Advertisment

Tamil News Highlights: துணைக் குடியரசு தலைவர் ஜெகதீப் தங்கர் இன்று பதவியேற்பு

Tamil News Petrol price Today, Bihar, Nitish kumar, – 10 August 2022 - இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil News Live

Tamil News Live updates

குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தங்கர் இன்று பதவியேற்கிறார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்

Advertisment

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Tamil News Latest Updates

செஸ் ஒலிம்பியாட்

மாமல்லபுரத்தில் நடைபெற்ற 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மொத்தம் 17 இந்தியா்கள் பதக்கம் வென்றனா். ஓபன் பிரிவில், உஸ்பெகிஸ்தான் அணிக்கு தங்கப் பதக்கம், இந்திய பி அணிக்கு வெண்கல பதக்கம் வழங்கப்பட்டது. மகளிர் பிரிவில், உக்ரைன் அணிக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.

தனிநபர் பிரிவில் தமிழக வீரர் குகேஷ், நிகில் சரின் தங்கம் வென்றனர். எரிகேசி அர்ஜுன் வெள்ளி பதக்கமும், பிரக்ஞானந்தா, வைஷாலி, தானியா சச் தேவ், திவ்யா தேஷ்முக் ஆகியோர் வெண்கல பதக்கம் வென்றனர்.

ஆசிரியர் தகுதி தேர்வு

ஆசிரியர் தகுதி ஆகஸ்டு 25ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் தாள் தேர்வு செப்டம்பர் 10ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை கணினி வழியில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

publive-image

பீகார் மாநில முதல்வர் ராஜினாமா

பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பகு சௌகானிடம் அளித்தார். மேலும் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகளின் ஆதரவுடன் அவர் மீண்டும் முதல்வராக பதவியேற்கவுள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நிதீஷ்குமார், “ பாஜகவுடனான கூட்டணியை ஐக்கிய ஜனதா தளம் முறித்துக்கொண்டது. இந்த முடிவை எங்கள் கட்சியின் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களின் முழுமனதாக ஏற்றுக்கொண்டனர்” என கூறினார்.

லாலு பிரசாத் கட்சியின் ஆதரவோடு, முதல்வராக நிதீஷ்குமார் இன்று மீண்டும் பதவியேற்கிறார். லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் தேஜஸ்வி யாதவ் புதிய துணை முதல்வராகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:01 (IST) 10 Aug 2022
    அதிமுக தலைமை அலுவலகம் தொடர்பாக ஓபிஎஸ் மீதான வழக்கு; ஐகோர்ட்டில் நாளை விசாரணை

    அதிமுக தலைமை அலுவலகத்தில் புகுந்து முக்கிய ஆவணங்களை எடுத்து சென்ற விவகாரத்தில் ஓபிஎஸ் மீதான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.



  • 21:29 (IST) 10 Aug 2022
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்பதற்கு தடை விதிக்க கோரிய வழக்கு தள்ளுபடி

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்பதற்கு தடை விதிக்க கோரிய வழக்கு, எதிர்மறை நோக்கத்துடன் மனு உள்ளதால் வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் மனுதாரர் உரிய அதிகாரிகளிடம் முறையிட்டு நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது



  • 20:35 (IST) 10 Aug 2022
    செஸ் ஒலிம்பியாட்; சிறப்பாக நடத்திய தமிழக அரசுக்கு பிரதமர் மோடி பாராட்டு

    44வது செஸ் ஒலிம்பியாட்டை சிறப்பாக நடத்திய தமிழக அரசுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். உலகெங்கும் உள்ள போட்டியாளர்களை வரவேற்று நமது கலாச்சாரம் மற்றும் விருந்தோம்பலை வெளிப்படுத்தியதற்காக பாராட்டுகள் என பிரதமர் மோடி கூறியுள்ளார்



  • 20:14 (IST) 10 Aug 2022
    சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு முடித்து வைப்பு

    சாத்தான்குளம் தந்தை மகன் கொலை தொடர்பாக தாமாக முன்வந்து மதுரை உயர்நீதிமன்றம் எடுத்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

    4,484 காவல்துறையினர் மன அழுத்தத்தில் இருப்பதை கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 2022-23 ஆம் ஆண்டு காவலர் புத்தாக்க பயிற்சிக்காக ரூ.61.51 லட்சம் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்ற தமிழக அரசின் பதில் மனுவை ஏற்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கை முடித்து வைத்தது



  • 19:57 (IST) 10 Aug 2022
    சாஸ்திரா பல்கலைக்கழகம்; கே.பாலகிருஷ்ணன் கேள்வி

    ஏழை மக்களின் அழுகுரல்களை பொருட்படுத்தாமல் அவர்களின் வீடுகளை இடிக்க கண்டிப்பு காட்டும் நீதிமன்றம், சாஸ்திரா பல்கலைக்கழகத்தில் மட்டும் மென்மைப் போக்கை கடைப்பிடிப்பது ஏன் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கேள்வியெழுப்பியுள்ளார்.



  • 19:31 (IST) 10 Aug 2022
    இலவச அறிவிப்புகள் மீது பிரதமர் மோடி விமர்சனம்

    'சுயநல அரசியல்வாதிகள் பெட்ரோல், டீசல் இலவசம் என்று அறிவிக்கலாம். இது நாட்டை சீரழித்துவிடும். வருங்கால சந்ததியினரின் வாழ்க்கை பாதிக்கப்படும். வரி செலுத்துவோர் கூடுதல் சுமையை அனுபவிப்பார்கள்' என பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.



  • 19:05 (IST) 10 Aug 2022
    பிகாரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த கோரிக்கை

    பிகாரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என லோக் ஜன சக்தி தலைவர் சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர், “நிதிஷ் குமார் ஒரு பூஜ்யம். அவருக்கு எந்தக் கொள்கையும் கிடையாது. அடுத்த தேர்தலில் அவரது கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றிப் பெறாது” என்றார்.



  • 18:56 (IST) 10 Aug 2022
    பள்ளிகளில் போதைப் பொருள் விழிப்புணர்வு

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் போதைப் பொருள் தொடர்பான உறுதிமொழி வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.



  • 18:54 (IST) 10 Aug 2022
    பள்ளிகளில் போதைப் பொருள் விழிப்புணர்வு

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் போதைப் பொருள் தொடர்பான உறுதிமொழி வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.



  • 18:37 (IST) 10 Aug 2022
    பானிபட் எத்தனால் தொழிற்சாலை- பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்

    ஹரியானா மாநிலம் பானிபட்டில் 2ஜி எத்தனால் ஆலையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக தொடங்கிவைத்தார்.



  • 18:34 (IST) 10 Aug 2022
    சென்னை விமான நிலையத்தில் பெண் கைது

    சென்னை விமான நிலையத்தில் ஆடைக்குள் கொகைன் மறைத்துவைத்து கடத்திய பெண் கைது செய்ய்பட்டார்.



  • 17:59 (IST) 10 Aug 2022
    தமிழக மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

    நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 9 மீனவர்களை இலங்கை கடற்பனையினர் கைது செய்துள்ளனர். முல்லைத் தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது தமிழக மீனவர்கள்9 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கையில் உள்ள திரிகோணமலை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.



  • 17:49 (IST) 10 Aug 2022
    உச்சநீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம்

    தலைமை நீதிபதி என்.வி.ரமணாவின் பதவி காலம் ஆகஸ்ட் 26ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், உச்சநீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.



  • 17:18 (IST) 10 Aug 2022
    அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணைை வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு - ஐகோர்ட் உத்தரவு

    அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணையை நாளை (ஆகஸ்ட் 10) காலை 10.30க்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 16:57 (IST) 10 Aug 2022
    அதிமுக பொதுக்குழு சட்டப்பூர்வமாக கூட்டப்பட்டதா? - ஐகோர்ட் கேள்வி

    அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக வைரமுத்து என்பவர் தொடர்ந்த வழக்கு விசாரணையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து: “அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சி விதிகள் மீறப்பட்டு இருந்தால் நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்கும். சட்டப்பூர்வமாக அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டதா? முறையாக அழைப்பு விடுக்கப்பட்டதா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    மேலும், சிறப்பு கூட்டம் நடத்தப்படுவதாக இருந்தால் மட்டும் 30 நாட்களுக்குள் கூட்டப்பட வேண்டும். ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு, சிறப்பு பொதுக்குழு கூட்டம் அல்ல என்று வைரமுத்து தரப்பில் வாதிடப்பட்டது.

    அதிமுகவில் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் என கூறி, அந்த பதவியை கலைத்துவிட்டு மீண்டும் அதே பதவியை மீண்டும் உருவாக்கியது ஏன் ? ” என்று பழனிசாமி தரப்பிற்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    இதற்கு, “பொதுச்செயலாளர் பதவியை கலைத்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்ட போதும் தேர்வு நடைமுறைகளில் எந்த மாற்றமும் செய்யவில்லை” என்று பழனிசாமி தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, “பொதுக்குழுவில் ஒப்புதல் பெறாததால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் செல்லாது என்றால், பொதுக்குழு உறுப்பினர்களின் தேர்தலும் செல்லாததாகி விடுமா? என விளக்க வேண்டும்” என எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.



  • 16:15 (IST) 10 Aug 2022
    வகுப்பறையிலேயே விஷம் குடித்து 12ம் வகுப்பு மாணவி தற்கொலை

    விழுப்புரம், மாம்பழப்பட்டு பகுதியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி வகுப்பறையிலேயே விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது குறித்து விழுப்புரம் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் நேரில் சென்று மாணவியின் தோழிகள், வகுப்பாசிரியர், தலைமை ஆசிரியர் உள்ளிட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.



  • 16:13 (IST) 10 Aug 2022
    கோவில் திருவிழாவில் விபத்து : கோவில் செயல் அலுவலர் மற்றும் செயலாளர் பணியிடை நீக்கம்

    புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோவில் தேர் விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில்9 பேர் படுகாயம் அடைந்த விவகாரத்தில் கோவில் செயல் அலுவலர் ராமமூர்த்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேற்பார்வையாளர் கோவிலில் இருந்து விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது கோயில் செயலாளரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்



  • 15:40 (IST) 10 Aug 2022
    அடிபம்புடன் சேர்த்து கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய்

    வேலூர் மாவட்டத்தில் விஜயராகவபுரம் பகுதியில் குடிநீர் அடிபம்புடன் சேர்த்து கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளதால் குடிநீர் அடிபம்பை பயன்படுத்த பொதுமக்கள் முடியாததால் அவதியடைந்து வருகின்றனர்



  • 15:30 (IST) 10 Aug 2022
    அதிமுகவில் இரு பதவிகளும் காலியாக உள்ள நிலையில் பொதுக்குழுவை யார் கூட்டலாம்? நீதிபதி கேள்வி

    அதிமுகவில் இரு பதவிகளும் காலியாக உள்ள நிலையில் பொதுக்குழுவை யார் கூட்டலாம்? நீதிபதி கேள்வி எழுப்பியுள்ள நிலையில், கட்சி விதிகளின் படி தலைமைக்கழக நிர்வாகிகள் பொதுக்குழுவை கூட்டலாம் என்றும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியானால், பொருளாளர், தலைமை கழக செயலாளர் அந்த பதவிகளுக்கான பணிகளை மேற்கொள்வர் என்று ஓபிஎஸ் தரப்பு கூறியுள்ளது.

    மேலும் தேர்தல் விதி திருத்தத்துக்கு, பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்காவிட்டால் பதவிகள் காலியாகி விடும் என்றால், அது பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் பொருந்தும் என்றும் கூறியுள்ளது



  • 14:51 (IST) 10 Aug 2022
    8வது முறையாக பீகார் முதல்வரானார் நிதிஷ் குமார்

    பீகாரில், 8வது முறையாக பதவியேற்றார் நிதிஷ் குமார். பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட அவர் தற்போது லாலு பிரசாத் யாதவ் கட்சியின் ஆதரவோடு முதல்வராக பதவியேற்றுள்ளார்.



  • 14:49 (IST) 10 Aug 2022
    சிறுத்தை தாக்கியதில் சிறுமி பலி

    உதகை அருகே அரக்காடு பகுதியில் சிறுமி சரிதா(4) வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது சிறுத்தை தாக்கியதில் படுகாயம் அடைந்தார். இதனால் சிகிச்சைக்காக அவரை மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார்



  • 13:57 (IST) 10 Aug 2022
    6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, நெல்லை மற்றும் குமரியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்



  • 13:57 (IST) 10 Aug 2022
    2 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு நீலகிரி மற்றும் கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்



  • 13:55 (IST) 10 Aug 2022
    செஸ் ஒலிம்பியாட் - தலா ₨1 கோடி பரிசு

    செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலம் பதக்கம் வென்ற 2 இந்திய அணிகளுக்கு தலா 1 கோடி ரூபாய் அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்



  • 13:54 (IST) 10 Aug 2022
    “பட்ஜெட் தாக்கல் - விரைவில் தேதி அறிவிப்பு“

    புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கல் செய்யும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் முழுமையான பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்வார் - புதுச்சேரி சபாநாயகர் செல்வம்



  • 12:29 (IST) 10 Aug 2022
    கள்ளக்குறிச்சி பள்ளி தாளாளர் ஜாமின் மனு - உத்தரவு

    கள்ளக்குறிச்சி பள்ளி தாளாளர் உட்பட 5 பேர் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு. விசாரணையின் நிலை அறிக்கையை மதியம் 12.30 மணிக்குள் தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவு



  • 12:09 (IST) 10 Aug 2022
    வழக்கை விரைந்து விசாரிக்க ஓபிஎஸ் முறையீடு

    அதிமுக அலுவலக சாவியை ஈபிஎஸ் தரப்பிடம் ஒப்படைக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான வழக்கை விரைந்து விசாரிக்க ஓபிஎஸ் முறையீடு

    வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும் என தலைமை நீதிபதி அறிவிப்பு



  • 11:15 (IST) 10 Aug 2022
    ஈபிஎஸ் உடன் பி.ஆர்.பாண்டியன் சந்திப்பு!

    சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் சந்திப்பு.

    ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதற்கு எதிராக வரும் 15ம் தேதி நடத்தவுள்ள உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவளிக்க ஈபிஎஸுக்கு அழைப்பு.



  • 11:14 (IST) 10 Aug 2022
    போதைப் பொருள் விற்பனை : காவல்துறைக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்

    பள்ளிகள், கல்லூரிகள் அருகில் போதைப் பொருட்கள் விற்பனை நடைபெறவில்லை என்பதை உறுதிப்படுத்திட வேண்டும்.

    காவல்துறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.



  • 10:16 (IST) 10 Aug 2022
    எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு

    புதுச்சேரியில் 2022-23ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமையில் திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.



  • 09:24 (IST) 10 Aug 2022
    பிரியங்கா காந்திக்கு கொரோனா

    பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



  • 09:23 (IST) 10 Aug 2022
    கள்ளக்குறிச்சி வழக்கு

    கள்ளக்குறிச்சி பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரின் ஜாமின் மனு விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.



  • 09:20 (IST) 10 Aug 2022
    கபிணி, கேஆர்எஸ் அணைகளில் நீர் திறப்பு அதிகரிப்பு

    கர்நாடகா கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 96,344 கன அடி நீரும், கபினி அணையில் இருந்து 41,438 கன அடி நீரும் திறக்கப்படுகிறது. இதனால், காவிரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவு 1,32,360 கன அடியில் இருந்து 1,37,782 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.



  • 08:18 (IST) 10 Aug 2022
    புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்

    புதுச்சேரியில் 2022-23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உரையாற்றி தொடங்கி வைக்கிறார்.



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment