Advertisment

Tamil news Highlights: அடுத்த 2 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

Tamil Nadu News, Tamil News, Petrol price Today - 29-01- 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Chance of rain in 11 districts of Tamil Nadu

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

நிலநடுக்கம்

ஈரானின் மேற்கு வடமேற்கு பகுதியில் உள்ள கோய் நகரில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.  440 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விளையாட்டு

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான 2வது டி20 கிரிக்கெட் போட்டி . உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலை உள்ளது



  • 22:28 (IST) 29 Jan 2023
    ஒடிசா அமைச்சர் நபா தாஸ் மரணம் - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

    துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஒடிசா அமைச்சர் நபா தாஸ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்



  • 21:45 (IST) 29 Jan 2023
    சர்வதேச ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பை; ஜெர்மனி சாம்பியன்

    சர்வதேச ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் பெல்ஜியத்தை வீழ்த்தி ஜெர்மனி சாம்பியன் பட்டம் வென்றது. பெனால்டி ஷூட் அவுட் முறையில் 5-4 கோல் கணக்கில் ஜெர்மனி த்ரில் வெற்றி பெற்றது



  • 21:13 (IST) 29 Jan 2023
    நபா தாஸ் மறைவு - பிரதமர் இரங்கல்

    ஒடிசா அமைச்சர் நபா தாஸின் மறைவு வருத்தமளிக்கிறது என அமைச்சர் நபா தாஸின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்



  • 20:50 (IST) 29 Jan 2023
    நலமாக இருக்கிறேன் - நாஞ்சில் சம்பத் ட்வீட்!

    முதல்வரின் தனிக் கருணையில் இன்று புதியாய் பிறந்தேன். முதல்வரின் பரிவிற்கும், பாசத்திற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் நலமாக இருக்கிறேன். விரைவில் மேடையில் சந்திக்கிறேன்.! என நாஞ்சில் சம்பத் ட்வீட் செய்துள்ளார்



  • 20:36 (IST) 29 Jan 2023
    துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸ் மரணம்

    துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸ் மரணமடைந்துள்ளார். ஜர்சுகுடா மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற அமைச்சர் மீது துப்பாக்கிச்சூடு நடந்தது.



  • 20:00 (IST) 29 Jan 2023
    U19 மகளிர் உலகக்கோப்பை - இந்தியா சாம்பியன்

    இங்கிலாந்துக்கு எதிரான மகளிர் U19 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அறிமுக தொடரிலேயே இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது



  • 19:27 (IST) 29 Jan 2023
    அடுத்த 2 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு

    செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • 18:58 (IST) 29 Jan 2023
    இந்திய மகளிர் அணிக்கு 69 ரன்கள் இலக்கு

    மகளிர் U19 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு 69 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 17.1 ஓவர்களில் 68 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது



  • 18:37 (IST) 29 Jan 2023
    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா போட்டியிடுவதாக, வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.



  • 18:22 (IST) 29 Jan 2023
    மக்கள் அதிருப்தி; இடைத் தேர்தலில் நிச்சயம் மாற்றம் நிகழும்- ஜி.கே.வாசன்

    வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் திமுக மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இடைத்தேர்தலில் நிச்சயம் மாற்றம் நிகழும். தமிழகத்தில் திமுகவை எதிர்த்து வாக்களிக்க மக்கள் தயாராகி வருகின்றனர் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்



  • 17:51 (IST) 29 Jan 2023
    நான் ஒரு காமெடியன்தான்.. யோகி பாபு

    தாம் ஒரு காமெடியன்தான் என்றும் காமெடி வாய்ப்புக்காக வீதி வீதியாக அலைந்ததாகவும் நடிகர் யோகி பாபு கூறினார்.

    நடிகர் யோகி பாபு, “பொம்மை நாயகி” படத்தின் செய்தியாளர் சந்திப்பில் இதனை கூறினார்.



  • 17:38 (IST) 29 Jan 2023
    ஆஸி., ஓபன் டென்னிஸ்.. பட்டம் வென்றார் ஜோகோவிச்

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் 10வது முறையாக சாம்பியன் பட்டத்தை ஜோகோவிச் வென்றார்.

    இவர், இறுதிப் போட்டியில் கிரீக் நாட்டை சேர்ந்த சிட்சிபாஸை 6-3, 7-6, 7-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

    இதனால், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் 10வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றவர் என்ற சிறப்பை ஜோகோவிச் பெற்றுள்ளார்.



  • 17:35 (IST) 29 Jan 2023
    ஆஸி., ஓபன் டென்னிஸ்.. பட்டம் வென்றார் ஜோகோவிச்

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் 10வது முறையாக சாம்பியன் பட்டத்தை ஜோகோவிச் வென்றார்.

    இவர், இறுதிப் போட்டியில் கிரீக் நாட்டை சேர்ந்த சிட்சிபாஸை 6-3, 7-6, 7-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

    இதனால், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் 10வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றவர் என்ற சிறப்பை ஜோகோவிச் பெற்றுள்ளார்.



  • 17:02 (IST) 29 Jan 2023
    சென்னையில் பி.எம்.டபிள்யூ கார் உற்பத்தி அதிகரிப்பு

    சென்னையில் BMW கார் உற்பத்தியை அதிகரிக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக, இந்திய நிறுவனத்தின் தலைவர் விக்ரம் பவா தெரிவித்துள்ளார்.



  • 16:39 (IST) 29 Jan 2023
    ஜி-20 மாநாட்டிற்கு சென்னை வரும் பிரதிநிதிகள்

    ஜி-20 மாநாட்டிற்கு பல்வேறு நாட்டு பிரதிநிதிகள் சென்னை வருகின்றனர். பிப். 1-ம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை அவர்கள் சுற்றிப் பார்க்கின்றனர்



  • 16:20 (IST) 29 Jan 2023
    இந்தியாவில் 109 பேருக்கு கொரோனா பாதிப்பு

    இந்தியாவில் ஒரே நாளில் 109 கோவிட்-19 நோய்த்தொற்றுகள் அதிகரித்துள்ளன. தற்போதுவரை 1,842 சிகிச்சை பெற்றுவருகின்றனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.



  • 16:14 (IST) 29 Jan 2023
    விமானம் மீது மோதிய பறவை... திடீரென நிறுத்தப்பட்ட விமானம்

    லக்னோவில் உள்ள சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தில் பறவை மோதியதாக சந்தேகிக்கப்படும் காரணத்தால் கொல்கத்தா செல்லும் ஏர் ஏசியா விமானம் புறப்படுவதை நிறுத்தியது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



  • 15:55 (IST) 29 Jan 2023
    மத்தியப் பிரதேசத்தில் பெண்களுக்கு ரூ.1000 நிதியுதவி: முதலமைச்சர் அறிவிப்பு

    மத்திய பிரதேசத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெண்களுக்கு மாதம் ரூ 1,000 வழங்கும் புதிய திட்டத்தை மத்திய பிரதேச அரசு தொடங்கும் என முதல்- அமைச்சசர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.



  • 15:33 (IST) 29 Jan 2023
    'அம்ரித் உத்யன்' பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு

    ஜனாதிபதி திரௌபதி முர்மு, அம்ரித் உத்யன் தோட்டத்தை பொதுமக்கள் பார்வைக்கு இன்று திறந்துவைத்தார்.



  • 15:15 (IST) 29 Jan 2023
    காஷ்மீரில் தேசிய கொடி ஏற்றிய ராகுல் காந்தி

    ஜம்மு காஷ்மீரில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் போது ராகுல் காந்தி தேசிய கொடி ஏற்றினார்.



  • 15:04 (IST) 29 Jan 2023
    துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த ஒடிசா அமைச்சர்; மேல்சிகிச்சைக்காக புவனேஷ்வர் கொண்டுள்ளப்பட்டார்

    துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த ஒடிசா சுகாதார அமைச்சர் நபா கிஷோர் தாஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் புவனேஷ்வருக்கு கொண்டு செல்லப்பட்டார்.



  • 13:41 (IST) 29 Jan 2023
    சிறிய படங்களை விற்பது கடினம்; ஓ.டி.டி குறித்து இயக்குநர் பா. ரஞ்சித் வருத்தம்

    இயக்குநர் பா. ரஞ்சித்: “ஓ.டி.டி-யில் சிறிய படங்களை விற்பது கடினமாக உள்ளது; பெரும்பாலான ஓ.டி.டி தளங்கள் பெரிய நடிகர்களின் படத்தைதான் வாங்குகின்றனர்; ஒரு படத்தை எடுத்து முடித்துவிட்டு 6, 7 மாதங்கள் வரை காத்டிருக்க வேண்டிய நிலை உள்ளது” என்று கூறினார்.



  • 13:33 (IST) 29 Jan 2023
    ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் மீது துப்பாக்கிச்சூடு

    ஒடிசாவில் உள்ள ஜர்சுகுடா மாவட்டத்தில், ராஜராஜ நகரில் மர்ம நபர்கள் ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் படுகாயம் அடைந்தார்.



  • 13:31 (IST) 29 Jan 2023
    மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க எம்.பி.க்கள் கூட்டம்

    முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்றத்தில் குரலெழுப்ப வேண்டிய முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    பிபிசி ஆவணப்பட சர்ச்சை உள்ளிட்ட முக்கிய விவகாரங்களை விவாதிக்க திமுக எம்.பி.க்களுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு அரசால், மத்திய அரசுக்கு எழுதப்பட்டுள்ள கடிதங்களின் நிலை குறித்தும் கேள்வியெழுப்ப எம்.பி-க்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

    நீட் மசோதா, மதுரை எய்ம்ஸ், சேது சமுத்திர திட்டம், என்.எல்.சி. வேலைவாய்ப்பு உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்க தி.மு.க எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

    இந்திய பங்குச் சந்தையில் அதானி குழுமத்தால் ஏற்பட்ட இழப்புகள் தொடர்பாக வெளிவந்துள்ள அறிக்கை குறித்தும் கேள்வியெழுப்ப அறிவுறுத்தியுள்ளார்.



  • 13:26 (IST) 29 Jan 2023
    தமிழகத்தில் 8 மாவட்டங்களில் ஜன. 1 கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    தஞ்சை, திருவாரூர்,நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை,சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடியில் வரும் 1ம் தேதி கனமழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் வரும் பிப்ரவரி 2ம் தேதி கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 13:00 (IST) 29 Jan 2023
    ஆஸ்திரேலிய ஓபன் - செக் குடியரசு சாம்பியன்

    ஆஸ்திரேலிய ஓபன் இரட்டையர் மகளிர் சாம்பியன் பட்டத்தை செக் குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா, கேத்ரினா ஜோடி வென்று அசத்தல்.

    இறுதிப் போட்டியில் ஜப்பானின் ஷுகோ அயோமா, எனா ஷிபஹரா ஜோடியை 2-0 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி அபாரம்.



  • 12:40 (IST) 29 Jan 2023
    உத்திரமேரூர் கல்வெட்டுகள் குறித்து பிரதமர் உரை

    காஞ்சிபுரம் உத்திரமேரூரில் உள்ள கல்வெட்டுகள் உலகம் முழுவதையும் வியக்க வைக்கிறது.

    1,100 ஆண்டுகளுக்கு முந்தைய அரசியலமைப்பு குறித்து கல்வெட்டு உள்ளது.

    ஜனநாயகம் என்பது நம் நரம்புகளிலும், கலாச்சாரத்திலும் உள்ளது - 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு



  • 12:10 (IST) 29 Jan 2023
    சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

    ஏழைகள் ஏற்றம் பெற திட்டங்களை வகுத்தவர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் நடைபோடும் அதிமுக தான் ஏழைகளுக்கான கட்சி. முதியோர் உதவித்தொகையை உயர்த்தி வழங்கியவர் ஜெயலலிதா என எடப்பாடி பழனிசாமி பேச்சு



  • 12:08 (IST) 29 Jan 2023
    துணிக்கடை கேட் விழுந்து சிறுமி பலி - 2 பேர் கைது

    சென்னை, கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள துணிக்கடையின் இரும்பு கேட் விழுந்து சிறுமி பலியான சம்பவம்

    கட்டிட காவலாளி மற்றும் துணிக்கடையின் மேலாளர் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை



  • 12:07 (IST) 29 Jan 2023
    தி.மு.க எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது

    மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், திமுக எம்.பி.க்கள் கூட்டம்

    முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது



  • 12:06 (IST) 29 Jan 2023
    ஜனநாயகத்தின் தாய் இந்தியா - பிரதமர் மோடி பேச்சு

    ஜனநாயகத்தின் தாய் இந்தியா என பிரதமர் மோடி பெருமிதம்

    ஜனநாயகம் என்பது நமது நரம்புகளிலும், கலாச்சாரத்திலும் உள்ளது.

    இந்த ஆண்டின் முதல் 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு



  • 11:20 (IST) 29 Jan 2023
    மருத்துவ அறிவியல் மாநாட்டை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

    சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவையில், மருத்துவ அறிவியல் மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்



  • 11:05 (IST) 29 Jan 2023
    முதியோர் இல்லத்தை திறந்து வைத்தார் இ.பி.எஸ்

    சேலம்; வேலகவுண்டன்புதூர் பகுதியில் இலவச தனியார் முதியோர் இல்லத்தை திறந்து வைத்தார் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி . அதிமுக பிரமுகர் எஸ்.எஸ்.கே.ஆர்.ராஜேந்திரன் தொடங்கிய முதியோர் இல்லத்தை திறந்து வைத்தார் .



  • 11:04 (IST) 29 Jan 2023
    கருங்குளத்தில் இன்று ஜல்லிக்கட்டு

    திருச்சி; மணப்பாறை அருகே கருங்குளத்தில் இன்று ஜல்லிக்கட்டு . போட்டியில் 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு .



  • 10:13 (IST) 29 Jan 2023
    5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்பு

    தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது; மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை வலுப்பெறக்கூடும். இதனால் இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்



  • 09:47 (IST) 29 Jan 2023
    இரும்பு கேட் விழுந்து விபத்து: சிறுமி உயிரிழப்பு

    சென்னை: கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள துணிக்கடையின் இரும்பு கேட் விழுந்து விபத்து . அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 வயது சிறுமி நேற்று நள்ளிரவில் உயிரிழப்பு.



  • 08:46 (IST) 29 Jan 2023
    2 நாட்களில் அறிவிக்கப்படும்

    சென்னையில் ஆட்சி மன்ற குழு கூட்டம் கூடி இடைத்தேர்தல் வேட்பாளரை முடிவு செய்யும் . இடைத்தேர்தலில் அதிமுகவுடன் யார் யார் கூட்டணி என்பது குறித்து 2 நாட்களில் அறிவிக்கப்படும் - செங்கோட்டையன்



  • 08:45 (IST) 29 Jan 2023
    2வது நாளாக பறவைகள் கணக்கெடுக்கும் பணி

    நாகை; வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் 2வது நாளாக பறவைகள் கணக்கெடுக்கும் பணி -வனத்துறையினர், கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment