பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று விண்ணில் பாய்கிறது
இஸ்ரோவின் பிஎஸ்எல்வி-சி54 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது புவி செயற்கைக்கோளான ஓசன் சாட்-03 மற்றும் 8 நானோ செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து காலை 11.56 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.
இன்றைய ஆட்டம்
இரவு 9.30 மணிக்கு பிரான்ஸ், டென்மார்க் அணிகள் மோதல். மாலை 6.30 மணிக்கு போலாந்து, சவுதி அணிகள் மோதல். பிற்பகல் 3.30 மணிக்கு துனிசியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதல்
உலககோப்பை கால்பந்து போட்டியில் போலந்து அணி 2-0 என்ற கணக்கில் சவுதி அரேபியாவை வீ்ழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், குஜராத் கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு நீங்கள் என்ன பாடம் கற்பித்தீர்கள் என்று ஓவைசி அமித்ஷாவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் அஜித் நடிப்பில் தயாராகி வரும் துணிவு படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நடிகை மஞ்சுவாரியார் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.
சென்னை, கோயம்பேட்டில் சட்டவிரோதமாக நடத்தபபட்ட மதுக்கடைக்கு போலீசார் சீல் வைத்த நிலையில், மதுக்கடையின் பூட்டை உடைத்து கடையை நடத்திய நபர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து நடவடிக்கை எடுத்த போலீசார் மீண்டும் மதுக்கடைக்கு பூட்டு போட்டுள்ளனர்.
மராத்தி, இந்தி படங்களில் நடித்துவந்த மூத்த நடிகர் விக்ரம் கோகலே இன்று (நவ.26) மரணித்தார்.
அவருக்கு வயது 77. உடல் நிலை பாதிக்கப்பட்டு புனேவில் உள்ள தீனாநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் உயிர் இன்று பிரிந்தது.
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது மிகப்பெரிய தவறு என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
அதில், எந்தத் தவறும் செய்யாமல் டொனால்ட் ட்ரம்ப் கணக்கு முடக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
நகைச்சுவை நாயகன் கவுண்டமனி பழனிசாமி வாத்தியார் என்ற படத்தில் 6 ஆண்டுகளுக்கு பின்னர் கம்பேக் கொடுத்துள்ளார்.
இந்தப் படத்தில் ஓய்வுப் பெற்ற உடற்கல்வி ஆசிரியராக கவுண்டமணி நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கால்பந்து உலகக் கோப்பை இன்றைய ஆட்டத்தில் துனிசியா அணியை ஆஸ்திரேலியா 0-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.
முன்னதாக, பிரான்ஸ் அணியுடன் மோதிய முதல் போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் மோசமான தோல்வியை ஆஸ்திரேலியா சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை கூடுவாஞ்சேரியில் பிரபல ரவுடி வினோத் கைது செய்யப்பட்டார்.
இவர் மீது 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. வினோத் கடந்த 3 ஆண்டுகளாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு வாழ்ந்துவந்தார்.
இந்நிலையில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும்போது முதலை இழுத்துச் சென்ற இளைஞர் திருமலை சடலமாக மீட்கப்பட்டார்.
வடலூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற என்எல்சி தொழிலாளர்கள் இருவர் விபத்தில் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
நடிகை பார்வதி நாயர் வீட்டில் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை மட்டுமே பதியப்பட்டுள்ளது, மேற்கொண்டு நடவடிக்கை இல்லை.
ஆகவே, இது தொடர்பாக காவல்துறை ஆணையரிடம் நடிகை பார்வதி நாயர் இன்று புகார் அளித்தார்.
சென்னை தியாகராய நகரில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
இது தொடர்பாக போலீசார் 2 பேரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.
இலங்கை கடற்படையினர் மீது ராமேஸ்வரம் மீனவர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தினார்கள்.
அப்போது இந்திய மீனவர்களின் நாட்டுப் படகுகள் சேதமாக்கப்பட்டன. தொடர்ந்து மீனவர்களின் வலைகளும் அறுத்துவீசப்பட்டன என மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்க மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், 100 யூனிட் இலவச திட்டத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது எனத் தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினா கடற்கரை அருகேயுள்ள மரத்தில் சுமார் 45 வயது மதிக்கதக்க நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
மகளிர் கட்டணமில்லா பேருந்துகள் மூலமாக பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.888 சேமிப்பாகிறது என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டூரில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை செய்து கொண்ட திமுக பிரமுகருக்கு, திமுக சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. தொழில்துறை அமைச்சர் கணேசன் நேரில் வழங்கினார்
பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்திய 9 செயற்கைகோள்களும் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்
ஒய்.ஜி.மகேந்திரனுக்கு சங்கீத நாடக அகடமி விருது வழங்கப்பட்டுள்ளதற்கு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்
சேலத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக திமுக பிரமுகர் தங்கவேலு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், போராட்ட வடிவமாக இன்னுயிரை இழக்கும் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தாம்பரம் நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் அசாமை சேர்ந்த 3 சிறார்களளை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர்களிடம் இருந்த ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க பிரமுகர் தற்கொலை
மேட்டூர் அருகே தங்கவேல்(84) என்பவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை பி.என்.பட்டி பேரூராட்சி தாழையூர் திமுக கிளை அலுவலகத்தில் பரபரப்பு
இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி-சி54 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது
ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து 9 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது
புவி செயற்கைக்கோளான ஓசன்சாட்-03 மற்றும் 8 நானோ செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது
இந்தியாவின் ஓசன்சாட்-3 செயற்கைக்கோள் 960 கிலோ எடை கொண்டது
கடற்பரப்பின் வெப்பநிலை, காற்றின் வேகம் குறித்த தகவலை ஓசன்சாட்-3 சேகரிக்கும்
பேருந்து நிறுத்தம் ஒலி அறிவிப்பு திட்டம் சென்னை மாநகர பேருந்துகளில் துவக்கம்
மின்சார ரயில்களை போலவே, பேருந்துகளிலும் நிறுத்தம் பற்றிய ஒலி அறிவிப்பு
தமிழ், ஆங்கிலத்தில் அடுத்து வரக்கூடிய நிறுத்தம் குறித்து பயணிகளுக்கு அறிவிக்கப்படும்
பேருந்து நிறுத்தம் ஒலி அறிவிப்பு திட்டம் சென்னை மாநகர பேருந்துகளில் துவக்கம்
திட்டத்தை தொடங்கி வைத்து அமைச்சர் சிவசங்கர், எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பேருந்தில் பயணம்
டெல்லி, உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் அரசியல் சாசன தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு
மின்னணு நீதிமன்ற திட்டத்தின் கீழ் பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.
உலக அரங்கில் இந்தியாவை வலிமையான நாடாக மாற்ற வேண்டும்
அனைத்து துறைகளிலும் இளைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர் – பிரதமர் மோடி
தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் செயல் தலைவராக நீதிபதி எஸ்.கே.கௌல் நியமனம்
புதிய செயல் தலைவரை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
தாம்பரம் நகைக்கடை கொள்ளையின் சிசிடிவி வெளியீடு
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது அசாமை சேர்ந்த 16 வயது சிறுவன் என முதற்கட்ட விசாரணையில் தகவல்
சிறுவனின் உறவினர்கள் 2 பேரிடம் போலீசார் விசாரணை
சிறுவன் கெளரிவாக்கத்தில் இருக்கும் ஜூஸ் கடையில் வேலை பார்த்ததாகவும் தகவல்
திருப்பத்தூர் மாவட்ட பாஜக நிர்வாகி கலிகண்ணன் கொலை வழக்கில் இதுவரை 8 பேர் கைது
மும்பை தீவிரவாத தாக்குதலின் 14வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மகாராஷ்டிர அரசு மற்றும் மும்பை போலீசார் சார்பில் அஞ்சலி
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேருவின் ட்விட்டர் கணக்கு ஹேக்
மின்சார ரயில்களை போலவே, சென்னை பேருந்துகளிலும் அடுத்த நிறுத்தம் பற்றிய அறிவிப்பு பேருந்து நிறுத்தம் ஒலி அறிவிப்பு திட்டம் மாநகர பேருந்துகளில் இன்று முதல் துவக்கப்படுகிறது.
மயிலாடுதுறை, சீர்காழி, கொள்ளிடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை முதல் கனமழை
தாம்பரம் அருகே பிரபல நகைக்கடையில் பல கோடி மதிப்பிலான தங்கம், வைரம் கொள்ளை சேலையூர்-வேளச்சேரி சாலையில் பிரபல நகைக்கடையில் அரங்கேற்றப்பட்ட கொள்ளை சம்பவம் மாடியில் இருந்து லிப்ட் வழியாக கடைக்குள் புகுந்து கொள்ளையர்கள் கைவரிசை