Advertisment

Tamil News Today : தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் தட்டுப்பாடு இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்

News Today : 30 நிமிடங்கள் மட்டும் கேள்வி நேரத்திற்கு ஒதுக்கீடு எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
Tamil News Today : தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் தட்டுப்பாடு இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்

Tamil News Today Updates : தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் செயல்படும் என அறிவிப்பு. டிசம்பர் மாதம் வரை சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் செயல்படும் என அரசு அறிவிப்பு.

Advertisment

முதலமைச்சர் பழனிசாமி ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். வளமிக்க அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு நல்வாழ்த்துகளை கூறியுள்ளார்.

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு வரும் 5ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளை கொண்ட பயணிகள் மட்டுமே ரயில் நிலையங்களுக்குள் அனுமதிக்கப்படுவர் என தெற்கு ரயில்வே அறிவிப்பு. எதிர்வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கேள்வி நேரத்துக்கு அனுமதி. 30 நிமிடங்கள் மட்டும் கேள்வி நேரத்திற்கு ஒதுக்கீடு எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:10 (IST)04 Sep 2020

    சி.பி.எஸ்.இ 10, 12, வகுப்பு மறு தேர்வு அட்டவணை வெளியீடு

    சி.பி.எஸ்.இ 10, 12, வகுப்பு மறு தேர்வு அட்டவணையை சி.பி.எஸ்.இ நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ளது. 10ம் வகுப்புக்கு செப்டம்பர் 22ம் தேதி முதல் செப்டம்பர் 28ம் தேதி வரையிலும் 12ம் வகுப்புக்கு செப்டம்பர் 22ம் தேதி முதல் செப்டம்பர் 29 வரையிலும் தேர்வுகள் நடைபெறும் என்று சி.பி.எஸ்.இ நிர்வாகம் அறிவித்துள்ளது.

    20:58 (IST)04 Sep 2020

    முகக்கவசம், சமூக இடைவெளி கடைபிடிக்காவிட்டால் அபராதம் - தமிழக அரசு

    பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதமும் சமூக இடைவெளி கடைபிடிக்காவிட்டால் ரூ.500 அபராதமும் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாத சலூன் ஸ்பா ஆகியவற்றிற்கு ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    19:15 (IST)04 Sep 2020

    அரசியலில் ரஜினியுடன் இணைவேன் -ராகவா லாரன்ஸ்

    நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு, அவருடைய லட்சக் கணக்கான ரசிகர்களில் ஒருவனாக இருந்து எந்த எதிர்பார்ப்பும் இன்றி சமூதாயத்துக்காக எனது சிறந்த சேவையை செய்வேன் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

    18:11 (IST)04 Sep 2020

    தமிழகத்தில் இன்று புதிதாக 5,976 பேருக்கு கொரோனா; 79 பேர் பலி

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,976 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில், கொரோனா பாதிப்பால் 79 பேர் உயிரிழந்ததாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    17:48 (IST)04 Sep 2020

    கல்லூரி மாணவர்களின் அரியர் தேர்வுகளை ரத்து செய்ததை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு

    தமிழக அரசு கலை, அறிவியல், பொறியியல் கல்லூரி மாணவர்களின் அரியர் தேர்வுகளை ரத்து செய்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், அரியர் தேர்வுகளை தள்ளிவைக்க முடியுமே தவிர ரத்து செய்ய முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

    17:10 (IST)04 Sep 2020

    தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் தட்டுப்பாடு இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்

    செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை. தமிழகத்தில் எந்த இடத்திலும் கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் தட்டுப்பாடு கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.

    16:20 (IST)04 Sep 2020

    அரசின் முடிவில் மாற்றமில்லை

    அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்ற அரசின் அறிவிப்பு செல்லும். அரசின் முடிவில் எவ்வித மாற்றமுமில்லை. அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் சூரப்பாவின் கருத்தை AICTE கருத்தாக திணிப்பது கண்டிக்கத்தக்கது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

    16:03 (IST)04 Sep 2020

    பட்டாசு ஆலை விபத்து - முதல்வர் நிதியுதவி

    கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் பட்டாசு தொழிற்சாலை விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    15:38 (IST)04 Sep 2020

    சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

    தமிழகத்தில் மேலும் 4 சிறப்பு ரயில் சேவைகளை அறிவித்தது தெற்கு ரயில்வே. ஏற்கனவே 9 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் கூடுதலாக 4 சிறப்பு ரயில் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    15:16 (IST)04 Sep 2020

    மாணவி தீக்குளித்து தற்கொலை

    தேனி அருகே 10ஆம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    14:55 (IST)04 Sep 2020

    உச்சநீதிமன்றம் உத்தரவு

    நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரி தமிழகம் உட்பட 7 மாநிலங்கள் மறுஆய்வு மனு செய்தன. இந்த மனுக்களை உச்சநீதிமன்றம தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

    14:36 (IST)04 Sep 2020

    AICTE தகவல்

    பொறியியல் படிப்பில் அரியர்ஸ் மாணவர்கள் தேர்ச்சி என்ற தமிழக அரசின் முடிவை ஏற்க முடியாது என அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அண்ணா பல்கலைக் கழகத்திற்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு கடிதம் எழுதியுள்ளது.

    13:59 (IST)04 Sep 2020

    முன்பதிவு தொடங்கியது

    மாநில விரைவுப்பேருந்து போக்குவரத்துக் கழக பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியது. முதற்கட்டமாக மதுரை, நாகர்கோவில், ஒசூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளுக்கு முன்பதிவு துவங்கியுள்ளது.

    13:58 (IST)04 Sep 2020

    ஐபிஎல் - ஹர்பஜன் சிங் விலகல்

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஹர்பஜன் சிங், தனிப்பட்ட காரணங்களுக்காக, ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இத்தொடரில் இருந்து சுரேஷ் ரெய்னா விலகியுள்ள நிலையில், தற்போது ஹர்பஜனும் விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    13:41 (IST)04 Sep 2020

    வெடிவிபத்து - 7 பேர் பலி

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். குருங்குடி என்ற கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

    13:39 (IST)04 Sep 2020

    EIA குறித்து ஸ்டாலின்!

    மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வரும் திட்டங்கள் மக்கள் நலனுக்கு விரோதமானவை என்று மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொழிற்சாலைகளை தி.மு.க. எதிர்க்கவில்லை .  சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் வகையில் தொழிற்சாலைகள் இருக்க கூடாது . ற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையானது தனியார் மயமாக்க வழி வகுக்கிறது  எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

    13:37 (IST)04 Sep 2020

    பேரறிவாளனுக்கு பரோல் இல்லை!

    ராஜிவ் கொலை வழக்கு ஆயுள் கைதி பேரறிவாளனுக்கு பரோல் இல்லை . 90 நாட்கள் பரோல் கேட்டு அவரது தாய் அளித்த மனுவை நிராகரித்து விட்டது, தமிழக அரசு. 

    13:33 (IST)04 Sep 2020

    வேட்புமனு தாக்கல்!

    திமுக பொதுச் செயலாலர் , பொருளாளர் பதவிகளுக்கு துரைமுருகன், டி.ஆர்.பாலு பெயரில் வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதுச் செயலாளர் பதவிக்காக துரைமுருகன் பெயரில் 24 வேட்பு மனுக்களும், பொருளாளர் பதவிக்காக டி.ஆர்.பாலு பெயரில் 16 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இந்த இரு பதவிகளுக்கும் வேறுயாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் துரைமுருகன், டி.ஆர்.பாலு போட்டியின்றி தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    12:53 (IST)04 Sep 2020

    மாணவர்களுக்கு மாதம் 10 முட்டைகள்!

    சத்துணவு மாணவர்களுக்கு மாதம் 10 முட்டைகள் வழங்க அரசு உத்தரவு.  பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்களுக்கு வழங்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.  பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்து முட்டைகளை வழங்க அறிவுறுத்தல்.

    12:49 (IST)04 Sep 2020

    அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

    செமஸ்டர் கட்டணம் செலுத்த செப்.19 வரை அவகாசம் வழங்கி அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாணவர்களின் குடும்ப சூழ்நிலை காரணமாக இந்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    11:44 (IST)04 Sep 2020

    மத்திய அரசு மேல்முறையீடு!

    தமிழ் உள்பட 22 மொழிகளில் EIA வரைவறிக்கை வெளியிட உத்தரவிட்டதற்கு எதிராக மேல்முறையீடு. டெல்லி உயர்நீதிமன்றம் தனது உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

    11:16 (IST)04 Sep 2020

    லட்டு பிரசாதம்!

    கொரோனா பொதுமுடக்கத்தால் நிறுத்தப்பட்டிருந்த லட்டு பிரசாதம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீண்டும் வழங்கப்படுகிறது. 

    11:15 (IST)04 Sep 2020

    உச்சநீதிமன்றம் விசாரணை!

    நீட் தேர்வுக்கு எதிரான 7 மாநிலங்களின் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது .செப்டம்பர் 13 ஆம் தேதி நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு நடக்க உள்ள நிலையில் உச்சநீதிமன்றம் மனுவை விசாரிக்கிறது. 

    10:30 (IST)04 Sep 2020

    கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி!

    காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மறைவையடுத்து கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிப்பு. அப்பாவை தொடர்ந்து அவரின் மகன் விஜய் வசந்த் தேர்தலை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ”அரசியலில் விருப்பம் இருக்கிறது; ஆனால் தற்போதைக்கு தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை காங்கிரஸ் உறுப்பினராக நான் கட்சி தலைமை என்ன சொல்கிறதோ அதன்படி செயல்படுவேன் ” என்று விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். 

    10:03 (IST)04 Sep 2020

    துணை பட்ஜெட் தாக்கல்!

    சட்டப்பேரவை கூட்டத்தொடரில் துணை பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.  நிதித்துறையை கவனித்து வரும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், துணை பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என தகவல்.

    09:43 (IST)04 Sep 2020

    7 பேர் கொண்ட குழு!

    புதிய கல்விக்கொள்கை குறித்து ஆராய தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைத்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.

    Tamil News Today : ஆன்லைனில் பதிவு செய்து அனுமதி சீட்டு பெற்றால் மட்டுமே சாமி தரிசனம் செய்யலாம் என்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அனுமதி சீட்டை நாளை முதல் திருக்கோவிலின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    நேற்றைய தமிழக செய்திகளை வாசிக்க

    பாடகர் எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து வரும் திங்கட்கிழமை நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம் என்று அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சரண் இன்று புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து 4 நாட்களாக எஸ்.பி.பி. உடல்நிலை சீராக உள்ளதாகவும், உடல் நிலையில் நல்லமுன்னேற்றம் உள்ளதால் நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம் என்று அவர் கூறியுள்ளார். எனவே, மருத்துவமனையில் இருந்து விரைவில் எஸ்பிபி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Tamilnadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment