Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலை
சென்னை குன்றத்தூர் அருகே கல்லூரி மாணவன் பாலகிருஷ்ணன் கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலை;தாய், தந்தை இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்ததால் விபரீத முடிவு; குன்றத்தூர் போலீசார் விசாரணை.
ஏரி தண்ணீர் நிலவரம்
புழல் ஏரிக்கு நீர்வரத்து 315 கனஅடியாக உள்ளது; நீர்இருப்பு 3092 மில்லியன் கனஅடியாக உள்ளது. சோழவரம் ஏரிக்கு 15 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது; நீர்இருப்பு 831 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை ஏரியில் நீர்இருப்பு 474 மில்லியன் கனஅடியாக உள்ளது
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு காங்கிரஸ் தேசிய தலைமை விரைவில் வேட்பாளரை அறிவிக்கும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக தமிழக காங்கிரஸ் போட்டியிடுகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் உடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது
15வது உலகக் கோப்பை ஹாக்கி போட்டியினை நேரில் காண ஒடிசா சென்றார் அமைச்சர் உதயநிதி. அங்கு ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கை உதயநிதி சந்தித்து பேசினார்
திருவள்ளூர், அத்திப்பட்டு அருகே முன்னால் சென்ற லாரி மீது மோதாமல் இருக்க பிரேக் போட்டதால் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி மேம்பாலத்தில் அந்தரத்தில் தொங்கியது. உடனடியாக லாரி ஓட்டுநரை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக வெளியேற்றினர்
சிவகாசி, செங்கமலப்பட்டி கிராமத்தில் பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்து தொடர்பாக தொழிற்சாலை மேற்பார்வையாளர்கள் காளியப்பன் மற்றும் ராம்குமார் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
சத்துணவு மையங்களில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்
தமிழ்நாடு காவல்துறையினரின் வாரிசுகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் ஆணை செல்லும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த ரவி குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்
வெங்கடாச்சாரி லட்சுமி நாராயணன், லட்சுமண சந்திர விக்டோரியா, ராமசாமி நீலகண்டன் உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்களை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி : “பா.ஜ.க எப்போதும் மக்களிடம் அச்சத்தையே பரப்புகிறது. அவர்கள் கொண்டுவரும் சட்டங்கள் யாருக்காவது அல்லது எதற்காவது அச்சத்தை ஏற்படுத்தும் வகையில்தான் உள்ளது. அதற்கு சிறந்த உதாரணம் வேளாண் சட்டங்கள்: வேளாண் சட்டங்கள் விவசாயிகள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியது.” என்று தெரிவித்தார்.
தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஜனவரி 23ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், அத்தொகுதிக்கு உட்பட்டவர்களிடம் உள்ள உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் விவிபேட் இயந்திரம் பயன்படுத்தப்படும் என தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
மாவட்ட நீதிபதிகள் மூவர், மூத்த வழக்கறிஞர்கள் 5 பேர் என 8 பேரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.


செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய பதிவாளர் நேரில் விசாரணை மேற்கொண்டார். சிறுவன் உயிரிழந்த வழக்கில், சீர்திருத்த பள்ளி காவலர்கள் 6 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெண்கள் பாதுகாப்பு நிலைமை குறித்து ஆய்வு செய்து கொண்டிருந்தபோது குடி போதையில் கார் ஓட்டுநர் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என்று டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால் ட்விட் செய்துள்ளார்.
எஸ்.எஸ்.சி மல்டி டாஸ்கிங் தேர்வை தமிழ் உள்பட 13 மாநில மொழிகளில் எழுத தேர்வாணையம் அனுமதி அளித்துள்ளது. 11,409 காலி பணி இடங்களுக்கான தேர்வை தமிழ் உள்பட 13 மாநில மொழிகளில் எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க கோரி சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கில், அவரின் கோரிக்கையை பரிசீலிக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.
க்யூ நெட் நிறுவனத்தின் தங்கக்காசு மோசடி விவகாரத்தில் போலி கம்பெனிகள் மூலம் 2000 கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளதாக என அமலாக்கத்துறை விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
திண்டுக்கல்லில் பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்பி கொண்டிருந்த போது காரின் எஞ்சினில் இருந்து புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
குற்றம்புரிபவர்கள் மீது துரிதாமாக நடவடிக்கை எடுக்கப்படும். சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொள்ள வேண்டும். சோதனை சாவடிகளில் அடிக்கடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும். சிறப்பாக பணியாற்றும் காவலர்களை ஊக்குவிக்க வேண்டும் என சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில், 3 பேர் கொண்ட குழு அமைத்து விசாரணை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் தான் போட்டியிடும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
ஈரோட்டில் நடைபெற்ற தமாகா நிர்வாகிகள் கூட்டத்தில், ஈரோடு கிழக்கு தொகுதியை அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு ஒதுக்க கோரி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
தாயின் ஈடு செய்ய முடியாத இழப்பால் பெருந்துயரில் உள்ள அன்புப் பங்காளி வடிவேலுவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன் – சீமான்
பழனி குடமுழுக்கு விழாவில் தமிழில் மந்திரம் ஓதுவதற்கு உத்தரவிட கோரிய வழக்கில், தமிழில் மந்திரம் ஓதுவதற்கான அனைத்து நடவடிக்கையும் எடுத்துள்ளதாக என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு பதிலளித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள பகுதிகளில் மட்டுமே தேர்தல் நடத்தை விதிகள் அமல். மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்படாது – ஈரோடு ஆட்சியர்
மக்களை தேடி மருத்துவம் விவரங்களை எதிர்க் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எப்போது வேண்டுமானலும் நேரில் வந்து பார்த்துக் கொள்ளலாம் – இபிஎஸ் அறிக்கைக்கு, மா.சுப்பிரமணியன் பதில்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஜி.கே.வாசனுடன் அதிமுக மூத்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். இரண்டொரு நாளில் மீண்டும் கலந்து பேசி ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளரை அறிவிப்போம் – ஜி.கே.வாசன்
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பயிற்சியாளர்கள், அமைப்பு நிர்வாகிகள் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறி, டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆளுநரை அவதூறாக விமர்சித்த திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது, ஆளுநர் செயலாளர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்காக இதுவரை எவ்வளவு ரூபாய் அரசின் சார்பாக செலவிடப்பட்டுள்ளது? ஒரு கோடி பயனாளிகளின் முழு விவரங்களை முதலமைச்சரும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் வெளியிட வேண்டும்- எடப்பாடி பழனிசாமி
நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி அம்மாள் மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரி(87) உடல்நலக்குறைவால் நேற்று இரவு காலமானார்.
இன்று காலை 11 மணிக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன்-ஐ சந்திக்கவுள்ள அதிமுக நிர்வாகிகள். ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சந்திப்பு
தமிழக சட்டம் – ஒழுங்கு நிலவரம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை . உள்துறை செயலாளர், டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் பங்கேற்பு
சென்னையில் வரும் 23ம் தேதி ஓ.பி.எஸ். தரப்பு மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் . ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் ஆலோசனை
தஞ்சை மாவட்டம் திருக்கானூர்ப்பட்டி கிராமத்தில் இன்று ஜல்லிக்கட்டு. 549 காளைகள், 401 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
சென்னை, ஜாம் பஜாரில் பீடா கடையில் வைத்து போதை சாக்லேட்டுகள் விற்பனை. 7 கிலோ போதை சாக்லேட்டுகளை பறிமுதல் செய்து சுரேந்தர் யாதவ் என்பவர் கைது . பீகாரிலிருந்து போதை சாக்லேட்டுகளை வரவழைத்து, சென்னையில் சப்ளை செய்து வந்தது அம்பலம்