Advertisment

News Highlights: முஸ்லிம் லீக், ம.ம.க.வுடன் இன்று திமுக பேச்சுவார்த்தை

Tamil News : கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு தலைமையில் 6பேர் கொண்ட குழு

author-image
WebDesk
New Update
News Highlights: முஸ்லிம் லீக், ம.ம.க.வுடன் இன்று திமுக பேச்சுவார்த்தை

Tamil News Today : தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த கூட்டணி கட்சிகளுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் நாளை மாலை 5 மணிக்கு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு வருமாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.

Advertisment

அதிமுக – பாமக கூட்டணி குறித்து மருத்துவர் ராமதாஸ் இன்று அறிவிப்பார் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இன்று நடக்கும் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த மூத்த அரசியல் தலைவர் தா.பாண்டியனின் உடல், மதுரையில் உள்ள அவரது சொந்த ஊரில் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.

ரியல் எஸ்டேட் துறையில் ஊழல் அதிகரித்துள்ளதாகவும் அதை கட்டுப்படுத்த அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்திய ஜனநாயக கட்சி சமத்துவ மக்கள் கட்சி இடையே கூட்டணி உறுதியானது.அதிமுக கூட்டணியில் இருந்து விலகி விட்டதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரும், திமுக கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டதாக இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பச்சைமுத்துவும் அறிவித்தனர்.

சட்டமன்ற தேர்தலுக்கு தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு தலைமையில் 6பேர் கொண்ட குழுவை திமுக தலைமைக் கழகம் அமைத்துள்ளது.

Live Blog

Latest Tamil News : அரசியல்- வானிலை- சமூகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த செய்திகளின் தொகுப்பாக இந்தத் தளம் அமையும்.



























18:48 (IST)27 Feb 2021










































பாமகவுக்கு 23 தொகுதிகள்

தமிழகத்தில் ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிமுக சார்பில் அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

18:08 (IST)27 Feb 2021










































பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள்

வரும் சட்டமன்ற தேர்தலில், அதிமுக பாமக கூட்டணி உறுதி செய்யப்பட்டதை தொடர்ற்து "வன்னியர்கள் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக செயல்பட வேண்டும்" என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

18:08 (IST)27 Feb 2021










































அதிமுக - பாமக பேச்சுவார்த்தை

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அதிமுக பாமக தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதில் அதிமுக தரப்பில் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோரும், பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர் 

18:05 (IST)27 Feb 2021










































போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

3 நாட்களாக நடைபெற்று வந்த போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் போராட்டம் வாபஸ் பெற்றதாக தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவிப்பு

16:55 (IST)27 Feb 2021










































சட்டப்பேரவையில் முதல்வர் உரை

சட்டசப்ரேவையில் உரையாற்றிய முதல்வர் பழனிச்சாமி, "சோதனை நேரத்தில் பக்க பலமாக, உறுதுணையாக இருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

16:54 (IST)27 Feb 2021










































பொதுமக்கள் அரசுப் பேருந்தில் ஏறவே அஞ்சும் பொதுமக்கள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்காலிக ஓட்டுநர்கள் வைத்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அரசுப் பேருந்தில் ஏறவே அஞ்சுவதாக கூறப்படுகிறது.

16:50 (IST)27 Feb 2021










































ஆசியாவின் பணக்கார‌ர்கள் பட்டியல் வெளியீடு

ஆசியாவின் பணக்கார‌ர்கள் பட்டியலில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

16:50 (IST)27 Feb 2021










































ஆணவத்துடன் முதல்வர் பழனிச்சாமி - ஸ்டாலின் குற்றச்சாட்டு

போராடும் போக்குவரத்துக் கழக ஊழியர்களை அழைத்துப் பேச, ஆணவத்துடன் மறுத்து வருகிறார் முதலமைச்சர் பழனிசாமி என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

16:48 (IST)27 Feb 2021










































துணைமுதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு நன்றி - முதல்வர் பழனிச்சாமி

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் கனவை நனவாக்கும் விதமாக மீண்டும் ஆட்சி அமைப்போம் என்று கூறியுள்ள முதல்வர் பழனிச்சாமி, அரசுக்கு துணையாக இருந்த துணைமுதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

16:46 (IST)27 Feb 2021










































முதலமைச்சர் பழனிச்சாமிக்கு சபாநாயகர் புகழாரம்

சட்டப்பேரவை நடைபெற்ற அனைத்து நாட்களும் வந்த ஒரே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் என்று சபாநாயகர் புகழாரம் சூட்டியுள்ளார்.

16:28 (IST)27 Feb 2021










































ஒரு கருத்துதான் இந்தியாவை ஆட்சி செய்யும் என்றால் அது தேவையில்லை - ராகுல் காந்தி

"ஒரு கருத்துதான் இந்தியாவை ஆட்சி செய்யும் என்றால், அந்த கருத்து நமக்கு தேவையில்லை. தமிழக அரசை மட்டும் தான் கட்டுப்படுத்த முடியும், தமிழக மக்களை அல்ல" என்று தூத்துக்குடி தேர்தல் பரப்புரையில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

16:14 (IST)27 Feb 2021










































பாஜக தமிழக துணைத்தலைவர் அண்ணாமலை பேச்சு

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை குறைப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் அனைவரும் பொறுமை காக்க வேண்டும் என திருவாரூரில் பாஜக தமிழக துணைத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் 

15:42 (IST)27 Feb 2021










































வன்னியர் இடஒதுக்கீட்டை திமுகவே செயல்படுத்தும்: மு.க.ஸ்டாலின்

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின், "வன்னியர்களுக்கு அறிவிக்கப்பட்ட இடஒதுக்கீடு வெறும் அறிவிப்பு மட்டுமே வன்னியர் இடஒதுக்கீட்டை திமுகவே செயல்படுத்தும்" எனத் தெரிவித்துள்ளார் 

15:29 (IST)27 Feb 2021










































இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல் நல்லடக்கம்

மதுரை உசிலம்பட்டி அருகே வெள்ளைமலைப்பட்டியில் உள்ள பண்ணை தோட்டத்தில் மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

15:15 (IST)27 Feb 2021










































போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் வாபஸ்!

கடந்த மூன்று நாட்களாக ஊதிய உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளுடன் போராட்டம் நடத்தி வந்த தமிழ்நாடு போக்குக்குவரத்து ஊழியர்கள் தற்போது போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டதாக அறிவித்துள்ளனர். தமிழக அரசுடன் நடந்த பேச்சு வார்த்தைக்கு பின்னர் இதை அறிவித்துள்ளனர். 

15:07 (IST)27 Feb 2021










































சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலினுக்கு சபாநாயகர் பாராட்டு

சட்டப்பேரவையில் பேசிய சபாநாயகர் தனபால், அனைத்து நாட்களும் சட்டமன்ற கூட்டத்தொடருக்கு வந்த ஒரே முதல்வர் பழனிசாமிதான் என புகழாரம் சூட்டினார். அதேபோல் முக்கிய பிரச்னைகளை கவனத்திற்கு கொண்டுவந்து எதிர்க்கட்சி தலைவர் சிறப்பாக செயல்பட்டார் என்று ஸ்டாலினுக்கு புகாழாரம் சூட்டியுள்ளார். 

14:52 (IST)27 Feb 2021










































போக்குவரத்துக் கழக ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்

போக்குவரத்துக் கழக ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டுப் பணிக்குத் திரும்ப வேண்டும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

14:24 (IST)27 Feb 2021










































இந்தியா - இங்கிலாந்து 4 வது டெஸ்டில் பும்ரா இல்லை

இங்கிலாந்துக்கு  எதிரான 4வது டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது  

14:22 (IST)27 Feb 2021










































சட்டப்பேரவையில் இன்று - சட்டப்பேரவையில் அதிக கேள்விகள் எழுப்பியவர்

சட்டப்பேரவையில் அதிக கேள்விகள் எழுப்பியவர், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு என சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார் 

 

14:19 (IST)27 Feb 2021










































வஉசி கல்லூரி மாணவர்களுடன் ராகுல் காந்தி

14:18 (IST)27 Feb 2021










































வஉசி கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடும் ராகுல் காந்தி

சட்டமன்ற தேர்தல் பரப்புரைக்காக 3 சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ள ராகுல் காந்திக்கு தூத்துக்குடி மக்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தற்போது அவர் வஉசி கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். 

14:05 (IST)27 Feb 2021










































சட்டபேரவையில் இன்று

அரசுக்கு துணையாக இருந்த துணைமுதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு நன்றி எனவும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் கனவை நனவாக்கும் விதமாக மீண்டும் ஆட்சி அமைப்போம் என்றும் முதலமைச்சர் பழனிச்சாமி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.  

14:02 (IST)27 Feb 2021










































சட்டப்பேரவைக்கு அனைத்து நாட்களும் வந்த ஒரே முதல்வர்

சட்டப்பேரவை நடைபெற்ற அனைத்து நாட்களும் வந்த ஒரே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார். 

13:30 (IST)27 Feb 2021










































ராகுல் காந்திக்கு தூத்தூத்துக்குடியில் உற்சாக வரவேற்பு

எதிர்வரும் சட்டமன்ற பொதுத்தேர்தல் பரப்புரைக்காக தமிழகத்தின் தூத்தூத்துக்குடிக்கு வந்துள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. 

12:56 (IST)27 Feb 2021










































இன்று அமித்ஷாவை சந்திக்கிறார் முதல்வர்

சென்னை வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க முதலமைச்சர், துணை முதல்வர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இரவு சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற உள்ள இந்த சந்திப்பில்  தொகுதி பங்கீடு குறித்து பேச உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன 

12:46 (IST)27 Feb 2021










































மார்ச் 2 திமுக வேட்பாளர் நேர்காணல்

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட உள்ள வேட்பாளர்களுக்கான மார்ச் 2-ல்  நேர்காணல் நடைபெறும் என  திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 

12:35 (IST)27 Feb 2021










































கமல்ஹாசன் செய்தியாளர் சந்திப்பு!

:சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் பழ.கருப்பையா போட்டியிடுவார். சட்டப் பஞ்சாயத்து இயக்கம், மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் மார்ச் 7ல் வெளியிடப்படும்.

மார்ச் 3 ஆம் தேதி முதல் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளேன் . மக்கள் நீதி மய்யத்தில் மார்ச் 1-ம் தேதி முதல் வேட்பாளர் நேர்காணல் நடத்தப்படும்.  மக்கள் நீதி மய்யம் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் நான்தான் என்பதை தெளிப்படுத்திக் கொள்கிறேன். எங்கள் கூட்டணிக்கு யார் வந்தாலும் வரவேற்போம் ” என்று ம.நீ. ம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

12:29 (IST)27 Feb 2021










































ராகுல்காந்தி தூத்துக்குடி வந்தடைந்தார்!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தூத்துக்குடி வந்தடைந்தார். ராகுல்காந்திக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு  அளித்தனர். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். 

11:48 (IST)27 Feb 2021










































ஆர்.எஸ்.பாரதி வழக்கு!

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீதான வன்கொடுமை தடை சட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

11:47 (IST)27 Feb 2021










































அதிமுக - பாமக பேச்சுவார்த்தை !

தமிழக சட்டப்பேரவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று மாலை 4 மணிக்கு அதிமுக - பாமக பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுல்ளது. 

11:41 (IST)27 Feb 2021










































சரத்குமார் பேட்டி!

நல்லவர்கள் எல்லாம் இணையலாம் என்ற அடிப்படையில் கமலை சந்தித்தேன். ஒருமித்த எண்ணம் கொண்டவர்கள் இணைந்தால் சிறப்பாக இருக்கும். கமல்ஹாசனிடம் இருந்து நல்ல முடிவு வரும். விரைவில் சந்திப்போம் என்று சரத்குமார் கமல்ஹாசனை சந்தித்த பின்பு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

11:01 (IST)27 Feb 2021










































கமல்ஹாசன் - சரத்குமார் ஆலோசனை!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சந்திப்பதற்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் . சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் சென்றுள்ளார்.  கமல்ஹாசனுடன் சரத்குமார்  ஆலோசனை நடத்தவுள்ளார். 

10:40 (IST)27 Feb 2021










































அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 22 தொகுதிகள் !

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 22 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது.  முதல்வர், துணை முதல்வரை தனித்தனியே சந்தித்து பாஜக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

10:21 (IST)27 Feb 2021










































திமுக கூட்டணி பேச்சுவார்த்தை!

திமுக கூட்டணி பேச்சுவார்த்தை குழுவுடன் அக்கட்சி தலைவர் ஸ்டாலின் இன்று இரவு 7 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். 

10:15 (IST)27 Feb 2021










































தமிழக அரசாணை வெளியீடு!

9, 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது குறித்த தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது  அரசு

09:28 (IST)27 Feb 2021










































அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு!

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான ஆய்வக வகுப்புகளை மார்ச் 6ஆம் தேதிக்குள் முடிக்க அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. 

08:57 (IST)27 Feb 2021










































பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை!

சட்டப்பேரவை தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக - பாஜக பேச்சுவார்த்தை காலை 8.30 மணிக்கு அதிமுக அலுவலகத்தில் தொடங்கியது. 

08:55 (IST)27 Feb 2021










































அரசு பேருந்து ஊழியர்களிடம் இன்று பேச்சுவார்த்தை !

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு பேருந்து ஊழியர்களிடம் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. அரசு பேருந்து ஊழியர்களிடம் இன்று மாலை 3 மணிக்கு தொழிலாளர்கள் நல ஆணையம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. 

Tamil News Today : புதுச்சேரியில் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை 2 சதவிகிதம் குறைத்து துணை நிலை ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார்.

நேற்றைய செய்திகள்

தமிழகம் முழுவதும் 34 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

மாசிமகம் திருவிழாவையொட்டி, புதுச்சேரியில் இன்று தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment