வீட்டு உபயோக சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்துள்ளார். ரக்சாபந்தனையொட்டி, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அளித்த பரிசு இது என்றும் அவர் கூறியுள்ளார்.
தோல்வி பயத்தால் பிரதமர் நரேந்திர மோடி சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைத்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
petrol and Diesel Price:
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”
- 22:54 (IST) 29 Aug 2023காவிரி வழக்கில் செப்.1ல் மேல்முறையீடு - நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்
காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. செப்.1ம் தேதி மேல்முறையீடு செய்ய உள்ளது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்
- 22:19 (IST) 29 Aug 2023காவிரி விவகாரம் - கர்நாடகா அவசர ஆலோசனை
தமிழகத்திற்கு 5,000 கனஅடி காவிரி நதிநீர் திறக்க ஆணையம் உத்தரவிட்டதை தொடர்ந்து சித்தராமையா மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடைபெற்று வருவதாக டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்
- 21:37 (IST) 29 Aug 2023நிலவில் ஆக்சிஜன் இருப்பதை உறுதி செய்த பிரக்யான் ரோவர்
நிலவின் மேற்பரப்பில் சல்ஃபர் கண்டுபிடித்த பிரக்யான் ரோவர், நிலவில் ஆக்சிஜன் இருப்பதையும் உறுதி செய்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது
- 21:08 (IST) 29 Aug 2023சிலிண்டர் விலை குறைப்பு தேர்தல் நாடகம் - சுப்ரியா சுலே
சிலிண்டர் விலை குறைப்பு தேர்தல் நாடகம் என தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் சுப்ரியா சுலே விமர்சனம் செய்துள்ளார்
- 20:56 (IST) 29 Aug 2023ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நாளை தொடக்கம்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நாளை பாகிஸ்தான் நாட்டில் தொடங்குகின்றன. இதில் இந்திய அணி தனது போட்டிகளை இலங்கையில் ஆடுகிறது.
இந்தப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்க தேசம், ஆப்கானிஸ்தான் என 6 அணிகள் மோதுகின்றன.
- 20:42 (IST) 29 Aug 2023பிரதமரை எதிர்த்து போட்டியிடுவேன்: சீமான் அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
- 20:42 (IST) 29 Aug 2023பிரதமரை எதிர்த்து போட்டியிடுவேன்: சீமான் அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
- 20:28 (IST) 29 Aug 2023நிலவின் தென்துருவத்தில் சல்பர், அலுமினியம்: உறுதிசெய்த ரோவர்
நிலவின் தென் துருவத்தில் சல்பர், அலுமினியம் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை பிரக்யான் ரோவர் உறுதி செய்துள்ளது.
இந்த நிலையில் ஹைட்ரஜன் இருக்கிறதா? என ஆய்வு நடப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
- 19:56 (IST) 29 Aug 2023குற்றாலம் 5 அருவியில் கொட்டிய நீர்
திருநெல்வேலி, தென்காசி மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இன்று லேசான மழை பெய்தது. இதனால், குற்றாலம் 5 அருவியில் நீர் கொட்டியது. து சுற்றுலாப் பயணிகளை உற்சாகமூட்டியது.
- 19:42 (IST) 29 Aug 2023உதவி ஆய்வாளர் தேர்வில் பிட் அடித்த பெண் கணவருடன் கைது
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 26ம் தேதி நடந்த காவல் உதவி ஆய்வாளர் தேர்வில், பிட் அடித்த விவகாரத்தில் லாவண்யா, அவரது கணவரான எஸ்.ஐ. சுமன் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், இவர்களுக்கு உடந்தையாக இருந்த அவலூர்பேட்டை காவல் நிலைய பயிற்சி எஸ்.ஐ. சிவக்குமாரும் கைது செய்யப்பட்டார்.
- 19:34 (IST) 29 Aug 2023என்ஐஏ சம்மன் அனுப்பவில்லை: நடிகை வரலட்சுமி
என்ஐஏ சம்மன் அனுப்பியதாக வெளியான தகவலுக்கு நடிகை வரலெட்சுமி சரத்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.
முன்னதாக, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நடிகை வரலெட்சுமியின் முன்னாள் மேனேஜர் கைது செய்யப்பட்டார்.
இது சம்பந்தமாக எனக்கு எந்த சம்மனும் வரவில்லை என நடிகை வரலெட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.
- 19:15 (IST) 29 Aug 2023தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க உத்தரவு
தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி 5000 கனஅடி வீதம், அடுத்த 15 நாள்களுக்கு நீர் திறக்கப்பட உள்ளது.
- 18:59 (IST) 29 Aug 2023அன்னை வேளாங்கண்ணி ஆலய கொடியேற்றம்
சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் கொடியேற்றம் நடந்தது. பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி கொடியேற்றி விழாவை தொடங்கிவைத்தார். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
- 18:24 (IST) 29 Aug 2023சிம்பு வேல்ஸ் நிறுவனத்திற்கு ரூ. 1 கோடி திருப்பிச் செலுத்த உத்தரவாதம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
வேல்ஸ் நிறுவனத்திற்கு ரூ. 1 கோடியை திருப்பிச் செலுத்த உத்தரவாதம் அளிக்க நடிகர் சிம்புவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேல்ஸ் நிறுவன தயாரிப்பில் சிம்பு நடிக்கவிருந்த கொரோனா குமார் படத்திற்காக அவருக்கு ரூ. 1 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாகவும் அந்தப் படத்தை முடித்து கொடுக்காமல் மற்ற படங்களில் நடிக்க அவருக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதையடுத்து, வேல்ஸ் நிறுவனத்திற்கு ரூ. 1 கோடியை திருப்பிச் செலுத்த உத்தரவாதம் அளிக்க நடிகர் சிம்புவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- 18:21 (IST) 29 Aug 2023பழனி முருகன் கோயில் கருவறையில் புகைப்படம் எடுக்க அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை - ஐகோர்ட் உத்தரவு
பழனி தண்டாயுதபாணி கோயில் கருவறை புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது எப்படி? கோயில்களுக்குள் செல்போன்களை எடுத்துச் செல்ல தடையை அமல்படுத்தாதது ஏன்? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
கோயில் கருவறைக்குள் புகைப்படம் எடுக்க அனுமதித்த அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
- 18:18 (IST) 29 Aug 2023வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலய திருக்கொடி பவனி தொடங்கியது
நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலய திருக்கொடி பவனி தொடங்கியது. பேராலய ஆண்டு பெருவிழா சற்று நேரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ள நிலையில் திருக்கொடி பவனி தொடங்கியது.
- 17:59 (IST) 29 Aug 2023கடலூரில் பா.ம.க பொதுக்கூட்டத்துக்கு அனுமதி இல்லை - சென்னை உயர்நீதிமன்றம்
பா.ம.க 35-வது ஆண்டு விழா பொதுக்கூட்டத்தை கடலூரில் நடத்த அனுமதிக்க முடியாது. விழுப்புரம் அல்லது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுக்கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம். மாலை 6 முதல் 8 மணி வரை மட்டுமே நடத்த வேண்டும் நெய்வேலி போராட்டம் பற்றி பேசக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- 17:29 (IST) 29 Aug 2023தமிழகத்திற்கு நீரை திறந்து விட முடியாது - கர்நாடக அரசு திட்டவட்டம்
காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்க இயலாது. மழைப்பொழிவுக்கான வாய்ப்பும் குறைவாக உள்ளதால், தண்ணீர் திறந்து விட முடியாத சூழல் உள்ளது என காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
- 17:26 (IST) 29 Aug 2023தமிழகத்திற்கு 5,000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும்; மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு உத்தரவு
தமிழகத்திற்கு அடுத்த 15 நாளுக்கு 5,000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
- 16:47 (IST) 29 Aug 2023தமிழகத்திற்கு நீரை திறந்து விட முடியாது“ : கர்நாடக அரசு திட்டவட்டம்
தமிழகத்திற்கு நீரை திறந்து விட முடியாது“ காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்க இயலாது மழைப்பொழிவுக்கான வாய்ப்பும் குறைவாக உள்ளதால், தண்ணீர் திறந்து விட முடியாத சூழல் இருப்பதாக காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடக அரசு கூறியுள்ளது.
- 16:47 (IST) 29 Aug 2023தமிழகத்திற்கு நீரை திறந்து விட முடியாது“ : கர்நாடக அரசு திட்டவட்டம்
தமிழகத்திற்கு நீரை திறந்து விட முடியாது“ காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்க இயலாது மழைப்பொழிவுக்கான வாய்ப்பும் குறைவாக உள்ளதால், தண்ணீர் திறந்து விட முடியாத சூழல் இருப்பதாக காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடக அரசு கூறியுள்ளது.
- 16:45 (IST) 29 Aug 2023கேஸ் சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு
சமையல் எரிவாயு கேஸ் சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல். பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ’உஜ்வாலா’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சிலிண்டரின் விலை ₹400 குறைக்க ஒப்புதல்
- 16:44 (IST) 29 Aug 2023கேஸ் சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு
சமையல் எரிவாயு கேஸ் சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல். பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ’உஜ்வாலா’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சிலிண்டரின் விலை ₹400 குறைக்க ஒப்புதல்
- 16:09 (IST) 29 Aug 2023பாமக 35வது ஆண்டு விழா : கடலூரில் பொதுக்கூட்டம் நடத்த நீதிமன்றம் தடை
பாமக 35வது ஆண்டு விழா பொதுக்கூட்டத்தை கடலூர் மாவட்டத்தில் நடத்த அனுமதிக்க முடியாது; விழுப்புரம் அல்லது கள்ளக்குறிச்சியில் நடத்திக்கொள்ளலாம் என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும் பொதுக்கூட்டம் நடத்தும் உரிமையை தடுக்க முடியாது; ஆனால், காவல்துறை தரப்பு வாதத்தையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்று கூறியுள்ள நீதிபதி சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாது என கட்சியினரை வழி நடத்த வேண்டும்; கட்சி தலைமைதான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதனிடையே கடலூரில்தான் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்; வேறு மாவட்டத்தில் நடத்த விருப்பமில்லை; இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வோம் என பாமக வழக்கறிஞர் பாலு தகவல் தெரிவித்துள்ளார்
- 16:09 (IST) 29 Aug 2023தலைமைச் செயலகத்திற்குள் நுழைந்து 5000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம்
மகாராஷ்டிராவில் விளைநிலங்களில் தொழிற்சாலைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, தலைமைச் செயலகத்திற்குள் நுழைந்து 5000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம். தொழிற்சாலை அமைக்க கையகப்படுத்தியுள்ள நிலங்களுக்கு சரியான இழப்பீடு வழங்கவில்லை எனவும் விவசாயிகள் குற்றச்சாட்டு
- 16:06 (IST) 29 Aug 2023பாமக 35வது ஆண்டு விழா : கடலூரில் பொதுக்கூட்டம் நடத்த நீதிமன்றம் தடை
பாமக 35வது ஆண்டு விழா பொதுக்கூட்டத்தை கடலூர் மாவட்டத்தில் நடத்த அனுமதிக்க முடியாது; விழுப்புரம் அல்லது கள்ளக்குறிச்சியில் நடத்திக்கொள்ளலாம் என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும் பொதுக்கூட்டம் நடத்தும் உரிமையை தடுக்க முடியாது; ஆனால், காவல்துறை தரப்பு வாதத்தையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்று கூறியுள்ள நீதிபதி சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாது என கட்சியினரை வழி நடத்த வேண்டும்; கட்சி தலைமைதான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதனிடையே கடலூரில்தான் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்; வேறு மாவட்டத்தில் நடத்த விருப்பமில்லை; இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வோம் என பாமக வழக்கறிஞர் பாலு தகவல் தெரிவித்துள்ளார்
- 15:46 (IST) 29 Aug 2023சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் “ செப்.1 வரை கனமழைக்கு வாய்ப்பு“ உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
- 15:33 (IST) 29 Aug 2023காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்
டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் துவங்கியது தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில பிரதிநிதிகள் பங்கேற்பு. தமிழக அரசு சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்பு
- 14:58 (IST) 29 Aug 2023பெங்களூரு போக்குவரத்து கழகத்தில் ரஜினி
ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் தனது சிறந்த நண்பர் ராஜ் பகதூருடன் இன்று தான் நடத்துனராக பணிபுரிந்த ஜெயநகர் பேருந்து நிலையத்திற்கு திடீர் விஜயம் செய்தார்.
- 14:44 (IST) 29 Aug 2023அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி
₹5 கோடி மதிப்பீட்டில் தனுஷ்கோடி பழமை மாறாமல் புனரமைக்கப்படும்; சுற்றுலா வரும் பொதுமக்களுக்கு குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும்- ஆய்வுக்குப் பிறகு சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி
- 14:17 (IST) 29 Aug 2023ஹெச்.ராஜா பேட்டி
அமைச்சர் செந்தில் பாலாஜியின் இதயத்தில் உள்ள அடைப்பை கண்டுபிடித்து, அவரின் உயிரை காப்பாற்றிய அமலாக்கத்துறைக்கு முதலமைச்சர் நன்றி சொல்ல வேண்டும்;
2024 தேர்தலில் மீண்டும் மக்களை ஏமாற்றுவதற்காக, திமுக நீட் தேர்வை விவகாரத்தை கையில் எடுத்துள்ளது- காரைக்குடியில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேட்டி
- 13:49 (IST) 29 Aug 2023கி.வீரமணி அறிவிப்பு
ஒன்றிய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை எதிர்த்து செப்டம்பர் 6ம் தேதி தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் -திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிவிப்பு
- 13:48 (IST) 29 Aug 2023கே.எல்.ராகுல் விளையாட மாட்டார்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் 2 போட்டிகளில் கே.எல்.ராகுல் விளையாட மாட்டார் என பயிற்சியாளர் டிராவிட் தெரிவித்துள்ளார்.
- 13:46 (IST) 29 Aug 2023காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் உண்டியல் வசூல்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
மொத்தமாக 58 லட்சத்து 51 ஆயிரத்து 470 ரூபாய் ரொக்கம், 190 கிராம் தங்கம், 460 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கை வசூல் ஆகியுள்ளது. உண்டியல் வசூலில் கிடைத்த தங்கம், வெள்ளி மற்றும் ரொக்கப் பணம் வங்கியில் வைப்பு நிதியாக செலுத்தப்பட்டது.
- 13:29 (IST) 29 Aug 2023நீட் தேர்வுக்கு எதிராக ஒன்றாக இணைந்து போராடுவோம்
நீட் தேர்வுக்கு எதிராக ஒன்றாக இணைந்து போராடுவோம், வெற்றி பெறுவோம், வெற்றி கிடைத்தால் அதனை முழுவதும் தாங்களே ஏற்றுக்கொள்ளுங்கள் என எடப்பாடி பழனிசாமியிடம் சவால் விடுத்தேன். ஆனால் இதுவரை பதில் இல்லை- கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
- 13:17 (IST) 29 Aug 2023தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
திருச்சி, திண்டுக்கல், மதுரை, தேனி, கோவை, நீலகிரி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 14 மாவட்டங்களில் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 13:16 (IST) 29 Aug 2023எச்.ராஜா மீது தொடரப்பட்ட வழக்குகள் எதையுமே ரத்து செய்ய முடியாது
பாஜகவின் எச்.ராஜா மீது தொடரப்பட்ட வழக்குகள் எதையுமே ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ஒன்றாக சேர்த்து, 3 மாதத்திற்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று கீழமை நீதிமன்றத்திற்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு
பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் அவர் பேசியுள்ளதால் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, நீதிமன்றமே தன்னிச்சையாக வழக்கு தொடர முடியும்” - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
- 12:52 (IST) 29 Aug 2023தமிழகத்திற்கு கர்நாடகா 45 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும்
தமிழகத்திற்கு கர்நாடகா 45 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும் - அமைச்சர் துரைமுருகன்
இருக்கும் தண்ணீரை எவ்வாறு பங்கிட்டு கொள்வது என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும்
காவிரியில் விநாடிக்கு 24 ஆயிரம் கன அடி நீர் திறக்க வலியுறுத்துவோம்
விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடுவது தமிழகத்திற்கு போதாது - அமைச்சர் துரைமுருகன்
- 12:38 (IST) 29 Aug 2023திருவாவடுதுறை ஆதீன வழக்கு- சீர்திருத்தம் செய்ய குழு அமைப்பு
திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான நிலங்களில் வாடகை, குத்தகை வசூல்களை சீரமைக்க கோரிய வழக்கு
வாடகை, குத்தகை பணம் நேரடியாக மடத்திற்கு செல்லாமல் ஒரு சிலர் அபகரிப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி வேதனை
லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு ஆயிரம் ரூபாய்க்கு ரசீது தருவதாக தொடர் குற்றச்சாட்டுகள் உள்ளது - நீதிபதி
திருவாவடுதுறை ஆதீன மடத்தில் நிர்வாக சீர்திருத்தம் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஆர்.எஸ் ராமநாதன், ஏ.செல்வம் ஆகியோரை ஆணையராக நியமித்து உத்தரவு
- 12:36 (IST) 29 Aug 202324,000 கனஅடி நீரை திறந்துவிட கோரிக்கை வைக்க முடிவு
24,000 கனஅடி நீரை திறந்துவிட கோரிக்கை வைக்க முடிவு - அமைச்சர் துரைமுருகன்
காவிரியில் விநாடிக்கு 24,000 கனஅடி தண்ணீரை திறக்க உத்தரவிட காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வலியுறுத்தப்படும். விநாடிக்கு 5,000 கனஅடி தண்ணீரை திறக்க விட வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழு கூறியது போதாது- நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்
- 12:15 (IST) 29 Aug 2023விஜயபாஸ்கர் மீண்டும் ஆஜராக உத்தரவு
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டும் ஆஜராக உத்தரவு
இன்று விஜயபாஸ்கர், அவரது மனைவி புதுக்கோட்டை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்
அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு
கடந்த மே 22ம் தேதி 216 பக்க குற்றப்பத்திரிகை லஞ்ச ஒழிப்பு போலீசாரால் தாக்கல் செய்யப்பட்டது
இன்று விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் மீண்டும் செப்டம்பர் 26ஆம் தேதி ஆஜராக உத்தரவு
- 12:12 (IST) 29 Aug 2023ஹெச்.ராஜா மீதான வழக்குகளை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு
பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீதான 11 வழக்குகளை ரத்து செய்ய மறுப்பு - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
திமுக எம்.பி., கனிமொழி மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் உத்தரவு
- 12:11 (IST) 29 Aug 2023ஹெச்.ராஜா மீதான வழக்குகளை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு
பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீதான 11 வழக்குகளை ரத்து செய்ய மறுப்பு - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
திமுக எம்.பி., கனிமொழி மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் உத்தரவு
- 11:51 (IST) 29 Aug 2023மழைநீர் வடிகால் பணிகள் - ஸ்டாலின் ஆய்வு
சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை நாளை ஆய்வு செய்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்
பாடி, திரு.வி.க.நகர், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொள்கிறார்
அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், மழைநீர் வடிகால் பணிகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு
பெரம்பூரில் தணிக்காச்சலம் கால்வாயை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணியை முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார்.
திரு.வி.க.நகர் பேருந்து நிலையம் அருகே நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளையும் முதல்வர் ஆய்வு செய்கிறார்
- 11:50 (IST) 29 Aug 2023வேளாங்கண்ணி தேவாலய விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி தேவாலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்
மொட்டை அடித்து மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை - தென்னங்கன்று சமர்ப்பித்து நேர்த்திக்கடன்
- 11:33 (IST) 29 Aug 2023செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மனு
செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல். அவசர வழக்காக விசாரிக்க நீதிபதி அல்லி முன்பு மூத்த வழக்கறிஞர் என். ஆர். இளங்கோ முறையீடு
- 11:33 (IST) 29 Aug 2023வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டம்
ராஜபாளையத்தில், வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டம்
சோமியாபுரம் மற்றும் மாலையாபுரம் பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம்
கல்லூரி மாணவர்களை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல்
பொதுமக்களின் சாலை மறியலால் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு
ராஜபாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் ப்ரீத்தி, வட்டாட்சியர் ராமச்சந்திரன் பேச்சுவார்த்தை
- 09:57 (IST) 29 Aug 2023மின்வாரிய ஊழியர் தாமோதரன் என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி புதூர் பகுதி சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து; மின்வாரிய ஊழியர் தாமோதரன் என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு.
- 09:56 (IST) 29 Aug 2023இ-சேவை மையங்களில் பணம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்த தகவல் தொழில்நுட்பத் துறை திட்டம்
தமிழ்நாட்டில் உள்ள இ-சேவை மையங்களில் பணம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்த தகவல் தொழில்நுட்பத் துறை திட்டம்!
- 09:55 (IST) 29 Aug 2023ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்ட 4 பேர் தற்காலிகமாக பணியிடை நீக்கம்
நாகர்கோவிலில் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்ட 4 பேர் தற்காலிகமாக பணியிடை நீக்கம் கல்லூரி மாணவிகள் பழுதாகி நின்ற பேருந்தை தள்ளிய வீடியோ வைரலான நிலையில் பொது மேலாளர் நடவடிக்கை
- 09:54 (IST) 29 Aug 2023வேளாங்கண்ணி மாதா தேவாலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்
உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா தேவாலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம் வேளாங்கண்ணியில் இன்று தொடங்கி, செப்.8-ம் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது திருவிழாவை முன்னிட்டு வேளாங்கண்ணியில் அலைமோதும் கூட்டம் = 2500 போலீசார் குவிப்பு
- 08:06 (IST) 29 Aug 2023மலையாளத்தில் ஓணம் வாழ்த்து சொன்ன தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மலையாளத்தில் ஓணம் வாழ்த்து சொன்ன தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். வீடியோ பதிவு மூலம் அனைவருக்கும் தெரிவித்தார்.
- 08:05 (IST) 29 Aug 2023சென்னை கனமழை
சென்னை: மந்தைவெளி, மயிலாப்பூர், அடையாறு, திருவல்லிக்கேணி, பிராட்வே, தேனாம்பேட்டை, கிண்டி, பட்டினப்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை.
- 08:04 (IST) 29 Aug 2023இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்.
வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்.
- 08:04 (IST) 29 Aug 20234 மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை
ஓணம் பண்டிகையொட்டி 4 மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.