News Highlights: 7 பேர் விடுதலை; ஜனாதிபதியை சந்திக்க திமுக ஆதரவு- ஸ்டாலின்

News Today : சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி கட்டணம் குறைப்பு

By: Feb 6, 2021, 7:44:17 AM

News Today : 7 பேர் விடுதலை பிரச்னைக்காக ஜனாதிபதியை சந்திக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்தால், திமுக எம்.பி.க்களையும் அனுப்பத் தயார் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி எல்லையில் 72ஆவது நாளாக விவசாயிகள் போராட்டம்.

தமிழக சட்டமன்ற தேர்தல்: மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை நடத்துகிறார்.

சொத்துக்குவிப்பு வழக்கு: இன்று விடுதலையாகிறார் இளவரசி. விழுப்புரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க இன்று சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்படுகிறது .

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பந்துவீசுகிறது இந்திய அணி.சேப்பாக்கம் மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு துவங்கும் டெஸ்ட் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை.

ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி புதிய கட்டண விவரங்களை அறிவித்தது அரசு. பிப்ரவரி 8ஆம் தேதி கல்லூரிகளை திறப்பதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு. முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து, அரசிதழில் வெளியிடக்கோரிய வழக்கு தள்ளுபடி.

ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையிலான அதிமுகவே உண்மையானது; உறுப்பினரே இல்லாத சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது, காவல் துறை மூலம் சசிகலாவுக்கு தெரிவிக்கிறோம்”; அதிமுக நிர்வாகிகள் கூட்டாகப் பேட்டி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

.

Live Blog
Tamil News Live : தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
22:47 (IST)05 Feb 2021
சட்டப்பூர்வ ஆலோசனை

7 பேர் விடுதலை குறித்து சட்டப்பூர்வ ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.

22:46 (IST)05 Feb 2021
உச்சக்கட்டத்தில் மோதல்:

உச்சக்கட்டத்தில் மோதல் ஆளுநர் உரை இல்லாமல் மேற்குவங்க பேரவை தொடங்கினார் மம்தா பானர்ஜி! 

22:45 (IST)05 Feb 2021
ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் 4ஜி சேவை

ஜம்மு-காஷ்மீர் முழுவதும் மீண்டும் 4ஜி இணையதள சேவை தொடங்கியது

19:26 (IST)05 Feb 2021
நேதாஜி என்ற பெயரில் புதிய பட்டாலியன்

நேதாஜி என்ற பெயரில் புதிய பட்டாலியன் பிரிவு அமைக்கப்படும் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

19:24 (IST)05 Feb 2021
திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு

நீட் தேர்வில் நாடகம் நடத்தியதைப் போல், 7 பேரின் விடுதலையிலும்  முதல்வர் பழனிசாமி நாடகம் நடத்தியுள்ளார் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

19:23 (IST)05 Feb 2021
விஜயகாந்த் கண்டனம்

7 பேர் விடுதலையில் ஆளுநர் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

19:22 (IST)05 Feb 2021
மைக்கேல் வாகனுக்கு 'தமிழ்ப் படம்' இயக்குநர் கேள்வி

"எங்கள் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட நீங்கள் யார்?" - மைக்கேல் வாகனுக்கு 'தமிழ்ப் படம்' இயக்குநர் சி.எஸ்.அமுதன் கேள்வி! 

19:20 (IST)05 Feb 2021
திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு

நாளையே குடியரசுத் தலைவரை சந்திக்க முதலமைச்சர் சென்றாலும், திமுக எம்.பி.க்களும் உடன் வர தயார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

17:58 (IST)05 Feb 2021
ஜூன் மாத‌த்திற்கு பிறகுதான் நேரடி வகுப்புகள் தொடங்கும் - சென்னை பல்கலைகழகம்

சென்னை பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடைபெறும் என்றும் ஜூன் மாத‌த்திற்கு பிறகுதான் நேரடி வகுப்புகள் தொடங்கும் என சென்னை பல்கலை. அறிவித்துள்ளது.

17:57 (IST)05 Feb 2021
பயிர் கடன் ரத்து குறித்த கனிமொழியின் கருத்துக்கு அதிமுக டுவிட்டரில் பதில்

அடுத்த 5 ஆண்டுகளுக்கும் சொல்லிக்கொண்டதாய் நினைத்து கொண்டே இருங்கள், ஆனால் செய்வது நாங்களாக மட்டும்தான் இருப்போம் என்று பயிர் கடன் ரத்து குறித்த கனிமொழியின் கருத்துக்கு அதிமுக டுவிட்டரில் பதில்.

17:56 (IST)05 Feb 2021
7 தமிழர்கள் விடுதலை விவகாரம் :திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கருத்து

7 தமிழர்கள் விடுதலை விவகாரத்தில், "ஆளுநர் மறைத்து பேசக்கூடாது" என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார்.

17:54 (IST)05 Feb 2021
விவசாய பயிர் கடன் தள்ளுபடி என்ற முதலமைச்சர் அறிவிப்புக்கு விஜயகாந்த் வரவேற்பு

விவசாய பயிர் கடன் தள்ளுபடி என்ற முதலமைச்சர் பழனிசாமியின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த். கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியையும், நல்ல எதிர்காலத்தையும் உருவாக்கும் என்று தெரிவித்துள்ளார்.

17:14 (IST)05 Feb 2021
புதிய வேளாண் சட்டம் குறித்து மத்திய அமைச்சர் தோமர் நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார்.

மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில், "புதிய வேளாண் சட்டத்தை விவசாயிகள் எவ்வாறு பார்க்கின்றனர் என்று அறிவதற்காவும், அவர்களின் பிரச்சனையை தீர்ப்பதற்காகவும் அவர்களோடு  2 மாதங்கள் செலவிட்டேன். அங்கு எனக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. இந்த சட்டங்கள் விவசாயிகளை எவ்வாறு எதிர்மறையாக பாதிக்கின்றன என்று இதுவரை யாரும் என்னிடம் சொல்லவில்லை. விவசாயிகளின் நலனை உறுதி செய்வதில் இந்த மூன்று வேளாண் சட்டங்களும் முக்கிய பங்காற்றுகின்றது. அதோடு புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்" என்று கூறியுள்ளார்.  

16:27 (IST)05 Feb 2021
விவசாயிகளுக்கு ஆதரவாக நடிகர் ஜி.வி பிரகாஷ் கருத்து:

புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவும் மற்றும் எதிர்ப்பும் தெரிவித்து பலர் குரல் எழுப்பி வருகிறார்கள்.  
இந்த நிலையில் நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், "மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உண்டு. அரசு மக்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும், புதிய சட்டங்களை ஏற்க விவசாயிகளை கட்டாயப்படுத்துவது தற்கொலைக்கு சமம். மக்கள் அவர்களின் உரிமைகளுக்காக எதிர்ப்பு தெரிவிப்பது ஜனநாயகம். அவர்களை “ஏர்முனை கடவுள்” என்றழைத்தால் மட்டுமே நம்மை படைத்தவனும் மகிழ்வான்” என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார். 

15:36 (IST)05 Feb 2021
சட்டப்பேரவை கூட்டத்தில் 8 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றம்

சட்டப்பேரவை கூட்டத்தில் 8 முக்கிய மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் குற்றவாளி தண்டனையை அதிகரிக்கும் மசோதா நிறைவேற்றம்; பிரிவு 304-ல் வரதட்சணை தொடர்பான குற்றத்திற்கு தண்டனையை 10 ஆண்டாக மாற்ற திட்டம்

15:18 (IST)05 Feb 2021
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பதியப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் - முதல்வர் 

காவலர்களை தாக்கியது, வாகனங்களுக்கு தீ வைத்த வழக்குகளை தவிர மற்ற வழக்குகள் அனைத்தும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்ட பிறகு திரும்பப் பெறப்படும்  என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

14:11 (IST)05 Feb 2021
பயிர்கடன் தள்ளுபடி - தேனி எம்.பி. நன்றி
14:01 (IST)05 Feb 2021
ஏழு பேர் விடுதலைகு முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் 

தேர்தலுக்காக நாடகம் ஏதும் நடத்தாமல் முதல்வர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குடியரசுத் தலைவரை நாளைக்கே சந்திக்க முதலமைச்சர் சென்றாலும், திமுக எம்.பி.க்களும் உடன் வர தயார் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவிப்பு. 

13:38 (IST)05 Feb 2021
விவசாயிகளின் போராட்டத்திற்கு வெற்றிமாறன் ஆதரவு

கேட்கப்படாத மக்களின் குரலே போராட்டமாகும். தேசத்தின் ஆன்மாவை பாதுகாக்கும் விவசாயிகளின் உரிமைக்காக போராடுவதும், உறுதுணையாக இருப்பதுமே நம் ஜனநாயகமாகும் என்று இயக்குநர் வெற்றிமாறன் அறிவிப்பு. 

13:14 (IST)05 Feb 2021
பயிர் கடன் தள்ளுபடி

பயிர் கடன் தள்ளுபடியால் 16.43 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவர் என்று சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு. 

13:05 (IST)05 Feb 2021
விடுதலையானார் இளவரசி

சொத்துவழக்கில் 4 ஆண்டு தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த இளவரசி சிறையில் இருந்து வெளியே வந்தார். சசிகலா தங்கியிருக்கும் அதே சொகுசு விடுதியில் அவரும் தங்க உள்ளார். 

12:53 (IST)05 Feb 2021
கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி – முதல்வர் அதிரடி

கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,000 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு. 

12:03 (IST)05 Feb 2021
தண்டனையை கடுமையாக்கும் சட்டமுன்வடிவு!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தண்டனையை கடுமையாக்கும் வகையிலான சட்டமுன்வடிவு பேரவையில் தாக்கல். சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேரவையில் தாக்கல் செய்தார். 

12:01 (IST)05 Feb 2021
குண்டர் சட்டம் ரத்து!

கந்தசஷ்டி கவசம் விவகாரத்தில்  2 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது உயர்நீதிமன்றம் .கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் சுரேந்திரன், செந்தில்வாசன் ஆகியோர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது

11:20 (IST)05 Feb 2021
ஜி.வி பிரகாஷ் ட்வீட் !

விவசாயிகளை “ஏர்முனை கடவுள்” என்றழைத்தால் மட்டுமே நமை படைத்தவனும் மகிழ்வான்! 

11:19 (IST)05 Feb 2021
மீனா ஹாரிஸ் ட்வீட்!

விவசாயிகளுக்கு ஆதராவாக அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் உறவினர் மீனா ஹாரிஸ் ட்வீட் செய்துள்ளார். 

11:00 (IST)05 Feb 2021
உத்திரமேரூர் கல்குவாரி விபத்து!

உத்திரமேரூர் கல்குவாரி விபத்து தொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு. கல்குவாரி உரிமையாளர்கள் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளது சாலவாக்கம் போலீஸ் . 

10:59 (IST)05 Feb 2021
சாதி வாரியான கணக்கீடு !

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69% இடஒதுக்கீடுக்கு எதிரான மனு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு . சாதி வாரியான கணக்கீடு என்பது தமிழகத்தில் மட்டுமே உள்ளது  தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. 

10:24 (IST)05 Feb 2021
நிர்மலா சீதாராமனுடன் எல்.முருகன் சந்திப்பு!

டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் சந்திப்பு மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கியதற்காக நன்றி தெரிவித்தார். 

09:58 (IST)05 Feb 2021
கொரோனா தடுப்பூசி!

முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

09:29 (IST)05 Feb 2021
அமலாக்க துறையினர் சோதனை!

103 கிலோ தங்கம் மாயமான விவகாரம் ,சுரானா நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்க துறையினர் அதிரடி சோதனை . 

09:28 (IST)05 Feb 2021
வாரத்திற்கு 6 நாட்கள் வகுப்புகள் !

வரும் 8ஆம் தேதி முதல் கல்லூரிகள் தொடங்க உள்ள நிலையில், வாரத்திற்கு 6 நாட்கள் வகுப்புகள் நடைபெறும் என உயர்கல்வித்துறை அறிவிப்பு. 

News Today : சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி கட்டணம் குறைப்பு. 58 நாள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக மாணவர் சங்கத்தினர் அறிவிப்பு

நேற்றைய செய்திகள்

பேரறிவாளனின் கருணை மனு மீது குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்க முடியும். உச்சநீதிமன்றத்தில், மத்திய உள்துறை அமைச்சகம் வாயிலாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தகவல்.

Web Title:Tamil news today live colleges reopening jayalalitha university farmers protest ilavarasi release perarivalan news tamil

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X