Advertisment

Tamil News Highlights: கருணாநிதி நினைவு நாள் - மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைதிப் பேரணி

Tamil News, Petrol price Today, Chess Olympiad, commonwealth games 2022 – 06 August 2022 - இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil News Highlights: கருணாநிதி நினைவு நாள் - மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைதிப் பேரணி

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

Tamil News Latest Updates

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. சிபிசிஐடி எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக யாரேனும் புலன் விசாரணை நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சிபிசிஐடி புலன் விசாரணையை பாதிக்கும் வகையில் காணொலி காட்சிகளை பதிவிட கூடாது. மீறினால் சமூக வலைதள பக்கங்கள் முடக்கப்படும் என சிபிசிஐடி எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதிய நீதிபதி நியமனம்

தனிநீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பரிந்துரையை ஏற்று, அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளை விசாரிக்க, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் நியமனம் செய்து, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி உத்தரவிட்டார்.

செஸ் ஒலிம்பியாட் 2022

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கியூபா அணி வீரர் கார்லஸ் டேனியலை 46 வது நகர்த்தலில் வீழ்த்தி, தமிழக வீரர் குகேஷ் 7வது முறையாக வெற்றி  பெற்றார். இந்திய ஓபன் பிரிவு 'சி' அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய 'ஏ' அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

பர்மிங்காம் காமன்வெல்த் 2022

பர்மிங்காம் காமன்வெல்த்  மல்யுத்த போட்டியில், ஆடவருக்கான 65 கிலோ ஃப்ரிஸ்டைல் பிரிவில் கனடா வீரர் மெக்நீலை வீழ்த்தி, இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கம் வென்றார். மல்யுத்த போட்டியில் பெண்கள் பிரிவில்  வீராங்கனை சாக்‌ஷி மாலிக், ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் தீபக் புனியா தங்கம் வென்றனர்.

பர்மிங்காம் காமன்வெல்த் பதக்கப் பட்டியலில் இந்தியா 9 தங்கம், 9 வெண்கலம், 8 வெள்ளி என மொத்தம் 26 பதக்கங்களுடன்  5வது இடத்திற்கு முன்னேறியது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:15 (IST) 06 Aug 2022
    குடியரசு துணைத்தலைவராக ஜெகதீப் தன்கர் தேர்வு – ஸ்டாலின் வாழ்த்து

    குடியரசு துணைத்தலைவராக தேர்வாகியுள்ள ஜெகதீப் தன்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் ஜனநாயக விவாதங்கள் வலுப்பெறும் என நம்புகிறேன் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்



  • 21:54 (IST) 06 Aug 2022
    கருமுட்டை விற்பனை விவகாரம்; ஈரோட்டில் 10 ஸ்கேன் சென்டர்களுக்கு சீல் வைப்பு

    ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையின் 10 ஸ்கேன் சென்டர்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கருமுட்டை விற்பனை விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து அதிகாரிகள் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்



  • 21:43 (IST) 06 Aug 2022
    காமன்வெல்த் போட்டி; இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி பதக்கம்

    காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது. லான் பவுல்ஸில் ஆடவர் குழு பிரிவில் வெள்ளி வென்று அசத்தியுள்ளார்



  • 20:18 (IST) 06 Aug 2022
    குடியரசு துணைத்தலைவர் தேர்தல்; ஜெகதீப் தன்கர் வெற்றி

    குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜெகதீப் தன்கர் வெற்றி பெற்றுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட மார்கரெட் ஆல்வா தோல்வி அடைந்துள்ளார்



  • 19:59 (IST) 06 Aug 2022
    செஸ் ஒலிம்பியாட்: தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவை வீழ்த்தியது இந்திய இளம் அணி

    செஸ் ஒலிம்பியாட் போட்டியில், உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவை இந்திய இளம் அணி வீழ்த்தியுள்ளது. 3-1 என்ற கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி இந்திய 'பி' அணி அசத்தியுள்ளது



  • 19:42 (IST) 06 Aug 2022
    சாதி, மதங்களுக்கு எதிரானது திராவிடம் – கம்யூனிஸ்ட் மாநாட்டில் ஸ்டாலின் பேச்சு

    எல்லாவற்றிலும் தமிழகம் முன்னேறி வருகிறது. சாதி, மதங்களுக்கு எதிரானது திராவிடம். திராவிடம் என்பது தமிழக அரசின் சமத்துவத்தை உணர்த்தி நிற்கும் சொல் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றி வருகிறார்.



  • 19:22 (IST) 06 Aug 2022
    துணை குடியரசு தலைவர் தேர்தல்; வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

    தற்போதைய துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ஆம் தேதியுடன் முடிவடைவதால், இந்தியாவின் அடுத்த துணைக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினர்கள் சனிக்கிழமை வாக்களித்தனர். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் எம்பி மன்மோகன் சிங் ஆகியோர் நாடாளுமன்ற வளாகத்தில் சனிக்கிழமை வாக்களித்தனர். இதற்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.



  • 19:09 (IST) 06 Aug 2022
    செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா; எம்.எஸ் தோனி பங்கேற்பு

    செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் எம்.எஸ் தோனி பங்கேற்கிறார். இந்த நிறைவு விழா வரும் 9ம் தேதி மாலை 6 மணிக்கு நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது



  • 18:29 (IST) 06 Aug 2022
    வெள்ளி வென்றார் அவினாஷ்

    பிர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டியில் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிஸ் சேஸ் போட்டியில் இலக்கை 8.11 நிமிடங்களில் அடைந்து இந்திய வீரர் அவினாஷ் வெள்ளி பதக்கம் வென்றார்.



  • 18:21 (IST) 06 Aug 2022
    டிரா செய்த பிரக்ஞானந்தா

    செஸ் ஒலிம்பியாட் போட்டியில் உலகின் 7ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் வெஸ்லீயை எதிர்த்து களம் கண்ட இளம் வீரர் பிரக்ஞானந்தா போட்டியை டிரா செய்தார்.



  • 18:18 (IST) 06 Aug 2022
    செஸ் ஒலிம்பியாட்; பத்மினி ராவத் வெற்றி

    செஸ் ஒலிம்பியாட் தொடரின் 8ஆவது சுற்று ஆட்டத்தில் இந்திய பி அணி வீராங்கனை பத்மினி ராவத் வெற்றி பெற்றார்.

    இவர், தன்னை எதிர்த்து விளையாடிய குரேஷியாவின் அனமரிஜாவை 28ஆவது நகர்த்தலில் வெற்றிப் பெற்றார்.



  • 17:42 (IST) 06 Aug 2022
    நீட் விலக்கில் முன்னேற்றம்- மா.சுப்பிரமணியன்

    நீட் விலக்கில் மத்திய அரசு கேட்ட 16 கேள்விகளுக்கு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து பதில் அனுப்பி உள்ளோம்; நீட் விவகாரத்தில் முன்னேற்றம் வரும் என்று எதிர்பார்ப்போம் என சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.



  • 16:33 (IST) 06 Aug 2022
    அரச மரம் சரிந்து விழுந்து 20 பேர் காயம்

    கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வேங்காம்பட்டியில் அரச மரம் சரிந்து விழுந்ததில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் துக்க நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர்.

    சம்பவ பகுதிக்கு 108 ஆம்புலனஸ் வர தாமதம் ஆனதால் காயமுற்றோர் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.



  • 16:28 (IST) 06 Aug 2022
    நீட் விலக்கில் முன்னேற்றம்- மா.சுப்பிரமணியன்

    நீட் விலக்கில் மத்திய அரசு கேட்ட 16 கேள்விகளுக்கு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து பதில் அனுப்பி உள்ளோம்; நீட் விவகாரத்தில் முன்னேற்றம் வரும் என்று எதிர்பார்ப்போம் என சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.



  • 16:18 (IST) 06 Aug 2022
    காமன்வெல்த்: வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை!

    காமன்வெல்த் 10,000 மீட்டர் நடை ஓட்டம் மகளிர் பிரிவில் 43.38 நிமிடங்களில் இலக்கை அடைந்து இந்தியாவின் பிரியங்கா வெள்ளிப் பதக்கம் வென்றார்.



  • 16:18 (IST) 06 Aug 2022
    ஐனநாயக முறையில் போராடுவதை குற்றமாக கருத முடியாது - உயர் நீதிமன்றம்!

    இலங்கை அதிபருக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 2014ல் போராட்டத்தில் ஈடுபட்ட அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் மீதான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், "ஐனநாயக முறையில் போராடுவதை குற்றமாக கருத முடியாது. குற்ற நோக்கமின்றி பொதுவெளியில் 5 பேருக்கு மேல் கூடுவது சட்ட விரோதமல்ல" என்று தெரிவித்துள்ளது.



  • 15:49 (IST) 06 Aug 2022
    குளித்தலை: மரம் சாய்ந்து விழுந்ததில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைம்!

    கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வேங்காம்பட்டியில் பழமையான அரச மரம் சாய்ந்து விழுந்ததில் துக்க நிகழ்ச்சிக்காக வந்த 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 108 ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் மினி பேருந்து மூலம் காயம் அடைந்தவர்கள் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்



  • 15:49 (IST) 06 Aug 2022
    செஸ் ஒலிம்பியாட்: 8வது சுற்று போட்டிகள் விறுவிறு!

    செஸ் ஒலிம்பியாட் தொடரின் 8வது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. உக்ரைன் வீராங்கனை உஷெனினாவை எதிர்கொண்டு விளையாடி வருகிறார் தமிழ்நாடு வீராங்கனை வைஷாலி.



  • 15:48 (IST) 06 Aug 2022
    "காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்" - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

    அரசியல் அமைப்பின் அடிப்படை மனித உரிமை. சுயமரியாதை, தன்மானம், மனித உரிமை என்பவை ஒரே பொருளை குறிக்கும் வெவ்வேறு சொற்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    மேலும், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் உள்ள காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று கூறியுள்ளார்.



  • 15:39 (IST) 06 Aug 2022
    அன்புச்செழியன்: வருமான வரி சோதனையில் ரூ. 200 கோடி கண்டுபிடிப்பு

    சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ. 200 கோடி கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • 15:32 (IST) 06 Aug 2022
    மீரா மிதுனுக்கு 2-வது பிடிவாரண்ட்!

    பட்டியலினத்தவர் குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு இரண்டாவது முறையாக பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 15:11 (IST) 06 Aug 2022
    அம்மன் சிலை கண்டெடுப்பு: அதிகாரிகள் விசாரணை!

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மாளிகைமேடு பகுதியில் சந்திரசேகர் என்பவர் வீட்டில் கழிவறை கட்டுவதற்கு மண் தோண்டும் போது அம்மன் சிலை மற்றும் பெருமாள் உள்ளிட்ட 5 மண் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.



  • 15:11 (IST) 06 Aug 2022
    அவலாஞ்சியில் 32 செ.மீ. மழைப்பதிவு!

    தமிழகத்தில் அதிகப்பட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 32 செ.மீ., மேல் மழைப் பொழிவு பதிவாங்கியுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானியில் 20 செ.மீ. பொழிவு பதிவாங்கியுள்ளது.



  • 14:55 (IST) 06 Aug 2022
    நல்லகண்ணுக்கு தகைசால் தமிழர் விருது: தமிழக அரசு அறிவிப்பு!

    தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது முதலமைச்சர் ஸ்டாலின், விருதை வழங்க உள்ளார்.



  • 14:35 (IST) 06 Aug 2022
    நிவாரண முகாம்களில் ஈபிஎஸ் ஆய்வு!

    நாமக்கல், குமாரபாளையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஈபிஎஸ் நிவாரண உதவிகளை வழங்கினார்.



  • 13:43 (IST) 06 Aug 2022
    மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு!

    ஆக.8ஆம் தேதி மின்வாரிய ஊழியர்கள் தேசிய அளவில் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு மின் ஊழியர்கள் மத்திய அமைப்பு அறிவிப்பு



  • 13:39 (IST) 06 Aug 2022
    மும்முறை தாண்டுதலில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் - ஸ்டாலின் வாழ்த்து!

    U20 சர்வதேச தடகள சாம்பியன்ஷிப்பில் மும்முறை தாண்டுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ள தமிழக வீரர் செல்வ பிரபுவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



  • 12:38 (IST) 06 Aug 2022
    பிங்க் நிற பேருந்துகள் அறிமுகம்!

    சென்னை: மகளிர் இலவசமாக பயணிக்கும் வகையில் முதற்கட்டமாக 60 பிங்க் நிற பேருந்துகள் அறிமுகம். சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.



  • 12:29 (IST) 06 Aug 2022
    நடிகர் ரஜினி திடீர் டெல்லி பயணம்!

    படப்பிடிப்பில் கலந்து கொள்ளவதற்காக நடிகர் ரஜினிகாந்த் டெல்லி புறப்பட்டு சென்றார்.



  • 12:29 (IST) 06 Aug 2022
    ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கஞ்சா பறிமுதல்!

    சென்னை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் 9 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • 11:48 (IST) 06 Aug 2022
    விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வுதியம் உயர்வு

    நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வுதியத்தை ரூ. 3 ஆயிரத்தில் இருந்து ரூ. 6 ஆயிரமாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.



  • 11:47 (IST) 06 Aug 2022
    கர்நாடக முதல்வருக்கு கொரோனா

    கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் தனது டெல்லி பயணத்தை ரத்து செய்தார்.



  • 10:24 (IST) 06 Aug 2022
    குடியரசு துணைத் தலைவர் தேர்தல்

    டெல்லி, நாடாளுமன்ற வளாகத்தில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் பாஜக கூட்டணி சார்பில் ஜெகதீப் தங்கர், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மார்கரெட் ஆல்வா போட்டியிடுகின்றனர். முதல் நபராக பிரதமர் மோடி தனது வாக்கை செலுத்தினார்.



  • 10:04 (IST) 06 Aug 2022
    இந்தியாவில் மேலும் 19,406 பேருக்கு கொரோனா

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 19,406 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. 49 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் 1.34 லட்சம் பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.



  • 09:24 (IST) 06 Aug 2022
    மூணாறு அருகே பயங்கர நிலச்சரிவு

    மூணாறு அருகே புதுக்குடி தோட்டம் பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டதில் ஒரு கோவில், 2 கடைகள் மண்ணில் புதைந்தன. ஆனால் உயிர் சேதம் எதுவும் இல்லை.



  • 08:51 (IST) 06 Aug 2022
    மேட்டூர் அணையில் இருந்து 1.80 லட்சம் கனஅடி நீர் திறப்பு

    மேட்டூர் அணையில் இருந்து 1.80 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து 1.77 லட்சம் கன அடியாக உள்ளது. அணை நீர்மட்டம் - 120.04 அடி, நீர் இருப்பு - 93,534 டிஎம்சியாக உள்ளது.



  • 08:10 (IST) 06 Aug 2022
    மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

    ராமேஸ்வரம் கடற்பகுதியில் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை அனுமதி மறுத்துள்ளது.



  • 08:10 (IST) 06 Aug 2022
    அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி ஆகிய 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.



  • 08:09 (IST) 06 Aug 2022
    இபிஎஸ் கேவியட் மனு தாக்கல்

    அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், தமது தரப்பையும் கேட்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.



  • 08:09 (IST) 06 Aug 2022
    துணை குடியரசு தலைவர் தேர்தல்

    குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில் பாஜக கூட்டணி சார்பில் ஜெகதீப் தங்கரும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மார்கரெட் ஆல்வாவும் போட்டியிடுகின்றனர்.



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment