பெட்ரோல், டீசல்விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
3 மீனவர்கள் சிறைபிடிப்பு
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 3 பேர் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மீனவர்கள் 3 பேரையும், ஒரு படகையும் சிறைப்பிடித்தது இலங்கை கடற்படை.
கால்நடை மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல்
இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது கால்நடை மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் பல்கலைக்கழக இணையதளத்தில் நேரடியாக வெளியிடப்படும் என்று கால்நடை மருத்துவர் அறிவியல் பல்கலைக்கழகம்.
- 21:32 (IST) 20 Oct 2022கர்நாடக மாநிலத்தில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு உயர்வு - அமைச்சரவை ஒப்புதல்
கர்நாடக மாநிலத்தில் எஸ்சி சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு 15% இருந்து 17% ஆகவும் எஸ்டி சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு 3% இருந்து 7% ஆகவும் இடஒதுக்கீட்டை உயர்த்துவதற்கு கர்நாடக அரசு கொண்டுவந்த அவசரச் சட்டத்திற்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளார்.
- 20:15 (IST) 20 Oct 2022நாற்காலிக்காக போராட்டம் செய்வது வருத்தமாக உள்ளது - டி.டி.வி. தினகரன்
அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன்: நாற்காலிக்காக போராட்டம் செய்வது வருத்தமாக உள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு இ.பி.எஸ் தான் பொறுப்பு. சசிகலாவுடனான சந்திப்பு யதார்த்தமாக நடந்தது என்று கூறினார்.
- 19:42 (IST) 20 Oct 2022மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி தொடங்கும் தேதியை கூற முடியாது - மத்திய அரசு பதில்
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் குறித்து ஆர்.டி.ஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஒன்றிய சுகாதார அமைச்சகம், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணி தொடங்கும் தேதியை கூற முடியாது என மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
- 18:52 (IST) 20 Oct 2022தமிழ்நாட்டில் நான் மூக்கையும் நுழைப்பேன்... வாலையும் நுழைப்பேன் - தெலங்கானா ஆளுநர் தமிழிசை
தமிழ்நாட்டு அரசியலில் மூக்கை நுழைக்கக் கூடாது என்ற விமர்சனங்களுக்கு, தமிழ்நாட்டில் நான் மூக்கையும் நுழைப்பேன், தலை, வாலையும் நுழைப்பேன், என்னை யாரும் தடுக்க முடியாது என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசமாகப் பேசியுள்ளார்.
- 18:14 (IST) 20 Oct 2022உத்தரவை மறு ஆய்வு செய்ய ஐகோர்ட்டு மறுப்பு!
ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை என்ற கடந்த ஏப்ரல் மாத உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்
- 18:12 (IST) 20 Oct 2022பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் ராஜினாமா
பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் பதவியேற்ற ஒன்றரை மாதத்தில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பிரிட்டனில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாத நிலையில், பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
- 18:00 (IST) 20 Oct 2022செல்போன் பேசிய படி வண்டி ஓட்டினால் - ரூ.1000 அபராதம்!
தமிழ்நாட்டில் செல்போன் பேசிய படி வண்டி ஓட்டினால் முதல் முறை ரூ.1000 அபராதம்" என போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில்குமார் சரட்க்கர் தெரிவித்துள்ளார்.
- 17:59 (IST) 20 Oct 2022வாழ்நாள் சாதனையாளர் விருது!
சென்னையில் ஸ்ரீ பவுண்டேசன்ஸ் இண்டர்நேஷ்னல் அஸ்ரோ-அவார்ட் வாழ்நாள் சாதனைக்கான விருதை நடிகர் தியாகராஜனுக்கு முன்னாள் அமைச்சர் H.V.ஹண்டே வழங்கி பாராட்டியுள்ளது.
- 17:43 (IST) 20 Oct 2022ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.1,000 அபராதம்; அரசு அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் வரும் 28ம் தேதி முதல் தலைக்கவசம் அணியாவிட்டால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்றும், இருசக்கர வாகனம் ஓட்டுபவர் அல்லது பின்னால் இருப்பவரோ தலைக்கவசம் அணியாவிட்டால் அபராதம் என்றும், அபராத தொகையை பத்து மடங்காக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
- 17:40 (IST) 20 Oct 2022பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை: ஐகோர்ட்டு கேள்வி!
பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தியை ஏன் தடுத்து நிறுத்தக்கூடாது? என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
- 16:52 (IST) 20 Oct 2022வரும் 26ம் தேதி பதவியேற்கிறார் மல்லிகார்ஜூன கார்கே
காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மல்லிகார்ஜுன கார்கே வரும் 26ம் தேதி பதவியேற்கிறார். டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது
- 16:39 (IST) 20 Oct 2022தமிழகத்தில் நவம்பர் 1-ம் தேதி கிராம சபை கூட்டம் - அரசு உத்தரவு
தமிழகத்தில் வரும் நவம்பர் 1ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு 12,525 ஊராட்சிகளிலும் கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது
- 16:18 (IST) 20 Oct 2022தமிழகத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.1,000 அபராதம்
தமிழகத்தில் வரும் 28ம் தேதி முதல் தலைக்கவசம் அணியாவிட்டால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்றும், இருசக்கர வாகனம் ஓட்டுபவர் அல்லது பின்னால் இருப்பவரோ தலைக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும், அபராத தொகையை பத்து மடங்காக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது
- 15:40 (IST) 20 Oct 2022சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு 5 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் சேவை
தீபாவளியை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்க, சென்னையில் இன்று முதல் 21, 22 ஆம் தேதிகளில் 5 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது
- 15:12 (IST) 20 Oct 2022தெலங்கானா ஆளுநராக 4வது ஆண்டு பணியினை தொடங்கியுள்ளார் தமிழிசை
தமிழிசை செளந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக 4வது ஆண்டு பணியினை தொடங்கியுள்ளார். இந்தநிலையில் சென்னை, கிண்டியில் தமிழிசை செளந்தரராஜனின் 3ஆம் ஆண்டின் பயணம் குறித்த புத்தகம் வெளியிடப்பட்டது.
- 14:57 (IST) 20 Oct 2022சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் - வானிலை மையம்
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
- 14:43 (IST) 20 Oct 2022ஏ.சி.,யை 17 டிகிரிக்கு கீழ் குறைப்பது சுற்றுச்சூழலுக்கு கேடு - மோடி
ஏ.சியை 17 டிகிரிக்கு கீழ் குறைப்பது சுற்றுச்சூழலுக்கு கேடு என உலகளாவிய 'மிஷன் லைஃப்' தொடக்க விழாவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
- 14:26 (IST) 20 Oct 2022இன்று 32 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்று 32 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, வேலூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
பெரம்பலூர், அரியலூர், கடலூர், சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
- 14:24 (IST) 20 Oct 2022தமிழ்நாடு முழுவதும் 6,563 பட்டாசு கடைகளுக்கு தீயணைப்பு துறை அனுமதி
தமிழ்நாடு முழுவதும் 6,563 பட்டாசு கடைகளுக்கு தீயணைப்பு துறை அனுமதி - தீயணைப்பு துறை டிஜிபி பி.கே.ரவி தகவல்
சென்னையில் மட்டும் 861 பட்டாசு கடைகளுக்கு அனுமதி
தீபாவளி பண்டிகையை ஒட்டி தயார் நிலையில் 6,673 தீயணைப்பு படை வீரர்கள்
மாணவர்களுக்கு 1,610 தீயணைப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன - தீயணைப்புத்துறை டிஜிபி
- 13:55 (IST) 20 Oct 2022தேவர் தங்க கவச விவகாரம்: நீதிமன்றம் சொல்வதை ஏற்போம்- ஓபிஎஸ்
தேவர் தங்க கவச விவகாரத்தில் நீதிமன்றம் சொல்வதை ஏற்போம்.
ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை குறித்து
கருத்து கூற விரும்பவில்லை.
மதுரை விமான நிலையத்தில், ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பு
- 13:45 (IST) 20 Oct 2022டி20 கிரிக்கெட்- இலங்கை அணி வெற்றி
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் - நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 162 ரன்கள் எடுத்து இலங்கை அணி வெற்றி
இரண்டாவதாக ஆட்டத்தை தொடர்ந்த நெதர்லாந்து, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது
தொடர்ந்து ஆடிய நெதர்லாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி
- 13:17 (IST) 20 Oct 2022மாணவி சத்யப்பிரியா வழக்கு - 4 சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்ய திட்டம்
கல்லூரி மாணவி சத்யப்பிரியா ரயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்ட வழக்கு
ரயில் நிலைய சிசிடிவி கேமராக்களில் பதிவான 4 வீடியோ காட்சிகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சிபிசிஐடி திட்டம்
22 சிசிடிவி கேமராக்களில் பதிவான 4 முக்கிய வீடியோ காட்சிகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன
முதல் காட்சியில் சத்யப்பிரியா ரயில் நிலையத்திற்குள் வருவது, 2வது காட்சியில் சதீஷ் ரயில் நிலையத்திற்குள் வருவது பதிவாகியுள்ளது
3வது காட்சியில் இருவரும் பேசிக் கொண்டிருப்பது, 4வது காட்சியில் ரயில்முன் சத்யப்பிரியாவை தள்ளி விடுவது பதிவாகியுள்ளது
- 13:15 (IST) 20 Oct 2022அனைத்து எம்.எல்.ஏ-க்கள் அலுவலகங்களிலும் இ-சேவை மையங்கள் தொடக்கம்
தமிழ்நாட்டின் அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்களிலும் இ-சேவை மையங்கள் தொடக்கம்
மையங்களுக்கான நவீன மேசை கணினிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- 12:58 (IST) 20 Oct 2022இந்தியா வரலாற்று சாதனை
ஸ்பெயின்: U-23 சர்வதேச மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், கிரேக்க - ரோமன் பிரிவில் அடுத்தடுத்து 3 வெண்கலப் பதக்கங்கள் வென்று இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது.
- 12:37 (IST) 20 Oct 2022சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்த தனி நபரை நியமிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் ஆகும். கழிவுநீர் தொட்டி, கழிவு நீர் பாதையினுள் இறங்கி சுத்தம் செய்ய தனி நபரை நியமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும. கழிவுநீர் தொட்டிகளை சுத்தப்படுத்த 044 4567 4567 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- 11:53 (IST) 20 Oct 2022அபராத தொகையில் மாற்றம்
46 வகையான போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கு ரூ.1000 முதல் ரூ. 1 லட்சம் வரை அபராத தொகையில் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு பட்டியல் வெளியிட்டுள்ளது.
- 11:49 (IST) 20 Oct 2022அரசியலை விட்டு விலக தயார்
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை குறித்து என்னை பற்றி ஏதாவது விமர்சனம் வந்தால் மட்டும் கேளுங்கள் பதில் சொல்கிறேன். மு.க.ஸ்டாலினை சந்தித்ததை நிரூபித்தால் அரசியலை விட்டு நான் விலக தயார்; நிரூபிக்கவில்லை என்றால் இபிஎஸ் விலக தயாரா? என்று கேள்வி எழுப்பினார்.
- 11:24 (IST) 20 Oct 2022எம்.எல்.ஏ. அலுவலகங்களில் இ-சேவை
தமிழ்நாட்டின் 234 சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்களில் இ-சேவை மையங்களுக்கான நவீன மேசை கணினிகளை வழங்கும் பணியை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- 11:23 (IST) 20 Oct 2022அண்ணா பல்கலைக்கழகத்தால் நஷ்டம்
அண்ணா பல்கலைக்கழகம் தேவைக்கு அதிகமாக வெற்றுச் சான்றிதழ்களை அச்சிட்டது, சான்றிதழ்களை டிஜிட்டல் மயமாக்கியதில் ரூ. 35.90 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக கணக்குத் தணிக்கை அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.
- 10:49 (IST) 20 Oct 2022சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி
தீபாவளி பண்டிகையை ஒட்டி திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி - தமிழ்நாடு அரசு தீபாவளிக்கு சிவகார்த்திகேயனின் 'ப்ரின்ஸ்', கார்த்தியின் 'சர்தார்' ஆகிய படங்கள் வெளியாகிறது
- 10:49 (IST) 20 Oct 2022கொட்டித் தீர்த்த கனமழை
கிருஷ்ணகிரி - ஓசூர் பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழை ஒசபுரம் மற்றும் செட்டிப்பள்ளி பகுதிகளில் 2 ஏரிக்கரைகள் உடைப்பு வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்ததால் குடியிருப்புவாசிகள் அவதி
- 10:47 (IST) 20 Oct 2022முதுகலை அளவில் சைபர் பாதுகாப்பு பாடப்பிரிவுகளை தொடங்க வேண்டும்
இளங்கலை மற்றும் முதுகலை அளவில் சைபர் பாதுகாப்பு பாடப்பிரிவுகளை தொடங்க வேண்டும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவு சைபர் பாதுக்காப்புத்துறைக்கான பாடத்திட்டத்தை அறிவித்தது பல்கலைக்கழக மானியக் குழு.
- 10:28 (IST) 20 Oct 2022வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை மறுநாள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் , அதனைத் தொடர்ந்து 48 மணி நேரத்தில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய புயல் சின்னமாக வலுப்பெறும் - வானிலை ஆய்வு மையம்
- 09:44 (IST) 20 Oct 2022அடுத்த 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
கர்நாடகா-; பெங்களூருவில் அடுத்த 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை அரை மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் நகரின் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது
- 09:14 (IST) 20 Oct 2022டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்
காலை 9.30 மணிக்கு இலங்கை - நெதர்லாந்து மோதல் பிற்பகல் 1.30 மணிக்கு நமீபியா - ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் பலப்பரீட்சை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.