பெட்ரோல். டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. 260-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
அச்சுறுத்தும் நிலநடுக்கம்
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,000-ஐ தாண்டியுள்ளது. மேலும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகமாகும் என்று கருதப்படுகிறது.
கிரிக்கெட்
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் கோப்பையின் முதல் டெஸ்ட் போட்டி. நாக்பூரில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், கொரியா, ஜப்பான், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வரும் விமானப் பயணிகள், அங்கிருந்து புறப்படும் முன் RT-PCR பரிசோதனை செய்வது கட்டாயம் இல்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது
சென்னையிலிருந்து காரைக்குடி செல்லும் பல்லவன் விரைவு ரயில் பிப்ரவரி 16,17,20,21, 23,24,27,28 மற்றும் மார்ச் 3 ஆகிய 9 நாட்களுக்கு இயங்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
பிப்ரவரி 11, 12 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு (TET) நடக்க இருப்பதால், அதே தேதியில் நடக்கவிருந்த இறுதி பருவத்தேர்வுகள் வரும் மே மாதம் 06, 07 தேதிகளுக்கு ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது
எழுதாத பேனாவிற்கு ரூ.80 கோடி செலவு செய்வது நியாயம் தானா? ரூ.80 கோடிக்கு பேனா நினைவுச்சின்னம் வைப்பதற்கு பதிலாக ரூ.2 கோடிக்கு வைக்கலாமே? என ஈரோடு தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்கட்சி தலைவர் இ.பி.எஸ் கூறியுள்ளார்
அழிந்து வரும் ஒற்றை கொம்பு காண்டா மிருகங்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சிறப்பான நடவடிக்கைகாக அஸ்ஸாம் அரசுக்கு ஹாலிவுட் நடிகர் லியானர்டோ டிகாப்ரியே பாராட்டு தெரிவித்துள்ளார்
ஆந்திரா, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை 'SSLV-D2' ராக்கெட் விண்ணில் பாய்கிறது. காலை 9.18 மணிக்கு 'EOS-07' செயற்கைகோளுடன் விண்ணில் ஏவப்படுகிறது
பிரதமர் மோடி நாளை உத்தரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிரம் பயணம் செயிறார். முதலீட்டு மாநாடு, வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநகரப் போக்குவரத்துக் கழகம் ஒரு வழக்கில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், சென்னையில் 65 வழித்தடங்களில் மட்டுமே தாழ்தளப் பேருந்துகளை இயக்க வாய்ப்பு உள்ளது. கிராமப்பகுதி, சுரங்கப்பாதை, மெட்ரோ பணிகள் நடக்கும் 433 வழித்தடங்களில் இயக்க சாத்தியமில்லை என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்.பி. மஹாபலி தனது சொந்த மாநிலமான பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் எனக் கோரினார். பல ஆண்டுகளாக ஒரு சிறப்பு தொகுப்பு மறுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
பாஜக மீது பீகார் மக்கள் தங்கள் நம்பிக்கையைக் காட்டினாலும், காவிக் கட்சி மாநிலத்திற்கு வரவில்லை என்று அவர் கூறினார்.
“பீகார் மக்கள் தங்கள் நம்பிக்கைகள் அனைத்தையும் நித பட்ஜெட்டில் வைத்திருந்தனர். மாநிலத்திற்கான ஒரு சிறப்பு தொகுப்பு மற்றும் ஒரு சிறப்பு அந்தஸ்தை அறிவிக்கப்படும் என்று மிகுந்த கவனத்தை ஈர்த்திருந்தனர். ஆனால் எதுவும் வரவில்லை. நீங்கள் பீகாருக்கு என்ன கொடுத்தீர்கள்” என்று கேட்டார். இதற்கு பா.ஜ.க எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
விழுப்புரம் மாவட்டம் செக்கடிக்குப்பம் கிராமத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது ஏற்பட்ட தகராறில், ஒரு மூதாட்டி பெண் காவலரை திடீரென கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நேரு குடும்பத்தைச் சேர்ந்த காந்திகள் (ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சோனியா காந்தி) தங்கள் பெயருக்குப் பின்னால் நேரு பெயரை சேர்க்க ஏன் வெட்கப்படுகிறார்கள் என்று பிரதமர் மோடி மக்களவையில் கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 356-வது சட்டப்பிரிவு பலமுறை தவறாக பயன்படுத்தப்பட்டது” – மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேச்சு
“சொந்த லாபத்திற்காக நேரு பெயரை பயன்படுத்திக் கொண்டவர்கள் குடும்பப் பெயரில் நேருவின் பெயரை மறந்தது ஏன்..?” * காங்கிரஸ் குடும்பத்திற்கு பிரதமர் மோடி கேள்வி
நீங்கள் வீசி எரியும், அனைத்து சேற்றில் இருந்தும் தாமரை மலரும்” – மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேச்சு
பெண் சக்தியை நினைத்து நாங்கள் பெருமைபடுகிறோம் சியாச்சின் எல்லையில் இன்று பெண்கள் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள்.11 கோடி கழிப்பறைகள் கட்டி தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் மரியாதை செய்துள்ளோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மக்களின் எதிர்பார்ப்புகளையும், விருப்பங்களையும் நிறைவேற்ற இரவு பகலாக பணியாற்றி வருகிறோம். எங்களை பொறுத்தவரை நாட்டு மக்கள் தான் முக்கியம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
உத்வாலா திட்டத்தின் கீழ் 14 கோடி எரிவாயு சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் கடினமாக பணியாற்றி இருக்கிறோம் என்பதை பெருமையுடன் கூற முடியும் – பிரதமர் மோடி
60 ஆண்டுகால ஆட்சியில் காங்கிரஸ், குழிகளை மட்டுமே ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் கணக்கு மூடப்பட்டு விட்டது.
நாட்டின் தொலைதூர கிராமங்களுக்கு வளர்ச்சியை கொண்டு செல்வதில் வெற்றி பெற்றுள்ளோம் – பிரதமர் மோடி
பாஜக அரசு செயல்பட கூடிய அரசு
மக்களின் எதிர்பார்ப்புகளையும், விருப்பங்களையும் நிறைவேற்ற இரவு பகலாக பணியாற்றி வருகிறோம்
எங்களை பொறுத்தவரை நாட்டு மக்கள்
தான் முக்கியம் – பிரதமர் மோடி
பல மூத்த உறுப்பினர்களால் நிறைந்தது மாநிலங்களவை
நாட்டு மக்கள் மாநிலங்களவையை உற்று நோக்கி வருகின்றனர் – பிரதமர் மோடி
காங். ஆட்சி காலத்தில் எந்த பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கவில்லை – பிரதமர் மோடி
நாட்டு மக்களின் பிரச்சினைகள் குறித்து காங். ஆட்சியாளர்கள் கவலைப்படவில்லை
பாஜக அரசு செயல்பட கூடிய அரசு என மக்கள் நம்புகிறார்கள் – பிரதமர் மோடி
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 450 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்கள் மற்றும் 450 விக்கெட்டுகள் எடுத்த 3வது வீரர் என்ற சாதனையை படைத்தார் அஸ்வின்
முன்னாள் வீரர் அனில் கும்ப்ளேவுக்கு (619 விக்கெட்டுகள்) பிறகு அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் அஸ்வின்
கருணாநிதி பேனா நினைவு சின்னத்தை வேறாரு இடத்தில் நிறுவலாம். கடலில் தான் பேனா நினைவு சின்னம் வைக்க வேண்டும் என்ற தேவையில்லை – பாஜக நயினார் நாகேந்திரன்
ராமேஸ்வரத்தில் கடலில் வீசப்பட்ட 12 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்
நடுக்கடலில் தூக்கி வீசப்பட்ட கடத்தல் தங்கத்தை மீட்டது இந்திய கடற்படை
மீட்கப்பட்ட கடத்தல் தங்கத்தின் சர்வதேச மதிப்பு ரூ.7.5 கோடி என அதிகாரிகள் தகவல்
மக்களுக்காக எண்ணில் அடங்கா திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றி உள்ளது – சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உரை
கேரள பட்ஜெட்டில் உயர்த்தப்பட்ட வரியை திரும்ப பெற வலியுறுத்தி பாஜக, காங்கிரஸ் போராட்டம்
3-வது நாளாக கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதியில் போராட்டம் மேற்கொள்ளும் எதிர்க்கட்சியினர்
கோட்டயம் ஆட்சியர் அலுவலகம், கணையனூர் தாலுகா அலுவலகம் முன் பாஜக போராட்டம்
தண்ணீர் பீய்ச்சி அடித்து போராட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் கேரள காவல்துறை
முக்கிய இடங்களில் இரும்பு தடுப்புகள் அமைத்து போராட்டத்தை கட்டுப்படுத்தும் போலீசார்
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 2 நாள் பயணமாக தமிழகம் வருகை
வரும் 18, 19 ஆகிய தேதிகளில் மதுரை, கோவை மாவட்டங்களுக்கு பயணம்
டிஸ்னி நிறுவனம், 7 ஆயிரம் பணியாளர்களை பணி நீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இந்த பணி நீக்கம், 5.5 பில்லியன் டாலர் செலவினத்தை சேமிப்பதற்கான முயற்சி என டிஸ்னி சி.இ.ஓ. பாப் இகர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அனுமதியின்றி செயல்படும் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
துருக்கி, சிரியாவை சிதைத்த நிலநடுக்கத்தில், இதுவரை 16,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை – பெங்களூர் விரைவு சாலை திட்டத்தை விரைந்து முடிக்க மாநில அரசின் ஒத்துழைப்பும் தேவை – மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பதில்
எரிவாயு சிலிண்டரின் ஒப்பந்த விலை 333% உயர்ந்த பின்னரும், வீட்டு உபயோக சிலிண்டரின் விலை மிக குறைந்த அளவே உயர்த்தப்பட்டது.
சவுதி ஒப்பந்த விலை 750 டாலரில் இருந்து மேலும் குறையும் பட்சத்தில் எரிவாயு சிலிண்டர் பொருளாதார விலையில் விற்பனை செய்ய முடியும் – மக்களவையில் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்
ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே எண்ணெய் தொழிற்சாலையில் டேங்கரை 9 பேர் சுத்தம் செய்த நிலையில், விஷ வாயு தாக்கி 7 பேர் உயிரிழந்தனர்.
பங்குசந்தை முறைகேடு விவகாரத்தில் தேசிய பங்குசந்தை முன்னாள் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு, சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்த நிலையில், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலும் ஜாமீன் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில், சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்ட நாளை முன்னிட்டு வருஷாபிஷேக விழா இன்று விமர்சையாக நடைபெற்றது.
பரந்தூர் விமான நிலையம்: விரிவான தொழில்நுட்ப பொருளாதார அறிக்கை தயார் செய்ய கோரப்பட்ட டெண்டர் அவகாசம் நீட்டிப்பு; பிப்.6-ம் தேதியுடன் அவகாசம் நிறைவடைந்த நிலையில் பிப்.27-ம் தேதி வரை அவகாசம்
சிறப்புத் திட்ட செயலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை; சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்பு. கடந்த 20 மாத காலத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை கண்காணிக்க வேண்டும்” சிறப்புத் திட்ட செயலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
ஈரோடு கிழக்கில் அதிமுக வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம் . ஈரோடு கிழக்கு வேட்பாளர் அறிமுகம் கூட்டத்தில் பங்கேற்க அதிமுக அழைப்பு கொடுத்திருந்தது – அண்ணாமலை
13வது சட்ட திருத்தம் விவகாரம் தொடர்பாக இன்று இலங்கை பயணம் மேற்கொள்கிறேன். பாஜக அரசு வந்த பிறகு மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு குறைந்துள்ளது. வெகு விரைவில் இந்தியா- இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து தொடங்கும் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது
சென்னை அடுத்த தாழம்பூரில் 70 வயது மூதாட்டி ராஜம், கத்தியால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை; உடல்நலக்குறைவால் நடக்க முடியாமல் இருந்த நிலையில், விரக்தியடைந்த மூதாட்டி தற்கொலை செய்துள்ளதாக, முதல் கட்ட விசாரணையில் போலீசார் தகவல்.
அரசுப் பேருந்துகளில், ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள் மீது புகார் அளிக்கலாம் என போக்குவரத்துத்துறை உத்தரவு.