Advertisment

Tamil News Update: அதிமுகவில் இ.பி.எஸ் உள்பட 22 பேர் நீக்கம் .. ஓ.பி.எஸ் அறிவிப்பு 

Tamil News, Petrol price Today, AIADMK, Corona virus India updates, Free Covid Booster Dose, Sri lankaஅனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil News Update: அதிமுகவில் இ.பி.எஸ் உள்பட 22 பேர் நீக்கம் .. ஓ.பி.எஸ் அறிவிப்பு 

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

Tamil News Latest Updates

&t=58s

அதிமுக துணை பொதுச் செயலாளர்கள் நியமனம்

அதிமுக துணைப் பொதுச் செயலாளர்களாக கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், அதிமுக தலைமை நிலைய செயலாளராக எஸ்.பி. வேலுமணி  ஆகியோரை நியமனம் செய்து, கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதிமுக செயலாளர்கள் நியமனம்

அதிமுகவில் அமைப்பு செயலாளர்களாக செல்லூர் ராஜு, சி.வி.சண்முகம், ப.தனபால், கே.பி.அன்பழகன், காமராஜ், ஓ.எஸ்.மணியன், கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, பென்ஜமின், ராஜன் செல்லப்பா, பாலகங்கா ஆகியோர் அமைப்பு செயலாளர்களாகவும், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக பொன்னையனும் நியமிக்கப்பட்டனர்.

ராமதாஸுக்கு கொரோனா

பாமக நிறுவனர் ராமதாஸுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:41 (IST) 14 Jul 2022
    இ.பி.எஸ் உள்பட 22 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் - ஓ.பி.எஸ் அறிவிப்பு

    ஓ.பன்னீர்செல்வம் பேட்டி: “அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி உள்பட 22 பேர் நீக்கப்படுகிறார்கள். அதிமுகவின் ஒரே ஒரு எம்.பி. ரவீந்திரநாத்தை கட்சியில் இருந்து நீக்கியது சர்வாதிகாரத்தின் உச்சம்; யாரையும் நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு உரிமை இல்லை. இது சட்டப்படி செல்லாது” என்று கூறினார்.

    மேலும், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா ஆகியோரையும் அதிமுகவில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார்.



  • 21:39 (IST) 14 Jul 2022
    இ.பி.எஸ் உள்பட 22 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் - ஓ.பி.எஸ் அறிவிப்பு

    ஓ.பன்னீர்செல்வம் பேட்டி: “அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி உள்பட 22 பேர் நீக்கப்படுகிறார்கள். அதிமுகவின் ஒரே ஒரு எம்.பி. ரவீந்திரநாத்தை கட்சியில் இருந்து நீக்கியது சர்வாதிகாரத்தின் உச்சம்; யாரையும் நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு உரிமை இல்லை. இது சட்டப்படி செல்லாது” என்று கூறினார்.

    மேலும், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா ஆகியோரையும் அதிமுகவில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார்.



  • 20:15 (IST) 14 Jul 2022
    இந்தியாவிற்குள் நுழைந்தது குரங்கு அம்மை

    கேரள மாநிலத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவிற்குள் குரங்கு அம்மை நோய் நுழைந்துள்ளது. நோயாளியுடன் தொடர்பில் இருந்த 11 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.



  • 19:28 (IST) 14 Jul 2022
    இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்சே ராஜினாமா

    இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

    இலஙகியில் இருந்து மாலத்தீவுக்கு தப்பி சென்று அங்கிருந்து சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்துள்ள கோட்டாபய ராஜபக்சே இலங்கை அதிபர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.



  • 19:10 (IST) 14 Jul 2022
    கோத்தபய சிங்கப்பூரில் அடைக்கலம் கேட்கவில்லை - சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம்

    கோத்தபய ராஜபக்சே அடைக்கலம் கேட்க​வில்லை என சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூர் செல்ல அனுமதிக்கப்பட்டார். சிங்கப்பூர் பொதுவாக புகலிட கோரிக்கைகளை ஏற்பதில்லை என்றும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது



  • 18:34 (IST) 14 Jul 2022
    அ.தி.மு.க.,வில் இருந்து ரவீந்திரநாத், வெல்லமண்டி நடராஜன் உட்பட 18 பேர் அதிரடி நீக்கம்

    அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் அணியினர் 18 பேர் கூண்டோடு நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஓபிஎஸ் மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப், மற்றும் வெல்லமண்டி நடராஜன், சையது கான், எஸ்.ஏ.அசோகன், ஓம் சக்தி சேகர் ஆகியோர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் கட்சியினர் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது என இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்



  • 18:17 (IST) 14 Jul 2022
    சிங்கப்பூர் சென்றார் கோத்தபய ராஜபக்சே

    மாலத்தீவில் இருந்து விமானம் மூலம் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூர் சென்றார்



  • 18:05 (IST) 14 Jul 2022
    2வது ஒருநாள் கிரிக்கெட் - டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

    இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது



  • 17:12 (IST) 14 Jul 2022
    பங்குச்சந்தையின் முன்னாள் இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணா கைது

    தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணாவை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. ஏற்கனவே சிபிஐ கைது செய்திருந்த நிலையில், தற்போதுஅமலாக்கத்துறையும் கைது செய்துள்ளது.

    4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.



  • 16:54 (IST) 14 Jul 2022
    ஓபிஎஸ் - இபிஎஸ் வழக்கில் காவல்துறைக்கு உத்தரவு!

    அதிமுக அலுவலக சீல் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வரும் நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த வன்முறை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    போலீஸ் தலையிட்டதால் தான் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டது என்று காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. சீல் வைத்த உத்தரவை எதிர்த்து இபிஎஸ், ஓபிஎஸ் தாக்கல் செய்த வழக்குகள் நாளைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.



  • 16:47 (IST) 14 Jul 2022
    அமைச்சர்கள் புறக்கணிப்பு!

    தமிழ்நாடு ஆளுநர் கலந்துகொண்ட மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்திருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது



  • 16:39 (IST) 14 Jul 2022
    பள்ளி மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள் - சமூக பாதுகாப்புத் துறை உத்தரவு!

    பள்ளிகளில் மாணவர்கள் கயிறு கட்டக் கூடாது. கம்மல், செயின், காப்பு போன்றவற்றை அணியவும் தடை. பிறந்த நாளாக இருந்தாலும் சீருடையில்தான் வர வேண்டும் என சமூக பாதுகாப்புத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.



  • 16:27 (IST) 14 Jul 2022
    குரங்கம்மை - மத்திய அரசு அறிவுறுத்தல்!

    குரங்கம்மை தொடர்பாக போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    குரங்கம்மை பாதித்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளை பரிசோதிக்க வேண்டும் என்றும் போதிய படுக்கை வசதிகளை சிகிச்சைக்கு தயார் நிலையில் வைக்க வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.



  • 16:12 (IST) 14 Jul 2022
    பங்குச்சந்தை முறைகேடு வழக்கு: சித்ரா ராமகிருஷ்ணன் மீண்டும் கைது!

    பங்குச்சந்தை முறைகேடு வழக்கில் தேசிய பங்குச்சந்தை முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணாவை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. ஏற்கனவே சித்ராவை சிபிஐ கைது செய்த நிலையில், தற்போது டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



  • 15:55 (IST) 14 Jul 2022
    அதிமுக அலுவலகத்துக்கு சீல்: ஐகோர்ட்டில் விசாரணை - இபிஎஸ் தரப்பு வாதம்!

    அதிமுக அலுவலக சீல் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. சீலை அகற்ற கோரிய ஓபிஎஸ், இபிஎஸ் மனுக்கள் மீது விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த மனு மீது வாதிட்டு வரும் இபிஎஸ் தரப்பு, "சீல் வைத்தது ஜனநாயகத்திற்கு எதிரானது. எதிர்க்கட்சி அலுவலகமான அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்தது ஜனநாயகத்திற்கு விரோதமானது." என்று தெரிவித்துள்ளது.

    மேலும், "ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கோப்புகளை எடுத்து சென்றனர். கட்சி விதிப்படி தலைமை நிலைய செயலாளரே தலைமை அலுவலகத்தின் பொறுப்பாளர். ஓபிஎஸ் பொதுக்குழுவுக்கு வராமல், அதிமுக அலுவலகம் செல்வார் என எதிர்பார்க்கவில்லை. கட்சி அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கோப்புகளை எடுத்து சென்றுள்ளனர்" என்று இபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளனர்



  • 15:52 (IST) 14 Jul 2022
    அதிமுக அலுவலகத்துக்கு சீல் - ஐகோர்ட்டில் விசாரணை தொடங்கியது

    அதிமுக அலுவலக சீல் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. சீலை அகற்ற கோரிய ஓபிஎஸ், ஈபிஎஸ் மனுக்கள் மீது விசாரணை தொடங்கியது



  • 15:49 (IST) 14 Jul 2022
    உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.828 கோடி ஒதுக்கீடு!

    உள்ளாட்சி அமைப்புகளில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ.828 கோடி நிதி ஒதுக்கபட்டுள்ள நிலையில், அதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.



  • 15:37 (IST) 14 Jul 2022
    ஏர்டெல், ஜியோக்கு டஃப் கொடுக்கும் அதானி!

    5ஜி அலைக்கற்றை ஏலம் எடுக்க அதானி குழுமத்தைச் சேர்ந்த அதானி டேட்டா நெட்வொர்க்ஸ், ரிலைன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகியநிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. இந்த விவரங்களை தொலைத்தொடர்புத் துறை நேற்று பட்டியலிட்டுள்ளது.

    5-ஜி அலைக்கற்றை ஏலம் எடுக்க ஏர்டெல், ஜியோ இடையே ஏற்கனவே போட்டி நிலவி வரும் நிலையில், தற்போது அதானி குழுமமும் களத்தில் இறங்கி இருப்பது போட்டியை கடுமையாக்கியுள்ளது.



  • 15:29 (IST) 14 Jul 2022
    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்திய டி20 அணி அறிவிப்பு!

    வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சுற்றுப்பயணம் செய்யவுள்ள இந்திய கிரிக்கெட் 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்காக, ஏற்கனவே மூத்த வீரர் ஷிகர் தவான் தலைமையிலான ஒருநாள் இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று ரோகித் சர்மா தலைமையிலான டி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    இத்தொடரில் முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி, வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, மற்றும் சுழற்பந்துவீச்சாளர் சஹால் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. காயத்தில் இருந்து மீண்டுள்ள கேஎல் ராகுல் மற்றும் குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடற்தகுதியைப் பொறுத்து அணியில் இணைவார்கள் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்திய டி-20 அணி விபரம் பின்வருமாறு:-

    ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், கேஎல் ராகுல்*, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, எஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் , ஹர்டிக் பாண்டியா, ஜடேஜா,அக்சர் படேல்,அஷ்வின், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ்*, புவனேஷ் குமார், அவேஷ் கான், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.



  • 15:20 (IST) 14 Jul 2022
    பெத்தேல் நகர் ஆக்கிரமிப்பு - உச்சநீதிமன்றம் உத்தரவு

    பெத்தேல் நகர் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது



  • 14:55 (IST) 14 Jul 2022
    போராட்டக்காரர்கள் காவல்துறையினரிடையே மோதல் : 45 பேர் கடுகாயம்

    இலங்கையில் ஜனாதிபதி மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட சில நிர்வாக கட்டிடங்களில் புகுந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்போது அங்கிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளனர். இதனிடையே விக்கிரமசிங்கவின் அலுவலகத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்து 45 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



  • 14:53 (IST) 14 Jul 2022
    இலங்கையில் விரைவில் அமைதி திரும்பும் என எதிர்பார்ப்பு

    இலங்கையில் ஜனாதிபதி மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட சில நிர்வாக கட்டிடங்களில் புகுந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்போது அங்கிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளனர். இதனால் இலங்கையில் விரைவில் அமைதி திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



  • 14:06 (IST) 14 Jul 2022
    இலங்கையில் ராணுவ வீரர்கள் குவிப்பு

    இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், போராட்டங்களை தடுக்கும் வகையில் ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்



  • 14:05 (IST) 14 Jul 2022
    புதுச்சேரியில் ஒரே நாளில் 221 பேருக்கு கொரோனா தொற்று

    இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 221 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகயுள்ளது.



  • 13:22 (IST) 14 Jul 2022
    இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச சவுதி அரேபியா பயணம்

    இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச மாலத்தீவில் இருந்து சவுதி அரேபியா புறப்பட்டார். தனியார் ஜெட் விமானம் மூலம் புறப்பட்ட கோத்தபய ராஜபக்ச, சிங்கப்பூர் சென்று அங்கிருந்து சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தாவிற்கு செல்வதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.



  • 13:21 (IST) 14 Jul 2022
    அதிபர் மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகங்களை விட்டு வெளியேறும் போராட்டக்காரர்கள்

    இலங்கை ஆளும் அரசுக்கு எதிரான போராட்டத்தில் அதிபர் மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகங்களில் போராட்டக்காராகள் உள்ளே நுழைந்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அங்கிருந்து வெளியேற போராட்டக்காரர்கள் முடிவு செய்துள்ளனர். மேலும் உரிய தரப்பிடம் அரசு அலுவலகங்களை ஒப்படைக்க போராட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளனர்



  • 12:48 (IST) 14 Jul 2022
    மருத்துவமனையில் முதலமைச்சர் அனுமதி

    சென்னை, காவேரி மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி. கொரோனா அறிகுறிகள் தொடர்பான பரிசோதனைகள் நடைபெற்று வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.



  • 12:36 (IST) 14 Jul 2022
    ஓபிஎஸ் கடிதம் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை

    எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ் வழங்கிய கடிதம் பரிசீலனையில் உள்ளது.ஓபிஎஸ் கடிதம் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை . சட்ட விதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும் . ஓபிஎஸ் கடிதத்தை தவிர மற்ற, வேறு எந்த கடிதமும் வரவில்லை- சபாநாயகர் அப்பாவு



  • 12:34 (IST) 14 Jul 2022
    மு.க.ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனை

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனை. சென்னை, காவேரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடைபெறுகிறது.



  • 12:13 (IST) 14 Jul 2022
    அதிமுக விவகாரத்தில் பாஜக தலையிட முடியாது

    ”அதிமுக விவகாரத்தில் பாஜக தலையிட முடியாது. அதிமுகவில் நடக்கும் பிரச்சினைகள் வருத்தமளிக்கிறது: பாஜக அதிமுகவில் யாருக்கும் சாதகமாக இல்லை” - நயினார் நாகேந்திரன்



  • 12:01 (IST) 14 Jul 2022
    கேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை அறிகுறி

    கேரளாவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்தவருக்கு குரங்கம்மை அறிகுறி .குரங்கம்மை அறிகுறி உள்ளவரின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.



  • 11:59 (IST) 14 Jul 2022
    பிரதமருக்கு ஓபிஎஸ் கடிதம்

    இலவச பூஸ்டர் டோஸ் திட்டத்திற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் கடிதம் அனுப்பி உள்ளார். இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி திட்டத்தின் மூலம் மக்கள் மீதான பிரதமரின் அன்பு, கருணை, அக்கறை வெளிப்படுகிறது - ஓபிஎஸ் கடிதம்



  • 11:37 (IST) 14 Jul 2022
    கோத்தபய ராஜபக்ச மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் தப்ப முயற்சி

    இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் தப்ப முயற்சி . கோத்தபய ராஜபக்சவை சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்ல தனியார் ஜெட் விமானம் மாலத்தீவு விரைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.



  • 10:51 (IST) 14 Jul 2022
    சிறுமியின் கருமுட்டை விற்பனை..

    ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்த விவகாரத்தில், விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிறுமியின் உண்மையான பெயர், வயதை மறைத்து கருமுட்டை தானம் பெறப்பட்டுள்ளது. கருமுட்டை விவகாரத்தில், 6 மருத்துவமனைகள் ஐசிஎம்ஆர் விதிகளை மீறி செயல்பட்டுள்ளன என அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.



  • 10:49 (IST) 14 Jul 2022
    சிறுமியின் கருமுட்டை விற்பனை..

    ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்த விவகாரத்தில், விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிறுமியின் உண்மையான பெயர், வயதை மறைத்து கருமுட்டை தானம் பெறப்பட்டுள்ளது. கருமுட்டை விவகாரத்தில், 6 மருத்துவமனைகள் ஐசிஎம்ஆர் விதிகளை மீறி செயல்பட்டுள்ளன என அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.



  • 10:41 (IST) 14 Jul 2022
    கொடநாடு கொலை வழக்கு விசாரணை

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மன்னார்குடியை சேர்ந்த குணசேகரன் என்பவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்துகின்றனர். இவர் ஜெயலலிதாவிற்கு சிறிது காலம் கார் ஓட்டுநராக இருந்தவர்.



  • 09:54 (IST) 14 Jul 2022
    20 ஆயிரத்தை தாண்டிய கொரோனா!

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,139 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. 38 பேர் உயிரிழந்தனர். 16,482 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். மேலும் 1.36 லட்சம் பேர் கொரோனாவுக்கு சிகிச்சையில் உள்ளனர்.



  • 09:54 (IST) 14 Jul 2022
    நிதி ஒதுக்கீடு

    சமூகப் பொறுப்புடன் செயல்படும் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு விருது ரூ 42 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டது.



  • 09:35 (IST) 14 Jul 2022
    பவானி ஆற்றில் வெள்ளம்

    பில்லூர் அணையின் நீர்மட்டம் 97 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.



  • 08:45 (IST) 14 Jul 2022
    ஐ2யூ2 முதல் உச்சி மாநாடு

    நீர், எரிசக்தி, போக்குவரத்து, விண்வெளி, சுகாதாரம், உணவு பாதுகாப்பு ஆகிய 6 துறைகளில் கூட்டு முதலீடு குறித்து ஐ2யூ2 முதல் உச்சி மாநாடு இன்று தொடங்குகிறது. இதில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 4 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.



  • 08:21 (IST) 14 Jul 2022
    இலங்கையில் ஊரடங்கு விலக்கம்

    இலங்கையில் அசாதாரண சூழல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலை 5 மணியுடன் விலக்கிக் கொள்ளப்பட்டது.



  • 08:20 (IST) 14 Jul 2022
    ஹால் டிக்கெட் வெளியானது

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது. http://tnpscexams.in என்ற இணையதள பக்கத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



  • 08:20 (IST) 14 Jul 2022
    சென்னை வரும் பிரதமர் மோடி

    நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்க, வரும் 28ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார்.



  • 08:20 (IST) 14 Jul 2022
    இலவச பூஸ்டர் டோஸ்

    நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு, ஜூலை 15ம் தேதி முதல் 75 நாட்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் இலவச பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.



  • 08:19 (IST) 14 Jul 2022
    யார் எட்டப்பர்?

    2021 தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு எட்டப்பர்களே காரணம். எட்டப்பர்களை வைத்து அதிமுகவை வீழ்த்த நினைத்தால் அது நடக்காது என விழுப்புரத்தில் இபிஎஸ் பேசினார். இந்நிலையில், யார் எட்டப்பர்கள் என்பதை தொண்டர்களும், மக்களும் முடிவு செய்வார்கள் என இபிஎஸ்-க்கு சசிகலா பதிலளித்துள்ளார்.



  • 08:06 (IST) 14 Jul 2022
    நீலகிரி, வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை!

    தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தின் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் தாலுக்காக்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, வால்பாறையிலும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.



  • 08:06 (IST) 14 Jul 2022
    தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் கடிதம்

    அதிமுக, துணை பொதுச்செயலாளர்கள், தலைமை நிலைய செயலாளர், அமைப்பு செயலாளர்கள் நியமனத்திற்கு எதிராக தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.



  • 08:06 (IST) 14 Jul 2022
    ஓபிஎஸ், இபிஎஸ் மனுக்கள் மீது விசாரணை

    அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கோரி, ஓபிஎஸ், இபிஎஸ் தாக்கல் செய்த மனுக்களை உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.



  • 08:05 (IST) 14 Jul 2022
    நீட் தேர்வு வழக்கு

    வரும் 17ம் தேதி நடைபெறும் நீட் தேர்வை தள்ளிவைக்கக் கோரிய வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment