Advertisment

Tamil News Highlights: தமிழ்நாட்டில் 4,000க்கு கீழே குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு; 72 பேர் பலி

Latest Tamil News காத்திமா தொகுதி சட்டமன்ற உறுப்பினரான புஷ்கர் சிங் தாமி, உத்தரகண்டின் புதிய முதலமைச்சராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

author-image
WebDesk
New Update
Tamil News Updates : தமிழகத்தில் இன்று 3,039  பேருக்கு கொரோனா பாதிப்பு

Tamil News : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்த அமமுக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன், அவரது முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பழனியப்பன், முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களால் கவரப்பட்டு கட்சியின் தன்னை இணைத்துக் கொண்டதாகத் தெரிவித்தார். பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவாகவும், ஜெயலலிதா ஆட்சியின் போது உயர் கல்வித்துறை அமைச்சராகவும் பழனியப்பன் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

கருப்பு பூஞ்சை நோய்க்குக் கூடுதலாக 1.14 லட்சம் டோஸ்கள்

கறுப்பு பூஞ்சை சிகிச்சையில் பயன்படுத்தப்படும் லிப்போஸோமால் அம்போடெரிசின் பி என்ற மருந்து கூடுதலாக ஒரு 1.14 லட்ச டோஸ்கள் அனைத்து மாநில மற்றும் ஒன்றிய பகுதிகளில் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய ரசாயனத்துறை அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்தார். மேலும், கறுப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு போதுமான அளவு மருந்துகள் கிடைப்பதற்காக ஏற்கெனவே 11 லட்சம் டோஸ்கள் நாடு முழுவதும் விநியோகப்பட்டிருப்பதாக மேலும் அவர் கூறினார்.

4 மாதங்களில் 3 முதலமைச்சர்கள்

உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காரணமாக தீரத்சிங் யாதவ், தன் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து அந்த கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பித்தார். இதனைத் தொடர்ந்து, நேற்று பாஜக மேலிடப் பார்வையாளரான நரேந்திர சிங் தோமர் முன்னிலையில் நடைபெற்ற பாஜக எம்எல்ஏ கூட்டத்தில், காத்திமா தொகுதி சட்டமன்ற உறுப்பினரான புஷ்கர் சிங் தாமி, புதிய முதலமைச்சராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், பாஜக இளைஞரணி செயலாளராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 19:35 (IST) 04 Jul 2021
    தமிழ்நாட்டில் 4,000க்கு கீழே குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு; 72 பேர் பலி

    தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 3,867 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று 72 ஆக பதிவாகியுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 4,382 பேர் குணமடைண்தனர். சென்னையில் மட்டும் இன்று 222 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



  • 16:37 (IST) 04 Jul 2021
    மேகதாது அணை திட்டத்தை கர்நாடகா அரசு கைவிட வேண்டும் - எடியூரபாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

    மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.



  • 15:48 (IST) 04 Jul 2021
    ஒன்றிய அரசு என்றால் ஓ.பி.எஸ். ஏன் கதறுகிறார்? - விசிக எம்.எல்.ஏ. ஆளூர் ஷா நவாஸ் ட்வீட்

    விசிக எம்.எல்.ஏ. ஆளூர் ஷா நவாஸ், தனது ட்விட்டர் பக்கத்தில், “Union Govt என்று சட்டம் சொல்கிறது; Union Minister என்று அமித்ஷா பெயர் பலகையிலும் உள்ளது. அதையே தமிழில் ஒன்றிய அரசு ஒன்றிய அமைச்சர் என்கிறோம். இதற்கு ஏன் ஓ.பி.எஸ் கதறுகிறார்? பாஜக சொல்கேட்டு அதிமுகவை பிளந்தவர், பிறரை பிரிவினைவாதி என்கிறார். மகனை ஒன்றிய அமைச்சராக்க எதுவும் பேசுவார்” என்று விமர்சனம் செய்துள்ளார்.



  • 14:40 (IST) 04 Jul 2021
    முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் பயணம்

    முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். வழிநெடுகிலும் போலீசார் பாதுகாப்பு அளித்தனர். இளைஞர்கள் முதல்வர் ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். வழியில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார் ஸ்டாலின். மாமல்லபுரம் வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டார் ஸ்டாலின்.



  • 14:40 (IST) 04 Jul 2021
    முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் பயணம்

    முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். வழிநெடுகிலும் போலீசார் பாதுகாப்பு அளித்தனர். இளைஞர்கள் முதல்வர் ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார் ஸ்டாலின். மாமல்லபுரம் வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டார் ஸ்டாலின்.



  • 14:36 (IST) 04 Jul 2021
    முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் பயணம்

    முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். வழிநெடுகிலும் போலீசார் பாதுகாப்பு அளித்தனர். இளைஞர்கள் முதல்வர் ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். வழியில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார் ஸ்டாலின். மாமல்லபுரம் வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டார் ஸ்டாலின்.



  • 14:07 (IST) 04 Jul 2021
    சூர்யாவிற்கு எதிராக பாஜக இளைஞரணி கூட்டத்தில் தீர்மானம்

    மாணவர்களை குழப்பும் வகையில் நீட் தேர்வுக்கு எதிராக உண்மைக்கு மாறான தகவலை பரப்புகிறார் எனவும், மத்திய அரசு கொண்டுவரும் மக்கள் நலத்திட்டங்களை உள்நோக்கத்துடன் எதிர்த்து வருகிறார் என்றும் நடிகர் சூர்யாவிற்கு எதிராக பாஜக இளைஞரணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.



  • 13:41 (IST) 04 Jul 2021
    பள்ளிக் குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்க இன்னும் முடிவெடுக்கவில்லை

    பள்ளிக் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்து மருத்துவ வல்லுநர்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



  • 12:45 (IST) 04 Jul 2021
    தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு

    தமிழகத்தில் கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தேனி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 12:20 (IST) 04 Jul 2021
    ராஜேந்திர பாலாஜிக்கு 1.5 டன் இனிப்புகள் ஆவினில் இருந்து இலவசமாக சென்றன

    தீபாவளி நேரத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 1.5 டன் இனிப்புகள் ஆவினில் இருந்து இலவசமாக சென்றுள்ளது என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.



  • 12:18 (IST) 04 Jul 2021
    மத்திய அரசை 'ஒன்றிய அரசு' என கூறி சிறுமைப்படுத்துவது மக்கள் நலன் பயக்கும் செயல் அல்ல - பன்னீர்செல்வம்

    மத்திய அரசை 'ஒன்றிய அரசு' என கூறி சிறுமைப்படுத்துவது மக்கள் நலன் பயக்கும் செயல் அல்ல என்றும், இந்திய இறையாண்மைக்கு எதிராக ஈ.ஆர். ஈஸ்வரன் பேசிய வார்த்தைகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆளுநர் உரையிலிருந்து 'ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தையை நீக்கியதால் தமிழகம் தலை நிமிர்ந்தது என கூறுவது நியாயமா? என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.



  • 08:58 (IST) 04 Jul 2021
    செய்தியாளர்களுக்கு ஜூலை 6-ம் தேதி தடுப்பூசி முகாம்

    முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்ட செய்தியாளர், ஊடகவியலாளர்களுக்கு வருகிற ஜூலை 6-ம் தேதி தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது என்றும் மருத்துவத்துறை, மாநகராட்சி இணைந்து நடத்தும் தடுப்பூசி முகாம் 10-4 மணி வரை கலைவாணர் அரங்கில் நடக்கும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



Corona Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment