Advertisment

Tamil News Highlights : விவசாய அமைப்புகளுடன் பேச்சுவார்த்தைக்கு முயற்சி- தமிழில் மோடி ட்வீட்

tamil news : விவசாயிகள் உடன் இயல்பான பேச்சுவார்த்தைக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Tamil News Highlights : விவசாய அமைப்புகளுடன் பேச்சுவார்த்தைக்கு முயற்சி- தமிழில் மோடி ட்வீட்

tamil news today : விவசாயிகள் உடன் இயல்பான பேச்சுவார்த்தைக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

Advertisment

வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தனது உணர்வுகளை வேளாண் சகோதர சகோதரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ளார். இயல்பான பேச்சுவார்த்தைக்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. உழவர் பெருமக்கள் அதைப் படிக்க வேண்டுகிறேன். இந்தத் தகவலை பெருமளவில் பகிர வேண்டும் என பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த 8 மாதங்களாக கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் டிசம்பர் 7ஆம் தேதி கல்லூரிகள் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் திறக்க அரசு அனுமதி அளித்திருந்த நிலையில் சென்னை IIT யில் உள்ள மாணவர்கள் 100 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்க்கப்பட்டனர். இந்நிலையில் மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் பயின்று வரும் முதலாமாண்டு மாணவர் ஒருவருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது அந்த மாணவர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருடன் விடுதியில் அறையில் தங்கி இருந்த மாணவர்கள் மற்றும் கல்லூரியில் பயிலும் 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து வருவதாக மருத்துவ கல்லூரியின் முதல்வர் சங்குமணி தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சத்யநாராயணன் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினராக நியமனம்.

Live Blog

News In Tamil : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்



























Highlights

    08:05 (IST)20 Dec 2020

    விவசாய அமைப்புகளுடன் பேச்சுவார்த்தைக்கு முயற்சி- தமிழில் மோடி ட்வீட்

    விவசாயிகள் உடன் இயல்பான பேச்சுவார்த்தைக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

    வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர்

    தனது உணர்வுகளை வேளாண் சகோதர சகோதரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ளார். இயல்பான பேச்சுவார்த்தைக்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. உழவர் பெருமக்கள் அதைப் படிக்க வேண்டுகிறேன். இந்தத் தகவலை பெருமளவில் பகிர வேண்டும் என பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    21:16 (IST)19 Dec 2020

    எம். ஜி. வைத்தியா மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

    எம். ஜி. வைத்தியா மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தனது இரங்கல் பதிவில், 'பல தசாப்தங்களாக ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு எம். ஜி. வைத்தியா சிறப்பான பங்களிப்பை வழங்கினார். பி.ஜே.பியை வலுப்படுத்தவும் அவர் கடுமையாக உழைத்தார். அவரது மறைவினால் ஆழ்ந்த துயருற்றேன்' என்று தெரிவித்தார்.

    21:11 (IST)19 Dec 2020

    8 பேருக்கு மொத்தம் ரூ.2 இலட்சம் ஸ்டாலின் நிதியுதவி

    கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில், மருத்துவம் மற்றும் கல்வி நிதியுதவி கோரிய 8 பேருக்கு மொத்தம் ரூ.2 இலட்சம் ஸ்டாலின் வழங்கினார் . 

     

    18:46 (IST)19 Dec 2020

    திருணாமுல் கட்சியிலிருந்து ஏராளமானோர் வெளியேறி வருகின்றனர் - அமித் ஷா

    திருணாமுல் கட்சியிலிருந்து ஏராளமானோர் வெளியேறி வருகின்றனர், இந்த வெளியேற்றம் ஒரு 'ஆரம்பம்' தான்!

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பணியாற்ற, காங்கிரஸ், திரிணாமுல், சிபிஎம் கட்சிகளில் உள்ளவர்கள் பாஜகவில் சேர்ந்துள்ளனர் என மேற்கு வங்க மாநில பயணத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.  

    18:43 (IST)19 Dec 2020

    தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தமிழகம் 2வது இடம்

    தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை வழங்குவதில் நாட்டிலேயே தமிழகம் 2 - வது இடத்தில் உள்ளது என மாநில தகவல் ஆணையர் பிரதீப் குமார் தெரிவித்தார்.  

    17:58 (IST)19 Dec 2020

    பிரதமர் மோடி தமிழில் ட்வீட்

    வேளாண் துறை அமைச்சர் தனது உணர்வுகளை வேளாண் சகோதர சகோதரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ளார். இயல்பான பேச்சுவார்த்தைக்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. உழவர் பெருமக்கள் அதைப் படிக்க வேண்டுகிறேன். இந்தத் தகவலை பெருமளவில் பகிர வேண்டும் என பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன் என்று பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்தார்.  

    17:54 (IST)19 Dec 2020

    சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்துதான் பொங்கல் பரிசு - முத்தரசன்

    புயலால் பாதிப்படைந்தவர்களுக்கு நிவாரணத்தை வழங்காமல் பொங்கல் பரிசாக ரூ.2500 அறிவித்திருப்பது சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்துதான் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.  

    17:06 (IST)19 Dec 2020

    30 கோடிப் பேருக்கு தடுப்பு மருந்து - ஹர்ஷ் வர்தன்

    கோவிட்-19-க்கான உயர்மட்ட அமைச்சர்கள் குழுவின் 22-வது கூட்டத்திற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் காணொலி மூலம் இன்று தலைமை தாங்கினார். 30 கோடிப் பேருக்கு தடுப்பு மருந்து வழங்குவதை நாம் விரைந்து செயலாற்ற வேண்டும் என்று டாக்டர். ஹர்ஷ் வர்தன் கூறினார்

    17:03 (IST)19 Dec 2020

    பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு கூடுதல் முன்னுரிமை - நிர்மலா சீதாராமன்

    வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு கூடுதல் முன்னுரிமை வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 

    16:59 (IST)19 Dec 2020

    தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் - தேர்தல் ஆணையம்

    சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், தேர்தல் ஆணையத்தின் தலைமை செயலர் உமேஷ் சின்ஹா தலைமையில் நாளை மறுநாள் சென்னையில் நடைபெறவுள்ளது

    16:44 (IST)19 Dec 2020

    பொங்கல் பரிசு தொகுப்பை முதலவர் அறிவித்தார்

    ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் பொங்கல் பரிசாக ரூ. 2500 வழங்கப்படும். மேலும், ஒரு கிலோ அரிசி, சர்க்கரை, திராட்சை, வெல்லம், முழு கரும்பு, முழு கரும்புடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.  

    15:30 (IST)19 Dec 2020

    அம்மா மினி கிளினிக் திட்டம்

    சேலத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சேலம் இருப்பாளியில் அம்மா மினி கிளினிக் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    15:26 (IST)19 Dec 2020

    தமிழகத்தில் பள்ளிகள் தரம் உயர்த்த உத்தரவு

    தமிழகம் முழுவதும் புதிய அரசுப்பள்ளிகளை தொடங்குவதற்கு தகுதியான இடங்களை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் உயர்நிலை பள்ளிகளாக மாற்ற தகுதியான தொடக்க பள்ளிகள் குறித்து அறிக்கை அளிக்க பள்ளி கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டடுள்ளார்.

    15:15 (IST)19 Dec 2020

    பாஜக முதலமைச்சர் வேட்பாளர் யார்?

    தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக போட்டியிட உள்ள நிலையில், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு பதிலளித்த தமிழக பாஜக தலைவர் எல் முருகன், முதல்வர் வேட்பாளர் யார் என்பதை கட்சி தலைமைதான் முடிவு செய்யும் என கூறியுள்ளார்.

    15:07 (IST)19 Dec 2020

    கமல்ஹாசனுக்கு எச்சரிக்கை

    2021-ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் மைய்யம் கட்சி போட்டியிட உள்ள நிலையில்,வரும் தேர்தலோடு கமல்ஹாசன் தடம் தெரியாமல் போய்விடுவார் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

    15:02 (IST)19 Dec 2020

    தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய முதல்வர்

    2021-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கியுள்ள தமிழக முதல்வர் சேலம் கட்டிநாயக்கன்பட்டியில் இன்று தனது முதல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

    14:02 (IST)19 Dec 2020

    இந்திய அணி தோல்வி!

    அடிலெய்டு டெஸ்ட் போட்டி  இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி .90 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலிய அணி 93 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது

    13:54 (IST)19 Dec 2020

    ஹேம்நாத்தை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும்!

    சித்ரா தற்கொலை வழக்கில் சரியான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து மகன் ஹேம்நாத்தை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் .சித்ராவின் மாமனார் ரவிச்சந்திரன் பேட்டி

    13:12 (IST)19 Dec 2020

    டார்ச் லைட் சின்னம் வேண்டாம் !

    எம்.ஜி.ஆரை நினைவுபடுத்தும் வகையில் புதிய சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளேன் - . எங்களுக்கு டார்ச் லைட் சின்னம் வேண்டாம்  என விஸ்வநாதன், தலைவர், எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி அறிவிப்பு. 

    13:10 (IST)19 Dec 2020

    தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!
    6 மாதங்களில் ஓய்வு பெற உள்ள எந்த ஒரு அதிகாரிக்கும் தேர்தல் பணி வழங்கக் கூடாது .  தேர்தல் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் அவர்களது சொந்த மாவட்டங்களில் பணியாற்றக் கூடாது . தமிழகம் உள்பட சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
     
     

    13:08 (IST)19 Dec 2020

    வானிலை ஆய்வு மையம் தகவல்!

    குமரி கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரத்தில் கனமழைக்கு வாய்ப்பு .தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடியில் மிதமான மழைக்கு வாய்ப்பு 

    12:58 (IST)19 Dec 2020

    அம்மா மினி கிளினிக்கை முதலமைச்சர் திறந்து வைத்தார்!

    சேலத்தில் அம்மா மினி கிளினிக்கை முதலமைச்சர் திறந்து வைத்தார்  பெரிய சோரகை கிராமத்தில் மினி கிளினிக் திறப்பு .  குத்து விளக்கேற்றி மினி கிளினிக்கை திறந்து வைத்தார் முதலமைச்சர்

    12:03 (IST)19 Dec 2020

    முதலமைச்சர் பிரச்சாரம்!

    சற்று நேரத்தில் பிரசாரத்தை தொடங்குகிறார் முதலமைச்சர் .  சேலம் பெரிய சோரகை கிராம கோவிலில் தரிசனம் செய்துவிட்டு பிரசாரத்தை தொடங்குகிறார்

    11:52 (IST)19 Dec 2020

    மாவட்ட செயலாளர்களுக்கு எச்சரிக்கை. !

    பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிக்கும் போது பணம் பெறக்கூடாது என்று ரஜினி மக்கள் மன்றம் மாவட்ட செயலாளர்களுக்கு எச்சரிக்கை. 

    11:29 (IST)19 Dec 2020

    31 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள்!

    ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்2 வது இன்னிங்ஸில் 31 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி விளையாடி வருகிறது. 

    11:19 (IST)19 Dec 2020

    சொரிமுத்து அய்யனார் கோயில்!

    பாபநாசம் மலைப்பகுதியில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளனர். 

    11:17 (IST)19 Dec 2020

    ஓரிரு நாளில் பணி நியமன ஆணை!

    2018ல் தேர்ச்சிபெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஓரிரு நாளில் பணி நியமன ஆணை -பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதி. 

    11:13 (IST)19 Dec 2020

    183 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின!

    கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 183 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின .  41 ஏரிகள் 50 சதவீதமும், 4 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பியுள்ளன

    09:56 (IST)19 Dec 2020

    எடப்பாடி தேர்தல் பிரச்சாரம்!

    2021 ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலையொட்டி, தற்போதே திமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தொடங்கி விட்டன. இதனையடுத்து அதிமுகவிற்கான தேர்தல் பிரச்சாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை தொடங்குகிறார்.

    இதற்காக அவர் வழக்கம்போல், எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியசோரகை கரிய பெருமாள் கோவிலில்வழிபாடுகளை நடத்தி, தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிடவுள்ளார்

    09:55 (IST)19 Dec 2020

    ஆசிரியர்கள் போராட்டம்!

    வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணி வழங்கக் கோரி முதல்வர் வீட்டின் முன்பு காத்திருக்கும் ஆசிரியர்கள்

    tamil news today : தமிழகத்தில் சமூகஇடைவெளியை பின்பற்றி திறந்தவெளியில் அரசியல், மத கூட்டங்களை நடத்த இன்றுமுதல் அனுமதி. ஏற்கனவே அரங்குகளில் கூட்டங்கள் நடத்த அரசு அனுமதி வழங்கியிருந்த நிலையில், திறந்தவெளியில் நடத்த இன்றுமுதல் அனுமதி

    நேற்றைய செய்திகள்

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 24வது நாளாக விவசாயிகள் போராட்டம் .அமெரிக்காவில் Moderna தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அதிபர் ட்ரம்ப் தகவல் .ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் - 8ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.சேலம் எடப்பாடி தொகுதியில் இன்று பிரசாரத்தை தொடங்குகிறார் முதலமைச்சர் பழனிசாமி.

    2021 சட்டமன்ற தேர்தலுக்கான சின்னமாக பேட்டரி டார்ச்-ஐ, பயன்படுத்தும் உரிமை, ம.நீ.ம. கோரியுள்ளதாக மனுவில் தகவல்

    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment