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. மேலும், செய்முறை தேர்வுகள் எழுத்து தேர்வுகள் என அனைத்டு தேர்வுகளும் ஒத்திவைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 17:28 (IST) 16 Apr 2021
    விவேக் பூரண நலம் பெற பிரார்த்திக்கிறேன் - விஜயகாந்த் அறிக்கை

    நடிகர் விவேக் பூரண நலம் பெற பிரார்த்திக்கிறேன் என்று தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.



  • 17:26 (IST) 16 Apr 2021
    சகோதரர் விவேக் பூரண நலம் பெற பிரார்த்திக்கிறேன் - ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

    புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “சகோதரர் விவேக் பூரண நலம் பெற பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.



  • 17:25 (IST) 16 Apr 2021
    விவேக் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்திக்கிறேன் - முதல்வர் பழனிசாமி

    மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி கேட்டு மனவேதனை அடைந்தேன். விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்திக்கிறேன் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.



  • 16:30 (IST) 16 Apr 2021
    டாஸ்மாக்கிற்கு எதிராக போராட உரிமை உண்டு

    மதுபான கடைகளை அமைப்பது அரசின் கொள்கை முடிவாக இருப்பினும் கூட அதனை எதிர்த்து போராட மக்களுக்கு உரிமை உண்டு என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.



  • 16:21 (IST) 16 Apr 2021
    விவேக்கிற்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை

    நடிகர் விவேக்கிற்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவேக்கின் உடல்நிலை குறித்து இன்று மாலைக்குள் மருத்துவ அறிக்கை வெளியாக வாய்ப்புகள் உள்ளது.



  • 16:01 (IST) 16 Apr 2021
    நரேந்திர மோடி

    நாடு முழுவதும் ஆக்ஸிஜன் சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் இறப்பதாக வந்த புகாரை தொடர்ந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



  • 15:38 (IST) 16 Apr 2021
    வீடு திரும்பினார் டி.ஆர். பாலு

    கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த திமுக பொருளாளர் டி.ஆர். பாலு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவருக்கு தொற்றின் தீவிரம் குறைந்ததை தொடர்ந்து மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி தாம்பரத்தில் உள்ள வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.



  • 15:32 (IST) 16 Apr 2021
    சித்திரை திருவிழா

    மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களை அனுமதிக்க உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று மதுரை உயர் நீதிமன்ற கிளை அறிவித்துள்ளது.



  • 15:31 (IST) 16 Apr 2021
    ஜெயா, தலைவி திரைப்படங்களுக்கு தடை இல்லை

    ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட தலைவி மற்றும் ஜெயா போன்ற படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தீபா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.



  • 14:50 (IST) 16 Apr 2021
    ரயில்கள் தொடர்ந்து இயங்கும்

    அனைத்து வித ரயில்களும் தொடர்ந்து இயங்கும் எனவே பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று ரயில்வே வாரிய தலைவர் சுனித் ஷர்மா அறிவித்துள்ளார்.



  • 14:46 (IST) 16 Apr 2021
    கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா உறுதி

    கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக கொரோனாவால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார்.



  • 14:02 (IST) 16 Apr 2021
    நடிகர் விவேக் நலமுடன் உள்ளார்- பிஆர்ஓ நிகில் முருகன்

    நடிகர் விவேக் தற்போது நலமுடன் உள்ளதாக மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் தகவல்



  • 13:52 (IST) 16 Apr 2021
    சாத்தான்குளம் வழக்கு-உச்சநீதிமன்றம் உத்தரவு

    சாத்தான்குளம் வழக்கை கேரளாவிற்கு மாற்றக் கோரிய மனு மீது தமிழக அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த ஜெயராஜின் மனைவி செல்வராணி தாக்கல் செய்த இடையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்று உச்சநீதிமன்றம் உத்தரவு.



  • 13:27 (IST) 16 Apr 2021
    நடிகர் விவேக்கிற்கு எக்மோ சிகிச்சை

    மாரடைப்பால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக்கிற்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



  • 13:25 (IST) 16 Apr 2021
    சூரப்பா மீது நடவடிக்கை எடுக்க விதித்த தடை நீட்டிப்பு

    அண்ணா பல்கலை.யின் முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீது நடவடிக்கை எடுக்க விதித்த தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.



  • 12:15 (IST) 16 Apr 2021
    நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி

    நகைச்சுவை நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.



  • 11:59 (IST) 16 Apr 2021
    கொரோனாவை கட்டுப்படுத்த ராஜீவ் ரஞ்சன் தீவிர ஆலோசனை

    தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தீவிர ஆலோசனை செய்து வருகிறார். தினசரி கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியதால் மேலும் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது.



  • 11:48 (IST) 16 Apr 2021
    தங்கம் விலை உயர்வு

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.384 உயர்ந்து ரூ.35,424-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.4,428-க்கு விற்பனை ஆகிறது.



  • 11:48 (IST) 16 Apr 2021
    ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி இந்தியாவிற்கு வழங்கப்படும்

    ஏப்ரல் மாத இறுதியில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பு மருந்து இந்தியாவிற்கு வழங்கப்படும் என ரஷ்ய இந்திய தூதரகம் தெரிவித்திருக்கிறது.



Tamil Nadu Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment