Advertisment

Tamil news Highlights : அதிமுக அலுவலக சாவி இபிஎஸ்-யிடம் ஒப்படைக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு; இன்று விசாரணை

Tamil Nadu News, Tamil News, Petrol price Today - 11 Sep 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Important aspects of the Madras High Court judgment that the AIADMK General Committee will go

எடப்பாடி பழனிசாமி- ஓ. பன்னீர் செல்வம்

பெட்ரோல் டீசல் விலை

Advertisment

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியா நகரில் 7.6 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இதனால் கடுமையான விளைவுகள் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை. இதனால் பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்டுள்ள சேத விவரம் குறித்தும் அறியப்படாமல் உள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

காங். யாத்திரை

தமிழகத்தில் தனது நடைபயணத்தை 4வது நாளில் நிறைவு செய்தார் ராகுல். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடைபயணத்தில் 53 கி.மீ., தூரத்தை கடந்தார். இன்று முதல் கேரள எல்லையில் தனது பயணத்தை தொடங்குகிறார் ராகுல்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil



  • 22:16 (IST) 11 Sep 2022
    பாகிஸ்தானுக்கு 171 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை

    ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 171 ரன்களை இலங்கை அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. இலங்கை அணியில் அதிகபட்சமாக ராஜபக்சே 71 ரன்கள் எடுத்தார்.



  • 20:01 (IST) 11 Sep 2022
    டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சு தேர்வு

    ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில், இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது



  • 19:42 (IST) 11 Sep 2022
    தி.மு.க.,வின் மாநாடுகளில் வைகோவின் பேச்சுக்கு வரவேற்பு அதிகம் இருக்கும் – ஸ்டாலின்

    சென்னை, ராயப்பேட்டையில் "மாமனிதன் வைகோ" ஆவணப்படம் வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.

    அப்போது உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், திமுகவின் மாநாடுகளில் வைகோவின் பேச்சுக்கு வரவேற்பு அதிகம் இருக்கும். 56 வருட அரசியல் வாழ்க்கைக்கு சொந்தக்காரர் வைகோ என வைகோவை புகழ்ந்து பேசினார்



  • 19:23 (IST) 11 Sep 2022
    விசாரணைக்குபின் பத்திரிகையாளர் சாவித்ரி கண்ணன் விடுவிப்பு

    கள்ளக்குறிச்சி மாணவி மரணம் குறித்து எழுதியதற்காக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பத்திரிகையாளர் சாவித்ரி கண்ணன் விசாரணைக்குபின் விடுவிக்கப்பட்டுள்ளார்



  • 18:06 (IST) 11 Sep 2022
    2 நாள் அரசு முறை பயணமாக உஸ்பெகிஸ்தான் செல்கிறார் மோடி

    பிரதமர் மோடி செப்.15,16 ஆகிய தேதிகளில் அரசுமுறைப் பயணமாக உஸ்பெகிஸ்தான் செல்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 17:38 (IST) 11 Sep 2022
    தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் தேர்தலில் பாக்யராஜ் வெற்றி

    தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் தேர்தலில் இயக்குநர் பாக்யராஜ் வெற்றி பெற்றுள்ளார். தேர்தலி பாக்யராஜுக்கு 192 வாக்குகளும், சந்திரசேகருக்கு 152 வாக்குகளும் கிடைத்துள்ளது.



  • 17:34 (IST) 11 Sep 2022
    ஜம்மு காஷ்மீரில் 10 நாட்களில் புதிய கட்சி அறிவிக்கப்படும் - குலாம் நபி ஆசாத்

    குலாம் நபி ஆசாத், ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பது மற்றும் நிலம் மற்றும் வேலைவாய்ப்புக்கான உள்ளூர் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது தனது கட்சியின் முக்கியத் திட்டம் என்று கூறியிருந்தார்.

    காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய சில வாரங்களுக்குப் பிறகு, குலாம் நபி ஆசாத் இன்னும் 10 நாட்களில் புதிய கட்சியை அறிவிப்பேன் என்று குலாம் நபி ஆசாத் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். புதிய அரசியல் அமைப்பின் சித்தாந்தம் சுயாதீனமாக இருக்கும் என்று வலியுறுத்திய முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதல்வர், ஜம்மு-காஷ்மீரின் மாநில அஸ்தஸ்த்தை மீட்டெடுப்பதற்காகவும், மக்களின் வேலை மற்றும் நில உரிமைகளுக்காகவும் போராடுவதே தனது கட்சியின் முக்கிய அரசியல் திட்டமாக இருக்கும் என்று கூறினார்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் குலாம் நபி ஆசாத் பேசுகையில், இறைவன் விரும்பினால், அடுத்த 10 நாட்களுக்குள் புதிய கட்சி அறிவிக்கப்படும். எனது புதிய கட்சியின் அடித்தளமாக என்னுடன் நிற்கும் எனது சகாக்களுக்கு நன்றி.” என்று கூறினார்.

    மேலும், “எனது கட்சி ஆசாத் என்றிருக்கும். எனது நண்பர்கள் பலர் கட்சிக்கு ஆசாத் என்று பெயரிட வேண்டும் என்றார்கள். ஆனால், நான் இல்லை என்று சொன்னேன். ஆனால், அக்கட்சியின் சித்தாந்தம் சுயமானதாக இருக்கும். அதன் சித்தாந்தம் வேறு எதனுடனும் சேராது அல்லது ஒன்றிணையாது. அப்படி சேர்வது என்பது எனது மரணத்திற்குப் பிறகு நடக்கலாம். அதுவரை நடக்காது” என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் கூறினார். தேசிய கட்சியாக இருந்தாலும் சரி அல்லது மாநிலக் கட்சியாக இருந்தாலும் சரி, தான் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் எதிரானவன் அல்ல. கட்சி எல்லைகளைக் கடந்து பலர் எனது நண்பர்கள் இருக்கிறார்கள்” என்று குலாம் நபி ஆசாத் கூறினார்.

    இந்த மாத தொடக்கத்தில், ஜம்மு மற்றும் காஷ்மீரில் காங்கிரஸில் இருந்து ராஜினாமா செய்தபின், தனது முதல் பொதுக்கூட்டத்தில் பேசிய குலாம் நபி ஆசாத், தனது புதிய கட்சி யூனியன் பிரதேசத்தின் இரு மாகாணங்களின் மக்களை ஒன்றிணைக்கும் என்று வலியுறுத்தினார். அதன் முக்கிய நோக்கம், ஜம்மு காஷ்மீர் மற்றும் அதன் மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பது. நிலம் மற்றும் வேலைவாய்ப்புக்கான உள்ளூர் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது என்று குலாம் நபி ஆசாத் கூறினார்.

    இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸுக்கு முதலில் அளித்த நேர்காணலில், குலாம் நபி ஆசாத் எதிர்பாராத இடங்களிலிருந்து தனக்கு அழைப்புகள் வந்ததாகக் கூறினார். அவர் ஒரு தேசிய மற்றும் மாநிலக் கட்சிக்கான தனது திட்டங்களால் வெளிப்படையாக வெளியே வர முடியவில்லை என்று கூறியிருந்தார்.

    “தற்போது தேசிய கட்சி எனது முன்னுரிமை அல்ல. ஏனென்றால், அதற்கு நிறைய ஆலோசனைகள் தேவை. மூத்த அரசியல் தலைவர்கள் உடன் இருக்க வேண்டும். அது அவர்களுடன் கலந்தாலோசித்து செய்யப்படும். தேசிய கட்சி தொடங்குகிறோம் என்று அறிவித்தால் கண்டிப்பாக மக்கள் வருவார்கள். எனது முதல் முன்னுரிமை ஜம்மு காஷ்மீர் மற்றும் ஏற்கெனவே ஜம்மு காஷ்மீரின் 90 சதவீத காங்கிரஸ் என்னுடன் வந்துள்ளது” என்று குலாம் நபி ஆசாத் கூறினார்.



  • 16:48 (IST) 11 Sep 2022
    ஓ.பி.எஸ் வழக்கில் இ.பி.எஸ் பதில் மனு

    அதிமுக அலுவலக சாவியை இபிஎஸ் வசம் ஒப்படைக்க உத்தரவிட்டதற்கு எதிரான ஓபிஎஸ் வழக்கில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு,எடப்பாடி பழனிசாமி பதில் மனு தாக்கல் செய்துள்ளார். பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டதால் மட்டுமே சீல் வைக்கப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவை ஏற்று செயல்பட்டுள்ளோம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.



  • 16:21 (IST) 11 Sep 2022
    நிலவு வடிவ ரிசார்ட்

    உலகிலேயே முதல் முறையாக நிலவு வடிவ ரிசார்ட் துபாயில் அமையவுள்ளது.



  • 15:54 (IST) 11 Sep 2022
    புத்தகங்கள் அச்சிட இலங்கைக்கு கடன்

    பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை பள்ளிப் பாடப்புத்தகங்கள் அச்சிட இந்தியா கடனுதவி அளிக்க முன்வந்துள்ளது.



  • 15:38 (IST) 11 Sep 2022
    ஓபிஎஸ்., மனு, இபிஎஸ் பதில்

    அதிமுக சாவியை ஒப்படைக்கக் கோரி ஓ. பன்னீர் செல்வம் தாக்கல் செய்துள்ள மனுவில் பதில் மனு தாக்கல் செய்துள்ள எடப்பாடி பழனிசாமி தரப்பு, “ஓபிஎஸ் பண விவகாரத்தில் கையாடல் செய்துள்ளார். அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினரும் கிடையாது. ஆகவே அவரிடம் சாவியை ஒப்படைக்க கூடாது” என பதில் மனு அளித்துள்ளது.



  • 15:17 (IST) 11 Sep 2022
    நீலகிரி: குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை

    நீலகிரியில் குடியிருப்பு பகுதியில் சிறுத்தைகள் புகுந்ததால் மக்கள் பீதியில் உறைந்துள்ளன்.

    சிறுத்தை தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.



  • 14:34 (IST) 11 Sep 2022
    பராமரிப்பு பணி காரணமாக மூடப்பட்ட திருச்சி காவிரி பாலம்

    பராமரிப்பு பணி காரணமாக மூடப்பட்ட திருச்சி காவிரி பாலம் . சென்னை பைபாஸ் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல். ஒன்றரை கி.மீ. தூரத்துக்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள். போக்குவரத்து சீரமைப்பு தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு.



  • 14:19 (IST) 11 Sep 2022
    அண்ணா உயிரியல் பூங்கா தேர்வு

    சிறந்த உயிரியல் பூங்காவாக அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா தேர்வு. புவனேஸ்வரில் நடந்த தேசிய உயிரியல் பூங்கா இயக்குநர்கள் மாநாட்டில் அங்கீகாரம்



  • 14:18 (IST) 11 Sep 2022
    5 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. சென்னையின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்



  • 13:23 (IST) 11 Sep 2022
    100 யூனிட்டுக்கு கீழே மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை

    மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் குறைவாகவே மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 100 யூனிட்டுக்கு கீழே மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை- அமைச்சர் செந்தில்பாலாஜி



  • 13:22 (IST) 11 Sep 2022
    துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

    காற்றழுத்த தாழ்வு எதிரொலியாக துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம். சென்னை, காட்டுப்பள்ளி, எண்ணூர், புதுச்சேரி, கடலூர், நாகை, பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை



  • 13:21 (IST) 11 Sep 2022
    ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு

    ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு . http://jeeadv.ac.in என்ற இணையதளத்தில் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்



  • 13:02 (IST) 11 Sep 2022
    இம்மானுவேல் சேகரனின் நினைவு தினம்: ஸ்டாலின் ட்வீட்

    சுயமரியாதையை நிலைநிறுத்த இறுதிமூச்சு வரை போராடிய இம்மானுவேல் சேகரனாரின் தியாகத்தை நினைவுகூர்ந்து வணங்குகிறேன் . இம்மானுவேல் சேகரனின் நினைவு தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்



  • 12:04 (IST) 11 Sep 2022
    விவசாயிகளுக்கான அரசு அதிமுக

    விவசாயிகளுக்கான அரசாக அதிமுக அரசு இருந்தது. தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை.அவினாசியில் தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு.



  • 11:25 (IST) 11 Sep 2022
    உதயநிதி ஸ்டாலின் மரியாதை

    இம்மானுவேல் சேகரனின் 65-வது நினைவு தினம் பரமக்குடியில் உள்ள நினைவிடத்தில் திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்



  • 11:24 (IST) 11 Sep 2022
    ஆட்டிறைச்சி என்ற பெயரில் மாட்டிறைச்சி விற்பனை

    ஈரோட்டில் பல்வேறு இறைச்சிக் கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் ஆய்வு . ஆட்டிறைச்சி என்ற பெயரில் மாட்டிறைச்சியை விற்பனை செய்ததாக வந்த புகாரை தொடர்ந்து நடவடிக்கை



  • 11:24 (IST) 11 Sep 2022
    மின்கட்டண உயர்வுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டன

    மின்கட்டண உயர்வுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம். கட்டண உயர்வை திரும்ப பெற அரசுக்கு வலியுறுத்தல்



  • 10:40 (IST) 11 Sep 2022
    பிரிட்டன் ராணி மறைவுக்கு தமிழக அரசு சார்பில் துக்கம் அனுசரிப்பு

    பிரிட்டன் ராணி எலிசபெத்தின் மறைவுக்கு தமிழக அரசு சார்பில் துக்கம் அனுசரிப்பு. சென்னை தலைமைச் செயலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் மூவர்ணக் கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.



  • 09:11 (IST) 11 Sep 2022
    நடிகர் கிருஷ்ணம் ராஜூ உயிரிழப்பு

    பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ணம் ராஜூ(83) உடல்நலக்குறைவால் உயிரிழப்பு. ஹைதராபாத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு.



  • 09:11 (IST) 11 Sep 2022
    இம்மானுவேல் சேகரனின் 65வது நினைவு தினம்

    இம்மானுவேல் சேகரனின் 65வது நினைவு தினம் இன்று .பரமக்குடியில் உள்ள நினைவிடத்தில் பலர் அஞ்சலி செலுத்த உள்ள நிலையில் 6000க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு.



  • 09:10 (IST) 11 Sep 2022
    திராவிட மாடல் நூல்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய "திராவிட மாடல்" எனும் நூல் வரும் 15ம் தேதி வெளியீடு . விருதுநகரில் நடைபெறும் முப்பெரும் விழாவில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட டி.ஆர்.பாலு எம்.பி., பெற்றுக்கொள்கிறார்.



  • 09:10 (IST) 11 Sep 2022
    கேரளாவில் நடைபயணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி

    கேரளா, செறுவாரகோணத்தில் தனது நடைபயணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி . நேற்று தமிழகத்தில் பயணத்தை நிறைவு செய்த நிலையில் இன்று கேரளாவில் தொடக்கம்.



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment