Advertisment

Tamil News Today : பீகார் தேர்தல்: என்.டி.ஏ-வில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் தொகுதி பங்கீடு இறுதி

Tamil News Today : புறநகர் ரயில் சேவை 6 மாதத்துக்குப் பின் தொடங்கப்பட்ட நிலையில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Tamil News Today : பீகார் தேர்தல்: என்.டி.ஏ-வில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் தொகுதி பங்கீடு இறுதி

Tamil News Today dmk Kanimozhi : ஹெப்படைட்டிஸ் சி வைரஸை கண்டுபிடித்ததற்காக ஹார்வே ஜே. ஆல்ட்டர், மைக்கேல் ஹாக்டன், சார்லஸ் ரைஸ் உள்ளிட்ட 3 பேருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.கல்லீரல் புற்றுநோய் மற்றும் கல்லீரல் சார்ந்த நோயை ஏற்படுத்தும் காரணிகளை எதிர்த்துப் போராட மிகச்சிறந்த பங்களிப்பை அளித்தமைக்காக இந்த மூன்று விஞ்ஞானிகளுக்கும் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் நாட்டின் சுதந்திரத்தை பறிக்கும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார் . பஞ்சாப் மாநிலம் சங்ரூரில் விவசாயிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசிய அவர், புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறும் வரை காங்கிரஸ் பின்வாங்காது என்று கூறினார். கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் 22 நாட்களில் வெற்றி பெற்று விட்டதாக பிரதமர் மோடி கூறியதாக அவர் தெரிவித்தார்.

திமுக எம்.பி கனிமொழி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு. ஹாத்ராஸ் சம்பவத்தை கண்டித்து நேற்று ஆளுநர் மாளிகையை மெழுகுவர்த்தி ஏந்தி முற்றுகையிட முயற்சி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Tamil News Today சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    21:57 (IST)06 Oct 2020

    விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

    தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அண்மையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த், சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த நிலையில் அவர் இன்று மீண்டும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    21:49 (IST)06 Oct 2020

    பீகார் தேர்தல்: தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி

    பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளத்திற்கு 122, பாஜகவிற்கு 121 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.

    20:32 (IST)06 Oct 2020

    தேர்தல் வழக்கு: அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் மனு மீது அக். 16ம் தேதி தீர்ப்பு - உயர் நீதிமன்றம்

    தேனி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் வெற்றி பெற்றதை எதிர்த்து வாக்காளர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் தாக்கல் செய்த மனு மீது அக்டோபர் 16ம் தேதி தீர்ப்பு அளிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

    19:52 (IST)06 Oct 2020

    கிசான் திட்ட முறைகேடு குறித்து மத்திய அரசு மீது குறை சொல்ல முடியாது: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்: வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும். படிப்படியாக குறையும் என்பதில் உண்மை இல்லை. விவசாயிகள் இடையே அரசுக்கு எதிராக அதிருப்தியை ஏற்படுத்த நினைக்கிறார்கள். அரசு கொள்முதல் செய்யும் ரேஷன் பொருட்களும் மக்களுக்கு கிடைக்கும் என்பதில் மாற்றமில்லை. கிசான் திட்ட முறைகேடு குறித்து மத்திய அரசு மீது குறை சொல்ல முடியாது.” என்று கூறினார்.

    19:48 (IST)06 Oct 2020

    திமுக எம்.பி கனிமொழி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

    ஹாத்ராஸ் சம்பவத்தை கண்டித்து நேற்று ஆளுநர் மாளிகையை நோக்கி திமுக எம்.பி கனிமொழி தலைமையில் திமுக மகளிரணியினர் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி சென்றனர். கனிமொழி உள்பட பேரணியாக சென்ற அனைவரும் கைது செய்யப்பட்டு நேற்று மாலையே விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில், பேரணியாக சென்ற திமுக எம்.பி கனிமொழி மற்றும் 191 பேர் மீது சட்ட விரோதமாக கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், தொற்று நோய் பரவல் சட்டம் உட்பட 5 பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    18:06 (IST)06 Oct 2020

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,017 பேருக்கு கொரோனா; 71 பேர் பலி

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,017 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 71 பேர் உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    17:05 (IST)06 Oct 2020

    வேளாண் சட்டத்தை எதிர்த்து டிராக்டர் பேரணி; ஹரியானாவில் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்

    வேளாண் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி தலைமையில் விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடைபெற்றது. டிராக்டர் ஓட்டிச் சென்ற ராகுல் காந்தி ஹரியானாவில் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

    16:58 (IST)06 Oct 2020

    இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு

    2020ஆம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு, விஞ்ஞானிகள் ரோஜர் பென்ரோஸ், ரெயின் ஹார்ட் ஜென்சில், ஆண்டிரியா கெஸ் ஆகிய 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு கருந்துளை பற்றிய ஆய்வுக்காக நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

    16:05 (IST)06 Oct 2020

    தலைவர்களின் சிலையைக் கூண்டுக்குள் அடைப்பது சரியான முடிவா? கி. வீரமணி

    பெரியார் போன்ற தலைவர்களின் சிலையைக் கூண்டுக்குள் அடைப்பது சரியான முடிவா?  என்று கி. வீரமணி கேள்வி எழுப்பினார்.  

    16:04 (IST)06 Oct 2020

    இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின், ஸ்திரத்தன்மைக்காக இந்தியாவும், அமெரிக்காவும் ஒருங்கிணைந்து செயல்படும்

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர்   மைக் பாம்பியோவை இன்று சந்தித்து பேசினார். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின், ஸ்திரத்தன்மைக்காக இந்தியாவும், அமெரிக்காவும் ஒருங்கிணைந்து செயல்படும் என்று ஜெய்சங்கர் தெரிவித்தார்.

    மேலும் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களையும் அமைச்சர்  ஜெய்சங்கர் சந்தித்து பேசவுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

     

    15:09 (IST)06 Oct 2020

    எஸ்.பி வேலுமணி ட்வீட்

    14:29 (IST)06 Oct 2020

    கீழடியில் 7ஆம் கட்ட அகழாய்வுக்கு மத்திய தொல்லியல்துறை அனுமதி – அமைச்சர் பாண்டியராஜன்

    டிசம்பர் மாதத்திற்கு முன்பாகவே கீழடியில் 7 அகழாய்வு பணிகள் தொடங்க மத்திய தொல்லியல் துறை அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  

    13:59 (IST)06 Oct 2020

    திமுக கோரிக்கை (5/n)

    கொள்முதல் நிலையங்களில் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டது போல ஈரப்பதத்தின் அளவை 22 சதவீதம் வரை நீட்டித்து அரசாணை வெளியிட்டு, தற்போது விவசாயிகள் சாலைகளில் நெல்லைக் கொட்டி காயவைத்துப் பாதுகாக்கும் அவலங்களையும் அதற்கான செலவுகளையும் தவிர்க்க வேண்டும். 

    மேலும் பல்வேறு தேவை இல்லாத செலவுகளை இந்த அரசு விவசாயிகளுக்கு ஏற்கனவே ஏற்படுத்தி இருப்பதால், விளைந்த நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விற்பனைக்குக் கொண்டுவரும் நேரத்தில், மூட்டை ஒன்றுக்கு 45 ரூபாய் எந்தக் காரணமும் இல்லாமல் பெற்றுக்கொள்வதை உடனடியாக நிறுத்த உணவுத்துறை அமைச்சர் நேரடி நெல் கொள்முதல் அதிகாரிகளுக்கு ஆணையிட்டு விவசாயிகளுக்கு உதவிட வேண்டும்.

    13:59 (IST)06 Oct 2020

    திமுக கோரிக்கை (4/n)

    இதுகுறித்து விவசாயிகளின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஆனைக்கொம்பன் நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த மருந்துகளைப் பரிந்துரைப்பதோடு, அந்த மருந்துகளை அனைத்து அரசு வேளாண் மையங்களிலும் போதுமான அளவு இருப்பு வைக்க வேண்டும். மேலும், ஆனைக்கொம்பன் நோயின் தாக்கத்தால் பாதிக்கப்படும் பயிர்களை இயற்கைப் பேரழிவுக்கு ஆளான பயிர்களாகக் கணக்கில் கொண்டு இழப்பீடு வழங்கிட வேண்டும்.

    மேலும் தற்போது தமிழகத்தில், குறிப்பாக டெல்டா பகுதிகளில், மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கருதுவதால், தமிழகத்தின் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் தளபதி அவர்களின் வலியுறுத்தலுக்குப் பிறகு தமிழகத்தில் திறக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஏற்கனவே விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ள தரைத் தளங்கள், மற்றும் தார்ப்பாய்களை நெல் மூட்டைகள் பாதுகாக்கப்பட அரசுத் தரப்பிலிருந்து வழங்க வேண்டும்.

    13:58 (IST)06 Oct 2020

    திமுக கோரிக்கை (3/n)

    கொரோனாவின் பெயரைச் சொல்லி அரசு வேளாண் அதிகாரிகள் கிராமப்புறங்களுக்குச் சென்று நோய் பாதித்த விவசாய நிலங்களைப் பார்வையிடுவதில்லை. அதேபோல விவசாய ஆர்வலர்கள் அரசுக்குக் கொடுக்கும் எச்சரிக்கைகளையும் காதில் போட்டுக்கொள்வதில்லை.

    எனவே தமிழக அரசும் வேளாண் துறையும் உடனடியாக போர்க்கால அடிப்படையில் டெல்டா பகுதிகளில் வேளாண் அதிகாரிகளைக் கொண்ட ஆய்வுக்குழுவை அமைத்து கிராமங்கள் தோறும் சென்று ஆனைக்கொம்பன் நோயின் தாக்கத்தை இனம் கண்டு, விளைந்து நெற்கட்டும் பருவத்தில் உள்ள பயிர்களைக் காக்க வேண்டும்.

    13:58 (IST)06 Oct 2020

    திமுக கோரிக்கை (2/n)

    கடந்த 2019-20 ஆம் ஆண்டும் இதே போன்றதொரு சூழ்நிலையில் விவசாயத்தை மேற்கொண்ட விவசாய நிலங்களில், ஆனைக்கொம்பன் நோயின் தாக்கம் ஏற்பட்டு விவசாயத்தில் பேரழிவை ஏற்படுத்தியது. இதுகுறித்து விவசாயிகளும், விவசாய ஆர்வலர்களும் அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் வேளாண்துறைக்கும் பல புகார்களைத் தெரிவித்த நிலையில், அதுகுறித்து அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்காமல், ஆனைக்கொம்பன் நோயின் தாக்கத்தில் பாதிக்கப்பட்ட பயிர்களைப் பயிர்க்காப்பீட்டுப் பலனிலும் சேர்த்துக் கொள்ளவில்லை. இன்றுவரை கடந்த ஆண்டிற்கான ஆனைக்கொம்பன் பேரழிவுக்கு விவசாயிகளுக்கு எந்த நிவாரணத்தையும் தமிழக அரசு கொடுக்கவில்லை.

    இந்தப் பருவமான 2020-21-ஆம் ஆண்டும் விவசாயப் பயிர்களில் ஆனைக்கொம்பனின் தாக்கம் தொடங்கி இருக்கிறது. குறிப்பாக டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் ஆனைக்கொம்பன் நோயின் தாக்கம் பரவலாகக் காணப்படுகிறது. ஆனால் வேளாண்துறை, இந்நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

    13:57 (IST)06 Oct 2020

    ஆனைக்கொம்பன் நோய் தாக்கத்தில் இருந்து பயிர்களைக் காக்க வேண்டும் - திமுக கோரிக்கை (1/n)

    ஆனைக்கொம்பன் நோய் தாக்கத்தில் இருந்து பயிர்களைக் காக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.  ஆனைக்கொம்பன் நோயால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று திமுக கோரிக்கை வைத்துள்ளது. 

    இதுகுறித்து, திமுக மாநில விவசாய அணிச் செயலாளர்  ஏ.கே.எஸ். விஜயன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "

    தமிழக விவசாயத்தில் ஆளுகின்ற அ.தி.மு.க. அரசு எந்தவிதமான அக்கறையும் காட்டாத நிலையில், விவசாயத்தைத் தவிர வேறு எதையும் அறியாத தமிழக விவசாயிகள், அதிலும் குறிப்பாக டெல்டா பகுதி விவசாயிகள், பருவ மழையை மட்டுமே நம்பி தங்களது நிலங்களில் விவசாயம் செய்து வருகின்றனர். ஆளும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசும் குறுவைத் தொகுப்பு, சம்பா தொகுப்பு, விவசாய மானியங்கள், விவசாயக் கடன் இப்படி எதையுமே கொடுக்காமல் மேலும் விவசாயத்தை வஞ்சித்து வருகிறது.

    13:54 (IST)06 Oct 2020

    தொழிற்சாலைகளுக்கு இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும் - மத்திய அமைச்சர்

    புதிய தொழிலாளர் சட்டங்கள் தொழிற்சாலைகளுக்கு இடையே நல்லிணக்கம், உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிப்பு ஆகியவற்றிற்கு உதவிடும் என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர்  சந்தோஷ் குமார் கங்வார் கூறியுள்ளார்

    13:23 (IST)06 Oct 2020

    தமிழக அரசின் உத்தரவு செல்லும்!

    மருத்துவ மேற்படிப்பு முடிப்பவர்கள் 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் . 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனையில் பணியாற்ற வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவு செல்லும் .2 ஆண்டுகள் பணி முடித்த பிறகே சான்றிதழ்கள் திரும்ப வழங்கப்படும் என்ற ஒப்பந்தம் சரிதான் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    13:21 (IST)06 Oct 2020

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில் உள் இடஒதுக்கீடு!

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில் உள் இடஒதுக்கீடு தர ஒப்புதல் அளிப்பதாக ஆளுநர் கூறியுள்ளார்.  ஒப்புதல் அளிக்கப்படும் கால அளவை பொறுத்துத்தான் இந்த ஆண்டே அமலாகுமா என தெரியும் என்று அமைச்சர் விஜயபாஸ்கார் தெரிவித்துள்ளார். 

    12:40 (IST)06 Oct 2020

    நாஞ்சில் முருகேசனின் 2வது ஜாமீன் மனுவும் தள்ளுபடி!

    பாலியல் தொல்லை வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசனின் 2வது ஜாமீன் மனுவும் தள்ளுபடி .  நாகர்கோவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. முருகேசனின் மனுவை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்து உத்தரவு. 

    12:39 (IST)06 Oct 2020

    அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!

    பள்ளிகள் திறப்பை விட மாணவர்களின் உயிர்தான் முக்கியம் .  8 மாதங்களாக மூடப்பட்டுள்ள பள்ளிகளை உள்ளாட்சித் துறை உதவியுடன் தயார்படுத்தப்பட்டு வருகின்றன . பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் பழனிசாமிதான் முடிவு எடுப்பார் என அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

    12:37 (IST)06 Oct 2020

    குஷ்பு வெளியூர் பயணம்!

    காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு திடீரென டெல்லி பயணம் . கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் 9 மாதங்களுக்கு பிறகு வெளியூர் பயணம் என ட்விட்டரில் குஷ்பு தகவல். 

    11:49 (IST)06 Oct 2020

    ஸ்டாலின் கடிதம்!

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம்.  வேளாண் சட்டத்தை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் ஸ்டாலின் கடிதத்தை திமுக எம்.எல்.ஏ.க்கள் முதலமைச்சரின் செயலாளரிடம் வழங்க உள்ளன, 

    11:48 (IST)06 Oct 2020

    திரையரங்குகளை திறப்பதற்கான வழிகாட்டுதல்கள்!

    அக்.15 திரையரங்குகள் திறக்க மத்திய அரசு அனுமதித்துள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.  50 இருக்கைகளில் பார்வையாளர்களை அனுமதிக்கலாம் . ஒரு இருக்கை இடைவெளிவிட்டு பார்வையாளர்களை அமர செய்ய வேண்டும் . அனைவரும் மாஸ்க் அணிந்த படியே தியேட்டருக்கு வந்து படம் பார்க்க அனுமதிக்க வேண்டும் *.

    திரையரங்கு உள்ளே உணவு, நொறுக்குத் தீனி வழங்க தடை விதிக்கப்படுகிறது . ஒவ்வொரு காட்சிக்குப் பிறகும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்  என திரையரங்குகளை திறப்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய அரசு 

    11:45 (IST)06 Oct 2020

    ஓ.பி.எஸ். ஆலோசனை!

    அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளனர். கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோருடன் ஓ.பி.எஸ். ஆலோசனை நடத்தி வருகிறார்

    10:30 (IST)06 Oct 2020

    அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை!

    தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை. முதன்மை கல்வி அலுவலர்கள் பங்கேற்றுள்ள அலுவல் ஆய்வுக்கூட்டம் அமைச்சர் தலைமையில் நடைபெற்று வருகிறது.பள்ளிகள் திறப்பு, தேர்வு, புதிய கல்விக்கொள்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது

    10:29 (IST)06 Oct 2020

    நெல் கொள்முதல் நிலையங்கள்!

    புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 12 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.  ஏற்கனவே 16 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ள நிலையில் மேலும் 12 கொள்முதல் நிலையம் திறப்பு

    10:25 (IST)06 Oct 2020

    காவல் உதவி ஆய்வாளர் பலி!

    சென்னையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த காவல் உதவி ஆய்வாளர் பலி .கடந்த 3ம் தேதி அமைந்தகரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் பாபு.  தலைமை செயலக காலனி காவல் உதவி ஆய்வாளர் பாபு உயிரிழப்பு . 

    10:24 (IST)06 Oct 2020

    முதல்வருடன் பழனிசாமியுடன் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சந்திப்பு!

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சந்திப்பு . நாளை முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அதிமுகவில் முக்கிய ஆலோசனை . துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். உடன் நத்தம் விஸ்வநாதன் ஏற்கனவே ஆலோசனை

    10:23 (IST)06 Oct 2020

    ஓ.பி.எஸ் உடன் கே.பி.முனுசாமி மீண்டும் சந்திப்பு!

    துணை முதல்வர் ஓ.பி.எஸ் உடன் கே.பி.முனுசாமி மீண்டும் சந்திப்பு .  அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் நாளை அறிவிக்கப்பட உள்ள நிலையில் ஆலோசனை . துணை முதலமைச்சர் உடனான ஆலோசனையில் மனோஜ் பாண்டியனும் பங்கேற்பு

    Tamil News Today : கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, பெண்ணை கடத்தி திருமணம் செய்து கொண்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தன் காதல் மனைவியுடன் வீடியோ மூலம் அவர் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், தன் காதலி சவுந்தர்யாவின் சம்மத‌த்துடன் தான் அவரை மணந்த‌தாகவும், பெண் வீட்டாரை மிரட்டவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேனியில் இருந்து சென்னை வந்து சேர்ந்துள்ளார். கடந்த 2ஆம் தேதி சொந்த ஊருக்கு சென்றிருந்த ஓ.பி.பன்னீர்செல்வம், அங்கு கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். இந்நிலையில், தேனியில் இருந்து புறப்பட்ட பன்னீர்செல்வம் சென்னை வந்து சேர்ந்தார். சென்னை வந்த அவரை, முன்னாள் அமைச்சரான நத்தம் விஸ்வநாதன், நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    நேற்றைய தமிழக செய்திகளை வாசிக்க

    சுவப்னா சுரேஷ் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த 2 மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி ஐதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகை தமன்னா குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

    Tamilnadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment