Advertisment

விவேக் உடல் தகனம்: திரளான ரசிகர்கள் பங்கேற்பு; இறுதி சடங்குகளை செய்த மகள்

Tamil Nadu news today live: சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள நடிகர் விவேக்கின் உடலுக்கு பிரபலங்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
விவேக் உடல் தகனம்: திரளான ரசிகர்கள் பங்கேற்பு; இறுதி சடங்குகளை செய்த மகள்

தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.

Advertisment

நடிகர் விவேக் காலமானார்

நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.நடிகர் விவேக் மறைவிற்கு பிரபலங்கள் பலரும் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வைரமுத்து இரங்கல்

கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் விவேக் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே! எல்லாரையும் சிரிக்கவைத்த கலைஞன் அழவைத்துவிட்டுப் போய்விட்டானே! என்று பதிவிட்டுள்ளார் வைரமுத்து.திரையில் இனி பகுத்தறிவுக்குப் பஞ்சம் வந்துவிடுமே! மனிதர்கள் மட்டுமல்ல விவேக்! நீ நட்ட மரங்களும் உனக்காக துக்கம் அனுசரிக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார் வைரமுத்து. கலைச் சரித்திரம் சொல்லும் நீ 'காமெடி'க் கதாநாயகன் என்றும் புகழஞ்சலி செலுத்தியுள்ளார் வைரமுத்து.

முதலமைச்சர் பழனிச்சாமி இரங்கல்



நடிகர் விவேக் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த மன வேதனை அடைந்தேன். இவரது நடிப்பு சிரிக்க வைத்ததோடு மட்டுமின்றி சிந்திக்கவும் வைத்தது.தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும் சமூக நலனைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த சமூக ஆர்வலர்.இளைஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர்.ஈடு இணையற்ற கலைச் சேவையாலும் சமூக சேவையாலும் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த விவேக் அவர்களின் மறைவு திரைப்படத்துறைக்கும் ரசிர்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் மிகப் பெரிய இழப்பாகும்.அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்

துணை முதலமைச்சர் இரங்கல்

நடிகர்.விவேக் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன். திரைப்படங்கள் மூலம் பல சமூக சீர்திருத்த கருத்துகளை பரப்பிய திரு.விவேக் அவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு ஆகியவற்றிலும் முக்கியப்பங்கு வகித்தவர்.பத்மஸ்ரீ திரு.விவேக் அவர்களின் மறைவு இச்சமூகத்திற்கும், தமிழ் திரையுலகிற்கும் மிகப்பெரிய இழப்பாகும். தனது வாழ்நாள் முழுவதும் நகைச்சுவை மூலம் நம்மை மகிழ்ச்சியில் திளைக்கவைத்தவர், இன்று சோகத்தில் நம்மை ஆழ்த்திவிட்டார்.அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்

முக ஸ்டாலின் இரங்கல்

'சின்னக் கலைவாணர்' விவேக் அவர்களின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. தலைவர் கலைஞரிடம் தனி அன்பு கொண்டவர். சூழலியல் ஆர்வலர். ஆற்றல்மிகு நடிகர் விவேக்கை இயற்கை இத்தனை அவசரமாகப் பறித்ததேன்? அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்

டிடிவி தினகரன் இரங்கல்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது மறைவு திரையுலகிற்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்திற்குமே பேரிழப்பாகும். அந்தளவுக்கு சமூக அக்கறை கொண்ட சிந்தனையாளராகவும் , செயற்பாட்டாளராகவும் திரு.விவேக் திகழ்ந்தார். “சனங்களின் கலைஞன்” எனக் கொண்டாடப்படும் அவரது பெருமைகள் என்றைக்கும் நிலைத்து நிற்கும். விவேக் அவர்களின் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் , நண்பர்களுக்கும் , திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 20:45 (IST) 17 Apr 2021
    தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்த மகள்

    மறைந்த நடிகர் விவேக்கின் உடல் மேட்டுக்குப்பம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், அவரது உடலுக்கு மகன் ஸ்தானத்தில் அவரது மகள் தேஜாஸ்வினி இறுதிச்சடங்கு செய்துள்ளார்.



  • 19:34 (IST) 17 Apr 2021
    மேட்டுக்குப்பம் மின்மயானத்தில் நடிகர் விவேக்கின் உடல் நல்லடக்கம்

    மேட்டுக்குப்பம் மின்மயானத்தில் நடிகர் விவேக்கின் உடல் 78 குண்டுகள் முழங்க காவல்துறையின் மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது



  • 19:32 (IST) 17 Apr 2021
    போலீஸ் மரியாதையுடன் விவேக் உடல் நல்லடக்கம்

    நகைச்சுவை நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை மரணமடைந்த நிலையில், அவரது கலை மற்றும் சமூக சேவையை பாராட்டி அவரது உடல் போலீஸ் மற்றும் முழு அரசியல் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.



  • 17:18 (IST) 17 Apr 2021
    நடிகர் விவேக் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

    நடிகர் விவேக்கின் மரணம் தமிழகத்தை மீளா துயரத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவரது இறுதி ஊர்வலம் தற்போது தொடங்கியது. இதில் நடிகர் விவேக்கின் உடலுக்கு காவல்துறை சார்பில் மரியாதை விவேக்கின் உடலுக்கு 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெற்ற நிலையில், அவரின் கலை மற்றும் சமூக சேவையை கவுரவிக்கும் வகையில் அரசு மரியாதை வழங்கப்பட்டது.



  • 16:50 (IST) 17 Apr 2021
    78 குண்டுகள் முழங்க விவேக்கிற்கு காவல் துறை மரியாதை

    நடிகர் விவேக்கிற்கு தமிழக காவல்துறை சார்பில் 78 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செய்யப்பட உள்ளது. மேட்டுக்குப்பம் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.



  • 16:28 (IST) 17 Apr 2021
    விவேக் இறப்புக்கும் கொரோனா தடுப்பூசி போட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - சென்னை மாநகராட்சி ஆணையர்

    நடிகர் விவேக் இறப்பை பேரிழப்பாக நான் கருதுகிறேன். விவேக் இறப்புக்கும் கொரோனா தடுப்பூசி போட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 12 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்ட 20 லட்சம் பேர் உள்ளனர். அவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என சென்று கொண்டிருக்கிறோம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.



  • 16:04 (IST) 17 Apr 2021
    நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம் தொடங்கியது- ஏராளமானோர் பங்கேற்பு

    இன்று மரணமடைந்த நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம் தற்போது தொடங்கி உள்ளது. திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



  • 16:01 (IST) 17 Apr 2021
    அவசர தேவைக்கு பிரதமரை தொடர்பு கொள்ள முடியவில்லை-உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு

    அவசர தேவைக்காக பிரதமரை தொடர்புகொண்டபோது, அவர் தேர்தல் பரப்புரையில் இருப்பதாகவும், திரும்பி வந்ததும் பேசலாம் என பிரதமர் அலுவலக அதிகாரிகள் கூறியதாக மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார். ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் ரெம்டெசிவிர் மருந்துகளை அவசரமாக வழங்க கோரி பிரதமரை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது தனக்கு இவ்வாறு தகவல் அளிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.



  • 15:50 (IST) 17 Apr 2021
    தமிழ் சினிமாவிற்கு விவேக்கின் பங்களிப்பு மகத்தானது- திருமாவளவன்

    தமிழ் சினிமாவில் நகைச்சுவை தளத்தில் நடிகர் விவேக்கின் பங்களிப்பு மகத்தானது என விசிக தலைவர் திருமாவளவன் புகழ்ந்து பேசியுள்ளார். மேலும் நடிகராக மட்டுமின்றி சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் பணியாற்றியது பாராட்டத்தக்கது என தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.



  • 15:33 (IST) 17 Apr 2021
    டைமிங் காமெடியால் ரசிகர்களை ஈர்த்தவர் விவேக் - துணை குடியரசுத் தலைவர் இரங்கல்

    டைமிங் காமெடி மற்றும் துள்ளலான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்தவர் விவேக் என துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் விவேக்கின் அகால மரணம் வருத்தம் அளிப்பதாகவும் கூறியுள்ளார்.



  • 15:29 (IST) 17 Apr 2021
    காவலர் பணியிடங்களுக்கான தகுதித் தேர்வு ஒத்திவைப்பு- சீருடை பணியாளர் தேர்வாணையம் தகவல்

    இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தகுதித் தேர்வு வரும் 21ம் தேதி நடக்க இருந்தது.கொரோனா பரவல் அதிகரிக்கும் இந்த நேரத்தில் தகுதித்தேர்வை ஒத்திவைக்க பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது தேர்வாணையம் ஒத்திவைத்துள்ளது. தேர்வு நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.



  • 15:19 (IST) 17 Apr 2021
    என் படங்களின் வெற்றிக்கு விவேக்கின் நகைச்சுவையே காரணம்- இயக்குனர் சங்கர்

    என் படங்கள் வெற்றிபெற்றதற்கு விவேக்கின் நகைச்சுவையே காரணம் என்று இயக்குனர் சங்கர் கூறியுள்ளார். மேலும் விவேக்கின் மறைவு இயற்க்கைக்கே பேரிழப்பு என உருக்கமாக பேசியுள்ளார்.



  • 15:09 (IST) 17 Apr 2021
    விவேக் மறைவு தமிழர்களுக்கு மிகப்பெரிய இழப்பு - பிரேமலதா விஜயகாந்த்

    நடிகர் விவேக் மறைவு ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் மிகப்பெரிய இழப்பு என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். இதேபோல், மக்கள் கலைஞராக மட்டுமின்றி திரையுலகிற்கு வெளியே மக்களுக்கான மனிதராக விளங்கினார் விவேக் என பாஜக தலைவர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.



  • 15:04 (IST) 17 Apr 2021
    தன் திறமையால் இந்திய சினிமாவை சிறப்படைய செய்தவர் விவேக் - அமித் ஷா

    நடிகர் விவேக் மரணம் பற்றி அறிந்து வேதனையுற்றதாகவும், அவரது அற்புதமான திறமை அவரை சிறந்த நடிகராக்கியது எனவும்,தன் திறமையால் இந்திய சினிமாவை சிற்ப்படைய செய்தவர் எனவும் அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு எனது இரங்கல் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.



  • 15:02 (IST) 17 Apr 2021
    தன் திறமையால் இந்திய சினிமாவை சிறப்படைய செய்தவர் விவேக் - அமித் ஷா

    நடிகர் விவேக் மரணம் பற்றி அறிந்து வேதனையுற்றதாகவும், அவரது அற்புதமான திறமை அவரை சிறந்த நடிகராக்கியது எனவும்,தன் திறமையால் இந்திய சினிமாவை சிற்ப்படைய செய்தவர் எனவும் அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு எனது இரங்கல் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.



  • 14:53 (IST) 17 Apr 2021
    கிரிஜா வைத்தியநாதன் நியமனம் செல்லும் - உயர்நீதிமன்றம்

    தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக, முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியாநாதன் அவர்களை நியமித்தது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இவரது நியமன பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



  • 14:48 (IST) 17 Apr 2021
    விவேக்கின் தீவிர ரசிகை ஸ்ரீதேவி- போனி கபூர்

    நடிகர் விவேக் மறைவிற்கு, நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் இரங்கல் தெரிவித்துள்ளார். என் மனைவி ஸ்ரீதேவி விவேக்கின் தீவிர ரசிகை என்றும் இருவரும் இணைந்து நடித்தது சிறப்பாக இருந்ததாகவும், விவேக்குடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.



  • 13:53 (IST) 17 Apr 2021
    ‘நான் இங்கிலீஷ் பேசினாலும் தமிழன்டா’ - வசனங்களை சுட்டிகாட்டிய நடிகர் பிரபு!

    விவேக் மறைவை அடுத்து, நடிகர் பிரபு வெளியிட்டுள்ள இரங்கல் வீடியோவில், என்னுடன் விவேக் நடித்ததை விட, நான் விவேக்குடன் நடித்தது தான் பெருமை. ‘நான் இங்கிலீஷ் பேசினாலும் தமிழன்டா' என்ற விவேக்கின் வசனமே எனக்கு பிடித்த வசனம் எனவும் நினைவுக் கூர்ந்துள்ளார்.



  • 13:48 (IST) 17 Apr 2021
    காவல்துறை மரியாதையுடன் விவேக் உடல் நல்லடக்கம்; அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

    காவல்துறை மரியாதையுடன் நடிகர் விவேக்கின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்ற தமிழக அரசின் முடிவுக்கு, தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ள நிலையில், காவல்துறை மரியாதையுடன் விவேக்கின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.



  • 13:36 (IST) 17 Apr 2021
    தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றது தேர்தல் ஆணையம்!

    தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், நடிகர் விவேக்கின் உடலை காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்ய விரும்பும் தமிழக அரசின் முடிவிற்கு அனுமதி தரக்கோரி தேர்தல் ஆணையத்திற்கு தமிழக அரசு கடிதம் எழுதிய நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்றுள்ளது.



  • 13:31 (IST) 17 Apr 2021
    மண்ணின் மகத்தான பெருங்கலைஞர் விவேக்; சீமான் இரங்கல்

    கலைச்சேவையும், மக்கள்சேவையும் புரிந்திட்ட மண்ணின் மகத்தான பெருங்கலைஞர் விவேக்கின் மறைவு தமிழ்ச்சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.



  • 13:26 (IST) 17 Apr 2021
    நான் விவேக்கின் ரசிகன்; கண்ணீருடன் வடிவேலு இரங்கல் வீடியோ

    ‘என் நண்பன் விவேக்’, ‘உரிமையோடு ஒருமையில் பேசுவான்’ என விவேக் மறைவிற்கு கண்ணீர் மல்க இரங்கல் வீடியோவை நடிகர் வடிவேலு வெளியிட்டுள்ளார். படப்பிடிப்பிற்காக வெளிநாட்டில் இருப்பதால், நேரில் சென்று அஞ்சலி செலுத்த முடியாத ஆற்றாமையையும் குறிப்பிட்டுள்ளார்.



  • 13:21 (IST) 17 Apr 2021
    தமிழக அரசு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்!

    தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், நடிகர் விவேக்கின் உடலை காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்ய விரும்பும் தமிழக அரசின் முடிவை நிறைவேற்ற அனுமதி வேண்டி, தேர்தல் ஆணையத்திற்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.



  • 13:12 (IST) 17 Apr 2021
    விவேக் உடலுக்கு காவல்துறை மரியாதை - தமிழக அரசு முடிவு

    நடிகர் விவேக் இன்று மாரடைப்பால் மறைந்ததை அடுத்து, அவரது உடலை காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.



  • 12:58 (IST) 17 Apr 2021
    மக்களை மகிழ்வித்த விவேக்கின் வசனங்கள்; பிரதமர் மோடி இரங்கல்!

    சுற்றுச்சூழல் மற்றும் சமூகத்தின் மீதான அக்கறை விவேக்கின் படங்களில் பிரதிபலித்ததாகவும், அவரது நகைச்சுவை மற்றும் வசனங்கள் மக்களை மகிழ்வித்ததது எனவும், நடிகர் விவேக் மறைவு குறித்து, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.



  • 12:57 (IST) 17 Apr 2021
    முதல் காட்சியே நடிகர் விவேக் உடன் தான்; நடிகர் விஷால்!

    தமிழ் சினிமாவில், தனது முதல் காட்சியே நடிகர் விவேக் உடன் தான் என, தனது நினைவலைகளை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் நடிகர் விஷால்.



  • 12:49 (IST) 17 Apr 2021
    கலாமின் இளவல், பசுமைக் காவலர்; விவேக் மறைவிற்கு கமல் இரங்கல்!

    நடிகனின் கடமை நடிப்பதோடு நின்று விடாமல், தனக்குச் செய்த சமூகத்துக்கு தானும் ஏதேனும் செய்ய விரும்பியவர், செய்தவர் நண்பர் விவேக். கலாமின் இளவலாக, பசுமைக் காவலராக வலம் வந்த விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு என, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.



  • 12:41 (IST) 17 Apr 2021
    இயற்கை அவசரமாக விவேக்கை பறிந்துக் கொண்டதோ; ஸ்டாலின் இரங்கல்!

    சூழலியல் மற்றும் சமூகப் பணிகளில் தன்னை முழுவதும் ஈடுபடுத்திக் கொண்டவர் நடிகர் விவேக். பல சாதனைகளை புரிய கூடிய அவரை, இயற்கை ஏன் அவசரமாக பறித்துக் கொண்டதோ என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமான தனது இரங்கலை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.



  • 12:34 (IST) 17 Apr 2021
    தலைமுறைக்கும் எங்கள் நினைவில் வாழ்வீர்கள்; நடிகர் சூர்யா இரங்கல்!

    மனதில் விதைத்த சிந்தனைகள் வழியாக தலைமுறைக்கும் எங்கள் நினைவில் வாழ்வீர்கள் என நடிகர் சூர்யா ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.



  • 10:08 (IST) 17 Apr 2021
    நடிகர் சத்யராஜ் வீடியோ வெளியிட்டு இரங்கல்

    வார்த்தைகளால் விவேக் மறைவிற்கு ஆறுதல் சொல்ல முடியாது

    ”சிரிக்கவும்---சிந்திக்கவும்-வைத்த-சின்னக்-கலைவாணர்-அன்புத்-தம்பி”-விவேக்-மறைவுக்கு-நடிகர்-சத்யராஜ்-ஆழ்ந்த-இரங்கல்-pic.twitter.com/lUlYawy3eT—-IE-Tamil-(@IeTamil)-



  • 10:03 (IST) 17 Apr 2021
    நடிகர் சத்யராஜ் வீடியோ வெளியிட்டு இரங்கல்

    வார்த்தைகளால் விவேக் மறைவிற்கு ஆறுதல் சொல்ல முடியாது



  • 09:53 (IST) 17 Apr 2021
    சூர்யா, ஜோதிகா நேரில் அஞ்சலி

    சென்னை விருகம்பாக்கத்தில் வைக்கப்பட்டுள்ள நடிகர் விவேக் உடலுக்கு நடிகர் சூர்யா அவரது மனைவி ஜோதிகா மற்றும் நடிகர் கார்த்திக் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.



  • 09:49 (IST) 17 Apr 2021
    நடிகர் விவேக் மறைவு- டாக்டர் ராமதாஸ் இரங்கல்

    தமிழ் திரையுலகில் நடிகர் விவேக் தனித்துவம் கொண்டவர் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகளையும், சமூக விழிப்புணர்வுக்கான கருத்துகளையும் தமது வசனங்கள் மூலம் பரப்பியவர்



  • 09:49 (IST) 17 Apr 2021
    நடிகர் விவேக் மறைவு- டாக்டர் ராமதாஸ் இரங்கல்

    தமிழ் திரையுலகில் நடிகர் விவேக் தனித்துவம் கொண்டவர் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகளையும், சமூக விழிப்புணர்வுக்கான கருத்துகளையும் தமது வசனங்கள் மூலம் பரப்பியவர்



  • 09:35 (IST) 17 Apr 2021
    விவேக் மறைவு- ரஜினிகாந்த் ட்விட்டரில் இரங்கல்

    சின்னக் கலைவாணர், சமூக சேவகர், என்னுடைய நெருங்கிய இனிய நண்பர் விவேக் அவர்களுடைய மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. சிவாஜி படப்பிடிப்பில் அவருடன் நடித்த ஒவ்வொரு நாட்களும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள். அவரை பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். விவேக்கின் ஆத்மா சாந்தி அடையட்டும்.



  • 09:34 (IST) 17 Apr 2021
    விவேக் மறைவு- சீயான விக்ரம் இரங்கல்

    என் மேல் அளவற்ற அன்பு கொண்டவரும், எனது நெருங்கிய நண்பருமான மாபெரும் கலைஞன் விவேக்கின் மரண செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்தேன்.தனிப்பட்ட முறையில் எனக்கும், தமிழ் திரைப்பட உலகிற்கும் மாபெரும் இழப்பு.அவரை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.



Tamilnadu News Update Actor Vivek Tamilandu Latest News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment