Advertisment

News Highlights: பள்ளிகள் திறக்கும் சாத்தியம் இப்போது இல்லை- செங்கோட்டையன்

எகிப்து நாட்டிலிருந்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு 135 டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. இதனை 50 முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்ய இருப்பதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.

author-image
WebDesk
New Update
அரையாண்டுத் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெறுமா? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

News In Tamil : கடந்த சில தினங்களாக மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிங்களிலிருந்து வெறும் 30 லாரிகளில் ம் மட்டுமே வெங்காயம் வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். வெங்காயம் பற்றாக்குறையினால், சில தினங்களாகவே பெரிய வெங்காயம் 100 ரூபாய்க்கும் சிறிய வெங்காயம் 110 ரூபாய்க்கும் விற்பனையானது. அடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்களில் வெங்காயம் தொடர்ந்து விலை உயர்ந்ததாக இருக்கும் என்று வர்த்தகர்கள் எச்சரித்தனர். இந்த சூழ்நிலையில், எகிப்து நாட்டிலிருந்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு 135 டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. இதனை 50 முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்ய இருப்பதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.

Advertisment

நாட்டுக்குத் தற்போது கொரோனாவை எதிர்க்க உறுதியான திட்டங்களே அவசியமே தவிர, வெற்று உரைகள் அல்ல என்று நாட்டு மக்களுக்கு நேற்று மாலை பிரதமரின் உரை குறித்து காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.

தொடர்ந்து 17- வது நாளாக கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை  புதிய பாதிப்புகளை விட அதிகமாக உள்ளன.

2021 தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி விழிப்புணர்வு வினாடி வினாப் போட்டிகளை தமிழகத்தில் இணைய வழியாக தேர்தல் ஆணையம் நடத்துகிறது. 25-ம் தேதி நடைபெறும் இந்த வினாடி வினாவில் பொதுமக்கள் பங்கேற்கலாம் என அழைப்பு விடப்பட்டிருக்கிறது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog

Tamil News Today: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    20:50 (IST)21 Oct 2020

    நடிகர் விஜய் சேதுபதி மகள் குறித்து வக்கிரமாக பதிவிட்ட நபரின் அடையாளம் தெரிந்தது

    800 படத்தின் சர்ச்சையின்போது, நடிகர் நடிகர் விஜய் சேதுபதி மகள் குறித்து ட்விட்டரில் வக்கிரமாக பதிவிட்டவர் இலங்கையை சேர்ந்தவர் என்று அடையாளம் தெரியவந்துள்ளது என்று சைபர் கிரைம் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். வக்கிரமான ட்விட்டர் பதிவு குறித்து சென்னையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    19:39 (IST)21 Oct 2020

    அனைவருக்கும், நியாய விலையில் வெங்காயம் கிடைக்க நடவடிக்கை தேவை - மு.க.ஸ்டாலின்

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வெங்காயத்திலும் ஊழல் வேண்டாம். அனைவருக்கும், நியாய விலையில் வெங்காயம் கிடைக்க நடவடிக்கை தேவை என்று வலியுறுத்தியுள்ளார். இது குறித்து மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டரில், “வெங்காயம் கிலோ ரூ.130! நெல்மணிகள் நனைந்து விவசாயிகளும், #OnionPrice-ஆல் தாய்மார்களும் கண்ணீர் விட களிநடம் போடுகிறது அதிமுக அரசு! வேளாண் சட்டங்களால் பதுக்கல் அதிகமாகும்; விலை ஏறும்! வெங்காயத்திலும் ஊழல் வேண்டாம்! அனைவருக்கும், நியாய விலையில் வெங்காயம் கிடைக்க நடவடிக்கை தேவை!” என்று ட்வீட் செதுள்ளார்.

    18:32 (IST)21 Oct 2020

    தமிழகத்தில் இன்று புதிதாக 3,086 பேருக்கு கொரோனா; 39 பேர் பலி

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 3,086 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில், கொரோனா பாதிப்பால் இன்று 39 பேர் உயிரிழந்ததாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    17:59 (IST)21 Oct 2020

    தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்

    தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “தமிழகத்தில் பள்ளிகளை தற்போது திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

    16:17 (IST)21 Oct 2020

    புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் பணி துவக்கம்

    புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான பணிகளை துவக்கியது பல்கலைக்கழக மானியக் குழு. தமிழகத்தில் பள்ளி கல்வி குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழு ஒரு கூட்டம் மட்டுமே நடத்தி இருக்கிறது. ஒரு ஆண்டுக்குப் பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் கருத்துகள் அடிப்படையில் புதிய கல்வி கொள்கையை இறுதி செய்யும் பணி தீவிரம். உயர்கல்வி நிறுவனங்கள் நிர்வாக சீரமைப்பு பணிகளை ஆரம்பிக்குமாறு பல்கலைக்கழக மானிய குழு உத்தரவு. 

    16:06 (IST)21 Oct 2020

    எஸ்.ஏ.சந்திர சேகர் விளக்கம்

    நான் பாஜக-வில் இணையப் போகிறேனா என்ற கேள்விக்கே இடமில்லை. எனக்கென்று ஒரு அமைப்பு உள்ளது. விஜய் மக்கள் இயக்கம் தேவைப்படும் போது அரசியல் கட்சியாக மாறும் என எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். 

    15:15 (IST)21 Oct 2020

    சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

    தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன் பெறுவதற்கு மத்திய கூட்டுறவு வங்கிகளில் கணக்கு துவங்கும் நடைமுறையை துரிதப்படுத்துவது எப்படி? கணக்கு தொடங்க என்ன நடைமுறை ஏற்படுத்தப்படும் என்பது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

    14:15 (IST)21 Oct 2020

    கடைகள் திறப்பு நேரம் அதிகரிப்பு

    தமிழகத்தில் கடைகள் திறப்பு நேரம் அதிகரிப்பு. இரவு 10 மணி வரை கடைகளை திறக்க அனுமதியளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

    13:53 (IST)21 Oct 2020

    ஐ.பி.எல்-லில் இருந்து பிராவோ விலகல்

    டெல்லி அணியுடன் நடைப்பெற்ற போட்டியின் போது ஏற்பட்ட காயத்தால், வெஸ்ட் இண்டீஸ் திரும்புகிறார் சி.எஸ்.கே அணியின் ஆல்ரவுண்டர் பிராவோ. இனி வரும் போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என சி.எஸ்.கெ நிர்வாகம் அறிவித்துள்ளது.

    13:05 (IST)21 Oct 2020

    1,562 பேருக்கு காவல்துறையில் கருணை அடிப்படையில் வேலை

    காவல்துறையில் பணிக்காலத்தில் காலமான காவல்துறை மற்றும் அமைச்சக பணியாளர்களின் வாரிசுகள் 1,562 பேருக்குக் கருணை அடிப்படையில், தகவல் பதிவு இணை இயக்குநர் பணியிடங்களுக்கான ஆணைகளை இன்று முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

    12:52 (IST)21 Oct 2020

    7.5% உள் ஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுகவுடன் சேர்ந்து போராடத் தயார்

    மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக அரசுடன் இணைந்து போராட திமுக தயாராக இருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    12:08 (IST)21 Oct 2020

    ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் திரைப்படங்களுக்கு மத்திய அரசு விருது

    திரைப்படங்களுக்கான மத்திய அரசு விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விருதுக்காக லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான 'ஹவுஸ் ஓனர்' மற்றும் பார்த்திபன் இயக்கத்தில் உருவான 'ஒத்த செருப்பு' ஆகிய இரண்டு தமிழ்த் திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன.

    10:25 (IST)21 Oct 2020

    வெங்காயத்தின் விலை இனி 45 ரூபாய்

    சமீப காலமாகத் தமிழ்நாட்டில் வெங்காய விலை 100 ரூபாய் வரை அதிகரித்து வந்த நிலையில், இன்று சென்னையில் உள்ள பண்ணை பசுமை காய்கறி கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.45-கான விற்பனை திட்டத்தை அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார்.

    09:47 (IST)21 Oct 2020

    காவலர் வீரவணக்க நாளையொட்டி கற்சின்னங்கள் திறப்பு

    ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ம் தேதி காவலர்கள் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இன்று காவல்துறையினர் சார்பில் டிஜிபி அலுவலக வளாகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. பிறகு, வீர காவலர்கள் நினைவுறுவ கற்சின்னங்களை இபிஎஸ் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், தமிழகக் காவல்துறை டிஜிபி திரிபாதி, சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் கலந்துகொண்டனர். கடந்த ஓராண்டில் மட்டும் 183 காவலர்கள் பணியின் போது உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    09:23 (IST)21 Oct 2020

    இனி ஆயுள் முழுவதும் பயன்படும்

    இதுவரை 7 ஆண்டுகள் மட்டுமே ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) சான்றிதழ் செல்லும் என்றிருந்த விதியை மாற்றி ஆயுள் முழுவதும் இனி பயன்படுத்தலாம் என தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (NCTE) அறிவித்திருக்கிறது.

    08:56 (IST)21 Oct 2020

    ஜெயலலிதா மீது உண்மையான விசுவாசம் இல்லை - ஸ்டாலின் விமர்சனம்

    தேனி மாவட்ட திமுகவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில், காணொளி மூலம் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சியின் ஆட்சியை விமர்சித்துள்ளார். "தாங்கள் பதவிக்கு வரக் காரணமாக இருந்த ஜெயலலிதாவுக்கே நன்றி இல்லாதவர்களாக இருக்கும்போது, எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் எப்படி தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு மக்களைப் பற்றி எந்தக் கவலையும் கிடையாது" என்று குற்றம் சாட்டியுள்ளார்.

    08:44 (IST)21 Oct 2020

    தமிழகத்தில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு

    வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதால், தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. அடுத்த 24 மணிநேரத்தில் சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் வானம் மேகமூட்டத்துடனும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறது.

    08:34 (IST)21 Oct 2020

    இலவச நீட் பயிற்சி வகுப்புக்கான தேதி அறிவிப்பு

    தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி வகுப்புகள், நவம்பர் 1-ம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. கொரோனா காரணமாக, இந்த வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் தளத்தில் நடைபெறும்.

    08:11 (IST)21 Oct 2020

    எகிப்திலிருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வெங்காயம் இறக்குமதி

    அடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்களில் வெங்காயம் தொடர்ந்து விலை உயர்ந்ததாக இருக்கும் என்று வர்த்தகர்கள் எச்சரித்து வந்த சூழலில் தற்போது எகிப்து நாட்டிலிருந்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு 135 டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. இதனை 50 முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்ய இருப்பதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.

    Tamil News Today: நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, ” பண்டிகை காலத்தில் அனைவரும் மிக மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்,கவனக்குறைவு காரணமாக முகக் கவசம் அணியாமல் வெளியில் வந்தால், நீங்கள் உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும், குடும்பத்தில் உள்ள குழந்தைகள், முதியவர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கிறீர்கள் என்று அர்த்தம்” என்று வலியுறித்தினார்.

    மேலும், இந்தியாவில் ஒரு மில்லியன் மக்கள் தொகையில் 83 பேர் மட்டுமே உயிரிழக்கின்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில் போன்ற பல நாடுகளில், இந்த எண்ணிக்கை 600 க்கும் அதிகமாக உள்ளது. மக்களின் உயிரைக் காப்பாற்றும் கடமையை நிறைவேற்றுவதில் வெற்றி கண்டது என்றும் தெரிவித்தார்.

    Politics
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment