/tamil-ie/media/media_files/uploads/2020/09/Farm-Bill-Tamil-News-Today.jpg)
Tamil News Today
Tamil News Today Updates: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்த்து வரும் நிலையில், இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காதீர் என ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
எல்லையில் படைகளை குவிப்பதில்லை, பிரச்னையை மேலும் சிக்கலாக்குவதில்லை என, இந்தியா சீனா ராணுவ அதிகாரிகள் அளவில் நடைப்பெற்ற ஆலோசனையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எந்த நாட்டுடனும் போர் புரியும் எண்ணம் இல்லை என்றும், பேச்சு வார்த்தையின் மூலமே தீர்வு காண விரும்புவதாகவும், ஐ.நா.சபையில் சீன அதிபர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்திய போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இடை நீக்கத்தை ரத்து செய்ய மறுத்ததால், கூட்டத் தொடர் முழுவதையும் புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளனர். வெங்காயம், உருளைக் கிழங்கு உள்ளிட்டவற்றை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கி மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. விவசாயிகளின் வாழ்வில் அதிமுக-பாஜக அரசு வெந்நீரை பாய்ச்சுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உளவுத்துறையினர் எனக்கூறி தமிழ்நாடு இல்லத்தில் தன்னை மிரட்டியதாக, திமுக எம்.பி.கதிர் ஆனந்த், மக்களவையில் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Live Blog
சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
தமிழகத்தில் இன்று புதிதாக 5,325 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 63 பேர் உயிரிழந்ததையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 9000ஐ தாண்டியுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடிக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டதையடுத்து, அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 65.
நாடாளுமன்ற மக்களவை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுகிறது என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். காலையில் ஏற்கனவே மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மக்களவையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1ம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட மழைக்கால கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்: கால்0நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 10ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவ படிப்புகளில் சேர இதுவரை 12,009 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கூடாது என எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் தலைமையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். வேளாண் மசோதா குறித்த எங்களின் கருத்தை குடியரசுத் தலைவரிடம் கூறினோம் என்று குலாம் நபி ஆசாத் கூறினார்.
பிரதமர் மோடி 7 மாநில முதல்வர்களுடன் கொரோனா வைரஸ் தடுப்பு பணியை தீவிரப்படுத்துவது குறித்து காணொளி வழியாக ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி, கொரோனா தடுப்பு பணிக்காக ஏற்கனவே தமிழகம் கோரியிருந்த நிதியை விடுவிக்க வலியுறுத்துவார் என தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நீதிபதிகள் சந்திர சேகரன், நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்பிரமணியம், நீதிபதிகள் கண்ணம்மாள் சண்முக சுந்தரம், சாந்திகுமார், முரளி சங்கர், மஞ்சுளா ராமராஜு, தமிழ்செல்வி ஆகிய 10 நீதிபதிகளின் பெயர்கஊக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.
நீட் தேர்வை கடந்த 13ஆம் தேதி நாடு முழுவதும் 15 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள். தேர்வு முடிவு வெளியாகும் தேதி தொடர்பாக தேசிய தேர்வு முகமை தெரிவிக்கையில், தேர்வு முடிவு தயாரிக்கக்கூடிய பணிகள் மும்முரமாக நடந்து வருவதாகவும், ஒரு வாரத்திற்குப் பிறகு தேர்வு முடிவு வெளியாகும் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது . இந்த மாதம் கடைசியில் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துவதற்கு அனுமதி மறுத்த கரூர் ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, திமுக எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி தொடர்ந்த வழக்கில், தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துவதற்கு அனுமதி மறுத்த கரூர் ஆட்சியர் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
மொழி சம்பந்தப்பட்ட பிரச்சனை நாடெங்கிலும் உள்ளன. அந்த வரிசையில் குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் செயல்பட்டு வந்த தமிழ் மேல்நிலைப் பள்ளி திடீரென்று மூடப்பட்டது. இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு வசித்து வரும் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மூடப்பட்ட தமிழ்ப் பள்ளியைத் திறக்க வேண்டும் எனப் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கலாச்சார குழுவில் தமிழருக்கு இடம் வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், `தமிழர் கலாச்சாரமும், தமிழ் மொழியும் இல்லாவிட்டால் இந்திய வரலாறு முழுமையடையாது. கீழடி ஆய்வு குறித்து, கடந்த ஆண்டு மகாபலிபுரம் வந்த போது வரலாற்று சிறப்பு வாய்ந்த சின்னங்களை பார்வையிட்டதை கடிதத்தில் நினைவுகூர்ந்த முதல்வர், ``கலாச்சார ஆய்வுக் குழுவில் தமிழர்களையும் இடம்பெறச் செய்ய, 16 பேர் கொண்ட குழுவை மாற்றி அமைக்க மத்திய கலாச்சார துறைக்கு அறிவுறுத்துமாறு' மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் மணி நகரில் உள்ள தமிழ் பள்ளி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் பள்ளி மூடப்படுவதற்கு அங்கு வசிக்கும் தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழ் வழியில் படித்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என பெற்றோர்கள் வேதனை!
இயற்கையாக சேமிக்கும் முறை என்பதால், தரைதளத்தொட்டியில் சேமிக்கும் நீர் குளிர் காலங்களில் சூடாகவும், கோடைகாலங்களில் குளிர்ச்சியாகவும் இருக்கும். செலவும் குறைவு, பராமரிப்பதும் எளிது.
மறுபடியும் இணைவோம், மகத்தான சாதனை புரிவோம். மழைநீரை சேமித்து வளமாக வாழ்வோம்.#மழைநீர்சேமிப்போம் pic.twitter.com/oFcSvIN4eK
— SP Velumani (@SPVelumanicbe) September 23, 2020
தமிழகத்தில் 2021-இல் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் உறுப்பினர் சேர்க்கை மற்றும் கட்சியில் பொறுப்புகளை நியமிப்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. திமுக முதன்முறையாக ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கையை நடத்துவதாக அறிவித்தது. அதன்படி, திமுகவில் ஆன்லைன் வழியாக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights