Advertisment

News Highlights: துரைக்கண்ணு இலாகா கேபி அன்பழகனிடம் ஒப்படைப்பு

சென்னையில் தொடர்ந்து விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14க்கும், டீசல் ரூ.75.95க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

author-image
WebDesk
New Update
News Highlights: துரைக்கண்ணு இலாகா கேபி அன்பழகனிடம் ஒப்படைப்பு

News In Tamil : கொரோனா தோற்று காரணமாகத் தள்ளி வைக்கப்பட்ட பொறியியல் செமஸ்டர் தேர்வுகள், கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, நவம்பர் - டிசம்பர் செமஸ்டருக்கான தேர்வுகள், ஆன்லைனில் நடத்தப்படும் என தற்போது அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், தொலைதூரக் கல்வி பயிலும் மாணவர்கள், பகுதி நேர பொறியியல் படிப்பு பயிலும் மாணவர்கள் மற்றும் அரியர் மாணவர்களுக்கு, நவம்பர் இறுதியில் ஆன்லைனில் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 60 மதிப்பெண்களுக்கு Objective முறையில் ஆன்லைனில் ஒரு மணி நேரம் தேர்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.

Advertisment

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தமிழக அமைச்சர் துரைக்கண்ணு நேற்று நள்ளிரவு 11.15 மணிக்கு மரணம் அடைந்தார். 71 வயதான அவர், சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சமீப நாட்களில் அவருடைய உடல்நிலை மேலும் மோசம் அடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இதனை அடுத்து, அமைச்சர் துரைக்கண்ணு உடல் இன்று சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது.

மாநிலத்தை அபிவிருத்தி செய்வதற்கான அர்ப்பணிப்பு, தொய்வில்லாத முயற்சிகள் காரணமாக  நாட்டில் சிறந்த நிர்வாகங்களை அளிக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பால், கடந்த 24 மணி நேரத்தில் தனியார் மருத்துவமனைகளில் 17, அரசு மருத்துவமனைகளில் 14 என மொத்தம் 31  பேர் உயிரிழந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் அனைவரும் ரத்த அழுத்தம், இருதயக் கோளாறு போன்ற இணை நோய்கள் உள்ளவர்கள் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 10,983 ஆக அதிகரித்துள்ளது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog

Tamil News Today: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    21:38 (IST)01 Nov 2020

    ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் கமாண்டர் சுட்டுக் கொலை

    ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் கமாண்டர் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்தது. ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகர் அருகே பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் கமாண்டர் கொல்லப்பட்டார்.

    20:36 (IST)01 Nov 2020

    பீஹாரில் இரண்டாவது கட்ட தேர்தல் - பிரச்சாரம் முடிந்தது

    பீஹாரில் இரண்டாவது கட்ட சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளில் இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் முடிவடைந்தது

    20:35 (IST)01 Nov 2020

    இங்கிலாந்தில் மீண்டும் ஒரு மாத கால முழு முடக்கம்

    இங்கிலாந்தில் கோவிட்-19 பரவலை தடுக்கும் வகையில் நாடு தழுவிய அளவில் ஒரு மாத கால முழு முடக்கத்தை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

    20:31 (IST)01 Nov 2020

    தமிழக வேளாண் துறை அமைச்சராக கே.பி அன்பழகன் நியமிக்கப்பட்டார். 

    தமிழக வேளாண் துறை அமைச்சராக கே.பி அன்பழகன் நியமிக்கப்பட்டார்.    

    தமிழக வேளாண் துறை அமைச்சராக இருந்த துரைகண்ணு நேற்றிரவு சென்னையில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.   

    20:30 (IST)01 Nov 2020

    சென்னை அணி வெற்றி பெற்றது

    அபுதாபியில் நடைபெற்ற ஐ பி எல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

    19:24 (IST)01 Nov 2020

    நவ.23 முதல் பி.இ முதலாமாண்டு வகுப்புகள் – அண்ணா பல்கலைக்கழகம்

    தமிழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பொறியியல் வகுப்புகள் வரும் நவம்பர் 23ம் தேதியில் இருந்து தொடங்கும் என கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்தது.      

    தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு கடந்த அக்டோபர் 28ம் தேதியோடு நிறைவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.   

    19:21 (IST)01 Nov 2020

    2022-2023ஆம் நிதியாண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் பாதுகாப்பான குடிநீர்

    மத்திய அரசின் ஜல்ஜீவன் இயக்கத்தின்கீழ் தமிழகத்தில் 2022-2023ஆம் நிதியாண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் பாதுகாப்பான குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

    18:11 (IST)01 Nov 2020

    ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 155 கோடி ஜிஎஸ்டி வரி வசூல்

    சரக்கு மற்றும் சேவை வரி வசூல் கடந்த மாதம் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 155 கோடியை எட்டியுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

    இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், "2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மொத்த சரக்கு மற்றும் சேவை வரியாக ரூபாய் 1,05,155 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி ரூபாய் 19,193 கோடியும், மாநில சரக்கு மற்றும் சேவை வரி ரூபாய் 25,411 கோடியும், ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி ரூபாய் 52,540 கோடியும் (சரக்குகளின் இறக்குமதியின் மூலம் பெறப்பட்ட ரூபாய் 23,375 கோடி உட்பட), செஸ் வரி ரூபாய் 8,011 கோடியும் (சரக்குகளின் இறக்குமதியின் மூலம் பெறப்பட்ட ரூபாய் 932 கோடி உட்பட) அடங்கும்" என்று தெரிவித்தது.  

    17:02 (IST)01 Nov 2020

    அரசு மரியாதையுடன் அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் அடக்கம்

    மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் அவருடைய சொந்த ஊரான ராஜகிரியில் அவரது தோட்டத்தில் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது.

    16:47 (IST)01 Nov 2020

    அமைச்சர் துரைக்கண்ணுவின் இறுதிச் சடங்கு

    மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் அவருக்கு சொந்தமான தோட்டத்தில் அடக்கம் செய்வதற்கான இறுதிச் சடங்குகள் நடைபெற்று வருகிறது.

    16:09 (IST)01 Nov 2020

    ஐபிஎல் போட்டிகளில் ஓய்வு இல்லை - தோனி

    ஐபிஎல் போட்டியில் இன்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சி.எஸ்.கே அணி விளையாடுகிறது. இந்த ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே-வின் கடைசி போட்டி என்பதால் இந்த போட்டியே தோனியின் இறுதிப் போட்டியாக இருக்கும் என்று பேசப்பட்டு வந்த நிலையில், சி.எஸ்.கே கேப்டன் தோனி, ஐபிஎல் போட்டிகளில் இருந்து தற்போது ஓய்வு இல்லை. இன்றைய போட்டி என்னுடைய இறுதிப் போட்டி அல்ல” என்று தெரிவித்துள்ளார்.

    15:26 (IST)01 Nov 2020

    வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

    வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளர். விவசாயிகளின் நலனுக்காகவும், சமுதாயத்திற்காகவும் பாடுபட்டவர் அமைச்சர் துரைக்கண்ணு. இந்த துயரமான நேரத்தில், அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் இரங்கல் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    15:01 (IST)01 Nov 2020

    அமைச்சர் துரைக்கண்ணுவின் உடலுக்கு தேசிய கோடி அணிவித்து மரியாதை - ஓபிஸ் நேரில் சென்று அஞ்சலி

    மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் அவருடைய சொந்த ஊரான ராஜகிரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கே அமைச்சர் துரைக்கண்ணு உடலுக்கு தேசியக்கொடி போர்த்தி மரியாதை செய்யப்பட்டது. அங்கே உள்ள அய்யனாரின் கோயில் மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள அமைச்சர் துரைக்கண்ணு உடலுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர், அமைச்சர்களும் அஞ்சலி செலுத்தினர்.

    14:00 (IST)01 Nov 2020

    ‘பாஜகவின் வேல் யாத்திரையை கண்டு அனைத்து கட்சிகளுக்கும் பயம் வந்துவிட்டது’ - எல்.முருகன்

    தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், “பாஜகவின் வேல் யாத்திரையைக் கண்டு அனைத்து கட்சிகளுக்கும் பயம் வந்துவிட்டது. பாஜகவின் வேல் யாத்திரை துள்ளிவரும்” என்று கூறினார்.

    13:58 (IST)01 Nov 2020

    ஏபிவிபி தலைவர் சுப்பையா சண்முகம் பிரச்னை தனிப்பட்ட நபர்களுக்கு இடையே நடந்தது - அண்ணாமலை

    தமிழக பாஜக துணை தலைவர் அண்ணாமலை, “பெண்ணின் வீட்டின் முன் ஆபாசமாக நடந்து கொண்ட ஏபிவிபி தலைவர் சுப்பையா சண்முகம் விவகாரம் என்பது குடியிருப்பில் தனிப்பட்ட இரு நபர்களுக்கு இடையே நடந்த பிரச்னை அது சுமூகமாக முடித்துக்கொள்ளப்பட்டது. திருமாவளவன் விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டையும் ஒன்றாகப் பார்க்க முடியாது.” என்று கூறினார்.

    13:52 (IST)01 Nov 2020

    மருத்துவ உள் ஒதுக்கீடு; திமுக நிலைப்பாட்டு குறித்து அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விமர்சனம்

    ஆவடியில் செய்தியாள்ர்களிடம் பேசிய அமைச்சர் மாஜ்ஃபார் பாண்டியராஜன், “மருத்துவப் படிப்பில் 7.5 % இட ஒதுக்கீடு குறித்து தமிழக சட்டப்பேரவையில் திமுக வரும் ஆனால் வராது என்று கூறிய திமுக, இன்று மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளதால் நாங்களும் ரவுடிதான் என்று வடிவேலு பாணியில் பேசி வருகின்றனர்” என்று விமர்சனம் செய்தார்.

    13:40 (IST)01 Nov 2020

    தமிழ்நாடு தினம் - துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வாழ்த்து

    தமிழ்நாடு தினத்திற்கு துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், “மாநில தினத்தையொட்டி தமிழக மக்களுக்கு எனது அன்பான வாழ்த்துகள். செழிப்பான கலாச்சார வரலாறு, கண்கவர் கட்டிடக்கலை, அழகுமிளிர் கடற்கரை மற்றும் பலதரப்பட்ட நில அமைப்புகளுக்கு தமிழ்நாடு பெயர்பெற்றது. வரும் காலங்களில் இந்த மாநிலம் பல்வேறு வளங்களை பெற்று உயரிய நிலையை அடையட்டும்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    13:28 (IST)01 Nov 2020

    அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் சொந்த ஊர் ராஜகிரிக்கு வந்தது

    மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் பாபநாசம் அருகே உள்ள அவரது சொந்த ஊரான ராஜகிரிக்கு வந்தடைந்தது. தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள ராஜகிரியில் அமைச்சருக்கு இறுதி சடங்கு நடைபெறவுள்ளது. அமைச்சர் துரைக்கண்ணு இல்லத்தில் அவரது உடலுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    12:26 (IST)01 Nov 2020

    கடவுளே முதல்வரானாலும் அனைவருக்கும் அரசு வேலை சாத்தியமில்லை - கோவா முதல்வர்

    கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், அரசின் சார்பில் ‘ஸ்வயம்பூர்ணா மித்ரா’ என்ற திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய, “மக்கள் அனைவருக்கும் அரசு வேலை வழங்குவது சாத்தியமில்லை. கடவுளே முதல்வராக ஆனாலும், அனைவருக்கும் அரசு வேலை வழங்க முடியாது” என்று கூறினார்.

    12:20 (IST)01 Nov 2020

    ‘பாஜக வேல் யாத்திரையை தடை செய்ய வேண்டிய அவசியம் இல்லை’ - தா.பாண்டியன்

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், “பாஜக நடத்தும் வேல் யாத்திரையை தடை செய்ய வேண்டிய அவசியம் இல்லை; பாஜக வேல் யாத்திரை செல்லும் இடங்களில் பொது மக்களிடம் வரவேற்பு இருக்காது; கர்ணம் அடித்தாலும் தமிழகத்தில் பாஜக கால் ஊன்ற முடியாது. முதல்வர் வேட்பாளராக போட்டியிட்டு டெபாசிட் வாங்காதவர் புதுச்சேரி ஆளுநர்; வரலாற்றை வெட்டி சிதைப்பது புதுச்சேரி ஆளுநரின் முழுநேர வேலையாக உள்ளது; கிரண்பேடியை வேறு மாநிலத்திற்கு அல்லது டெல்லிக்கு பிரதமர் மாற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

    12:11 (IST)01 Nov 2020

    தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

    தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகக் கடற்கரை மற்றும் அதையொட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில், வளிமண்டல சுழற்சி நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், அடுத்த 48 மணி நேரத்திற்கு, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் என, வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    12:02 (IST)01 Nov 2020

    முதல்வர் பழனிசாமிக்கு 'சமூக நீதி காவலர்' பட்டம்

    ஏழை மக்களின் காவல் தெய்வமாகத் தமிழக முதல்வர் இருப்பதால், 'சமூக நீதி காவலர்' என்ற பட்டதைப் புரட்சித் தலைவி பேரவை சார்பில் வழங்கவுள்ளதாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்திருக்கிறார்.

    11:58 (IST)01 Nov 2020

    5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு

    தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு, இடியுடன் கூடிய கன மழை பெய்யும் எனத் தெரிவித்துள்ளது.

    11:04 (IST)01 Nov 2020

    அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!

    அமைச்சர் துரைக்கண்ணு மறைவைத் தொடர்ந்து பல தலைவர்கள் தங்களின் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், "வேளாண்துறை அமைச்சர் திரு.துரைக்கண்ணு மறைவெய்திய செய்தி கேட்டுத் துயருற்றேன். ஆழ்ந்த இரங்கல்! பொதுவாழ்வில் உள்ள அனைவரும் சுய பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடித்திட வேண்டும். அமைச்சரை இழந்து வாடும் குடும்பத்தினர், சக அமைச்சர்கள், முதலமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் என் ஆறுதல்" என திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார்.

    10:47 (IST)01 Nov 2020

    துரைக்கண்ணு மறைவு; சென்னை அரசு அலுவலகங்களில் அரைக் கம்பத்தில் தேசியக்கொடி

    அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவையொட்டி, சென்னையில் உள்ள அரசு அலுவலகங்களில் இன்று ஒரு நாள் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனத் தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

    10:18 (IST)01 Nov 2020

    மருத்துவக் கலந்தாய்வில் சேர விண்ணப்பம்

    அரசின் இலவச நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்று, கடந்த 3 ஆண்டுகளில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தற்போது மருத்துவக் கலந்தாய்வில் சேர விண்ணப்பிக்கலாம் எனப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருக்கிறது.

    10:15 (IST)01 Nov 2020

    கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81,84,082

    இந்தியாவில் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81,84,082-ஆக உயர்ந்திருக்கிறது. இதுவரை 74,91,513 பேர் மீண்டுள்ளனர். பாலியானோரின் எண்ணிக்கை 1,22,111-ஆக அதிகரித்திருக்கிறது.

    09:31 (IST)01 Nov 2020

    பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு மணி நேர ஆன்லைன் தேர்வு

    நவம்பர் – டிசம்பர் செமஸ்டருக்கான தேர்வுகள், ஆன்லைனில் நடத்தப்படும் என தற்போது அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், தொலைதூரக் கல்வி பயிலும் மாணவர்கள், பகுதி நேர பொறியியல் படிப்பு பயிலும் மாணவர்கள் மற்றும் அரியர் மாணவர்களுக்கு, நவம்பர் இறுதியில் ஆன்லைனில் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 60 மதிப்பெண்களுக்கு Objective முறையில் ஆன்லைனில் ஒரு மணி நேரம் தேர்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.

    09:30 (IST)01 Nov 2020

    அமைச்சர் துரைக்கண்ணு உடல் சொந்த ஊரில் இன்று அடக்கம்

    கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தமிழக அமைச்சர் துரைக்கண்ணு நேற்று நள்ளிரவு 11.15 மணிக்கு மரணம் அடைந்தார். 71 வயதான அவர், சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சமீப நாட்களில் அவருடைய உடல்நிலை மேலும் மோசம் அடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இதனை அடுத்து, அமைச்சர் துரைக்கண்ணு உடல் இன்று சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது.

    Tamil News: தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள், அனைத்து கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், மற்றும் கல்வி நிறுவனங்களும் நிலையான வழிமுறைகளைப் பின்பற்றி வரும் 16ம் தேதி முதல் செயல்படும். மேலும், பள்ளி / கல்லூரி பணியாளர்கள் விடுதிகள் உட்பட அனைத்து விடுதிகளும் வரும் 16ம் தேதி முதல் செயல்படும். தற்காலிக இடத்தில் செயல்படும் பழக்கடை மொத்த வியாபாரம் வரும் 2ஆம் தேதி முதலும், பழம் மற்றும் காய்கறி சில்லறை வியாபார கடைகள் 3 கட்டங்களாக வரும் 16ஆம் தேதி முதலும் கோயம்பேடு அங்காடி வளாகத்தில், அரசால் வெளியிடப்பட உள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
    Tamilnadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment