Advertisment

Tamil News Highlights : ரஜினிகாந்த் நலம் பெற கமல்ஹாசன் வாழ்த்து

Today's Tamil News : டெல்லியில் இன்று நண்பகல் 12 மணிக்கு விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்குவதை பிரதமர் தொடங்கிவைக்கிறார்

author-image
WebDesk
New Update
Tamil News Highlights : ரஜினிகாந்த் நலம் பெற கமல்ஹாசன் வாழ்த்து

Latest Tamil News : இன்று கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி உலகெங்கிலும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக மக்களை ஆலயங்களுக்கும் அனுமதிப்பதற்கு முன் அவர்களுக்கு முழுமையான கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. வாட்டிகன், இயேசு பிறந்த பெத்லேஹேமன், அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவு பிரார்த்தனை மிகவும் எளிமையாக நடைபெற்றது. சில இடங்களில் விருந்து, கலை நிகழ்ச்சிகள், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

Advertisment

வேளாண் மசோதாவை எதிர்த்து டெல்லியில் 30 நாளாகத் தொடர்ந்து போராடி வரும் விவசாயிகளின் பிரச்சனைகளை விவாதிக்கத் தயாராக உள்ளதாகவும் பேச்சுவார்த்தைக்கு வருமாறும் மத்திய அரசு விவசாய சங்கங்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறது. இதுவரை இரண்டு கடிதங்கள், ஐந்து சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்தபோதிலும், முழுமையானது தீர்வு விவசாயிகளுக்குக் கிடைக்கவில்லை. கடும் குளிரிலும் பனியிலும் போராடி வரும் விவசாயிகளுக்கு வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படவேண்டும் என்பதே விருப்பமே தவிரத் திருத்தங்கள் அல்ல என விவசாய சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

தமிழகத்தில் அடுத்த மூன்று நாள்களுக்கு வறண்ட வானிலையே இருக்குமெனவும் மூன்று நாட்களுக்குப் பிறகு 28-ம் தேதி தென் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்றும் மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே தொடரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"

Live Blog

Today Tamil News : இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த நேரலையுடன் இணைந்திருங்கள்



























Highlights

    21:26 (IST)25 Dec 2020

    ரஜினிகாந்த் நலம் பெற கமல்ஹாசன் வாழ்த்து

    நடிகர் ரஜினிகாந்த் ரத்த அழுத்தம் மாறுபாடு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனால், மநீம தலைவர் கமல்ஹாசன், நண்பர் ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

    19:47 (IST)25 Dec 2020

    இங்கிலாந்தில் இருந்து வந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தல்

    இங்கிலாந்தில் இருந்து வந்தவர்கள் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை அறிவுறுத்தியுள்ளது.

    19:04 (IST)25 Dec 2020

    ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை நிர்வாகம் தகவல்

    நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க ரஜினிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    17:54 (IST)25 Dec 2020

    அதிமுக ஹாட்ரிக் வெற்றி பெறும் - அமைச்சர் கடம்பூர் ராஜு நம்பிக்கை

    அமைச்சர் கடம்பூர் ராஜு, “2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதால் வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 3 வது முறையாக வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றி பெறும்” என்று கூறினார்.

    17:19 (IST)25 Dec 2020

    தமிழகத்தின் முதல்வர் வேட்பாளர் யார்? பிரகாஷ் ஜவடேகர் பதிலளிக்க மறுப்பு

    மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நாங்கள் எம்.ஜி.ஆரை எப்போதும் மறக்கவில்லை என்று கூறினார். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

    17:16 (IST)25 Dec 2020

    பழனி முருகன் கோயிலில் வரும் 28ஆம் தேதி முதல் மீண்டும் ரோப்கார் சேவை தொடக்கம்

    பழனி முருகன் கோயிலில் வரும் 28ஆம் தேதி முதல் மீண்டும் ரோப்கார் சேவை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9.30 முதல் இரவு 7.30 மணி வரை ரோப் கார் இயக்கப்படும். இதில் ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    16:25 (IST)25 Dec 2020

    தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெறும் - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

    மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெறும். மக்கள் வளர்ச்சியை எதிர்பார்க்கின்றனர். மலிவான குடும்ப அரசியலை வெறுக்கின்றனர். நாடு முழுவதும் நடைபெறும் தேர்தல்களில் பாஜகவுக்கு மாபெரும் வெற்றி கிடைக்கும். காங்கிரஸ் படுதோல்வி அடையும்” என்று தெரிவித்துள்ளார்.

    15:41 (IST)25 Dec 2020

    ரஜினியிடம் நலம் விசாரித்தார் மு.க.ஸ்டாலின்

    ஹைதராபாத்தில் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த்திடம் உடல்நலம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் கேட்டறிந்தார்.

    14:14 (IST)25 Dec 2020

    ஹைதராபாத் மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதி

    அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் இருந்த நடிகர் ரஜினிகாந்த, திடீரென இன்று ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரத்த அழுத்தத்தில் ஏற்பட்டுள்ள மாறுபாடு காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

    12:59 (IST)25 Dec 2020

    மணல்கொள்ளை தடுக்க சென்ற கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல்

    தென்காசி மாவட்டம் சுரண்டையில் மணல்கொள்ளை தடுக்க சென்ற கிராம நிர்வாக அலுவலர் இருப்புசட்டியால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    12:55 (IST)25 Dec 2020

    பிரிட்டனில் இருந்து வந்த 5 பேருக்கு கொரோனா

    பிரிட்டனில் இருந்து சென்னை வந்த 5 பேருக்கு கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    12:53 (IST)25 Dec 2020

    மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து அருணாச்சலம் நீ்க்கம்

    பாஜகவில் இணைந்த அருணாச்சலம் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    12:49 (IST)25 Dec 2020

    விஜய் அப்புறம் வரட்டும் - சீமான்

    நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அடிக்கடி தகவல் வெளியாகி வரும் நிலையில், சூர்யா அளவுக்காவது விஜய் குரல் கொடுக்கட்டும், அப்புறம் வரட்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கினைப்பாளர் சீமான தெரிவித்துள்ளார்.

    12:45 (IST)25 Dec 2020

    தமிழறிஞர் தொ.பரமசிவன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்

    தமிழறிஞரும், பேராசிரியருமான தொ.பரமசிவன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் பழனிசாமி, பேராசிரியர், எழுத்தாளர், பேச்சாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் தொ.பரமசிவன் என்று புகழாரம் சூட்டியுள்ளார். 

    12:42 (IST)25 Dec 2020

    தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் வரும் 28 மற்றும் 29-ந் தேதிகளில் கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் வால்பாறையில் 1 செ.மீ மழை பதிவானதாக தெரிவித்துள்ளது.

    12:19 (IST)25 Dec 2020

    பிரதமர் மோடியால் கூட தடுக்க முடியாது - ஸ்டாலின்

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்த நிலையில் தடையை மீறி கூட்டம் நடந்து வருகிறது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். மேலும், பிரதமர் மோடியால் கூட மக்கள் கிராம சபை கூட்டத்தை தடுக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

    11:21 (IST)25 Dec 2020

    விவசாயிகள் நலன் கருதி பாஜகவில் இணைந்தேன் - அருணாச்சலம்

    தொலைநோக்கு சிந்தனையுடன் 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதனை ஆதரிக்காத மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகி பாஜகவில் இணைந்ததாக அருணாச்சலம் தெரிவித்திருக்கிறார்.

    10:37 (IST)25 Dec 2020

    வாஜ்பாயின் 96-வது பிறந்த நாளையொட்டி மோடி வாழ்த்து!

    முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 96-வது பிறந்த நாளையொட்டி டெல்லியில் உள்ள அவருடைய நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினர். மேலும், நாட்டை வளர்ச்சியின் உச்சத்திற்கு எடுத்துச் சென்றவர், வளமான இந்தியாவை அமைப்பதற்கான, வாஜ்பாயின் முயற்சிகள் என்றும் நினைவுகூரப்படும் என்றும் மோடி தெரிவித்தார்.

    10:35 (IST)25 Dec 2020

    இன்று திமுக நடத்த இருக்கும் கிராம சபை கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இன்று நடைபெறவிருந்த கிராம சபை கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு தெரிவித்து தி.மு.க. மாவட்ட செயலாளருக்கு மரக்காணம் காவல் ஆய்வாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    09:29 (IST)25 Dec 2020

    மநீம கட்சியிலிருந்து பாஜகவில் இணையும் அருணாச்சலம்

    மக்கள் நீதி மய்யத்தின் நிறுவன பொதுச்செயலாளரான அருணாச்சலம், கமலாலயத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைகிறார்.

    09:26 (IST)25 Dec 2020

    லண்டனிலிருந்து மதுரை வந்தவருக்கு கொரோனா

    லண்டனில் இருந்து விமானத்தில் மதுரை வந்த ஒரு பயணிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

    09:25 (IST)25 Dec 2020

    கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி தமிழக துணை முதல்வர் வாழ்த்து

    அனைவருக்கும் எனது உளம்கனிந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் - ஓபிஎஸ்

    09:22 (IST)25 Dec 2020

    கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து

    இயேசுவின் வழிமுறைகள் நியாயமான சமூகத்தை கட்டமைக்க வழிவகுக்கட்டும் - பிரதமர் மோடி

    09:20 (IST)25 Dec 2020

    கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து

    கிறிஸ்துமஸ் பண்டிகை சமூகத்தில் அமைதி மற்றும் செழிப்பை அளிக்கும் என நம்புகிறேன் - ராம்நாத் கோவிந்த்

    News In Tamil : மதுரைக்கும் சென்னைக்கும் இடையேயான தேஜஸ் விரைவு ரயிலை வரும் ஜனவரி 4ம் முதல் ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது.

    தேஜஸ் விரைவு வண்டிகளில் பயோ கழிப்பறை, தொலைக்காட்சி பெட்டிகள், இலவச இணைய வசதிகள் கொண்டது. சதாப்தி விரைவு வண்டிகளின் கட்டணத்தை விட, தேஜஸ் வண்டியின் கட்டணம் 20% முதல் 30% கூடுதலாக இருந்தது.

    இந்நிலையில், பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தினால் தேஜஸ் ரயில் சேவையை வரும் ஜனவரி 4ம் முதல் ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது. இந்த செய்தி, தென் மாவட்ட மக்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Farmer Protest Christmas
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment