Advertisment

Tamil News Today: குட்கா வழக்கில் தீர்ப்பு; இ-பாஸ் நடைமுறை ரத்து? - டாப் நியூஸ் ஹைலைட்ஸ்

மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டு கோரிக்கையை இந்தாண்டே நிறைவேற்றக்கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
fake e-pass case, Court refuses bail for arrested officer, போலி இ- பாஸ், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், ஜாமீன் மறுப்பு, fake e-pass issued officer, chenani chief judicial session court, chennai news

Latest TN News updates

Tamil News Today Updates: பரபரப்பான சூழலில் இன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தொடங்குகிறது. கட்சியை அடுத்து யார் நடத்துவதென தலைவர்கள் வெளியிட்ட முரண்பட்ட கருத்தால், அக்கட்சியில் சர்ச்சை வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் அறிவுறுத்தலையடுத்து புதுச்சேரியில் முற்றிலுமாக இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டது. தர்மபுரி, சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் மதுரையில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், 21 மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

நிர்வாகிகளுக்கு ஆதரவாக இருப்பதை விட, கட்சிக்கு விஸ்வாசமாக இருங்கள் என அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில், அக்கட்சியின் தொண்டர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தியுள்ளார். இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள் என காஷ்மீர் விவகாரத்தை சுட்டிக்காட்டி சீனா, பாகிஸ்தானுக்கு வெளியுறவுத்துறை கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மேலும் 5975 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இறப்பு எண்ணிக்கை 6,500-ஐ தாண்டியது. மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டு கோரிக்கையை இந்தாண்டே நிறைவேற்றக்கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

 

 

Live Blog

Tamil Nadu News Today Updates

சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:31 (IST)24 Aug 2020

    தேச விரோதிகள் என விமர்சிப்பதா?

    காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஜனநாயகத்தை சிறைப்படுத்தி வருகிறது பாஜக!

    உரிமைகளை வலியுறுத்தினால் ஆன்ட்டி இண்டியன், தேச விரோதிகள் என விமர்சிப்பதா?

    - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

    22:07 (IST)24 Aug 2020

    விஜயகாந்த்துக்கு முதலமைச்சர் பழனிசாமி பிறந்த‌நாள் வாழ்த்து

    தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு முதலமைச்சர் பழனிசாமி பிறந்த‌நாள் வாழ்த்து

    அரசியல் மற்றும் பொது வாழ்வில் சிறப்பாக பணியாற்றிவரும் விஜயகாந்த் நீண்ட ஆயுளுடன், நீடுழி வாழ இறைவனை வேண்டுகிறேன் - முதலமைச்சர் பழனிசாமி

    21:42 (IST)24 Aug 2020

    'My IAF'

    இந்திய விமானப்படை குறித்த வேலைவாய்ப்பு தகவல்கள் மற்றும் விவரங்களை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட 'My IAF' எனும் பிரத்யேக மொபைல் செயலியை விமானப்படையின் தலைவர் பதூரியா வெளியிட்டார்.

    21:29 (IST)24 Aug 2020

    கபில் சிபல் உள்ளிட்டோர் ஆலோசனை

    டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் இல்லத்தில் கபில் சிபல் உள்ளிட்டோர் ஆலோசனை

    * சசி தரூர், மணீஷ் திவாரி, முகுல் வாஸ்னிக், ஆனந்த் சர்மா உள்ளிட்டோரும் ஆலோசனையில் பங்கேற்பு

    21:08 (IST)24 Aug 2020

    கடவுள் நம்பிக்கை கிடையாது

    தனக்கோ, தன் மனைவிக்கோ கடவுள் நம்பிக்கை கிடையாது என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    20:49 (IST)24 Aug 2020

    தம்ப்ஸ் அப் காட்டினார் எஸ்.பி.பி

    "என் தந்தை எஸ்.பி.பி-ஐ 2 வாரத்திற்கு பிறகு இன்று சந்தித்தேன்; சைகையில் என்னிடம் தம்ப்ஸ் அப் காட்டினார்!" - எஸ்.பி.பி சரண்

    20:15 (IST)24 Aug 2020

    இடிபாடுகளில் 200 பேர்?

    மகாராஷ்டிராவில் 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து; இடிபாடுகளில் 200 பேர் சிக்கியிருக்கலாம் என தகவல்

    20:10 (IST)24 Aug 2020

    உதயநிதி விளக்கம்

    'சர்ச்சையும் அதன் உள்நோக்கமும் புரிகிறது. என் அம்மா வைத்து வழிபட்டது. கரையும்முன் மகள் விருப்பத்தின்பேரில் அவர் கைகளில் புகைப்படமானது, அவ்வளவே' என்று உதயநிதி விளக்கம் அளித்துள்ளார்.

    19:34 (IST)24 Aug 2020

    லால் கட்டாருக்கும் கொரோனா

    ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி

    கடந்த வாரம் தன்னுடன் தொடர்பில் இருந்த அமைச்சர்கள், அதிகாரிகளை தனிமைப்படுத்திக்கொள்ளவும் அறிவுரை

    19:24 (IST)24 Aug 2020

    ஒரே எதிரி பாஜக தான்

    தமிழ் பண்பாட்டிற்கும், இந்திய ஒருமைப்பாட்டுக்கும் ஒரே எதிரி பாஜக தான் - ஜே.பி.நட்டாவுக்கு ஸ்டாலின் பதில்

    திமுக ஜனநாயக இயக்கம், வளர்ச்சியிலும், தேச உணர்வுகளிலும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட இயக்கம் - ஸ்டாலின்

    19:24 (IST)24 Aug 2020

    குட்கா வழக்கு - நாளை தீர்ப்பு

    சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு வந்தது தொடர்பாக உரிமை மீறல் நோட்டீஸை எதிர்த்து ஸ்டாலின் உள்பட 21 எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு.

    சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பளிக்கிறது.

    19:01 (IST)24 Aug 2020

    விஜயகாந்துக்கு ஓ.பி.எஸ். வாழ்த்து

    தேமுதிக தலைவர் விஜயகாந்த் நல்ல ஆரோக்கியத்துடன், பல்லாண்டுகள் வாழ உளம்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் - துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்.

    18:38 (IST)24 Aug 2020

    துவம்சம் செய்ததை மறக்கவே முடியாது

    2001ஆம் ஆண்டு ஈடன் கார்டன் டெஸ்ட் போட்டியின்போது டிராவிட், லக்ஷமண் என் பந்துவீச்சை துவம்சம் செய்ததை மறக்கவே முடியாது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார்.

    18:29 (IST)24 Aug 2020

    பலி எண்ணிக்கை 6,614

    சென்னையில் மேலும் 1,278 பேருக்கு கொரோனா தொற்று - மொத்த பாதிப்பு 1.26 லட்சமாக உயர்வு. தமிழகத்தில் மேலும் 97 பேர் கொரோனாவால் உயிரிழந்ததையடுத்து, பலி எண்ணிக்கை 6,614 ஆக உயர்ந்தது.

    18:26 (IST)24 Aug 2020

    5,967 பேருக்கு கொரோனா

    தமிழகத்தில் புதிதாக 5,967 பேருக்கு கொரோனா பாதிப்பு

    மொத்த பாதிப்பு 3,85,352 ஆக உயர்வு

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 97 பேர் உயிரிழப்பு

    மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை - 6,614

    18:07 (IST)24 Aug 2020

    உடல் நிலை சீராக உள்ளது

    எஸ்.பி.பி.யின் உடல் நிலை சீராக உள்ளது

    தொடர்ந்து எக்கோ மற்றும் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது

    எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை அறிக்கை

    17:52 (IST)24 Aug 2020

    தமிழக பாஜக தயார்

    தேர்தலை எதிர்கொள்ள தமிழக பாஜக தயாராக உள்ளது - எல்.முருகன்

    புதிய கல்விக்கொள்கையால் மாணவர்களின் திறன் மேம்படும் - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்

    மும்மொழிக் கொள்கை மூலமாக 22 பிராந்திய மொழிகளை கற்கும் வாய்ப்பு உள்ளது - எல்.முருகன்

    17:13 (IST)24 Aug 2020

    நல்லக்கண்ணு வீடு திரும்பினார்

    உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். காய்ச்சல் காரணமாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பினார்.

    17:03 (IST)24 Aug 2020

    11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடக்கம் - ஆர்வமுடன் மாணவர்களை பள்ளியில் சேர்க்கும் பெற்றோர்

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை இன்று தொடங்கி உள்ளது.. 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம் செய்யும் பணி நிறைவடைந்த நிலையில், தற்போது 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதே பள்ளியில் 10-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. முகக் கவசம், தனி மனித இடைவெளியைப் பின்பற்றி பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர்.

    16:31 (IST)24 Aug 2020

    ஆன்லைன் வகுப்பு விதிமுறைகளை பின்பற்றாத பள்ளிகள் மீது என்ன நடவடிக்கை - ஐகோர்ட் கேள்வி

    கொரோனா தொற்று காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளதால் பள்ளிகளில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆன்லைன் வகுப்புகளுக்கு உரிய கட்டுப்பாடுகள் வக்குகக்கோரி சரண்யா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், ஆன்லைன் வகுப்பு விதிமுறைகளை பின்பற்றாத பள்ளிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், மலைப் பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு எப்படி ஆன்லைன் வகுப்பு நடத்தப்படுகிறது என்று உயர் நீதிமன்றம் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

    15:58 (IST)24 Aug 2020

    வாகன உரிமம், ஓட்டுநர் உரிமம், வாகன சான்றிதழ் டிசம்பர் 31 வரை செல்லும் - மத்திய அரசு அறிவிப்பு

    பிப்ரவரி 1-ம் தேதியுடன் காலாவதியான வாகன உரிமம், ஓட்டுநர் உரிமம், வாகன சான்றிதழ் ஆகியவை டிசம்பர் 31ம் தேதி வரை செல்லுபடியாகும் என்று கொரோனா ஊரடங்கு காரணமாக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

    15:46 (IST)24 Aug 2020

    முகக் கவசம் அணியாமல் சென்றவர்களைத் தட்டிக் கேட்ட நகராட்சி ஊழியர் மீது தாக்குதல்

    தாம்பரம் அருகே சாலையில் முகக் கவசம் அணியாமல் சென்ற தினேஷ் என்ற இளைஞரை தம்பரம் நகராட்சி ஊழியர் குமாரசாமி ஏன் முகக் கவசம் அணியவில்லை என்று கேட்டதற்கு அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். காயம் அடைந்த நகராட்சி ஊழியர் குமாரசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்திய தினேஷ் என்பவரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    15:38 (IST)24 Aug 2020

    ‘அரசே விழித்தெழு, அல்லேல் விலகிவிடு’ - கமல்ஹாசன் ட்விட்டரில் முழக்கம்

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “சமீபத்திய ஆய்வுகள் வேலையிழப்பும்,வருமான இழப்பும் உச்சம் தொட்டு விட்டதென்கிறது. விலை உயர்வு,தொழில் பாதிப்பு,குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு இவையனைத்தும் வரப்போகும் பஞ்சத்திற்கான கட்டியம் கூறலே. தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பமும் இதை உணரத்துவங்கிவிட்டது.

    அரசே விழித்தெழு,அல்லேல் விலகிவிடு.” என்று தெரிவித்துள்ளார்.

    15:09 (IST)24 Aug 2020

    தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை ரத்தாகுமா? தலைமைச் செயலாளர் ஆலோசனை

    மாநிலங்களுக்குள்ளும் மாநிலங்களுக்கு இடையேயும் மக்கள் மற்றும் சரக்கு போக்குவரத்திற்கு தடை விதிக்க வேண்டாம் என்று மத்தி உள்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கு கடிதம் எழுதியது. இதனைத் தொடந்து, தமிழகத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இதனால், இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    14:32 (IST)24 Aug 2020

    நாட்டு வளர்ச்சியில் அக்கறையற்றவர்களுக்கு திமுக புகலிடம் - பாஜக தலைவர் ஜே.பி.நட்டா விமர்சனம்

    நாட்டு வளர்ச்சியில் அக்கறையற்றவர்களுக்கு திமுக புகலிடமாக உள்ளது என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா விமர்சனம் செய்துள்ளார். தேசிய உணர்வுகளுக்கு எதிரான கட்சியாக திமுக உள்ளது என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

    13:46 (IST)24 Aug 2020

    நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மன்னிப்பு கேட்க மறுப்பு

    நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மன்னிப்பு கேட்க மறுப்பு தெரிவித்துள்ளார். மன்னிப்பு கோருவது மனசாட்சிக்கு துரோகம் விளைவிப்பது போன்றது என்று தெரிவித்துள்ளார்.

    13:21 (IST)24 Aug 2020

    ஜி.எஸ்.டி ரத்து

    எண்ணெய், டூத் பேஸ்ட், சோப், உள்ளிட்ட பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 18% ஆக குறைப்பு! அரிசி, கோதுமை, மாவு, இயற்கை தேன் ஆகியவை மீதான ஜிஎஸ்டி வரி ரத்து செய்யப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 

    13:15 (IST)24 Aug 2020

    வானிலை மையம் தகவல்

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சேலம், திருச்சி, கரூர், பெரம்பலூர், மதுரை, தர்மபுரி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

    13:15 (IST)24 Aug 2020

    வானிலை மையம் தகவல்

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சேலம், திருச்சி, கரூர், பெரம்பலூர், மதுரை, தர்மபுரி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

    13:13 (IST)24 Aug 2020

    ஓபிசி இடஒதுக்கீடு மீதான மனு

    மருத்துவ படிப்பில் 50 சதவீத ஒபிசி இடஒதுக்கீட்டை நடப்பாண்டே அமல்படுத்த கோரிய அதிமுகவின் மேல்முறையீட்டு மனு மீது மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    12:32 (IST)24 Aug 2020

    கோயம்பேடு சந்தையை திறக்க கோரிக்கை

    கோயம்பேடு சந்தையை திறக்க முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். சந்தையை திறக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் உறுதியளித்துள்ளார் என வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். 

    12:07 (IST)24 Aug 2020

    பார்களை மூட உத்தரவிட முடியாது

    தமிழகம் முழுவதும் உள்ள பார்களை மூட உத்தரவிட கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மதுக்கடைகள், பார்களை மூடுவது மாநில அரசின் கொள்கை முடிவு என்பதால் தலையிட முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்

    11:29 (IST)24 Aug 2020

    தலைமை செயலாளர் இன்று ஆலோசனை

    மாவட்ட ஆட்சியர்களுடன், தலைமை செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை நடத்துகிறார். பிற்பகல் 3 மணிக்கு காணொலி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனையில், கொரோனா தடுப்பு பணி தொடர்பாகவும், இ-பாஸ் தொடர்பாகவும் தலைமை செயலாளர் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    11:27 (IST)24 Aug 2020

    எஸ்.பி.பி-க்கு கோவிட்19 நெகட்டிவ்

    மூத்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி.சரண், தனது தந்தை கோவிட் 19 சோதனையில் எதிர்மறை ரிசல்ட்டைப் பெற்று, அவர் சீராக இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். அனைவரின் பிரார்த்தனைகளுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார். 

    10:53 (IST)24 Aug 2020

    தங்கம் விலை குறைவு

    ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்துள்ளது. ஒரு சவரன் 40 ஆயிரத்து 24 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.5,003-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

    10:52 (IST)24 Aug 2020

    விருது வழங்கிய முதலமைச்சர்

    தஞ்சையில் ஏரியில் மூழ்கிய 6 பேரை காப்பாற்றிய ஸ்ரீதருக்கு 'ஜீவன் ரக்சா' விருது வழங்கி முதலமைச்சர் பழனிசாமி கெளரவித்துள்ளார். யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் முதலமைச்சர் நினைவுப்பரிசு வழங்கினார்.  

    10:48 (IST)24 Aug 2020

    இ பாஸ் தொடர்பாக இன்று முதல்வர் ஆலோசனை

    இ-பாஸ் தொடர்பாக, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுட​ன் இன்று ஆலோசனை நடத்துகிறார் முதலமைச்சர் பழனிசாமி. மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி, புதுச்சேரியில் இ பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

    Tamil News: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே ஆம்னி பேருந்துகள் நிற்பதற்காக தனியாக ஆம்னி பேருந்து நிலையம் உள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால், அங்கே ஆம்னி பேருந்துகள் 5 மாதங்களாக இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில், சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 3 பேருந்துகள் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இது குறித்து தகவல் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, கோயம்பேடு, திருமங்கலம், அண்ணாநகர், கோடம்பாக்கம் ஆகிய 4 தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

    Coronavirus Covid 19 All India Congress
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment