Advertisment

News Highlights: பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள்? அமித்ஷா நேரடி பேச்சுவார்த்தை

Latest Tamil News Live விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டர் ரூ.93.11-க்கும், டீசல் லிட்டர் ரூ.86.45-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

author-image
WebDesk
New Update
News Highlights: பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள்? அமித்ஷா நேரடி பேச்சுவார்த்தை

News In Tamil Live : பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் மூலம் பிரேசில் நாட்டுக்குச் சொந்தமான அமேசானியா-1, அமெரிக்காவுக்குச் சொந்தமான 13 நானோ செயற்கைக்கோள் உட்பட 19 செயற்கைக் கோள்கள், ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து இன்று காலை 10.24 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளன. இதன் 25 மணி 30 நிமிடம் கொண்ட கவுண்ட்டவுன் நேற்று காலை 8.54 மணிக்குத் தொடங்கியது. இந்நிலையில் இஸ்ரோ தலைவர் சிவன், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதே போன்று இந்த ஆண்டு பல செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தத் திட்டமிட்டு இருப்பதாகத் தெரிவித்தார்.

Advertisment

கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட திமுக தலைவர் ஸ்டாலின் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த கூட்டணி கட்சிகளுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் நாளை மாலை 5 மணிக்கு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு வருமாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.

தமிழகம் உட்பட 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், மணிப்பூர் மாநிலம் அகர்தாவிலிருந்து 18 பேட்டிகள் கொண்ட சிறப்பு ரயிலில், சுமார் 1300-க்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினர் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காகச் சென்னை வந்தடைந்தனர்.

சென்னையில் விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டர் ரூ.93.11-க்கும், டீசல் லிட்டர் ரூ.86.45-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Live Blog

Latest Tamil News : அரசியல்- வானிலை- சமூகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த செய்திகளின் தொகுப்பாக இந்தத் தளம் அமையும்.



























Highlights

    22:12 (IST)28 Feb 2021

    அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை

    முதலமைச்சர், துணை முதலமைச்சர் இருவரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தேர்தல் பொறுப்பாளர்கள் கிஷன் ரெட்டி, வி.கே.சிங் உள்ளிட்டோரும் பேச்சு வார்த்தையில் பங்கு பெற்றுள்ளனர்.  

    20:48 (IST)28 Feb 2021

    தேர்தல் நடத்தை நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் - தேர்தல் ஆணையம்

    தேர்தல் நடத்தை நெறிமுறைகளை அரசியல் கட்சிகள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

    20:48 (IST)28 Feb 2021

    ஜிஎஸ்டிஆர்-9 மற்றும் ஜிஎஸ்டிஆர்-9சி தாக்கல் கால அவகாசம் நீட்டிப்பு

    ஆண்டுக்கு 2 கோடிக்கும் அதிகமாக விற்பனை வருவாய் கொண்டுள்ள நிறுவனங்கள் ஜிஎஸ்டிஆர்-9 மற்றும் ஜிஎஸ்டிஆர்-9சி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் அடுத்த மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    20:46 (IST)28 Feb 2021

    இந்த மோதல் காலம் காலமாக நடந்துவரும் மோதல் - மு. க ஸ்டாலின்

    மோடி ஆரியத்தை புகுத்த நினைப்பவர் – நாம் திராவிடத்தால் அதைத் தடுத்துக் கொண்டிருப்பவர்கள்; இந்த மோதல் காலம் காலமாக நடந்துவரும் மோதல்; ஆனால், குற்றவாளிகளை மாலையிட்டு வரவேற்கும் மோடிக்கு திமுகவை குறை சொல்ல என்ன உரிமை இருக்கிறது?” என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கேள்வி எழுப்பினர்.   

    20:38 (IST)28 Feb 2021

    ம.ம.க தொகுதி பங்கீடு நாளை இறுதி செய்யப்படும்- ஜவாஹிருல்லா

    வரும் சட்டமன்றத் தேர்தலில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெறும்.  நாளை தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் என்று மனிதநேய மக்கள் கட்சி  நிறுவனர் ஜவாஹிருல்லா தெரிவித்தார். 

     
     

    19:37 (IST)28 Feb 2021

    எஸ் எல் வி - சி – 51,  19 செயற்கைக்கோள்களுடன் இன்று காலை விண்ணில் செலுத்தப்பட்டது

    இந்தியாவின் துருவ செயற்கைக்கோள் செலுத்துவாகனம் பி எஸ் எல் வி - சி – 51,  19 செயற்கைக்கோள்களுடன் இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

    இந்த செயற்கைக்கோள்களில் மிகவும் முக்கியமானதாக 637 கிலோ கிராம் எடைக்கொண்ட பிரேசிலின் அமேசோனியா செயற்கைக்கோள் இடம்பெற்றது.  

    19:37 (IST)28 Feb 2021

    எஸ் எல் வி - சி – 51,  19 செயற்கைக்கோள்களுடன் இன்று காலை விண்ணில் செலுத்தப்பட்டது

    இந்தியாவின் துருவ செயற்கைக்கோள் செலுத்துவாகனம் பி எஸ் எல் வி - சி – 51,  19 செயற்கைக்கோள்களுடன் இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

    இந்த செயற்கைக்கோள்களில் மிகவும் முக்கியமானதாக 637 கிலோ கிராம் எடைக்கொண்ட பிரேசிலின் அமேசோனியா செயற்கைக்கோள் இடம்பெற்றது.  

    19:35 (IST)28 Feb 2021

    தடுப்பூசி இரண்டாவது கட்டம் நாளை தொடங்குகிறது

    மூத்த குடிமக்கள் மற்றும் இணைநோய் உள்ள 45 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு கோவிட் - 19 தடுப்பூசி போடும் இரண்டாவது கட்டம் நாளை தொடங்குகிறது. முதல்கட்டத்தில் இன்று காலை வரை ஒரு கோடியே 43 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    19:33 (IST)28 Feb 2021

    மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைப்பு - கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா

    தேர்தல் நடத்தை விதிமுறைகள் செயல்பாட்டுக்கு வந்திருப்பதையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா அறிவித்துள்ளார்.

    19:32 (IST)28 Feb 2021

    ஆலந்தூர், கோவை தெற்கு ஆகிய 2 தொகுதிகளில் கமல்ஹாசன் போட்டியிட வாய்ப்பு

    ஆலந்தூர், கோவை தெற்கு ஆகிய 2 தொகுதிகளில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் போட்டியிட இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.  

    19:31 (IST)28 Feb 2021

    அதிக விருதுகள் பெற்றுள்ள ஒரே அரசு தமிழ்நாடு அரசு தான் - அமித் ஷா

    நாட்டிலேயே நல்லாட்சிக்கான அதிக விருதுகள் பெற்றுள்ள ஒரே அரசு தமிழ்நாடு அரசு தான் என மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா தெரிவித்தார்.  

    18:40 (IST)28 Feb 2021

    திமுகவுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    16:58 (IST)28 Feb 2021

    மோடி ஆட்சியில் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் சிரமம் - ராகுல் காந்தி விமர்சனம்

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி: “மோடி ஆட்சியில் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி மிகவும் சிரமப்படுகின்றனர்; மோடி ஆட்சியில் ஏழைகளுக்கு எந்த திட்டமும் இல்லை; உதவிகள் சென்று சேரவில்லை!” என்று  விமர்சித்துள்ளார்.

    16:11 (IST)28 Feb 2021

    திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேசுவார்த்தைக்கு மதிமுகவில் குழு நியமனம்

    தொகுதிப் பங்கீடு குறித்து திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த மதிமுக சார்பில் மல்லை சத்யா தலைமையில் 4பேர் கொண்ட குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.

    13:17 (IST)28 Feb 2021

    ராஜேஷ் தாஸ் மீதான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

    சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐபிஎஸ் அதிகாரி அளித்த பாலியல் புகார் வழக்கை டிஜிபி திரிபாதி சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

    13:15 (IST)28 Feb 2021

    திருவண்ணாமலையில் மூடப்பட்ட கிணறுகளை புதுப்பிக்கும் பணிகளை பாராட்டிய பிரதமர்

    மான்கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “திருவண்ணாமலை மாவட்டத்தில் மூடப்பட்ட கிணறுகளை புதுப்பிக்கும் பணிகளில் அம்மாவட்ட மக்கள் ஈடுபட்டிருக்கின்றனர்; மதுரையைச் சேர்ந்த முருகேசன் என்பவர் வாழை நாரில் இருந்து பல பொருட்களை உருவாக்கி வருகிறார்” என்று கூறி பாராட்டினார்.

    13:07 (IST)28 Feb 2021

    மோடியின் புகைப்படம், பகவத்கீதையை சுமந்து சென்ற செயற்கைகோள் புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தம்

    பிரதமர் மோடியின் புகைப்படம் மற்றும் பகவத்கீதையுடன் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவு தளத்தில் பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. இதையடுத்து, இந்த ஏவுகணையில் கொண்டுசெல்லப்பட்ட 19 செயற்கைக்கோள் புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

    12:02 (IST)28 Feb 2021

    தற்போதைய இளைஞர்களிடம் புது மாற்றத்தை உணர முடிகிறது - பிரதமர் மோடி

    உலகில் உள்ள மொழிகளில் மிக தொன்மையான மொழி, தமிழ் மொழி என்றும் நமது அறிவும், தன்னம்பிக்கையும் வலிமையாக இருந்தால் எதை கண்டும் அஞ்ச வேண்டியதில்லை என்றும் இன்றைய மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், தற்போதைய இளைஞர்களிடம் புது மாற்றத்தை உணர முடிகிறது. இந்திய அறிவியலின் வரலாற்றை இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். கோடை காலத்திற்காக மழைநீரை சேமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    11:25 (IST)28 Feb 2021

    19 செயற்கை கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட்

    ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 19 செயற்கை கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

    10:35 (IST)28 Feb 2021

    அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் நாளை ஆலோசனை

    அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, நாளை நண்பகல் 12.30 மணிக்கு தேர்தல் வழிமுறைகள் தொடர்பாக ஆலோசனை செய்யவிருக்கிறார். தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் கூட்டம் நடைபெறவுள்ளது.

    10:33 (IST)28 Feb 2021

    தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் திமுக தீவிரம்

    இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியுடன் திமுக இன்று மாலை 4 மணிக்கு பேச்சுவார்த்தை நடக்கவிருப்பதைத் தொடர்ந்து மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுடன் திமுக நாளை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. மனிதநேய மக்கள் கட்சியுடனும் இன்று பேசுகிறது. ஏற்கெனவே காங்கிரசுடன் திமுக முதல் சுற்று பேச்சுவார்த்தை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

    10:18 (IST)28 Feb 2021

    நாளை மக்கள் நீதி மய்யத்தின் அவசர பொதுக்குழு, செயற்குழு கூட்டம்

    அடுத்த 3 நாட்களுக்கு சென்னையில் தங்கி இருக்கும்படி வர வேண்டும் என அறிவுறுத்தி அவசரமாக பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு கமல்ஹாசன் அழைப்புவிடுத்திருக்கிறார். இதனால் மநீம தலைமை அலுவலகத்தில் நாளை அவசரக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. கூட்டணி தொடர்பாக நேற்று கமல்ஹாசனை சரத்குமார் சந்தித்ததை அடுத்து சட்டப்பேரவை தேர்தலில் மநீம தனித்து போட்டியிடுமா அல்லது கூட்டணியில் போட்டியிடுமா உள்ளிட்டவற்றை நாளை ஆலோசனை செய்யவுள்ளனர்.

    09:41 (IST)28 Feb 2021

    வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு - ஒப்புதல் அளித்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

    வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், சீர்மரபினருக்கு 7%, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 2.5% உள் ஒதுக்கீடு வழங்கவும் அவர் ஒப்புதல் அளித்திருக்கிறார்.

    09:04 (IST)28 Feb 2021

    உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வருகை

    பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார். அவருக்கு, பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தேர்தல் பரப்புரைத் திட்டங்கள், தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் பேசப்படவிருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால் அமித் ஷாவின் இப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

    09:01 (IST)28 Feb 2021

    அமெரிக்காவில் 3-வது கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி

    ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கழகம் அனுமதி அளித்துள்ளது.

    Tamil News Today : ஆம் ஆத்மி கட்சியுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியான நிலையில், கடந்த பிப்ரவரி 21-ந் தேதி சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4-ம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ஆரோக்கியமாக இருக்கும் போதே மக்கள் பணியாற்ற விரும்புகிநேன், கடைசி காலத்தில் சக்கர நாற்காலியில் வந்து யாரையும் தொந்தரவு செய்ய விரும்பவில்லை என்று தெரிவித்திருந்தார். தற்போது கமலின் இந்த பேச்சு திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
    Mk Stalin Tamil Nadu Politics
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment