Advertisment

Tamil News Update: சென்னை ஈ.வெ.ரா. சாலையில் போக்குவரத்து மாற்றம்!

Tamil News , Petrol price Today, AIADMK, Ilaiyaraaja, PT Usha: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil News, Tamil News Today Latest Updates

Tamil News Headlines LIVE

சென்னை, ஈ.வெ.ரா. சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. அதன்படி கோயம்பேட்டிலிருந்து அமைந்தகரை நோக்கிச் செல்லும் வாகனங்கள் அண்ணா ஆர்ச் வளைவில் இடதுபுறமாக திருப்பிவிடப்படும். நெல்சன் மாணிக்கம் சாலைக்கு செல்ல விரும்புவோர் மேம்பாலத்தின் வழியாக சென்றடையலாம் என. இது நாளை முதல் 10 நாட்களுக்கு சோதனை ஓட்டமாக அமல்படுத்த உள்ளது.

Advertisment

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Tamil News Latest Updates

பூஸ்டர் டோஸ்

கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான கால இடைவெளி 9 மாதங்களில் இருந்து 6 மாதங்களாக குறைத்து,  மாநில தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.

உணவுத்துறை அமைச்சகம் கோரிக்கை

சமையல் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், எண்ணெய் விலையை லிட்டருக்கு ரூ. 10 குறைக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு உணவுத்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மாநிலங்களவை நியமன எம்.பி.பதவிக்கு இளையராஜா தேர்வு

இசையமைப்பாளர் இளையராஜா ராஜ்யபசபா நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கிய முன்னாள் தடகள வீராங்கணை பி.டி.உஷா, ஆந்திராவை சேர்ந்த திரைப்பட கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

 மக்களை கவர்ந்தவர் இளையராஜா.. பிரதமர் மோடி

தலைமுறை தலைமுறையாக மக்களை கவர்ந்தவர் இளையராஜா, அவரது படைப்புகள் பல உணர்வுகளை அழகாக பிரதிபலிக்கின்றன. ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்த இளையராஜா உயர்ந்து சாதித்தது அதிகம் என இளையராஜாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இளையராஜாவுக்கு, மு.க.ஸ்டாலின் வாழ்த்து

இசையால் நம் உள்ளங்களையும் மாநிலங்களையும் ஆண்ட இளையராஜா, நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினராய்ச் சிறப்புறச் செயல்பட வாழ்த்துகள் என  இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பி.டி. உஷா மகிழ்ச்சி!

மாநிலங்களவை எம்.பி. பதவி மகிழ்ச்சியளிக்கிறது, இது விளையாட்டுக்கு கிடைத்த கௌரவம். நாடாளுமன்றத்தில் விளையாட்டுக்காக குரல் எழுப்புவேன் என பி.டி.உஷா கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:39 (IST) 07 Jul 2022
    ஹரித்வாரில் ஈத் பண்டிகைக்கு விலங்குகளை பலியிட விதிக்கப்பட்ட தடை உத்தரக்காண்ட் ஐகோர்ட் நிறுத்தி வைப்பு

    ஹரித்வாரில் ஈத் பண்டிகைக்காக விலங்குகளை பலியிட அனுமதித்த உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் தடையை நிறுத்தி வைத்துள்ளது.

    தலைமை நீதிபதி விபின் சங்கி மற்றும் நீதிபதி ஆர்.சி.குல்பே ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், ஈத் அல்-அதா அன்று, மங்களூர் நகராட்சியில் உள்ள சட்டப்பூர்வமான இறைச்சிக் கூடத்தில் மட்டுமே விலங்குகளை பலியிட வேண்டும் என்று உத்தரவிட்டது.



  • 21:35 (IST) 07 Jul 2022
    சென்னை, ஈ.வெ.ரா. சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நாளை மறுநாள் முதல் போக்குவரத்து மாற்றம்

    சென்னை, ஈ.வெ.ரா. சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நாளை மறுநாள் (ஜூலை 9) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. நாளை மறுநாள் முதல் 10 நாட்களுக்கு சோதனை ஓட்டமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. கோயம்பேட்டிலிருந்து அமைந்தகரை நோக்கிச் செல்லும் வாகனங்கள் அண்ணா ஆர்ச் வளைவில் இடதுபுறமாக திருப்பிவிடப்படும் என்று சென்னை போக்குவரத்துக் காவல்துற அறிவித்துள்ளது.



  • 20:29 (IST) 07 Jul 2022
    இயக்குநர் லீனா மணிமேகலைக்கு போபால் காவல்துறை லுக்அவுட் நோட்டீஸ்

    'காளி' ஆவணப்படத்தின் போஸ்டர் சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில், உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் போபால் காவல்துறை அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் விடுத்து நடவடிக்கை எடுத்துள்ளது.



  • 19:13 (IST) 07 Jul 2022
    அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் தனது இல்லத்தில், ஆதரவாளர்களுடன் சந்திப்பு

    அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தனது இல்லத்தில், ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார்.



  • 18:31 (IST) 07 Jul 2022
    விவோ மொபைல் நிறுவனத்தில் சோதனை... தங்க கட்டிகள் உட்பட ரூ.465 கோடி பறிமுதல்

    விவோ மொபைல் நிறுவனம், அதன் சார்பு நிறுவனங்களுக்கு சொந்தமான 48 இடங்களில் அமலாக்கத் துறை அதிரடி சோதனை நடத்தியது.

    அதில், 119 வங்கி கணக்குகளில் ரூ.66 கோடி நிரந்தர வைப்புத்தொகை, 2 கிலோ தங்க கட்டிகள், ரூ.73 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.



  • 17:37 (IST) 07 Jul 2022
    பொதுக்குழு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தாலும், விதிகளை மீற வாய்ப்புள்ளது - ஒபிஎஸ் தரப்பு

    சட்ட விதிகளுக்கு உட்பட்டு பொதுக்குழு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தாலும், விதிகளை மீற வாய்ப்புள்ளது என்று ஓபிஎஸ் தரப்பு கூறியுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், அங்குதான் செல்ல வேண்டும் மற்ற விவகாரங்கள் என எதை குறிப்பிட முடியும்? என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.



  • 16:48 (IST) 07 Jul 2022
    சட்ட விரோதமாக சிறுமியிடம் கருமுட்டை எடுக்கப்பட்ட விவகாரத்தில் 3 மணி நேர விசாரணை முடிவு

    ஈரோட்டில் சட்ட விரோதமாக சிறுமியிடம் கருமுட்டை எடுக்கப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய குழுவினரின் 3 மணிநேர விசாரணை நிறைவு பெற்றது. ஈரோடு மாவட்ட குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு அலுவலர்களிடம் விசாரணை நடைபெற்றது



  • 16:41 (IST) 07 Jul 2022
    உணவில் கிடங்ந்த காயங்களுக்கு ஒட்டும் பேண்டேஜ் - திருவண்ணாமலையில் பதற்றம்

    திருவண்ணாமலையில் பிரபல ஹோட்டலில், உணவில் காயங்களுக்கு ஒட்டும் பேண்டேஜ் இருந்ததால் ஹோட்டல் ஊழியர் மற்றும் வாடிக்கையாளர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் வாடிக்கையாளருக்கு மீண்டும் உணவு வழங்கியதால் சக ஊழியர்கள் வாக்குவாதம் செய்துள்ளனர்.



  • 16:26 (IST) 07 Jul 2022
    ஒருங்கிணைப்பாளரை ஓரம் கட்டி விட முடியாது - ஓபிஎஸ் தரப்பு

    அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய ஓபிஎஸ் மனு மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் விறுவிறுப்பாக விசாரணை நடைபற்று வரும் நிலையில், ஐந்து ஆண்டுகள் பதவிக்காலம் உள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளரை ஓரம் கட்டி விட முடியாது என்று ஓபிஎஸ் தரப்பு கூறியுள்ளது.



  • 16:25 (IST) 07 Jul 2022
    அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய மீது நீதிபதி கேள்வி

    அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய ஓபிஎஸ் மனு மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விறுவிறுப்பாக விசாரணையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் செயல்பட முடியாவிட்டால் கட்சி செயல்படாதா? என்று நீதிபதி கேள்வி எழுப்பிள்ளார்.



  • 15:27 (IST) 07 Jul 2022
    அதிமுக பொதுக்குழுவுக்கு தடை: ஓபிஎஸ் மனு மீது விறுவிறு விசாரணை!

    அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய ஓபிஎஸ் மனு மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் விறுவிறுப்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

    "உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற தனி நீதிபதியை அணுக உத்தரவிட்டது. தற்போது பொதுக்குழு கூட்டியதே செல்லாது என்பதே எங்கள் வழக்கு" என்று ஓபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது.



  • 15:07 (IST) 07 Jul 2022
    பிரதமர் ஜான்சன் ராஜினாமா?

    பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று தனது பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு அவர் நாட்டிற்கு அறிக்கையை வெளியிடுவார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

    கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் இன்று ராஜினாமா செய்யவுள்ளதாக பிபிசி அரசியல் ஆசிரியர் கிறிஸ் மேசன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்



  • 14:54 (IST) 07 Jul 2022
    அதிமுக பொதுக்குழுவுக்கு தடை வழக்கு - விறு விறு விசாரணை!

    அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய ஓபிஎஸ் மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. பொதுக்குழு நடத்த உச்ச நீதிமன்றமே அனுமதித்துள்ள நிலையில், நாங்கள் என்ன உத்தரவு பிறப்பிக்க முடியும்? என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.



  • 14:35 (IST) 07 Jul 2022
    ஜூலை 11 பொதுக்குழு செல்லாது - வைத்திலிங்கம்!

    "ஜூலை 11 பொதுக்குழு செல்லாது. அதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களும் செல்லாது. அதிமுக பொதுக்குழு நடந்தால், அதை சட்டரீதியாக எதிர்கொள்வோம். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்போம்" என்று ஓபிஎஸ்-ஐ சந்தித்த பிறகு அதிமுகவின் வைத்திலிங்கம் பேட்டி அளித்துள்ளார்.



  • 14:20 (IST) 07 Jul 2022
    தலைவர் பொறுப்பில் இருந்து விலகுகிறார் போரிஸ் ஜான்சன்?

    இங்கிலாந்தின் பிரதமராக இருந்து வரும் போரிஸ் ஜான்சன் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் கட்சியின் பொறுப்பில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



  • 14:19 (IST) 07 Jul 2022
    ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்களுக்கு போட்டித்தேர்வு நடைபெறும் என அறிவிப்பு!

    வரும் டிசம்பரில் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டித்தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசாணை எண் 149-ஐ நீக்க ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், டெட் தேர்வுக்கு பிறகு, வேலை பெற மற்றொரு போட்டித்தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு தெரிவித்துள்ளது.



  • 13:26 (IST) 07 Jul 2022
    நன்றி சின்னவரே - பார்த்திபன்!

    அசாதாரணமான இரவின் நிழல் படத்தை எடுக்க பார்த்திபனால் மட்டுமே முடியும் என உதயநிதி பாராட்டியிருந்தார். இந்நிலையில், இரவின் நிழல் படத்தை பாராட்டிய உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி சின்னவரே எனக்கூறி பார்த்திபன் மகிழ்ந்துள்ளார். கண்டுணர்ந்து பாராட்டுதல் பெருங்குணம் எனவும், உயர்த்திப் பிடிக்க உதவுதல் உயர்குணம் என்றும் கூறியுள்ளார்.

    மேலும், இந்த நிமிட கடைசி முதல் அடுத்த முதல் வரை, அங்கீகாரமே ஆக்சிஜன் எனக்கூறி நன்றி சின்னவரே என பார்த்திபன் மகிழ்ந்துள்ளார்



  • 13:23 (IST) 07 Jul 2022
    5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

    தமிழகத்தில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

    நீலகிரி, கோவையில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு என்றும், திருப்பூர், தேனி, மற்றும் திண்டுக்கல்லில் கனமழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.



  • 13:21 (IST) 07 Jul 2022
    இ.பி.எஸ்க்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

    எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக கூறி தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.



  • 12:29 (IST) 07 Jul 2022
    இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

    திமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரிய வழக்கு . 25 ஆயிரம் அபராதத்துடன் தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். விளம்பரத்துக்காக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் கண்டிப்பு



  • 11:44 (IST) 07 Jul 2022
    நீடிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த அறிவுறுத்தல்

    நீதிமன்ற உத்தரவுகளை உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்துத்துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதி உள்ளார்.



  • 10:59 (IST) 07 Jul 2022
    தமிழகப் பட்டியலின மக்களில் முதல் பட்டதாரி!

    "திராவிடமணி" இரட்டைமலையாரின் பிறந்தநாள்- ஸ்டாலின் ட்வீட்!



  • 10:00 (IST) 07 Jul 2022
    தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,064 குறைவு!

    சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 544 குறைந்து ரூ. 37,376 ஆகவும், ஒரு கிராம் தங்கம் ரூ. 4,672க்கும் விற்பனையாகிறது. கடந்த இரு நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,064 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



  • 09:51 (IST) 07 Jul 2022
    சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

  • செஸ் ஒலிம்பியாட் விளம்பர நிகழ்வையொட்டி நேப்பியர் பாலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியை முன்னிட்டு, இன்று ஒரு நாள் காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்து போக்குவரத்து துறை அறிவித்து உள்ளது.
  • ராஜாஜி சாலையில் இருந்து நேப்பியர் பாலம் வழியாக காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள் அனைத்தும் போர் நினைவுச் சின்னத்தில் இருந்து வலது புறம் திரும்பி கொடி மரச்சாலை வழியாக வாலாஜா பாயின்ட் – அண்ணா சாலை – மன்ரோ சிலை – பல்லவன் பாயின்ட் – பெரியார் சிலை – அண்ணா சிலை – இடது புறம் – வாலாஜா சாலை – வலது புறம் – உழைப்பாளர் சிலை வழியாக காமராஜர் சாலை செல்லலாம்.
  • அதேபோல், காமராஜர் சாலையில் இருந்து நேப்பியர் பாலம் வழியாக ராஜாஜி சாலை செல்லும் வாகனங்கள், உழைப்பாளர் சிலை – வாலாஜா சாலை – அண்ணா சிலை – அண்ணா சாலை –பெரியார் சிலை – பல்லவன் பாயின்ட் – மன்ரோ சிலை – வாலாஜா பாயின்ட் – கொடி மரச் சாலை – போர் நினைவுச் சின்னம் வழியாக ராஜாஜி சாலை செல்லலாம்.


  • 09:35 (IST) 07 Jul 2022
    19 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மேலும் 18,930 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 14,650 பேர் குணமடைந்தனர். மேலும் 1.19 லட்சம் பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.



  • 09:32 (IST) 07 Jul 2022
    இளையராஜாவுக்கு திருமாவளவன் வாழ்த்து

    மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இசைஞானி இளையராஜா, இந்திய கலை மற்றும் பண்பாட்டு துறை அமைச்சராகவும் பணியாற்ற கூடிய ஆளுமை மிக்கர் என திருமாவளவன் வாழ்த்தியுள்ளார்.



  • 09:32 (IST) 07 Jul 2022
    அடுத்த 3 மணி நேரத்தில் மழை

    தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தருமபுரி, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 16 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.



  • 09:31 (IST) 07 Jul 2022
    வருமான வரி சோதனை

    கோவையில் கே.சி.பி நிறுவனத்தில் 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.



  • 08:38 (IST) 07 Jul 2022
    கமல் வாழ்த்து!

    இளையராஜாவின் சாதனைக்காக ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம், இருந்தாலும் மாநிலங்களவை உறுப்பினராக நியமித்ததற்கு வாழ்த்துகள் என இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து கூறியுள்ளார்.



  • 08:37 (IST) 07 Jul 2022
    இரட்டை இலை சின்னம் வழக்கு இன்று விசாரணை

    அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பி.ஏ.ஜோசப் என்பவர் தாக்கல் செய்த மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.



  • 08:37 (IST) 07 Jul 2022
    இங்கிலாந்து பிரதமருக்கு நெருக்கடி

    இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக,10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளதால் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.



  • 08:37 (IST) 07 Jul 2022
    ஓபிஎஸ் மனு மீது இன்று விசாரணை

    அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய ஓபிஎஸ் மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.



  • 08:37 (IST) 07 Jul 2022
    தேசிய கல்வி கொள்கை கருத்தரங்கு

    தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது குறித்து 3 நாள் கருத்தரங்கை வாரணாசியில் பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார்.



  • Tamilnadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment