Advertisment

Tamil news today : தொடர் மழையால் தேனி, கொடைக்கானலில் பள்ளிகளுக்கு விடுமுறை

Tamil Nadu News, Tamil News Petrol price Today - 03 AGUST 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil news today : தொடர் மழையால் தேனி, கொடைக்கானலில் பள்ளிகளுக்கு விடுமுறை

கரகம் ஆடிய வெளிநாட்டு வீரர்கள்

Advertisment

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொள்ள சென்னை வந்துள்ள வெளிநாட்டு வீரர்கள் கரகம் ஆடி மகிழ்ந்தனர்.

சென்னை மகாபலிபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்றுவருகின்றன.

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்: மழை நிலவரம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்தது.  சைதாப்பேட்டை, பல்லாவரம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை

கடலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள கொள்ளிடம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் பொதுபணித்துறை அறிவிப்பு.

பெட்ரோல் – டீசல் விலை

சென்னையில் 73வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியா வெற்றி

3வது டி20 கிரிக்கெட் - இந்தியா வெற்றி வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.  165 ரன்கள் இலக்கை 19வது ஓவரில் எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றுள்ளது.  5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்து வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 21:43 (IST) 03 Aug 2022
    நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை

    நீலகிரி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி இயங்கும் பள்ளி - கல்லூரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்



  • 21:38 (IST) 03 Aug 2022
    டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு

    டெல்லியில் 31 வயது பெண்மணி ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யபப்ட்டுள்ள நிலையில், உறுதி டெல்லியில் குரங்கம்மை பாதிப்பு எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.



  • 20:04 (IST) 03 Aug 2022
    கள்ளக்குறிச்சி மாணவி மரணம் : புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு

    கள்ளக்குறிச்சியில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கீழே விழுந்து கிடந்த மாணவியை நோக்கி ஹாஸ்டல் வார்டன் கீர்த்திகா உள்ளிட்டோர் செல்லும் காட்சிகள் காலை 5.23 மணிக்கு பதிவான காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 12ஆம் தேதி இரவு 9.28 மணிக்கு ஸ்டடி ரூமில் இருந்து, ஸ்ரீமதி நடந்து செல்லும் புதிய காட்சியும் வெளியீடு



  • 20:03 (IST) 03 Aug 2022
    கள்ளக்குறிச்சியில் மாணவி மரணம் : புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு

    கள்ளக்குறிச்சியில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கீழே விழுந்து கிடந்த மாணவியை நோக்கி ஹாஸ்டல் வார்டன் கீர்த்திகா உள்ளிட்டோர் செல்லும் காட்சிகள் காலை 5.23 மணிக்கு பதிவான காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 12ஆம் தேதி இரவு 9.28 மணிக்கு ஸ்டடி ரூமில் இருந்து, ஸ்ரீமதி நடந்து செல்லும் புதிய காட்சியும் வெளியீடு



  • 20:02 (IST) 03 Aug 2022
    கள்ளக்குறிச்சி மாணவி மரணம் : புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு

    கள்ளக்குறிச்சியில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கீழே விழுந்து கிடந்த மாணவியை நோக்கி ஹாஸ்டல் வார்டன் கீர்த்திகா உள்ளிட்டோர் செல்லும் காட்சிகள் காலை 5.23 மணிக்கு பதிவான காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 12ஆம் தேதி இரவு 9.28 மணிக்கு ஸ்டடி ரூமில் இருந்து, ஸ்ரீமதி நடந்து செல்லும் புதிய காட்சியும் வெளியீடு



  • 19:15 (IST) 03 Aug 2022
    விருமன் பட இசை வெளியீட்டு விழா

    கார்த்தி நடித்துள்ள விருமன் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சூரி, ‘வந்தியத்தேவன் மதுரை பக்கம் ரொம்ப சந்தோஷம்” என்றார்.

    மேலும், "இந்தப் படத்தில் விருமனுக்கு அடுத்து குத்துக்கல் போன்று ஒரு வலிமையான கதாபாத்திரம் எனக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ரொம்ப மகிழ்ச்சி" என்றார். தொடர்ந்து பேசிய நடிகர் கருணாஸ், தமிழகத்தின் மண் சார்ந்த படங்கள் எடுப்பதில் இளம் இயக்குனர் முத்தையா முதலிடத்தில் உள்ளார்” என்றார்.



  • 19:01 (IST) 03 Aug 2022
    விருமன் பட இசை வெளியீட்டு விழா

    கார்த்தி நடித்துள்ள விருமன் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சூரி, ‘வந்தியத்தேவன் மதுரை பக்கம் ரொம்ப சந்தோஷம்” என்றார்.

    மேலும், "இந்தப் படத்தில் விருமனுக்கு அடுத்து குத்துக்கல் போன்று ஒரு வலிமையான கதாபாத்திரம் எனக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ரொம்ப மகிழ்ச்சி" என்றார். தொடர்ந்து பேசிய நடிகர் கருணாஸ், தமிழகத்தின் மண் சார்ந்த படங்கள் எடுப்பதில் இளம் இயக்குனர் முத்தையா முதலிடத்தில் உள்ளார்” என்றார்.



  • 18:38 (IST) 03 Aug 2022
    பங்குச் சந்தை இன்றைய நிலவரம்

    மும்பை பங்குச் சந்தை முதல் காலாண்டு முடிவுகள் வெளியான நிலையில் மும்பை பங்குச் சந்தைகள் இன்று ஏற்றத்துடன் வர்த்தகம் ஆகின.

    பிஎஸ்இ குறியீட்டெண் 52.87 (0.29 சதவீதம்) புள்ளிகள் அதிகரித்து 58,350.53 என வர்த்தகத்தை நிறைவு செய்தது . தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) நிஃபடி 42.70 புள்ளிகள் உயர்ந்து 17,388.15 ஆக வர்த்தகத்தை நிறைவு செய்தது .



  • 18:19 (IST) 03 Aug 2022
    ஐசிசி தரவரிசை- 2ஆம் இடத்தில் சூர்ய குமார்

    ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் பேட்டிங்கில் இந்தியாவின் சூர்ய குமார் யாதவ் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

    பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் முதலிடத்தில் உள்ளார். இருவருக்கும் இடையே 2 புள்ளிகள் மட்டுமே இடைவெளி உள்ளது. சூர்ய குமார் 816 புள்ளிகளும், பாபர் ஆசம் 818 புள்ளிகளும் பெற்றுள்ளனர்.



  • 18:04 (IST) 03 Aug 2022
    ஓ.பி.எஸ்., கோரிக்கை நிராகரிப்பு

    அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்த நிலையில் அவரது கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

    அதிமுக பொதுக்குழுவில் தற்காலிக பொதுச்செயலாளராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது தரப்பை கட்சியில் இருந்து நீக்கினார். ஓ.பி.எஸ்.,ஸின் பதவிகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டன.



  • 17:50 (IST) 03 Aug 2022
    நேஷனல் ஹெரால்டு பத்திரிகை அலுவலகத்துக்கு சீல்

    காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி நிர்வாகிகளாக உள்ள நிறுவனத்துக்கு நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மாற்றப்பட்ட வழக்கை அமலாக்கத்துறை விசாரித்துவருகிறது.

    இந்த நிலையில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தலைமையகம் உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினார்கள்.

    இதைத் தொடர்ந்து இன்று (ஆக.3) அமலாக்கத்துறை அதிகாரிகள் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை அலுவலகத்துக்கு சீல் வைத்தனர்.



  • 16:45 (IST) 03 Aug 2022
    தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்; அதிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.



  • 16:13 (IST) 03 Aug 2022
    தமிழ்மொழி இலக்கியத் திறனை மேம்படுத்த திறனறித் தேர்வு திட்டம்; ரூ.1500 ஊக்கத்தொகை - தமிழக அரசு அறிவிப்பு

    தமிழ்மொழி இலக்கிய திறனை மேம்படுத்த திறனறித் தேர்வு திட்டம் மூலம் தேர்வு செய்யப்படும் 1500 மாணவர்களுக்கு மாதம் ரூ. 1500 ஊக்கத்தொகை வழங்கப்படும். 1500 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க ரூ. 2.47 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 11ம் வகுப்பு மாணவர்களுக்கு 10ம் வகுப்பு தமிழ் பாட திட்டத்தின் அடிப்படையில் திறனறித் தேர்வு நடத்தப்படும். 50% மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் இருந்து தேர்வு செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.



  • 15:29 (IST) 03 Aug 2022
    எதிர்க்கட்சிகளின் அமளி; மக்களவை மாலை 4 மணி வரை ஒத்திவைப்பு

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை மாலை 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது



  • 15:13 (IST) 03 Aug 2022
    பவானி காவிரி கரையோர பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர்; மக்கள் அவதி

    ஈரோடு மாவட்டம் பவானி காவிரி கரையோர பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். 100க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்



  • 14:52 (IST) 03 Aug 2022
    தண்டோரா மூலம் அறிவிப்புகள் வெளியிட தமிழக அரசு தடை

    தமிழ்நாட்டில் தண்டோரா மூலம் அறிவிப்புகள் வெளியிட தடை விதித்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட சூழலில் தண்டோரா மூலம் அறிவிக்க தேவையில்லை என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்



  • 14:39 (IST) 03 Aug 2022
    கள்ளக்குறிச்சி கலவர வழக்கு; 148 பேரின் ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

    கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 148 பேரின் ஜாமின் மனு மீதான விசாரணையை வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது



  • 14:18 (IST) 03 Aug 2022
    ஆன்லைன் ரம்மியில் பணம் இழப்பு; நாமக்கல் இளைஞர் தற்கொலை

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஆன்லைன் ரம்மியால் ரூ. 5 லட்சம் பணம் இழந்ததாக கடிதம் எழுதி வைத்துவிட்டு பட்டதாரி இளைஞர் சுரேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.



  • 14:16 (IST) 03 Aug 2022
    தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

    நீலகிரி, கோவை, விருதுநகர், நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, மதுரை, தென்காசி, நெல்லை ஆகிய 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவி்த்துள்ளது



  • 13:52 (IST) 03 Aug 2022
    நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தாசில்தார் குற்றவாளி – ஐகோர்ட் அதிரடி உத்தரவு

    திருவண்ணாமலை, கலசப்பாக்கம் தாசில்தாரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஆக்கிரமிப்பை அகற்றக்கோரிய உத்தரவை அமல்படுத்தவில்லை என தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், இது ஆரம்பம்தான் எனவும் தலைமை நீதிபதி அமர்வு எச்சரிக்கை விடுத்துள்ளது



  • 13:43 (IST) 03 Aug 2022
    தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

    தமிழகத்தில் நாளை கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • 13:12 (IST) 03 Aug 2022
    விரைவில் ஆவின் தண்ணீர் பாட்டில்கள்

    ஆவின் நிறுவனம் சார்பில் விரைவில் தண்ணீர் பாட்டில்கள் தயாரிக்கப்பட உள்ளது.

    ஆவினுக்கு சொந்தமான 28 தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் தயாரிக்கப்படும் என அமைச்சர் நாசர் அறிவிப்பு.



  • 13:10 (IST) 03 Aug 2022
    சுதந்திர தின விழாவில் பொதுமக்களுக்கு அனுமதி

    சென்னையில், ஆக.15ம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் பொதுமக்களுக்கு அனுமதி.

    கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அனுமதி.

    வயதானவர்கள், சிறுவர்களை அழைத்து வர வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தல்



  • 13:09 (IST) 03 Aug 2022
    அதிமுக பொதுக்குழு வழக்கு: பொதுக்குழு உறுப்பினர் முறையீடு

    அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்க கூடாது.

    வேறு நீதிபதி விசாரணைக்கு மாற்றக்கோரி பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து சார்பில் தலைமை நீதிபதியிடம் மனுத்தாக்கல்.

    உயர்நீதிமன்றம் 2 வாரத்தில் வழக்கை விசாரித்து முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் முறையீடு



  • 13:04 (IST) 03 Aug 2022
    குமாரபாளையம் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு.

    ஆற்றின் கரையோரம் உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பாதிப்பு

    வீடுகளுக்குள் முழங்கால் அளவிற்கு தேங்கி நிற்கும் வெள்ள நீர்



  • 12:19 (IST) 03 Aug 2022
    இபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு வழக்கு : சிபிஐ விசாரணை ரத்து

    இபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து உச்சநீதிமன்றம் இன்று ரத்து செய்தது.

    சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை மீண்டும் விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.



  • 12:10 (IST) 03 Aug 2022
    அமெரிக்க துணைத் தூதரகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு

    சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அல்-கொய்தா அமைப்பின் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



  • 11:08 (IST) 03 Aug 2022
    வீட்டு வசதி அலுவலக கட்டங்கள் திறப்பு

    தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலக கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். வேலூர், திருச்சி, மதுரை தோப்பூர் மற்றும் உச்சபட்டியில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் திறப்பு. சென்னை, தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்



  • 10:23 (IST) 03 Aug 2022
    குடியரசு துணைத் தலைவர் தேர்தல்

    குடியரசு துணைத் தலைவர் தேர்தல் - பாஜக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கருக்கு மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு.



  • 10:22 (IST) 03 Aug 2022
    சுருளி அருவியில் குளிக்க தடை

    தேனி : சுருளி அருவியில் குளிக்க 2வது நாளாக தடை நீட்டிப்பு . அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக வனத்துறை அறிவிப்பு



  • 10:21 (IST) 03 Aug 2022
    ஓபிஎஸ் வலியுறுத்தல்

    மத்திய அரசின் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தமிழர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் . 75% தமிழர்களுக்கு வாய்ப்பளிக்க மத்திய அரசுக்கு தேவையான அழுத்தத்தை முதல்வர் தர வேண்டும் - ஓபிஎஸ் வலியுறுத்தல்



  • 10:21 (IST) 03 Aug 2022
    தங்கம் விலை

    சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து ரூ. 38,416க்கு விற்பனை. ஒரு கிராம் தங்கம் 4,802 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது



  • 10:20 (IST) 03 Aug 2022
    வைகை அணை நீர் திறப்பு

    முழு கொள்ளளவை வைகை அணை எட்டியதால் அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றம். வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை. ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தல்



  • 09:21 (IST) 03 Aug 2022
    பரவலாக மழை

    காஞ்சிபுரம் : ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை



  • 08:46 (IST) 03 Aug 2022
    பாதியில் வெளியேறினால் முழு கட்டணத்தை செலுத்த வேண்டும்

    கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்கள் பாதியில் வெளியேறினால் முழு கட்டணத்தை செலுத்த வேண்டும் . பொதுநுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்கள் முன்னெச்சரிக்கையாக உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ள நிலையில் யுஜிசி உத்தரவு.



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment